ஔடதம்

ஔடதம் உடல் நலம், மனநலம் ,மருத்துவம் மற்றும் மருந்து சார்ந்த குறிப்புகள்...

21/08/2025

வார்த்தைகள்...

அது இங்கிலாந்தில் இருக்கிற கிராமம். அங்கிருந்த விவசாயி ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது.

'பட்டீ' (Buddy) என்று அதற்குப் பெயர் வைத்திருந்தார் அவர். அவருடைய நிலத்து வேலைகளுக்கு உதவுவது பட்டீதான்.

ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி. அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார். வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளும் உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார். விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார்.

அவர் உட்கார்ந்ததும், 'சூடாக டீ குடிக்கிறீங்களா?' என்று கேட்டார். வந்தவர், அவசரமாக 'வேண்டாம்' என்று சொன்னார்.

'சொல்லுங்க, என்ன விஷயம்?' விவசாயி கேட்டார்.

'ஒண்ணுமில்லை. நான் லண்டன்லேயிருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை.
வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்று சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று...

'ரொம்பப் பெரிய காரா?' என்று கேட்டார் விவசாயி.

'இல்லை, இல்லை. சின்ன கார்தான்' என்றார் வந்தவர்.

விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் சென்றார்.

விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார்.

கார் சிறியதாகத்தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒருவேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது. விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

பிறகு, 'எங்கடா கேஸி (Casey) இழு பார்ப்போம்' என்று சத்தமாகக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.

'பெய்லி (Bailey) இழுடா ராஜா' இன்னும் சத்தமாகச் சொன்னார் விவசாயி. குதிரை நகரவேயில்லை.

'டேய் மேண்டி (Mandy) வேகமா இழு' மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். குதிரை ஒரு இஞ்ச்கூட நகரவேயில்லை.

'என் செல்லம் பட்டீ நீயும் சேர்ந்து இழுடா' என்றார். அவ்வளவுதான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம் கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது.

வெளியூர்க்காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார். ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேர்ல கூப்பிட்டீங்க? அதுதான் எனக்குப் புரியலை.’

'என் பட்டீக்கு கண்ணு தெரியாது. தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா? அதான் அதுகூட இன்னும் மூணு குதிரைகள் இருக்குற மாதிரி நம்ப வெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. காரை வெளியே இழுத்துடுச்சு!'

அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம்’.

இதை பிரெஞ்ச் கணிதவியலாளரும் தத்துவவியலாளருமான
பிளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

வார்த்தைகளின் மகிமை அபாரமானது. அதனால் தான் நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும்போது,

கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும் என்பதை

'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்கிறார் வள்ளுவர்.

வெற்றிக்கு தன்னையும், தோல்விக்கு பிறரையும், அடையாளம் கூறாதவனே சிறந்த வெற்றியாளன்...

Repeat.வார்த்தைகள்...

அது இங்கிலாந்தில் இருக்கிற கிராமம். அங்கிருந்த விவசாயி ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது.

'பட்டீ' (Buddy) என்று அதற்குப் பெயர் வைத்திருந்தார் அவர். அவருடைய நிலத்து வேலைகளுக்கு உதவுவது பட்டீதான்.

ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி. அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார். வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளும் உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார். விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார்.

அவர் உட்கார்ந்ததும், 'சூடாக டீ குடிக்கிறீங்களா?' என்று கேட்டார். வந்தவர், அவசரமாக 'வேண்டாம்' என்று சொன்னார்.

'சொல்லுங்க, என்ன விஷயம்?' விவசாயி கேட்டார்.

'ஒண்ணுமில்லை. நான் லண்டன்லேயிருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை.
வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்று சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று...

'ரொம்பப் பெரிய காரா?' என்று கேட்டார் விவசாயி.

'இல்லை, இல்லை. சின்ன கார்தான்' என்றார் வந்தவர்.

விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் சென்றார்.

விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார்.

கார் சிறியதாகத்தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒருவேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது. விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

பிறகு, 'எங்கடா கேஸி (Casey) இழு பார்ப்போம்' என்று சத்தமாகக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.

'பெய்லி (Bailey) இழுடா ராஜா' இன்னும் சத்தமாகச் சொன்னார் விவசாயி. குதிரை நகரவேயில்லை.

'டேய் மேண்டி (Mandy) வேகமா இழு' மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். குதிரை ஒரு இஞ்ச்கூட நகரவேயில்லை.

'என் செல்லம் பட்டீ நீயும் சேர்ந்து இழுடா' என்றார். அவ்வளவுதான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம் கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது.

வெளியூர்க்காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார். ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேர்ல கூப்பிட்டீங்க? அதுதான் எனக்குப் புரியலை.’

'என் பட்டீக்கு கண்ணு தெரியாது. தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா? அதான் அதுகூட இன்னும் மூணு குதிரைகள் இருக்குற மாதிரி நம்ப வெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. காரை வெளியே இழுத்துடுச்சு!'

அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம்’.

இதை பிரெஞ்ச் கணிதவியலாளரும் தத்துவவியலாளருமான
பிளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

வார்த்தைகளின் மகிமை அபாரமானது. அதனால் தான் நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும்போது,

கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும் என்பதை

'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்கிறார் வள்ளுவர்.

வெற்றிக்கு தன்னையும், தோல்விக்கு பிறரையும், அடையாளம் கூறாதவனே சிறந்த வெற்றியாளன்...

Repeat.

*மனிதம் தொலைத்த மனிதன்*உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலைக்கும் இப்படமே காரணமாகிவிட்டது...கெ...
18/08/2025

*மனிதம் தொலைத்த மனிதன்*

உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலைக்கும் இப்படமே காரணமாகிவிட்டது...

கெவின் கார்ட்டர்
உலக புகழ் பெற்ற
புகைப்படக்காரர்.
இவர் நல்ல புகைப்படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் அதிகம் கொண்டவர்,

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக்கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள்
உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி,
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் புகைப்படக்கருவியில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் புகைப்படக் கருவியை தோளில் தொங்க விட்டுக் கொண்டு தேடியலைந்து கொண்டிருந்த போது ஒரு காட்சி தென்பட்டது;

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சான் நிலையில்
உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து புகைப்படக் கருவியை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்குப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக் கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் புகைப்படக்கருவியில்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் புகைப்படக் கருவியை தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்து; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்றும்
விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம்
நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்தை, தொடர்பு கொண்டு,

ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?

இந்தக் கேள்விக்கான பதில் யாரிடமும் இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான
அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதைப் பெற்றார்,
இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் பரிசுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களில் கெவின்
பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்... ஏன்?????

கெவின் உள்பட எல்லோரையும் யோசிக்க வைக்கும்படி ஒரு கருத்து வெளியாகியிருந்தது...

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல் பட்டுள்ளனர்.

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; இல்லை யாரையாவது அழைத்து விட்டு இருக்கலாம்,

ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார், இதில் பாராட்டும்படி என்ன இருக்கிறது, என்று ஒருவர், அவர் மீது குற்றம் சாட்டியதுதான்...

இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு
அருகில் அவரது காரில்
பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு
ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.

முதல் வரி
I am Really Really Sorry...

நாம் எவராக இருந்தாலும் சரி நம்மிடம் மனிதநேயம் இல்லையெனில் நாமும் மிருகத்திற்கே ஒப்பாவோம்.

16/08/2025

. *ஆண்களே கட்டயமாக படியுங்கள்*

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!!
இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்...
அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!!
வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!!
ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!!
விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!

அங்கே.. தங்கை தனது புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!!
அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?"
என்றாள்..!!

"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!!
அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!!
அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!
எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல்..
"அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத.. !!" பாட்டியின் குரல் தான் அது..!!

எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!!
ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. " என்னாச்சுடி என் ராசாத்தி.." பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்.. !!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!
உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள்.
"அழாதே அக்கா மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு...
அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!
நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!! ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..!!

நேசியுங்கள் பெண்களை மற்றும் அவர்களின் உணர்வுகளை..!

வசதியான வாழ்வு தராவிட்டாலும்,
வருந்தாத வாழ்வை தாருங்கள்.

விரும்பி வாழ்வதை விட.,
நேசித்து வாழுங்கள்.

வாழும்வரை வசந்தமாக..!

12/08/2025

Just for jolly...

Tea break with 🤣 jokes

1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது..!
2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!
3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!
4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..!
5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..! "நீங்க வெட்டுங்க பாஸ்.."..!! .
6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: "ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."
இதற்கு மனைவி சொன்ன பதில்: "அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்.. "டேய் மச்சான்... எங்கடா இருக்க?" "வீட்லதான்டா இருக்கேன்..." "அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!" "ஏன்டா? என்ன விஷயம்??" "அதில்லடா.....
காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்....."
8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே
நல்லாவா இருக்கு.?
மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!
9. நீ என் தங்கக் குட்டியாம்ஸ தாத்தா சொல்றதைக் கேப்பியாம்ஸ
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்ஸ. பாப்பா நடந்து வருவியாம். வேண்டாம் தாத்தாஸ என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்ஸ
10. “ஏன் ஸ்கூட்டரை திருடினேஸ?” “டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”
11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்ஸ.?”
“தெரியுமேஸஏன் கேட்கறீங்கஸ.. ?” “இல்லஸபார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களேஸ அதான் கேட்டேன்.!”
12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்‌போய் ஓய்வு
எடுத்துக்கிட்டு வர்றேன்ஸ நீ கடையைப் பார்த்துக்கஸ
முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!
13. டீச்சர் கேட்டார்... பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?
குறும்புக்கார மாணவனின் பதில்... எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது..!!
ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்..!
சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்..!
சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...
மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.
14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க?‌‌ நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க! இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா? ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா! நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா... ?
ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...!
முதல்ல அவரை விடுதலை செய்

https://youtube.com/shorts/tXn5a14zMX8?si=XWfFtLiRegTuS5qJ
05/08/2025

https://youtube.com/shorts/tXn5a14zMX8?si=XWfFtLiRegTuS5qJ

வணக்கம் நண்பர்களே, காதல் என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல; அது ஒரு நிலைத்த மனநிலை, ஒரு ஒப்புதல், ஒரு அர்ப்பணம் ஆகும். க...

04/08/2025
03/08/2025

*சிந்தனைக்கு சில வரிகள்*

*எதையும் ஆழமாக நேசிக்காதே.*
*துன்பப்படுவாய்.*
*எதையும் ஆழமாக யோசிக்காதே.*
*குழப்பமடைவாய்.*
*எதையும் எங்கும் யாசிக்காதே.*
*அவமானப்படுவாய்.*

*நேர்மறை எண்ணங்களுக்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையில்லா போராட்டம்தான் இந்த வாழ்க்கை.*

*இந்த மூன்றும் உன்னிடம் இருந்தால் நீ கஷ்டங்களைக் கண்டு கலங்க வேண்டியதில்லை.*
*வீரம் உன் இதயம்.*
*விவேகம் உன் சிந்தனை.*
*வெற்றி உன் உயிர்.*
*இதை நினைவில் வை.*
*நீ தான் உலகில் சிறந்தவன்.*

*உன்னை ஒருவர் குறைத்துப் பேசும்போது அடக்கமாய் இரு.*
*அது உன் வீரம்.*
*உன்னை ஒருவர் புகழ்ந்து பேசும்போது எச்சரிக்கையாக இரு.*
*அது உன் விவேகம்.*

*சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லிவிடும்.*
*சில தவறுகள் நாம் யாராக இருக்க வேண்டும் என்று சொல்லிவிடும்.*

*வாழ்க்கையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் FEEL பண்ணாமல், அது எதுவாக இருந்தாவலும் பரவாயில்லை என்று DEAL பண்ணுவது நல்லது.*

AJAYKUMAR PERIYASAMY

31/07/2025

⏺Failure is not the end. It is a learning tool. Every great person has failed more times than they have succeeded. Thomas Edison said: "I have not failed. I've just found 10,000 ways that won't work."

📌Don’t be afraid to fall. Be afraid not to get up. Every failure brings you closer to success.

