16/05/2023
🇨🇭 #தலசீமியா_என்ற
🇨🇭 #இரத்தசெல்……
🉐 #அழிவுச்_சோகை_நோய்…❗❗❗❗
👉 ஹீமோகுளோபின் (Globin) புரதஉற்பத்தி குறைபாட்டினால் தலசீமியா ஏற்படுகிறது.
👉 ரத்த சிவப்பணுக்கள் அவற்றின் வாழ்நாளுக்கு முன்னரே (Premature) அழிந்துபோவதும் இந்த நோய் ஏற்பட ஒரு முக்கியக் காரணம்.
⭕ #தலசீமியா_என்றால்_என்ன❓
தலசீமியா என்பது மரபு வழியில் வரும் ரத்தக்கோளாறு நோய். இது பெற்றோர்களின் பாதிக்கப்பட்ட மரபணு மூலம் பிள்ளைகளுக்கு ஏற்படும்.
#தலஸ்’ என்றால் கடல் என்று பொருள். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ளவர்களிடம் முதலில் இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டதால், இதற்கு `தலசீமியா’ என்று பெயர். இந்தியா உட்பட பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் காணப்படுகிறது.
#ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு சேர்க்கும் புரதம்தான் ஹீமோகுளோபின். #ஹீம்’ (Haem)* என்றால், இரும்பு. #குளோபின்’(Globin)* என்பது புரதம். ஒருவருக்கு ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ரத்தசோகை ஏற்படும். குளோபின் (Globin) புரதஉற்பத்தி குறைபாட்டினால் தலசீமியா ஏற்படுகிறது. ரத்த சிவப்பணுக்கள் அவற்றின் வாழ்நாளுக்கு முன்னரே (Premature) அழிந்துபோவதும் இந்த நோய் ஏற்பட ஒரு முக்கியக் காரணம்.
⭕ #யார்_யாருக்கு_ஏற்பட_வாய்ப்பு
#உள்ளது❓
தலசீமியா மைனர் உள்ள ஆண், தலசீமியா மைனர் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தலசீமியா மேஜர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வராமலும் போகலாம். தலசீமியா மைனர் உள்ள தம்பதியர் இருவரும் `தலசீமியா கேரியர்ஸ்’ என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் அடுத்த தலைமுறைக்கும் தலசீமியாவைக் கடத்துகிறார்கள்.
தலசீமியா மேஜர் உள்ளவர், தலசீமியா இல்லாத பெண்ணுடன் சராசரி இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியும். ஆனால், இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தலசீமியா பிரச்னை இருக்கவும் வாய்ப்பு உள்ளது இல்லாமலும் போகலாம்.
🉐 💉 #பரிசோதனைகள்❓
ஒருவருக்கு தலசீமியா மேஜர் உள்ளதா எனக் கண்டறிய, முழு ரத்தப் பரிசோதனை *(Complete hemogram)*
1, CBC
2, Esr
3, igE
முதிரா சிவப்பணுக்களின் எண்ணிக்கை *(Reticulocyte Count)*
#ஹீமோகுளோபின் #எலெக்ட்ரோபோரெசிஸ்
(Hemoglobin electrophoresis) ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும்.
⭕ #முன்னெச்சரிக்கை…… #நடவடிக்கைகள்❓
ரத்தசோகைப் பிரச்னை உள்ளவர்கள் மருத்து வரிடம் ரத்தப்பரிசோதனை செய்துகொள்ளும் போது மருத்துவர், அவருக்கு தலசீமியா பரிசோதனையும் செய்வார். ஒருவேளை அவர் தலசீமியா கேரியராக இருந்தால், தலசீமியா இல்லாத பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இதனால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தலசீமியா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
⭕ #தவிர்க்கும்_வழிகள்❓
கர்ப்பிணிகள் மூன்றாவது மாதத்தில் கட்டாயம் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலமாக வயிற்றில் வளரும் கருவுக்கு தலசீமியா மேஜர் மரபணு உள்ளதா எனக் கண்டுபிடித்துவிடலாம். பெரும்பாலும், இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கருக்கள் பெற்றோர் விருப்பத்தின் பேரில் கலைக்கப்படுகின்றன.
எந்த ஒரு நோயையும் வரும்முன் காப்பதே சிறந்தது. ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே மாதிரியான மரபணுக்கள் இருக்கும். ரத்த சொந்தத்துக்குள் திருமணம் செய்வது, தலசீமியா ஏற்பட முக்கியக் காரணம். #ஒரே_குடும்பத்துக்குள்_திருமணம் செய்யாமல் இருப்பதே இந்த நோய் வராமல் தடுக்கச் சிறந்த வழி.
🔴 #தலசீமியா_வகைகள்❓❓
தீவிரத்தன்மையைப் பொறுத்து தலசீமியா, மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
👉 பெரும் தலசீமியா (Thalassemia Major) - மிகக் கடுமையான ரத்தசோகை.
👉 சிறு தலசீமியா (Thalassemia Minor) - மிகக் குறைந்த ரத்தசோகை.
👉 இடைத் தலசீமியா (Thalassemia Intermedia) - நடுத்தர வகை பாதிப்பு.
இவற்றில், தலசீமியா மேஜர் இருந்தால், ரத்தசோகை, மண்ணீரல் வீக்கம், கல்லீரல் வீக்கம் மற்றும் எலும்பு மஜ்ஜை செயல்பாடுகளில் குறைபாடு ஆகியவை ஏற்படும்.
🔴 #தலசீமியா_அறிகுறிகள்❓❓❓
👉 நாட்பட்ட உடல் சோர்வு
👉 வயிற்றுவலி (Abdominal colic)
👉 மூச்சுத்திணறல் (Breathlessness)
👉 பித்தப்பைக் கற்கள் (Gall stones)
👉 நீண்ட நாட்களாக ஆறாத கால் புண் (Chronic leg ulcers)
👉 சுவாசத் தொற்றுநோய்கள் (Respiratory infection)
👉வெளிறிய தோல்
👉சோர்வு
👉பலவீனம்
👉விரைவான சுவாசம்
👉எரிச்சலடைதல்
👉தோல் மஞ்சள் நிறமாக நிறமாற்றமடைதல் (மஞ்சட்காமாலை)
👉மந்தமான வளர்ச்சி
👉அடிவயிறு வெளித்தள்ளிக்கொண்டிருத்தல்
👉முக எலும்பு உருக்குலைதல்
👉அடர்நிற சிறுநீர்
⭕ சிகிச்சைமுறைகள்
ஆங்கில வைத்திய முறையில்……
தலசீமியா மைனர் நோயால் பாதிக்கப்பட்ட வருக்குத் தீவிர சிகிச்சை அவசியம் இல்லை. இரும்புச்சத்துக் குறைபாட்டைப் போக்க, ஃபோலிக் அமில (Folic Acid) மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டியது இருக்கும்.
தலசீமியா மேஜர் நோயாளிகளுக்கு இரண்டு வகையான சிகிச்சைகள் உள்ளன. நோயின் தாக்கத்துக்கு ஏற்ப, மூன்று வாரங்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ, 350 மி.லி ரத்தம் செலுத்தியாக வேண்டும். இவ்வாறு, அவர்கள் வாழ்க்கை முழுதும் ரத்தம் செலுத்திக்கொள்ள வேண்டும்.
மீண்டும் மீண்டும் உடலில் ரத்தம் செலுத்தப்படுவதால், தலசீமியா நோயாளிகளுக்கு உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கலாம். இதனைத் தவிர்க்க மருந்து எடுக்க வேண்டும். சில நோயாளிகளுக்கு, மண்ணீரலை (Spleen) அறுவைசிகிச்சை செய்து (Splenectomy) நிரந்தரமாக அகற்றுவதன் மூலமாக அடிக்கடி ரத்தம் ஏற்றுவதைத் தவிர்க்கலாம்.
⭕ எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
ரத்தம் ஏற்றும் முறைக்கு மாற்றாக, எலும்பு மஜ்ஜை மாற்று நவீன சிகிச்சை செய்யப்படுகிறது. (Bone Marrow Transplanation - BMT). இந்தச் சிகிச்சை மூலமாக தலசீமியா மேஜர் நோயாளிகள், பூரண குணம் அடைய முடியும்.
எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம் செல்கள்தான் ரத்த அணுக்களை உற்பத்தி செய்கின்றன. இந்த ஸ்டெம்செல்கள் ஆரோக்கி யமாக இருந்தால்தான், ரத்த அணுக்களின் உற்பத்தி சீராக இருக்கும்.
இந்தச் சிகிச்சையில், எலும்பு மஜ்ஜையில் உள்ள பழைய ஸ்டெம்செல்களைக் கதிர்வீச்சு மூலமாக அழித்துவிட்டு, தானமாகக் கிடைக்கும் ஸ்டெம்செல்கள் உடலுக்குள் ஊசிமூலம் செலுத்தப்படும்.
பொதுவாக, நோயாளிகளின் நெருங்கிய உறவினர்களுக்கு ஒரே மாதிரியான மரபணு, புரத அணுக்கள் இருக்கும். அவர்களிடமிருந்து ஸ்டெம்செல் தானம் பெற்று நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஸ்டெம் செல் தானம் செய்வதால், கொடையாளரின் உடலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
🇨🇭 #எலும்புகளில்_கால்சியம்_அதிகமாக
#வீட்டு_வைத்தியம்❓❓❓
💊முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை இரண்டையும் சம அளவு நன்கு காயவைத்து இடித்து சலித்த சூரணத்தை இரண்டு கிராம் எடுத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குறையும்.
💊100 மி.கி சோயா பீன்ஸில் 25 மி.கி கால்சியம் உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், தினமும் காலையில் சோயாப்பால் அருந்துவது நல்லது. இதில், கொழுப்பு மிகமிகக் குறைவு என்பதால் உடல் பருமனானவர்களும் சாப்பிடலாம்.
💊100 மி.கி மீனில், 15 மி.கி கால்சியம் உள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது.
💊ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். ஆட்டுக்கால் எலும்பு மஜ்ஜையில் கால்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. இதனைச் சாப்பிடுவதால் எலும்பு விரைவில் கூடும்.
💊100 மி.கி நண்டில் 16 மி.கி கால்சியம் உள்ளது. எலும்புமுறிவு ஏற்பட்டவர்கள், மூன்று நாளுக்கு ஒரு முறை நண்டு சூப் குடிக்கலாம். அதிக உஷ்ணம் உள்ளதால் இதனை வெயில் காலங்களில் தவிர்ப்பது நல்லது.
💊கொள்ளில், சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்தது. எலும்பு உறுதிக்குக் கொள்ளு மிகவும் அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்துக் குடித்துவந்தால் எலும்பு வலுவாகும்.
💊புரோகோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளைத் தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும். வைட்டமின் சி நிறைந்த பழங்களைச் சாப்பிடலாம்.
💊ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளைப் பாதுகாப்பாகவைத்திருக்கும்.
💊அத்திப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. 100 மி.கி அத்திப் பழத்தில் 26 மி.கி கால்சியம் உள்ளது. இதுதவிர கேரட், வெண்டைக்காய், வெங்காயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
💊கீரைகளில் வெந்தயக் கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை ஆகியவற்றில் கால்சியம் உள்ளது. கவனிக்க... கீரைகளை அசைவத்தோடு சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இரவில் சாப்பிடக் கூடாது. இதனால், செரிமானம் தாமதப்படும். காலை, மதிய உணவில் கீரை சாப்பிடலாம்.
💊100 மி.கி கேழ்வரகில் 35 மி.கி கால்சியம் உள்ளது. அவ்வப்போது ராகி கஞ்சி, எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத ராகிதோசை சாப்பிடலாம்.
💊முந்திரியில் 37 மி.கி., பாதாமில் 26 மி.கி., பிஸ்தாவில் 10 மி.கி கால்சியம் உள்ளது. மேலும், உடலுக்குத் தேவையான மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புகள் உள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடைந்த எலும்பு விரைவில் குணமாகும்; எலும்பு நோய்கள் தடுக்கப்படும். உடல் பருமனானவர்கள் இவற்றை அளவாகச் சாப்பிடுவது நல்லது.
💊100 மி.கி பேரீச்சம் பழத்தில் 39 மி.கி கால்சியம் உள்ளது. அதேபோல், மாங்கனீஸ், தாமிரம், மங்கனீசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
💊100 மி.கி கறுப்பு உளுந்தில் 13 மி.கி கால்சியம் நிறைந்துள்ளது. கறுப்பு உளுந்து சுண்டல் சாப்பிடுவது நல்லது. இதுதவிர, முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை ஆகியவற்றைச் சுண்டல்செய்து சாப்பிடலாம்.
💊எலும்புகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி சத்து நிறைந்த ஆரஞ்சு, சோயா, பருப்பு வகைகளைச் சாப்பிடலாம்.
💊சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் தினமும் காலை 7:00 - 8:00 மணி வெயிலில் நிற்கலாம். இதனால், வைட்டமின் டி உற்பத்தியாகி எலும்புகளின் உறுதி அதிகரிக்கும்.
💊இறைச்சி உணவுகளின் மூலம் கிடைக்கப் பெறும் அதிகப்படியான புரதம், கால்சியம் சத்தை வெளியேற்றிவிடுகிறது. இது, எலும்பின் வலிமை குறைய காரணமாகிறது. எனவே, புரதம் அதிகமுள்ள இறைச்சி உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம்.
❌ சோடா மற்றும் கோலா பானங்கள்
தவிர்க்கவும்❓❗
சோடா மற்றும் கோலா பானங்களில் உங்கள் பல்லை போட்டால் கரைந்துவிடும் ஆம், இவற்றில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம் சத்தை போக்கிவிடுகிறது. இதனால் தான் பெரும்பாலானவர்களுக்கு அதிகம் எலும்பு சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது.
💪 #உங்கள்_எலும்பிற்கு_வலிமையை
#தரும்_உணவுள்……❓❗
பால்,தயிர்,மோர்சீஸ்,பாதம்,எள்ளு
நட்ஸ்வகைகள்,கடல் சிப்பி,கேழ்வரகு
இறால்,நண்டு,வாதுமை பருப்பு
சால்மன் மீன்,பீன்ஸ் (Beans)
ப்ரோகோலி,அனைத்துவகையான கீரைகள்,சோயாபீன்ஸ்,பூண்டு
வெங்காயத்தால்,இனிப்பு உருளைக்கிழங்கு,பார்க்காய்
வெண்டைக்காய்,கொடி முந்திரிபழம்
வாழைப்பழம்,ஸ்ட்ராபெர்ரி பழம்
லிச்சிபழம்,அண்ணாச்சி பழம்
கொய்யாப்பழம்,கிவிப்பழம்
பப்பாளிபழம்,பெர்ரிபழம்
ஆரஞ்சு பழம்,அத்திப்பழம்
கேரட்,குடைமிளகாய்
🔴 எலும்புகளில் [ கால்சியம் ] பிரச்சனை வந்தால் இரத்த உற்பத்தில் பாதிப்பு வரும்……❗❗❗
💚 #வீட்டுவைத்தியம்💚
🇨🇭 மஞ்சள் கரிசாலை சட்னி🇨🇭
இதை வாரம் இருமுறை
உண்டுவர
இரும்புச் சத்து அதிகரிக்கும்.
பற்கள் மற்றும் குடல் உறுதி பெறும்.
இரத்தசோகை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட நொய் தீர்ந்து அழகு பெறும்.சளித் தொல்லை தீரும். கண் நோய் நீங்கும்...
🌟மஞ்சள் கரிசாலை அதிகம் முற்றாத இலைகள் - 1/2 அரை கிலோ
மிளகு -10
சிறு வெங்காயம் -100 கிராம்
பூண்டு -25 கிராம்
இஞ்சி-தேவையான அளவு
செக்கு நல்லெண்ணெய் 50 மிலி
தக்காளி -3
புளி- மிளகளவு
உப்பு-தேவையான அளவு
தாளிக்க- கடுகு, கறிவேப்பிலை
கரிசாலை இலையை வாணலியில் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்கவும். பின் வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கி பின்னர் தக்காளி,இஞ்சி,புளி சேர்த்து மீண்டும் வதக்கி ஒன்றாக்கி ஆறியபின் மைய அரைத்து எடுத்து தாளித்தால் கரிசாலை துவையல் தயார். குழம்பாக வேண்டு என்றால் நீர் ஊற்றி கரைக்கலாம்.
🇨🇭 பீட்ரூட் கீர்🇨🇭
சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்கு வெல்லம் மற்றும் ஏலம், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு வழங்கும் கீருக்குப் பதிலாக இதைத் தரலாம்.
🇨🇭 வாழைப்பூ சட்னி🇨🇭
நரம்பு நீக்கி சுத்தம் செய்த வாழைப்பூவில் கைப்பிடி அளவை சிறுசிறு துண்டுகளாக்கி, சிறிதளவு பொட்டுக்கடலை, தேவையான அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, உப்பு கலந்து அரைக்க... வாழைப்பூ சட்னி ரெடி. இதை இட்லி, தோசைக்கு சட்னியாகவோ, சாதத்துக்குத் துவையலாகவோ பயன்படுத்தலாம். ரத்தவிருத்தி மட்டுமல்ல... நாகரிகத்தின் பெயரில் குழந்தைகள் உண்ணும் ஃபாஸ்ட் ஃபுட் ரகங்களால் வரும் மலச்சிக்கலை போக்கவல்லது வாழைப்பூ.
🇨🇭 முருங்கைக்கீரை சூப்🇨🇭
கைப்பிடி அளவு முருங்கைக்கீரையுடன் நான்கு பல் பூண்டு, மிளகு, சீரகம், உப்பு, தோல் நீக்கிய இஞ்சி இவற்றை சேர்த்து, நசுக்கிக் கொதிக்க வைத்து, வடிகட்டி வழங்கினால்... அசத்தலான அயர்ன் சக்திக்கான சூப் தயார்.
🇨🇭 ரத்த சுத்திக்கான புதினா ஜூஸ்🇨🇭
கைப்பிடி அளவு புதினா தழைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து, சுவைக்கு நூறு கிராம் வெல்லம் சேர்த்து, சுமார் அரை லிட்டர் நீர் கலந்தால்... வளரிளம் பெண்களின் மாதப்போக்கினைச் சீராக்கும் சுலபமான புதினா ஜூஸ் கிடைக்கும். பசியைத் தூண்டி சுறுசுறுப்பைத் தரும் என்பதோடு, சிறுநீர் தொடர்பான தடை மற்றும் எரிச்சலை இந்த ஜூஸ் குணமாக்கும்.
🇨🇭 ரத்த விருத்திக்கான பழ சாலட்🇨🇭
கொய்யாப்பழம், அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து அப்படியே சாப்பிடத் தரலாம். மாலை வேளையில் ருசிக்கத் தோதான ஸ்நாக்ஸ் இது.
🇨🇭 ரத்தவிருத்திக்கான காய்கறி சாலட்🇨🇭
கேரட், பீட்ரூட் காய்களை துண்டுகளாக்கி, சிறிதளவு வறுத்த மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து கொத்தமல்லி, கறிவேப்பிலையை கலர்ஃபுல்லாக மேலே தூவினால், சுலபமாக நிமிடத்தில் காய்கறி சாலட் ரெடி.
🇨🇭 கொத்தமல்லி ஜூஸ்🇨🇭
ஒரு கைப்பிடி கொத்தமல்லியை அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து, 100 கிராம் வெல்லம் சுவைக்குச் சேர்த்தால்... ரத்த அழுத்தத்தை சீராக்கி வளப்படுத்தும் கொத்தமல்லி ஜூஸ் தயார். சுலபமான ஜீரணத்துக்கு உதவுவதுடன், பசியைத் தூண்டவல்ல எளிய தயாரிப்பு இது.
🇨🇭 வாழைப்பூ மடல் சூப்🇨🇭
வாழைப்பூவின் இளம் மடல் ஒன்றை சிறுதுண்டுகளாக்கி, நான்கு பல் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் ஒரு தக்காளி இவற்றை நசுக்கி, சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டினால்... ஹீமோகுளோபின் வளத்துக்கான வாழைப்பூ மடல் சூப்பை சுவைக்கலாம்.
சுவைக்காக சேர்க்கும் வெல்லம், பனை வெல்லமாக இருத்தல் நல்லது. மாற்றாக தேனும் சேர்த்துக் கொள்ளலாம்...
சற்று நீண்ட பதிவு தான் இருந்தாலும் பயனுள்ள இப்பதிவை, சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்
🍀☘️🍀☘️🍀☘️🍀☘️🍀