16/11/2025
மருத்துவம் படித்து டெலிவரி வேலை — தமிழ்நாட்டின் வேதனை நிறைந்த உண்மை!
இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ தகுதி பெற்றவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கத் தவறும் மருத்துவ அமைப்பு — காரணம் என்ன?
---
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பு முடித்த இளம் மருத்துவர்கள் இன்று தங்களது கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை பெற முடியாமல், டெலிவரி வேலைகளுக்கு தள்ளப்படுகின்றனர். தினசரி செய்தித்தாள்களில் வெளியான தகவலின்படி, இளங்கலை மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரையில் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதும், முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கும் ரூ.1.3 இலட்சம் ஊதியம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் ஆண்டுதோறும் சுமார் 5,000 மருத்துவர்களை உருவாக்குகின்றன. ஆனால் அரசு மருத்துவமனைகளில் உள்ள 19,000 மருத்துவ பணியிடங்கள் உயர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஒப்பாக உயர்த்தப்படாததால் வேலை வாய்ப்புகளும் ஊதியத் தரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக தனியார் மருத்துவமனைகள் மருத்துவர்களை குறைந்த சம்பளத்தில் பணியமர்த்தும் நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் மக்களில் 50% பேர் தனியார் மருத்துவமனைகளைத் தேர்வு செய்கிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள், மருத்துவத் தேவைகள் அதிகரித்துள்ளதை காட்டுகிறது. ஆனால் அதே அளவிற்கு மருத்துவ கட்டமைப்பு, அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியிடங்களை அரசு மருத்துவமனைகளில் உயர்த்தப்படாதது கவலைக்குரியது.
ஒருபுறம் அரசு மருத்துவமனைகளுக்கு உரிய தேவையான உபகரணங்கள், தகுதியான மருத்துவ ஊழியர்கள் மற்றும் நிரந்தர வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருக்கும் சூழலும், மறுபுறம் தனியார் மருத்துவமனைகள் மருத்துவர்களைப் பணம் ஈட்டும் கருவிகளாக மட்டுமே கருதி அவர்கள் உரிய ஊதியத்தை கேட்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபகாலத்தில் மருத்துவத் துறையில் நடைபெற்ற போராட்டங்கள், தனியார் மருத்துவர்களுக்கும் அரசு மருத்துவர்களுக்கும் உள்ள கோரிக்கைகளின் வேறுபாட்டை வெளிக்கொண்டு வந்துள்ளது. அரசு மருத்துவர்கள் வேலை நேர சுரண்டல், நிரந்தர வேலை மற்றும் பாதுகாப்பான பணி சூழல்களை கோரியிருக்க, இந்திய மருத்துவர்கள் சங்கம் மருத்துவமனைகளின் சொத்துக்களுக்கு பாதுகாப்புச் சட்டங்கள் வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்த சூழல், மருத்துவர்களின் வர்க்க நிலைமைக்குள் உள்ள போராட்டத்தை வெளிப்படுத்துகிறது. அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் மருத்துவர்கள் தங்களுக்குள் உள்ள கோரிக்கைகளை சங்கம் மூலம் போராடி வருகின்றனர் சம வேலைக்கு சம ஊதி