❤️ — if you don’t give up

31/07/2025

இல்லறம் சிறக்க...! (சிறுகதை)

கணவனும் மனைவியும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். ஏனென்றால், அன்று அவர்களின் 25 ஆவது ஆண்டு திருமண நாள். முன்பு போல் இல்லாமல் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து, நேரத்தை செலவிடுவது குறைந்து போய் விட்டது.

அவர்களுக்கு இடையே ஏன்? இடைவெளி அதிகரித்து வருகிறது என்பது அவர்களுக்கு புரியவில்லை.

தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது மனைவி மௌனத்தை கலைத்து, "உங்களிடம் நான் நிறைய சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் நாம் இருவரும் சேர்ந்து உட்காரக்கூட நேரம் இல்லை" என்றாள்.

"இதைப் பற்றி நான் நிறைய யோசித்து இந்தச் சூழ்நிலையை சமாளிக்க ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளேன். நீங்கள் ஒப்புக் கொண்டால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்", என்றாள்.

கணவர் தலையை அசைத்தார்.

மனைவி மேசையின் மீது இரண்டு டைரிகளைக் கொண்டு வந்து வைத்தாள்.

"இந்த இரண்டு டைரிகளில் ஒன்று உங்களுக்கு, மற்றொன்று எனக்கு.
இனிமேல் நம் இருவருக்குள் ஏதேனும் புகார்கள் இருந்தால் அவற்றை நம் சொந்த டைரிகளில் எழுதி வைப்போம்" என்றாள்.

மேலும், " அடுத்த ஆண்டு நமது திருமண நாள் அன்று அவற்றை நாம் திறந்து படிப்போம்.
ஒருவருக்கொருவர் பிடிக்காத விஷயங்களைப் புரிந்து கொள்ள இது உதவும்.
மேலும் அவற்றை மேம்படுத்தவோ அல்லது தீர்வு காணவோ நாம் முயற்சிக்கலாம்."

கணவருக்கு மனைவியின் யோசனை பிடித்திருந்தது. அன்றிலிருந்து அவர்கள் டைரிகளில் எழுத தொடங்கினர். காலம் விரைவாக சென்றது.

அன்று அவர்களின் 26 ஆவது ஆண்டு திருமண நாள்.

கணவன் மனைவி இருவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களின் டைரிகள் அருகில் வைக்கப்பட்டு, அவற்றை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டனர்.

தேநீர் அருந்தி முடிப்பதற்கு முன் கணவர் தனது மனைவியின் டைரியைப் படிக்கத் தொடங்கினார். அதில் பல புகார்கள் எழுதப்பட்டிருந்தன.

"என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தீர்கள். ஆனால். அதை நிறைவேற்ற வில்லை" என்பது போல...

"இன்று என் பெற்றோரின் வீட்டிலிருந்து விருந்தினர்கள் வந்தார்கள். நீங்கள் அவர்களிடம் நன்றாக பேசவில்லை." என்று மற்றொரு புகார் கூறப்பட்டிருந்தது.

"பல மாதங்களுக்குப் பிறகு , நீங்கள் எனக்கு ஒரு புடவையை வாங்கி வந்தீர்கள். ஆனால் அது பழைய வடிவமைப்பைக் கொண்டிருந்தது. "

"இன்று நான் எனக்கு பிடித்த டிவி சீரியலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நீங்கள் செய்தி சேனலை மாற்றினீர்கள்."

"இன்றைக்கு சோபாவில் ஈரமான டவலை விட்டுட்டு போயிட்டீங்க..."

டைரியில் இது போன்று பல புகார்கள் இருந்தன.

கணவர் அவற்றை படிக்கும் போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது.

அவர் மனம் திருந்தி தனது மனைவியிடம், " இந்தத் தவறுகளை நான் முன்பு உணரவில்லை. ஆனால், இப்போது நான் அவற்றை மீண்டும் செய்ய மாட்டேன்... என்று உனக்கு உறுதியளிக்கிறேன்" என்றார்.

இப்போது மனைவி தன் கணவரின் டைரியைத் திறக்கும் முறை வந்தது. பல பக்கங்களைப் புரட்டினாள் மனைவி. ஆனால், அந்த டைரி முற்றிலும் காலியாக இருப்பதைக் கண்டாள். அதில் ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை.

ஆச்சரியப்பட்ட மனைவி, "நீங்கள் டைரியில் எதுவும் எழுதவில்லையா?" என்றாள்.

கணவர், "கடைசி பக்கத்தை பார். நான் அங்கே ஏதோ எழுதினேன்" என்று பதிலளித்தார்.

அந்தப் பக்கத்தில் அவர் எழுதியிருந்தது...

"இத்தனை வருடங்களாக நீ எனக்காகவும், நமது குடும்பத்திற்காகவும் நிறைய தியாகம் செய்துள்ளாய். எங்களுக்கு மிகுந்த அன்பைக் கொடுத்து இருக்கிறாய்.

இந்த டைரியில் உனக்கு எதிராக எதையும் எழுத முடியாது. மேலும் உன்னிடம் எந்த குறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு இருந்ததில்லை.

உன்னிடம் எந்த குறைகளும் இல்லை என்பதல்ல.. ஆனால் உன் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுடன் ஒப்பிடும்போது உன் குறைகள் எதுவும் அற்பமானவை.

என்னுடைய எண்ணற்ற தவறுகளைப் பொருட்படுத்தாமல் இந்த சவாலான வாழ்க்கையில், என் பக்கத்தில் ஒரு நிழலை போல நின்று கொண்டிருக்கிறாய். எப்படி ஒருவர் தன் நிழலில் தவறுகளைக் கண்டுபிடிக்க முடியும்?"

இப்போது மனைவியின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. அவள் தன் கணவனின் கையில் இருந்த தன் புகார் டைரியை வாங்கி கிழித்து அதை எரித்தாள்.

❤️பாடம்: ❤️ கணவன் மனைவி இடையேயான உறவு, நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. அதுதான் அதை வலிமையாக்குகிறது. வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் கணவன் மனைவி புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தவறுகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக தங்கள் துணைவர் தங்களுக்காக எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொண்டால், அவர்களின் உறவு இன்னும் வலுவாகும்.

~மகிழா. 💃
-பகிர்வு பதிவு.
🌹🌹🌹🌹🌹🌹

30/07/2025

பணத்துக்கு எவ்வளவு பெயர்கள்...???!

கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்...

யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்...

அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை என்றும்...

கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்...

திருமணத்தில் வரதட்சணை என்றும்...

திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்...

விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு என்றும்...

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
தர்மம் என்றும்...

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம் என்றும்...

திருமண வீடுகளில் பரிசாக மொய் என்றும்...

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது கடன் என்றும்...

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது அன்பளிப்பு என்றும்...

விரும்பிக் கொடுத்தால் நன்கொடை என்றும்...

மிரட்டப்பட்டு
கொடுத்தால் மாமூல் என்றும்

நீதிமன்றத்தில் செலுத்தினால் அபராதம் என்றும்...

அரசுக்குச் செலுத்தினால் வரி என்றும்...

அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது நிதி என்றும்...

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம் என்றும்...

தினமும் கிடைப்பது கூலி என்றும்...

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம் என்றும்...

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் லஞ்சம் என்றும்...

கடன் வாங்கினால் அத்தொகைக்கு
அசல் என்றும்...

வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது வட்டி என்றும்...

தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு முதலீடு என்றும்...

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு இலாபம் என்றும்...

குருவிற்குக் கொடுக்கும் போது குருதட்சணை என்றும்...

ஹோட்டலில் நல்குவது டிப்ஸ் என்றும்...

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...

இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்...

சிலர் பண்பை இழக்கின்றனர்...

சிலர் நட்புகளை இழக்கின்றனர்...

சிலர் உறவுகளை இழக்கின்றனர்...

சிலர் கற்பை இழக்கின்றனர்...

சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...

சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்...

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...

சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்...

இது. பணம் படுத்தும் பாடு

பகிர்வு

Address

2/22 VADUGAN Street
Tondi
623409

Telephone

+917010298955

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஔடதம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram