Sugam Uyiruttam Siddha Clinic and Organic Stores

Sugam Uyiruttam Siddha Clinic and Organic Stores Store hosts herbal products with integrated siddha clinic by Dr. Thenmozhi Arutselvan, B.S.M.& S MBA

Our Specialties – Sugam Uyiruttam Siddha Clinic & Organic Store 🌿

1️⃣ Expert Siddha Care – Consultation by a government-registered Siddha doctor with over 35 years of rich experience.Dr Thenmozhi B.S.M&S
2️⃣ Trusted Medicines – Wide range of branded Siddha & Ayurveda formulations.
3️⃣ Holistic Wellness – Immunity boosters, natural supplements, and personalized lifestyle guidance.
4️⃣ Organic Essentials – Traditional rice varieties, millets, and naturally grown food grains.
5️⃣ Healthy Convenience – Ready-to-cook herbal health drinks and nutritional mixes.
6️⃣ Natural Beauty – Herbal cosmetics free from harmful chemicals.
7️⃣ Customer-Friendly Service – Easy access to authentic Siddha & Ayurveda medicines with professional doctor’s guidance.

குதிக்கால் வலி                                                                                                         ப...
21/01/2026

குதிக்கால் வலி பாதத்தின் அடிவளைவை (foot arch) தாங்கி நிறுத்தும் தடிமனான நார்ச்சதைப் பட்டை (connective tissue) தான் பிளாண்டார் ஃபேசியா. காலையில் தூங்கி எழுந்து முதல் அடி எடுக்கும்போது பாதத்தின் அடியில் கடும் வலி ஏற்படுவதையே First Step Pain என்று கூறுகிறோம் First step pain என்பது எச்சரிக்கை அறிகுறி உதாசீனம் செய்தால் உள் காயம் ஏற்பட்டு குதிக்கால் வலி Plantar Fascial Tear (பிளாண்டார் ஃபேசியா கிழிவு) ஏற்பட காரணமாகும்.
காலை நேரங்களில் கடினமான தரையில் செருப்பு இல்லாமல் அதிகம் நடப்பது. அல்லது Heel cushioning இல்லாத கடினமான செருப்பு அணிதல் பழக்கமில்லாமல் அதிக நடை அல்லது உயரம் ஏணியில் ஏறுதல். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அதிக சுமை தூக்குதல் அல்லது 50 வயதுக்கு மேல்திசுக்களின் நெகிழ்வு குறைதல் ஆகியவற்றால் குதிக்கால் காலடியில் வலி அதிகமாக உணரப்படுகிறது.
குதிக்கால் வலி மருந்தை விட பயிற்சி & ஓய்வுதான் முழுமையான குணமடைவதில் முக்கியம்!
கால் அடிப்பகுதியில் இருக்கும் Plantar Fascia என்ற தசை நார் தொடர்ந்து அழுத்தம்/பயன்பாடு காரணமாக நார்களில் உள்ள இழைகளில் சிறு காயம், அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் குதிக்கால் காலடியில் வலி அதிகமாக உணரப்படுகிறது. அங்கிள் ஷாக் (Ankle Support / Ankle Brace)
👉 பாதம்–முதுகால் (heel–ankle) அசைவுகளை கட்டுப்படுத்தி நல்ல நிவாரணம் தரும் ஒரு பயனுள்ள தீர்வு
✅ வீட்டு நிவாரண முறைகள்:
1️⃣ கெண்டைக்கால் கால் பின்புற தசை (Calf Muscles) நீட்டிப்பு பயிற்சி
2️⃣ பாதங்களை உயர்த்தி குதிக்கால் உயர்த்தி நிமிர்ந்து நின்று 2 அல்லது 3 நிமிடங்கள் (Toe Standing) பயிற்சி
3️⃣ MCR செருப்பு – வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தனித்தனியாக அணியவும் வலி குறையும் (பாதம் மென்மையாக இருக்கும்)
4️⃣ நீண்ட நேரம் நின்றுகொள்வது & அதிக எடையை தூக்குவது தவிர்க்கவும்
5️⃣ பந்தை உருட்டுதல் (Ball Rolling) – பாதத்தின் கீழ் வைத்து உருட்டவும்
6️⃣ சுடுநீரில் பாதங்கள் படும் படி சிறிது நேரம் வைக்கவும் – வலி குறைய உதவும்

21/01/2026
FREE MEDICAL CAMP
21/01/2026

FREE MEDICAL CAMP

09/01/2026

அழகிய விடியலில் அறம் கூறும் தமிழோடும், சுகம் உயிரூட்டதின் அகங்கனிந்த நல்வணக்கம்.. மன அழுத்தம் குறைய நாம் தவற விடும் ஒரு செயல் நம்முடன் மற்றவர்களுக்கான எல்லைகளை வரையறுத்தல். மன அழுத்தம் குறைய ஏன் நமக்குள் எல்லைகள் (Boundaries) வேண்டும்?
எல்லை என்றால் → மற்றவரின் சொல்/செயல் எவ்வளவு வரை நம் மன அமைதியை பாதிக்கலாம் என்பதற்கு நாமே வரம்பு வைப்பது.நாம் வரையறுக்கும் எல்லை நபருக்கு நபர் வேறுபட வேண்டும். எல்லை என்பது நம் மீது மற்றவர்கள் கொள்ளும் ஆதிக்கத்தை தடுப்பது.நமக்கான நேரத்தை ஒதுக்குவது. நமக்கு பிடித்தவற்றை செய்வது. இசையை அல்லது புத்தகத்தை ரசிப்பது, உடற்ப்பயிற்சி செய்தல், நல்ல நண்பர்களுடன் உரையாடுவது.
1.எல்லைகள் மனதை பாதுகாக்கிறது – பிறர் நடத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நம்முடைய எதிர்வினையை கட்டுப்படுத்த முடியும்.
2.எல்லைகள் சுகமான பிணைப்பு – குடும்பத்தை நேசித்தாலும், ஒவ்வொரு சொல்லையும் அர்த்தம் எடுத்து வைக்காமல் சொல்பவரின் கண்ணோட்டத்தை கருத்தில் கொள்வது..
3.ஆற்றல் சேமிப்பு – வாதங்கள், சண்டைகள் விட, நம் ஆற்றலை உடல் நலம், பொழுதுபோக்கு, எதிர்கால திட்டங்கள், கற்றல், ஆன்மிகம் ஆகியவற்றுக்கு சேமிக்க முடியும்.. உங்களின் நலம் எங்களின் அக்கறை சுகம் உயிரூட்டம் காட்பாடி 9384751163

Best Results For Diabeties. இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்த சித்த மருத்துவ  வழி – Today start Zigma Zignid Powder
30/11/2025

Best Results For Diabeties. இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்த சித்த மருத்துவ வழி – Today start Zigma Zignid Powder

30/11/2025

சிறுநீரகம் வேலை செய்யும் விதம்
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் (கிட்னியிலும்) சுமார் 1 மில்லியன் (10 லட்சம்) நெப்ரான்கள் இருப்பது தான் பொதுவான அறிவியல் தகவல்.அதாவது இரண்டு கிட்னிகளிலும் சேர்த்து சுமார் 2 மில்லியன் (20 லட்சம்) நெப்ரான்கள் இருக்கும். சிறுநீரகத்தின் முக்கிய பகுதி நெப்ரானின் ஆரம்பப் பகுதி குளோமெருலஸ் (Glomerulus) என்று அழைக்கப்படுகிறது.இது ஒரு சிறிய பந்துபோன்ற ரத்தக்குழாய் வலை. நெப்ரான் முதலில் ரத்தத்தை ‘pressure filter’ அதாவது பெரிய குழாயிலிருந்து சிறிய குழாயிற்கு அழுத்தி செலுத்தும் பொழுது வடிகட்டப்பட்டு சிறிய மூலக்கூறுகளை மட்டும் வெளியே விடுகிறது. கீழ் கண்ட சிறிய மூலக்கூறுகள் தண்ணீர் சோடியம் (Sodium), பொட்டாசியம் (Potassium), குளுக்கோஸ் (Glucose), அமினோ அமிலங்கள் (Amino acids), யூரியா (Urea), கிரியாடினின் (Creatinine) போன்றவை முதலில் வடிகட்டப்பட்டலும் பின்னர் தேவையான சத்துக்கள் மீண்டும் சிறிய குழிகள் வழியாக செல்லும் பொழுது உறிஞ்சப்படுகின்றது. இதனால் உடலுக்குத் தேவையான தண்ணீர் சோடியம், பொட்டாசியம், குளுக்கோஸ் glucose 100% போன்றவற்றை மீண்டும் ரத்தத்தில் சேர்க்கிறது. தேவையில்லாத அல்லது அதிகமான உப்புகள், நச்சுக்கள், யூரியா போன்றவை மட்டும் சிறுநீராக வெளியேறுகின்றன.
நெப்ரான்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய வழிகள்
1)தினமும் 1.5–2 லிட்டர் (உடல்நிலைபடி)
தண்ணீர் குறைபாடு நெப்ரான்களின் filter செயல்பாட்டை பாதிக்கும்
2) அதிக உப்பு → BP அதிகரிவு → குளோமெருலஸ் அழுத்தம் ↑ → நெப்ரான் சேதம்
3) வலி நிவாரிணி மாத்திரைகள் நீண்டகாலம் எடுத்தால் நெப்ரானுக்கு நேரடியாக தீங்கு.
4)ஆரோக்கியமான உணவு & வாழ்க்கை முறை இவையே நெப்ரான்களின் ஆயுளை அதிகப்படுத்தும்.
5)தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பிஸ்கட் சிப்ஸ் மற்றும் சிக்கன் பக்கோடா பிரைட் ரைஸ் போன்ற துரித உணவுகளை தவிர்ப்போம்.உங்களின் நலம் எங்களின் அக்கறை. சுகம் உயிரூட்டம் காட்பாடி 9384751163...

Call now to connect with business.

Address

Shop No. 1, Ground Floor, VIT Main Road, Opp To Worth Trust, Near Chittor Bus Stand
Vellore
632007

Opening Hours

Monday 9:30am - 1pm
5:30pm - 8pm
Tuesday 9:30am - 1pm
5:30pm - 8pm
Wednesday 9:30am - 1pm
5:30pm - 8pm
Thursday 9:30am - 1pm
5:30pm - 8pm
Friday 9:30am - 1pm
5:30pm - 8pm
Saturday 9:30am - 1pm
5:30pm - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when Sugam Uyiruttam Siddha Clinic and Organic Stores posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sugam Uyiruttam Siddha Clinic and Organic Stores:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram