19/12/2023
வயிற்றுப் போக்கு என்பது ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் மலம் திரவமாக கழிப்பதாகும்.
வயிற்றுப் போக்கு ஒரு சிலருக்கு தானாகவே சரியாகிவிடும் ஒரு சிலருக்கு ஆபத்தான விளைவுகளை உருவாக்கிவிடும்.
வயிற்றுப் போக்கிற்கான காரணங்கள்:
உணவு ஒவ்வாமை
கெட்டுப்போன உணவுகள் அல்லது தண்ணீரில் வைரஸ், பாக்டீரியாக்கள்,பாரசைட் போன்று நுண்ணியிரிகள கலந்த இருக்கும் அதை எடுக்கும் போது செரிமான உறுப்புகளை சேதப்படுத்தி வயிற்றுப் போக்கு உருவாகிறது.
அறிகுறிகள்:
வயிறு வலி,
வாந்தி,
அடிக்கடி மலம் கழிப்பது
இரத்தம் கலந்த மலம்,
தலைசுற்றல்,
மயக்கம்.
சிகிச்சை:
மூன்று முறை பேதி ஆனால் அது தானாகவே சரியாகிவிடும் சுத்தமான சுடு தண்ணீர் குடிப்பது,
கஞ்சி குடிப்பது
உப்பு சர்க்கரை கரைசல் (ORS) அடிக்கடி எடுத்துக் கொள்வது.
சுயமருத்துவம் செய்வதும் மேலும் உடல்நலத்தை கெடுக்கும்.
பேதி நிற்க (Lomofen Eldofer) வலி நிவாரணிகள் Aspirin, Diclofenac sodium போன்ற Anti motility Drugs, painkillers மருந்துகளை உடனே எடுக்க கூடாது.
மூன்று முறைக்கு மேல் வயிற்றுப் போக்கு உண்டாகி 48 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையோ அல்லது தனியார் மருத்துவமனையோ அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து இருந்து பாதிப்பு குறைவாக இருந்தால் வாய்வழியாக எடுக்கும் ஆன்டி பயாடிக் மருந்துகள் மற்றும் ஆன்டி டயேரியா மருந்துகள் கொடுப்பார்கள் உடன் ORS Powder தருவார்கள்.
மாத்திரைகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் ORS POWDER மிக முக்கியமானது ஒரு பாக்கெட் பவுடரை ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீரில் கலந்து குடித்து கொண்டே இருக்க வேண்டும்.
வயிற்றுப் போக்கு அதிகமானால் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் (Dehydration) மருத்துவமனையில் தங்கி நரம்பு வழியாக செலுத்தும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் சத்துக்கள்(Electrolytes)அடங்கிய NS/DNS/RL போன்ற திரவ பாட்டில்கள் மூலம் செலுத்துவார்கள் இது Dehydration தடுத்து ஆபாய நிலைக்கு தள்ளாமல் பார்த்து கொள்ளும்.
ஒரே முறை குளுக்கோஸ் போட்டுவிட்டு குறைய வில்லை என்று இருந்துவிடக்கூடாது சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
சாதரணமான கிருமி தொற்றாக இருந்தால் உடனே சரியாகிவிடும்.
PHC அல்லது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் குறையவில்லை என்றால் அரசு மருத்துவக்கல்லூரியில் தங்கி அதற்கான காரணத்தை (Diagnosis) காலரா போன்ற நோய்களா என்று கண்டுபிடித்து தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சைகள் நோய்கான காரணத்தை பொருத்து வேறுபடலாம்.
முறையாக சிகிச்சை எடுக்காவிட்டால் நோயின் தன்மை தீவிரமாகி (Dehydration/fainting/Shock/electrolytes imbalance/seizure) போன்ற நிலைக்கள் உருவாகலாம்.
வருமுன் காப்பதே சிறந்தது எனவே நம் சுற்று வட்டாரங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது,
சுகாதாரமான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது
அசைவ மற்றும் காராமான உணவுகளை தவிர்ப்பது,
சுடுதண்ணீர் எடுத்துக் கொள்வது,
பொது வெளியில் மலம் கழிப்பதை தவிரப்பது போன்றவற்றின் மூலம் வராமல் தடுக்கலாம்.
ஜவ்வாது மலையில் இப்போது Acute Diarrhoeal disease (வயிற்றுப் போக்கு பரவி வருகிறது) அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மக்கள் தேடி மருத்துவம் மூலம் மருத்துவர்கள் செவிலியர்கள், மருந்தாளுனர்கள், கிராமப்புற செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மல்டி பர்போஸ் ஹெல்த் ஒர்க்கர்ஸ் மூலம் முகாம்கள் நடத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள் .
மக்கள் அந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இதற்கு முக்கிய காரணமே அடிப்படை வசதிகளான குடிநீர் இல்லாமல் இருப்பது தான் இங்கு உள்ள மக்கள் திறந்த கிணறுகளில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் அசுத்தமான தண்ணீர் எடுத்து குடித்து வருகின்றனர் எனவே நம்முடைய அரசியல் வாதிகள் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று குறைக் கூறி கொண்டு இருக்காமல் எல்லா மலைக் கிராமங்களுக்கும் சிறிய போர்வசதி ஏற்படுத்தி மினி டேங்க் மூலமாவது குடி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொது நலன் கருதி பல.ஆரிப்.
ஜவ்வாது மலை.