Vira Loft

Vira Loft Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vira Loft, Palani.

அகத்தியர் கூறிய ஜலதோசத்திற்கான மருத்துவம்,உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கி...
03/02/2025

அகத்தியர் கூறிய ஜலதோசத்திற்கான மருத்துவம்,

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று ஜலதோஷம் பிடித்தவர்கள் புலம்புவதை கேட்டிருக்கிறோம்.

ஆனால், உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. அவற்றில் குறிப்பிட்ட ஒரு சிலவற்றை பார்ப்போம்.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் (மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாக கூறப்பட்டுள்ளது.

அகத்தியர் தன் நூலில் ‘அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும்’ என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும், ஆனால் அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதுதான் ஜலதோஷத்தை தீர்த்து வைக்கும மருந்து. நமது முன்னோர்கள் மருத்துவ குறிப்புகள் பலவற்றை மர்மமான வார்த்தை ஜாலத்தால் பல்வேறு காரணங்களால் மறைத்து வைத்திருக்கின்றனர். அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாததால்தான் நமது பாரம்பரிய வைத்திய முறைக்கு ஆதரவு குறைந்து போனதற்கு முக்கிய காரணமாகும்.

வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் , மஞ்சள் பொடி (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து மண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும். சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் வேண்டாம். மஞ்சள் சேர்வதால் எக்காரணம் கொண்டும் உடல் புண்ணாகாது.

இக்கலைவை பூசியதும் சுமார் 1 மணி நேரம் நன்றாக தூங்கம் வரும், ஒரு மணிநேரத்திற்கு பின்பு பார்த்தால் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் முழுவதுமாக குணமாகிவிடும். சிறுவர்களுக்கும் இதை பயன்படுத்தலாம்.

02/02/2025
 #பப்பாளிப்பழம்பப்பாளியில் கரோட்டின், வைட்டமின் சி, பாப்பைன் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் ...
01/02/2025

#பப்பாளிப்பழம்

பப்பாளியில் கரோட்டின், வைட்டமின் சி, பாப்பைன் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

பப்பாளி பழத்தின் நன்மைகள்:

செரிமானத்தை மேம்படுத்தும்
நச்சு நீக்கத்தை அதிகரிக்கும்
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மன தெளிவு மற்றும் கவனத்தை மேம்படுத்தும்.

வீக்கத்தைக் குறைக்கும்.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

காயம் குணப்படுத்துவதை துரிதப்படுத்தும்.

இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

பப்பாளியில் உள்ள பாப்பைன் என்சைம், சாப்பிடும் உணவுகளில் உள்ள புரோட்டீன்களை உடைத்து செரிமான செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. பப்பாளியில் உள்ள கரோட்டின் சத்து நம் உடலில் விட்டமின் Aவாக மாற்றப்படுகிறது.

5 பப்பாளியின் மற்ற நன்மைகள் .

சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.

இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இது ஆஸ்துமாவின் அபாயத்தைக் குறைக்கும்.

இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

பப்பாளியின் 8 ஆரோக்கியமான, நிரூபிக்கப்பட்ட நன்மைகள் இங்கே.

1,இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

2,இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.

3,இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

4,இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

5,இது நாள்பட்ட அழற்சியை குணப்படுத்தும்.

6,இது செரிமானத்தை மேம்படுத்தும்.

7,இது தோல் பாதிப்பை தடுக்கும்.

8,இது பார்வை மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

திரிபலா பொடிமலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு...
29/01/2025

திரிபலா பொடி
மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.

நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.

இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு சுடுதண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர , குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்
உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது

ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து.

திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல பயன் தரும்.

அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் இதைப் பயன்படுத்தலாம்மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்

தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேண்டுமென்றல், கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிக்க . சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.

பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

சர்க்கரை நோய்

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல்பருமன்

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.

25/01/2025

நம் உணவில் இருந்து அரிசியை தவிர்த்தால் விரைவில் அழிவு நிச்சயம்..

அரிசி சாப்பிட்டால் சுகர் வரும் என்பது நவீன கால வியாபார டுபாக்கூர் மருத்துவ அரசியல்.
அரிசி சாப்பிட்டே உடலின் சக்கரை அளவை குறைந்தது முன்னோர்கள் அறிவியல்.

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை த...
24/01/2025

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்
ஆசனப்புண்
அக்கி, தேமல், படை
தோல் நோய்கள்
உடல் உஷ்ணம்
வெள்ளைப்படுதல்
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
மூத்திர எரிச்சல்
கல்லடைப்பு
சதையடைப்பு, நீரடைப்பு
பாத எரிச்சல், மூல எரிச்சல்.
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி
சர்க்கரை நோய்
இதய நோய்
மூட்டு வலி
உடல் பலவீனம்
உடல் பருமன்
ரத்தக் கோளாறுகள்
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி

கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய்

மண்டலம் உண்டால்

விருத்தனும் பாலனாமே.-"

காலை வெறும் வயிற்றில் இஞ்சி

நண்பகலில் சுக்கு

இரவில் கடுக்காய்

என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"

1. காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட ...
20/01/2025

1. காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.

2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.

3. இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும் போது பித்தப்பை பயப்படுகிறது.

4. ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும் போது சிறுகுடல் பயப்படுகிறது.

5. நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடும் போது பெருங்குடல் பயப்படுகிறது.

6. சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பயப்படுகின்றன.

7. அதிகப்படியான வறுத்த உணவு, ஜங்க், துரித உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பயப்படுகிறது.

8. அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது இதயம் பயப்படுகிறது.

9. சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பயப்படுகிறது.

10. இருட்டில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பயப்படுகின்றன.

அரிசியின் வகைகளும்,  அதன் பயன்களும்
20/01/2025

அரிசியின் வகைகளும், அதன் பயன்களும்

அருமையான நார்ச்சத்தோடு அனைத்து புரதங்களையும் உள்ளடக்கிய எனக்கு மிகவும் பிடித்தமான பொருளிது. சிறுவயதிலிருந்து விரும்பி சா...
19/01/2025

அருமையான நார்ச்சத்தோடு அனைத்து புரதங்களையும் உள்ளடக்கிய எனக்கு மிகவும் பிடித்தமான பொருளிது.

சிறுவயதிலிருந்து விரும்பி சாப்பிட்டுவந்த நல்லதொரு உணவுப்பொருள்.....

பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடல் அழற்சி, மலச்சிக்கல், வயிற்று மந்தம், செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.

தசை வளர்ச்சிக்கும் தசைவலுப் பெறுவதற்கும் பனங்கிழங்கு நல்லது.

உடலுக்கு குளிர்ச்சித்தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கை வேகவைத்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொரியல் போன்று செய்து சாப்பிடலாம்.
குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.

உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்து நல்ல செல்களை உருவாக்கி, கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பை Fatty Liver அகற்றி, இருதயத்தி...
18/01/2025

உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்து நல்ல செல்களை உருவாக்கி, கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பை Fatty Liver அகற்றி, இருதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றி உங்களை கம்பீரமாக வலம் வர வைக்கிறது.

பச்சை சுண்டைக்காய் உடன் சிறிது தேங்காய்,புளி , காரத்திற்கு சிறிது நல்ல மிளகு, கடல் கல் உப்பு கலந்து அரைத்து துவையலாக அடிக்கடி சாப்பிட்டு வர கேன்சராவது மயிராவது.

உணவே மருந்து.

பகிர்வோம்.

காப்புக்கட்டு என்பது அந்த காலத்தில் மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. விஷக்கடி, அலர்ஜி, வயிற்றுப்போக்கு என அடிக்கடி வரு...
13/01/2025

காப்புக்கட்டு என்பது அந்த காலத்தில் மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. விஷக்கடி, அலர்ஜி, வயிற்றுப்போக்கு என அடிக்கடி வரும் பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக வைப்பது தான் காப்பு கட்டு. காப்புக் கட்டும் போது அதில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகளை வைத்து கட்டுவர். காலப்போக்கில் பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகளை விட்டு விட்டனர். அறிவியல் ரீதியாக ஜனவரி மாதம் என்பது மழைக்காலம் முடிந்து குளிர் அதிகரிக்கும் காலம் என்பதால் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து அதிகம் . அதனால் வீடு முழுக்க மஞ்சள், சாணம் தெளித்து சாம்பிராணி, தூபம் போட வேண்டும்.
பச்சரிசியில் மாக்கோலம் இ்ட்டு வீட்டு வாசலில் காப்பு கட்டலாம். இந்த மூலிகை கொத்தில் கட்டாயம் மாவிலை, நொச்சி, வேம்பு, ஆவாரம், மஞ்சள் கொத்து, தும்பை, பிரண்டை, துளசி இருப்பது சிறப்பு.

மார்கழி மாத குளிரில் ஆஸ்துமா நோயாளிகள்,முதியவர்கள் படும் துன்பம் நரகமாக இருக்கும்..நெஞ்சு சளியால் முதியவர்கள் மூச்சுதிணற...
12/01/2025

மார்கழி மாத குளிரில் ஆஸ்துமா நோயாளிகள்,முதியவர்கள் படும் துன்பம் நரகமாக இருக்கும்..நெஞ்சு சளியால் முதியவர்கள் மூச்சுதிணறலால் சிரமப்படுவார்கள்...

சுடுநீரில் பூண்டை தட்டிப்போட்டு அந்த நீரை குடித்தால் மூச்சு திணறல்,நெஞ்சு சளிகுணமாகும்..துளசி நீரும் நல்ல பலன் கொடுக்கும்!! கேரளாவில் சீரக நீர்தான் அதிகம் அருந்துவார்கள்..அது அஜீரண பிரச்சினையை சரியாக்கும்...

13 மிளகை மென்று பால் அல்லது சுடுநீர் குடித்தால் சளி அகலும்...வெற்றிலையில் மிளகு 4 வைத்து மென்றாலும் சளி அகலும்..ஆங்கில மருந்தையே நாடாதீங்க..அந்த மாத்திரை ஜீரணம் ஆக இன்னொரு மாத்திரை சாப்பிடுற அளவுக்கு குளிர் இருக்குற காலம் இது. #மருத்துவம்

 #பதிமுக_நீர்..... கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் கு...
11/01/2025

#பதிமுக_நீர்.....

கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .

சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்..... எங்கும் எதிலும்.

கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்.. சரி என்று அவர்கள் என்னதான் போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள். இதில் அப்படி என்ன இருக்கிறது ?

அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)

ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.

இ) கங்களி இன்ன பிற மூலிகைகள்.

பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) பன்னாட்டு கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். மெச்ச வேண்டும்.

எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தானை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? அடிப்போம் ?

இந்த பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 25/- முதல் 60/- வரை விற்கிறது. 5 லிட்டர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் போட்டால் போதும்.

18/12/2024

இட்லி மாவை ஃப்ரிட்ஜ்ல வச்சி சாப்பிட்டா சீக்கிரமா நாம் ஃப்ரீஸருக்குள்ளே போயிடுவோம்னு சொல்லாம சொல்லிட்டாங்களே டாக்டர்...*🙏🏻🙏🏻

Address

Palani

Opening Hours

Monday 9:30am - 10am
Tuesday 9:30am - 10am
Wednesday 9:30am - 10am
Thursday 9:30am - 10am
Friday 9:30am - 10am
Saturday 9:30am - 10am
Sunday 9:30am - 10am

Telephone

+917010802001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vira Loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share