Jeeva Mudra Yoga Training & Therapy Centre

  • Home
  • Jeeva Mudra Yoga Training & Therapy Centre

Jeeva Mudra Yoga Training & Therapy Centre Jeeva Mudra Yoga Training & Therapy Centre
Hatha Yoga Classes taken on theraphy basis

07/11/2024

சரணாகதி...

கோவிலுக்கு சென்றிருந்த போது
ஒரு அன்பர் சாஷ்டாங்கமாக விழுந்து
கருவறை நோக்கி ஆத்மார்த்தமாக வணங்கி கொண்டிருந்தார்.

என் பக்கத்தில் இருந்தவர், இந்த வேஷம் எல்லாம் தேவையா? என்று தன் நண்பரிடம் கூறி கொண்டு இருந்தார்.

அவருக்கு புரியவில்லை
இதன் உட்பொருள்.

சரணாகதி என்று இதை சொல்வார்கள்.

சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதற்கும் மனம் பண்பட வேண்டும். சட்டென்று எல்லோராலும் விழுந்து வணங்க முடியாது.

நம்முள் ஒரு மாற்றம் வர வேண்டும்.

Ego, Jealous, தான், தனது எல்லாம் கடந்தால் தான் முழு சரணாகதி.

என் செயல் என்று எதுவும் இல்லை. எல்லாம் உன் செயலே என்பதின்
உச்சமே சரணாகதி.

தனக்கென ஒரு செயலற்று தான்
அதுவாகி இருந்தல் என்று ஞானிகள் குறிப்பிடுவார்கள்.

நான் செய்யறதை சரியாக செஞ்சுட்டேன். இனி எல்லாம் உன் செயல் என்று மனப்பூர்வமாக ஆத்மார்த்தமாக
சரணாகதி அடைந்து பாருங்கள்.

உடனே நம் எண்ண அலை பிரபஞ்சம் எல்லாம் பரவி, பிரபஞ்ச சக்தியாகிய இறைவன் களத்தில் இறங்கி விடுவார்.

நம் வினை பதிவுகளுக்கேற்ப என்ன செய்தால் இவருக்கு நன்மை விளையும் என்று Blue print போட்டு ஆராய்ந்து நம் தகுதிக்கேற்ப தகுதியான குழ்நிலையை உருவாக்கி விடுவார்.

பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், அலை இயக்கமும் எண்ண ஆற்றல் தத்துவமும் புரிந்தவர்களுக்கு எளிதில் விளங்கும் .

இன்னும் எளிமையாக போனால், நல்லதையே நினை நல்லதே நடக்கும்.

எல்லா வேதங்கள், இதிகாசங்கள்,
புராண கதைகள், ஞான நூல்கள், ஞான உபதேசங்களின் Final drop இதுதான்.

எங்கே சுற்றினாலும் எல்லாம் நம் எண்ணங்களில்தான் வந்து முடியும்.

எண்ணத்தின் ஆற்றல் அளப்பரியது.

26/03/2024

உங்களுக்கு துன்பம் கொடுத்தோரை
பழி வாங்க போறீங்களா?

இந்த கதைய அவசியம் படிங்க அன்பர்களே!

“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?

எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிற
ார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓயமாட்டேன்” என்று
அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான்.
சாமி யோசித்தார்.

“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.

“நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார்.

“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க வேண்டும்”.

“சரி… அப்புறம்?”

“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”..

“ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்”

என்று சீடன் எழுந்து போனான்.

அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.

ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை.

ஆனால் நாளாக .....நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.

இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது.

அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.

அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.

சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.

“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றான்.

“என்ன புரிந்தது?” என்றார் சாமி.

“பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும்.

துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விளக்கத்தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன்.

“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி.

“புரியலையே…?”

“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”

“ஆமாம்”

“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?”

“ஆமாம்.”

“மகனே, பிரச்சனை உருளைக்கிழங்கில் இல்லை. கோணிப்பை. ?!

கோணி இருப்பதால் தானே அதில்
உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?

எனவே,

உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க
வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.

உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”..என்றார்..

ஆம்,அன்பர்களே..

கைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் எண்ணத்தையும்,உணர்வையும் கூடத்தான்...

"மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்........

மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் ".
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம்.

19/06/2023

கலங்கி இருக்கும் மனம் தெளிவடைய.../மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணனின்உபதேசம்

07/05/2023

Address


Opening Hours

Monday 06:00 - 20:00
Tuesday 06:00 - 20:00
Wednesday 06:00 - 20:00
Thursday 06:00 - 20:00
Friday 06:00 - 20:00

Telephone

+91 99404 01336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jeeva Mudra Yoga Training & Therapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jeeva Mudra Yoga Training & Therapy Centre:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram