மூலிகை நன்மை

மூலிகை நன்மை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மூலிகை நன்மை, Hospital, Vellore.

SIDDHA HEALTH CARE:9047225560அன்பு கலந்த வணக்கங்கள்வாழ்வுக்கு பயனுள்ளதாக ..நமது தயாரிப்பானவலம் வர காத்திருக்கிறது. உங்கள...
17/03/2025

SIDDHA HEALTH CARE:9047225560
அன்பு கலந்த வணக்கங்கள்
வாழ்வுக்கு பயனுள்ளதாக ..நமது தயாரிப்பான
வலம் வர காத்திருக்கிறது. உங்கள் நலங் கருதி:
🦆 #மணத்தக்காளிக் கீரைச் சூரணம்

தேவையான பொருட்கள்:

நிழலில் உலர்த்திய
மணத்தக்காளிக் கீரை - அரைகிலோ

மிளகு - 10 கிராம்

சீரகம் - 20 கிராம்

சோம்பு - 30 கிராம்

*செய்முறை:-

மேற்சொன்ன அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடி செய்துக் கொள்ளவும்.

மணத்தக்காளிக் கீரையை தொடர்ந்து சமையலில் சேர்க்க இயலாதவர்கள் இதை இயற்கை உணவாகக்கொள்ளலாம்.

காலையிலும், இரவு சாப்பாட்டுக்கு முன்னும் இந்தச் சூரணத்தைச் சாப்பிட்டு வரவும்.

*பயன்கள்:-

கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் பலப்படும். அல்சர் போன்ற குடல் நோய்கள், நீரிழிவு, வாய்வுக் கோளாறுகள், உடல் பலவீனம் போன்றவை குணமாகும்

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏சீந்தில்சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் த...
16/03/2025

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
சீந்தில்
சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்ற மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறிப் படரும். இதன் கொடியை அறுத்து விட்டாலும் பட்டு போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சி வாழும் தன்மையுடையது.
சீந்திலுக்கு அமிர்தவல்லி,
சோமவல்லி,அமிர்தை,
குண்டலி,அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு.‘வல்லி’ என்றால் ‘கொடி’ என்ற பொருளில்,கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த‘வல்லி’ எனும் பெயரும்,அமிர்தம் என்றால்‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற பொருளில்
‘அமிர்தை’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது.இதில் பொற்சீந்தில் எனும் இனமும் உண்டு.
பெண்களை அதிகமாக தாக்கக்கூடிய மார்பக புற்றுநோயிலிருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும். சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். சீந்தில் கொடிகளை நன்றாக காயவைத்து பொடி செய்து காலை மாலை அரை தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து. சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும்.
சித்த மருத்துவத்தில்
சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம் (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவுவது என்பது பொருள்)
கொண்டதாக கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க கொடியின் சிறு துண்டை எண்ணெயில் பொரித்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். பெரியவர்களூக்கும் சளிக்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கலாம். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிக்கப்படுகிறது.அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர். சித்த மருத்துவ தயாரிப்பில் சீந்தில் சர்க்கரை பல்வேறு நோய்களுக்கு பயன்படுகிறது.
மேலும்,இது சிறு கசப்பு தன்மையைக்கொண்டது
குறிப்பாக சித்தர் பாடல் ஒன்றை
கவனியுங்கள்.
"சித்தி வல்லி சிறுகைப்பாஞ்
தீர்க்கு சமயக் காந்தரதங்
காந்துஞ் சுரங்கள் விக்கல் விஷங்
காமலை யையு மேகவெட்டை
சாந்த மாகும் வாதரத்த
தோஷந் திரிதோஷ முந்தவிற்கும்
வாய்ந்த பசிதீ வனமாக்கும்
வல்லி யமுத வல்லியிதே"
திரும்வியாதிகள்
💥இந்த மூலிகை சாயம், சுரம், காமலை,
💥விக்கல், மேகவட்டை,
போன்ற நோய்களையும்,
💥கடி விஷங்கள்,
💥வாத இரத்த தோஷத்தையும்,
💥முத்தொடங்களை நீக்கி
💥நல்ல பசியை தூண்டும்
என்கிறது
இந்த பாடல்.
அடுத்த
பதிவில் வேற ஒரு மூலிகையை பற்றி தெரிந்துகொள்வோம்
நன்றி.🙏
நன்றி 🙏
☘️💐நலமுடன் வாழ வாழ்த்துக்கள்💐☘️

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்ஆண்களின் விந்தணுக்களில்...
15/03/2025

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
ஆண்களின் விந்தணுக்களில் அளவு(Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல சுரப்பிகளின் சுரப்புகளோடு சேர்ந்து சுக்கிலப் பாயமாக(Seminal fluid) வெளியேறும்.
விந்தணுக்களின் உற்பத்தியிலே பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றைய சுரப்புக்கள் சாதாரணமான முறையிலே தொழிற்படுவதால் உடலுறவின் போது அவர்களுக்கு சுக்கிலப் பாயம் வெளியேறலாம்.சுக்கிலப் பாயம் வெளியேறும் அனைவரிலும் விந்துகளின் அளவு போதுமானதாக இருக்கும் என்றில்லை.
ஆகவே குழந்தை உருவாகுவது பிற்போகும் சந்தர்ப்பத்தில் ஆண்களின் சுக்கிலப் பாயம் சோதிக்கப்பட்டு அதிலே உள்ள விந்துகளின் வீரியத் தன்மை கணக்கடுக்கப் பட வேண்டும்.
விந்துகளின் வீரியத்தன்மை பிரதானமாக மூன்று விதங்களில் கணக்கெடுக்கப்படும்.
1.விந்துகளின் எண்ணிக்கை -
சாதாரணமாக 1மில்லி லீடர் சுக்கிலப் பாயத்தில் 20 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும்
2.விந்துகளின் முன்னோக்கி அசையும் தன்மை (active motile)
மொத்தமாக உள்ள விந்துகளில் .குறைந்தது 50 வீதமானவை இந்தத் த்னமையைக் கொண்டிருக்க வேண்டும்
3.விந்துகளின் உருவ அமைப்பு(Morphology)
மொத்த எண்ணிக்கையில் குறைந்தது 30 வீதமானவை சரியான உருவ அமைப்பில் இருக்க வேண்டும்
இயல்பான விந்து எண்ணிக்கை
ஒவ்வொரு விந்தணு வெளியேற்றத்தின் போதும் 1 முதல் 5 மி.லிட்டர் வரையில் மாறுபடுகின்றன. மேலும் விந்து எண்ணிக்கை ஒரு மி.மீ.க்கு 20-150 மில்லியன் வரையிலாக மாறுபடுகின்றன. அதில் 60 சதவிகித விந்தணுக்களாவது சரியான வடிவம் பெற்று, முன்னோக்கி ஊர்ந்து செல்லும் திறன் பெற்றிருக்கும்
குறிப்பு :
இந்த பிரச்சனைகளில் ஏதேனும் தங்களுக்கு இருந்தால் சித்த மருதுவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்
இதற்கான தீர்வுகளும் மருந்துகளும் எங்களிடம் உள்ளது::9047225560

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏 #புங்கன்மரம்இந்த மரம் குபேரனுக்கு உரிய மரம் இந்த மரத்தை வளர்த்து...
14/03/2025

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
#புங்கன்மரம்
இந்த மரம் குபேரனுக்கு உரிய மரம் இந்த மரத்தை வளர்த்து அதன் நிழலில் அமர்ந்து சில நிமிடங்கள் இருந்தாலே ...
உங்கள் வாழ்க்கையில் மாற்றம் தெரியும் ..

இதன் பூக்கள் பார்பதற்கு மல்லிகை போன்றே இருக்கும் இதன் மணம் உங்கள் மன கவலை மன குழப்பம் இருந்தால் இதன் பூக்கள் உங்களை அதன் பிரச்சினையில் இருந்து விடுபட வைக்கும்..
இது குபேரன் வசிக்கும் மரம் என்பதால் அழியாத செல்வத்தை அள்ளித் தரும் என்று சொல்லப்படுகிறது...
ஆக காலை எழுந்தவுடன் புங்கை பார்த்தால் செல்வம் பெருகும் என்பார்கள்...
இது கிரகங்களில் சூரியனுக்கு உரிய மரமாகும் ஜாதகத்தில் சூரியன் வீக்கா இருந்தால் இந்த மரத்தை வளர்த்து வரலாம்...
இந்த மரம் குளிர்ச்சியான நிழலையும் ஆக்சிஜனையும் சுத்தமான காற்றையும் தரக்கூடிய முதன்மையான மரம்..
இதன் பட்டையை இடித்து நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து குடித்து வர மூலம் குணமாகும்..‌
இதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் தீராத கை கால் வலி குணமாகும்‌‌...
இதன் இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி கொதிக்க வைத்து சிறிது மஞ்சள் சேர்த்து கருப்பட்டி சேர்த்து டீ மாதிரி குடிக்கலாம் இதனால் ஈரல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகள் நீங்கும்..
இதன் குச்சிகளை கொண்டு பல் துவக்கலாம் பல் உறுதியாகும்..
இதன் விதைகள் மூலம் எடுக்கப்படும் குழி தையலத்தை முறைப்படி பயன் படுத்தி வந்தால் நரை திரை மூப்பு நீக்கும்..
இதன் பூக்களை உலர்த்தி பொடி செய்து பசு நெய் விட்டு வறுத்து காலை மாலை வெறும் வயிற்றில் கால் ஸ்பூன் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி சரியாகும் அதனால் ஏற்பட்ட புண் குணமாகும்..‌
இதன் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வர திருமண தடை நீக்கும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பு உண்டு நாக தோஷம் நீங்கும் முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் இந்த விளக்கு வழிபாடு அதிகாலை செய்வது சிறப்பு..
மழையை ஈர்க்கும் தன்மை கொண்டது
இது வறட்சியான இடங்களிலும் நன்கு வளரும் கால நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும்...
உங்களுக்கு ஏசி செலவு குறைய வேண்டுமா இந்த மரத்தை வீட்டின் முன் வளர்த்து வரலாம்...
இந்த மரம் உத்திரம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உரியது அவர்கள் வீட்டில் அல்லது கோவில்களில் நட்டு நீர் விட்டு வர அவர்கள் கர்ம வினை நீங்கும் ஜாதகத்தில் உள்ள கெடுபலன்கள் குறையும்...
இந்த மரத்தை நம்மால் முடிந்த அளவு நட்டு வளர்ப்போம் நன்றி...
போஸ்ட் பிடித்து இருந்தால் லைக் அன்ட் ஷேர் பன்னுங்க நன்றி

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏சிறுநீர்க்கடுப்பு நீங்க:-தே.பொருட்கள்..ஆவாரம்பூ – 50 கிராம்தூதுவள...
13/03/2025

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
சிறுநீர்க்கடுப்பு நீங்க:-

தே.பொருட்கள்..
ஆவாரம்பூ – 50 கிராம்
தூதுவளைப்பூ - 50 கிராம்
சரக்கொன்றைப்பூ - 50 கிராம்
வெந்தாமரைப்பூ - 50 கிராம்
முருங்கைப்பூ - 50 கிராம்

ஆகியவற்றைப் பொடித்து சலித்துக் கொள்ளவும்.

தினசரி இரவு உணவுக்குபின் 1 ஸ்பூன் எடுத்து பால் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட விந்து நஷ்டம், உடல் பலவீனம், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல், வெட்டைச் சூடு ஆகியவை நீங்கும்.

SIDDHA HEALTH CARE:9047225560ஆண்களுக்கான சிறப்பு மருந்துகள்....சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வுஆண்மை அதிகரிக்கும் லே...
12/03/2025

SIDDHA HEALTH CARE:9047225560
ஆண்களுக்கான சிறப்பு மருந்துகள்....சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு
ஆண்மை அதிகரிக்கும் லேகியம்
திப்பிலி, ஜாதிக்காய், பூனைக்காலி விதை, நிலப்பனைக்கிழங்கை மற்றும் கசகசாவை ஆகியவற்றை முறைப்படி நிழலில் உலர்த்தி சலித்து பசும்பாலை ஊற்றி இளஞ்சூட்டில் தேனை ஊற்றி சூடேற்றி நெய்யை ஊற்றி இளகல் பதத்தில் எடுத்து ஆற வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு குறைந்து ஆண்மை அதிகரிக்கும்...
இல்லறஉறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தரஇயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல்போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.
பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.
ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.
தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.
சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.
துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.
வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.
நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
இந்த மூலிகையை உட்கொள்வதின் மூலம் விந்து அதிகமாகிறது
ஆண்களுக்கான சிறப்பு மருந்துகள் சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட இதில் காணும் பொருட்களை கொண்டு உங்களுக்கு மருந்தை செய்ய நேரம் இல்லை என்றால் இந்த பொருள்களுடன் இதை விட சிறந்த பொருள்களை
சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ள எங்களது மருந்துகள் powder (3000rp) oil capsule லேகியம், ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும் {100 சதவீதம்} நல்ல பலன் கிடைக்கும்....
தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
விந்தணுக்கள் அதிகமாகிறது
உடல் வசீகரம் ஆகிறது
உடல் பருக்க உதவி செய்கிறது
ஆண்குறி பெரிதாகிறது
ஆண்மை அதிகமாகிறது
இது ஒரு மூலிகை வயக்ராவும் கூட ....
பொதுவாக டீன் ஏஜ் ஆண்கள் ஆபாச படங்கள் பார்த்து கை பழக்கத்தில் இடுபட்டு தங்கள் சக்தியை வீணாக்கி உடல் மெலிந்து கன்னங்கள் ஒட்டி காணப்படுவார்கள் அவர்கள் இந்த மூலிகையை சாபிட்டால் இழந்த அந்த சக்தியை விட பலமடங்கு பெறுவார்கள்.
திருமணம் செய்ய போகும் ஆண்கள் ஒருமதாதிர்க்கு முன்பு இந்த மூலிகையை முறையாக காலை மாலை பாலுடன் சாபிட்டு வந்தால் முதல் இரவில் எல்லை இல்லா இன்பத்தை பெறுவார்கள்.
உண்ணும் முறை :
இதன் தண்டு,வேர், இலை ஆகியவை எடுத்து நன்றாக பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி (Spoon) எடுத்து பாலுடன் சாபிடவேண்டும்...நேரில் சந்திக்க மருந்து வாங்கலாம் இல்லை என்றால் அனைத்து மருந்துகளும், பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டு… உங்கள் முகவரியை SMS ல் அனுப்பி… விரைவாக Courier மூலம் மருந்தை பெறலாம்....SIDDHA HEALTH CARE:9047225560

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏நுரையீரல் பலம் பெற நோயின்றி வாழ சித்தர்கள் சொன்ன எளிய வைத்தியம்" ...
13/06/2024

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
நுரையீரல் பலம் பெற நோயின்றி வாழ சித்தர்கள் சொன்ன எளிய வைத்தியம்

" வாழ்நாளில் ஒரு முறையாவது சாப்பிட வேண்டிய மூலிகை"

விளச்சி மரம் என்று அழைக்கப்படும் விழுதி மரங்கள், சீனத்தைத் தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல மரங்கள் என்று இன்றைய அறிவியல் உரைத்தாலும், இவை, சைவ சமயக்குரவர் நால்வர் காலத்தின் முன்பிருந்தே, தமிழகத்தில் இருந்து வரும், அரிய மூலிகை நன்மைகள் கொண்ட ஒரு மரமாகும்
ஒரு கைப்பிடி விழுதி இலையைப் பறித்து வாயிலிட்டு மென்று இதில் பாதியளவை விழுங்கி விட்டு
மீதமுள்ள பாதியளவு விழுதி இலையின் விழுதை வாயின் தாடைப் பகுதியான கடை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி பாருங்கள்
எப்போது ஓடினாலும் ஏற்படும் களைப்பும் இளைப்பும் இப்பொழுது நமது உடலில் ஏற்படாது இது உறுதி

ஆச்சரியமாக இருக்கலாம்
ஆனால் இதுதான் உண்மை
இதற்குக் காரணம் யாதெனில்
பச்சையாக இருக்கின்ற விழுதி இலையை நன்றாக உமிழ்நீருடன் கலக்கும்படி மென்று அதன்பின் விழுங்கி வந்தால்
இதன் மூலமாக உடனடியாக நுரையீரல் அளவுக்கு அதிகமான பலத்தைப் பெற்று விடுகின்றது அவ்வளவு அதிசய ஆற்றல் விழுதி எனும் இந்த மூலிகைக்கு உண்டு

அதாவது
வரையறுத்துச் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு அதீத வலிமையை நமது நுரையீரலுக்கு விழுதி இலையின் மூலம் கிடைத்து விடுகின்றது
இதனால்தான் வேகமாக நடந்தாலே ஏற்படும் மேல் மூச்சு கீழ் மூச்சாக ஓடும் நமது சுவாசம் வேகமாக ஓடினாலும் வழக்கமாக நடக்கின்ற சீரான சுவாசமாகவே நடைபெறுகின்றது
இந்த மாற்றத்தை ஒரே நாளில் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது இதை உணர்ந்து கொள்வதற்கு ஒருவார காலம் தேவைப்படும்
ஒரு பயிற்சி முறை
இன்று விழுதி இலையை உண்ணாமல் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஓடிப் பாருங்கள்
அடுத்த நாள்
விழுதி இலையை மென்று விழுங்கி விட்டு அதே தூரத்தை ஓடிப் பாருங்கள் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உண்மையில் உணரலாம்
முதல் நாள் ஓடுகின்ற பொழுது அதிகமான களைப்பு ஏற்படும் அடுத்த நாள் ஓடுகின்ற போது அந்த களைப்பின் அளவு குறைந்துவிடும்
விழுதி இலையை மென்று விழுங்கி விட்டு ஓடுகின்ற பொழுது இரண்டொரு நாட்களில் பெரிதான வித்தியாசம் தெரியாவிட்டாலும்
ஒரு வார காலத்தின் முடிவில்
ஓடினால் ஏற்படும் பெருமூச்சும் உடல் களைப்பும் முழுமையாக நீங்கிவிடும் இந்த வித்தியாசத்தை நாம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும்

ஆக
தினமும் இந்த வைத்திய முறையை கடைபிடித்து வந்தால் நுரையீரல் பலம் பெறுகின்றது ஓடினால் செலவாகும் பிராணசக்தி உடனே உடலில் சேகரிக்கப்படுகிறது அதனால்தான் ஓடினாலும் உடலில் களைப்பு ஏற்படுவதில்லை
எனவே இன்றைய காலகட்டத்திற்கு பிராண சக்தியைப் பெறுவதற்காக இதைவிட பெரியதொரு எளிதான வைத்திய முறை இனி தேடினாலும் கிடைக்காது பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள்
விழுதி இலையை தினந்தோறும் உண்டு வந்தால் நுரையீரல் பலம் பெறுவதோடு மட்டுமல்லாமல் வாத பித்த சிலேத்தும் எனும் முக்குணங்களின் மாறுபாடுதள் சமநிலை படுத்தப்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி உடலில் தோன்றும் நோய்கள் அனைத்தும் விலகி விடுமளவிற்கு இந்த விழுதி இலை உதவுகின்றது
விழுதி இலையை உண்டு வந்தால்
உடல் பலவீனம் நீங்கும்
தேவையற்ற கொழுப்புகள் குறையும் உடல் இறுகி நரம்பு மண்டலம் பலம் பெறும்
உடலின் வெப்பம் தணியும்
உடலின் களைப்பு நீங்கும்
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை வெட்டை கர்ப்பப்பை கோளாறுகள் போன்ற நோய்கள் அனைத்தும் நீங்கும்

பச்சையாக விழுதி இலை கிடைக்காவிட்டால்
நூறு கிராம் விழுதி இலை பொடியுடன் இருபது கிராம் சீரக பொடியும் பத்து கிராம் மிளகு பொடியும் ஐந்து கிராம் மஞ்சள் பொடியும் கலந்து இதை தினந்தோறும் காலை மாலை இருவேளையும் வெந்நீர் அல்லது பாலுடன் கலந்து ஒரு மண்டல காலம் பருகி வர நுரையீரலுக்கு பலமுண்டாகும் மேலும் இதன் மூலம் மேலே சொன்ன அனைத்து பயன்களும் நமது உடலுக்கு கிடைக்கும்
குறிப்பாக சுவாச சம்பந்தமான ஆஸ்துமா மூக்கடைப்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குதல் போன்ற நோய்கள் அனைத்தும் விழுதி இலையை உண்டு வந்தால் விலகி ஓடிவிடும்

விழுதி இலையில்
இன்னொரு எளிய வைத்திய முறை
நமது வீட்டில் ரசம் வைக்கின்ற பொழுது கருவேப்பிலை இலையோடு இந்த விழுதி இலையை பத்து அல்லது பதினைந்து இலைகள் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் இதன் மூலம் உடலில் இருக்கின்ற வாதநீர்கள் வெளியேறி உடல் வலிகள் நீங்கும் வாத நோய்கள் உடலில் வராதபடி நமது உடலை காக்கும் மலச்சிக்கல் விலகும் மேலும் உடலுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்
என்னுடைய அனுப்பவத்தில் பரீட்சித்துப் பார்த்த ஒரு சிறந்த காயகற்பமும் இந்த விழுதி மரமாகும் மூலிகையுமே
நன்றி 🙏

🌿💐 வளமுடன் வாழ வாழ்த்துக்கள்💐🌿

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏உடல் நிலை, மன நிலை மற்றும் சமுதாய நலத்துடன் தொடர்புடையது தான் ஆரோ...
12/06/2024

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
உடல் நிலை, மன நிலை மற்றும் சமுதாய நலத்துடன் தொடர்புடையது தான் ஆரோக்கியமாகும்.

மனித வாழ்வில் எல்லாம் இருந்தும் மகிழ்ச்சி இல்லையென்றால் பயனில்லை. இத்தகைய மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆரோக்கியம் ஆகும். எனவே மனித வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது இன்றியமையாததாகும்.
உடல் நிலை, மன நிலை மற்றும் சமுதாய நலத்துடன் தொடர்புடையது தான் ஆரோக்கியமாகும். ஒரு மனிதனின் சந்தோஷம் ஆரோக்கியத்தில் அடங்கியுள்ளது.
இதனால் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதில் முக்கியத்துவம் கொடுத்தனர்.
ஆனால் இன்றைய நவீன உலகில் நம் முன்னோர்கள் பின்பற்றிய பல ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் தற்போது காணாமல் போய் விட்டன என்றே கூறலாம்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நன்றாக இருந்து வாழ்க்கையை முழு வாழ்க்கையாக நீடித்த ஆயுளுடன் வாழச் செய்வதே சித்த வைத்தியம் எனலாம்.
இந்த தைலமானது என்னுடைய ஆசான் உடன் இருந்து நான் அனுபவ ரீதியாக கற்றதையும் கொடுத்து உபயோகப்படுத்தி பயன் பெற்றதையும் வெளியிடுகின்றேன்

உளுந்து தைலம்
☘️☘️உளுந்து 1.500kg
🌿☘️தண்ணீர் 6.000ltr
🌿☘️வெள்லாட்டுபால் 1.500ltr
☘️🌿நல்லெண்ணெய் 1.500ltr
🌿☘️பூனைக்காளி விதை பருப்பு 4g
🌿☘️ சதகுப்பை 4g
🌿☘️ பேரரத்தை 4g
🌿☘️ சுக்கு 4g
🌿☘️ மிளகு 4g
🌿☘️ திப்பிலி 4g
🌿☘️ வெட்பாலை பட்டை 4g
🌿☘️ அதிமதுரம் 4g
🌿☘️ இந்துப் உப்பு 4g
🌿☘️ வசம்பு 4g

ஆறுலிட்டர் தண்ணீரில் உளுந்தை போட்டு அதனை 1.500 லிட்டராக வற்றக்காட்சி குடிநீராக வடித்து வைக்கவும் பின்னர் மேற்குறிப்பிட்ட ஐந்து முதல் 14 வரை உள்ள சரக்குகளை வெயிலில் காயவைத்து இடித்து அரித்து எடுத்து பின்னர் அந்த பொடியை வெள்ளாட்டுப்பால் விட்டு மை போல் அம்மியில் வைத்து அரைத்து
நல்லெண்ணெய் தயாரித்த குடிநீர் பால் ஆகியவற்றுடன் ஒன்று சேர்த்து காய்ச்சி உரிய பதத்தில் வடித்துக் கொள்ளவும் பின்னர் இந்த தைலத்தை இந்த தைலத்தை தானிய குணமாக பத்து நாட்களுக்கு வைத்து எடுக்கவும்

💊 அளவு💊
வெளிப்பிரயோகம் மட்டும் இதனை பூசி நன்றாக நோய் உள்ள இடத்தை பிடித்து விடவும் (மர்தானம் விடவும் )

💯💯💥💥 தீரும் நோய்கள்💥💥💯💯
💥💯 வாத நோய்கள்
குறிப்பிட்டுள்ளபடி, மூட்டுகள், இணைப்பு திசு மற்றும் தசைகள் பெரும்பாலும் வாத நோயால் பாதிக்கப்படுகின்றன, ஆனால் வாத நோயறிதல்கள் தோல், நுரையீரல், சளி சவ்வு மற்றும் பிற உறுப்புகளையும் பாதிக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
💥💯 தலை நடுக்கம்
நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinson's disease) அல்லது பீ.டி என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய் ஆகும், பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத்திறன்கள், பேச்சு மற்றும் மற்ற செயல்பாடுகள் சீராக இயங்கமாட்டாது மூளையின் தொழிற்பாடுகளில் ஒன்றாகிய உடலியக்கங்களை ஒருங்கிணைத்தல் பாதிப்படைவதால் இந்நோய் ஏற்படுகின்றது.
💥💯 கை நடுக்கம்
வாத நோய்களுடன் சம்பந்தப்பட்ட நோய்
💥💯 நரம்புத் தளர்ச்சி
ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்ட உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், `பெர்னீஷியஸ் அனீமியா’ (Pernicious Anemia) எனும் ரத்தத்தையும் நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும். வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்.
💥💯 நரம்பு நோய்கள் எல்லாம் தீரும்
💥💯 ஒரு ஆண்டு வரை இந்த தைலத்தை தேய்த்து குளித்து வர செவிடு உள்நாக்கு வளர்ச்சி ஆகிய நோய்கள் எல்லாம் தீரும்
💥💯 மேலும் மனிதர்களுடைய தசைகள் நலிந்து போவதை( ஷினமடைதல் atrophy)
💥💯 இது தடுக்கும் தன்மை உள்ள ஒரு தைலம் ஆகும்
💥💯 இந்த தைலத்தை இளம்பிள்ளை வாத நோயின் ஆரம்ப அவஸ்தை இதனை உபயோகம் செய்யலாம்

என்னை பொறுத்த மட்டில் இது ஒரு ஆசூரியமான மருந்து சிலருக்கு இது சாதாரண ஒரு பதிவாகவே விளங்கும் அனுபவ ரீதியில் வாத நோய்களுக்கும் நரம்பு நோய்களுக்கும் நல்ல தீர்வினை பெற்று தந்திருக்கின்றது நல்ல எண்ணத்துடன் நல்ல நோக்கத்துடனும் முயற்சி செய்து பாருங்கள்
உங்களால் முடிந்தால் அடுத்தவருக்கு பகிருங்கள் அவரால் இது முடியுமானதாக கூட இருக்கலாம்....
நன்றி 🙏....

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏பதநீர் பருகினால் வரக்கூடிய நன்மைகள் :• ஈச்சம் பதநீர் பருகினால் 50...
11/06/2024

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
பதநீர் பருகினால் வரக்கூடிய நன்மைகள் :

• ஈச்சம் பதநீர் பருகினால் 500 வகையான நோய் தீரும்.
• தென்னை பதநீர் பருகினால் 800 வகையான நோய் தீரும்.
• பனை பதநீர் பருகினால் 600 வகையான நோய் தீரும்.
• கூந்தப்பனை பதநீர் பருகினால் 3000 வகையான நோய் தீரும்.
• பேய்பனை பதநீர் பருகினால் 1000 வகையான நோய் தீரும்.
• பாலைவனப் பனை பதநீர் பருகினால் 700 வகையான நோய் தீரும.;
• பனிப் பனை பதநீர் பருகினால் 1500 வகையான நோய் தீரும்.
• கடல் பனை பதநீர் பருகினால் 900 வகையான நோய் தீரும்

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏கீழாநெல்லி1) வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.காட...
10/06/2024

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
கீழாநெல்லி

1) வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி.

2) தாவரப்பெயர் -: PHYLLANTHUS AMARUS.

3) தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.

4) வளரும் தன்மை -: இது ஒரு குறுஞ் செடி, 60-70 செ.மீ.வரை உயரம் வளரும். மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்தசிறு இலைகளை உடையது. இலைக் கொத்தின் அடிப்புரத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். இலைக்கொத்தின் மேற்புரத்தில் மேல் நோக்கிய காய்களை உடைய மேலாநெல்லியும் உண்டு. ஆகவே கீழா நெல்லி தான் என்பதறுகு, காய்கள் கீழ்நோக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும்.மிகவும் குறுகிய வயதுடைய இது இந்திய மருத்துவத்தில் அறிய மூலிகையாகக் கருதப்படுகிறது. ஆண்டு முழுதும் பயிரிடப்படும் இது மேல் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பயிர்களுள் ஒன்று. இது விதைத்த 3 - 4 மாதத்தில் அருவடைசெய்யலாம். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகறது.

5) பயன் தரும் பாகங்கள் -: செடி முழுதும், தண்டு, வேர், மற்றும் இலைகள்.

6) பயன்கள் -: மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.

கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த கல்கத்தை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.

நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்துகலக்கிக் காச்சி வடித்து தலை முழுகி வரலாம்இது கீழாநெல்லி தைலமாகும்.

கீழா நெல்லி சமூலம் 4 அல்லது 5 செடி,விஷ்ணுகிரந்தி ஒரு கைப்பிடி, கரிசாலை ஒரு கைப்பிடி,சீரகம், ஏலக்காய், பறங்கிச்சக்கை வகைக்கு 5 கிராம், ஆங்கூர் திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு நாலில் ஒன்றாகக் சுறுக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 60 முதல் 90 மில்லி தினம் இரு வேளை சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குணமாகும்.

நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.

இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக்குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.

கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு தீரும்.

கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

கீழாநெல்லி இலை, கரிசிலாங்கண்ணி இலை தும்பையிலை சமன் அரைத்து பெரியோருக்கு புன்னைக் காயளவு, இளைஞ்யர்களுக்குக் கழற்சிக்காயளவு, சிறுவர்களுக்குச் சுண்டைக்காயளவு பாலில் பத்து நாள் கொடுத்துக் காரம் புளி நீக்கி, பால் மோர் சோறும் அரை உப்புமாகச் சாப்பிட காமாலை தீரும்.

கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப் பீனிசம், ஓயாத்தலைவலி நீர் வடிதல் ஆகியவை தீரும்.

ஓரிதழ் தாமரையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும்.

கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும்

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏நோய் (வியாதி, பிணி) என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் ...
30/05/2024

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
நோய் (வியாதி, பிணி) என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. நோய் பொதுவாக அறிகுறிகள் (signs) மற்றும் உணர்குறிகளுடன் (symptoms) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம்.
உடல் மற்றும் மன நலங்களால் மட்டுமே நிறைவான அழகையும் நிறைவான மகிழ்ச்சியையும் கொடுக்க முடியும் என்பதால் ஆரோக்கியம் என்பதன் விளக்கத்தில் இருந்து அது நலம் என்ற பொருளைத் தரும் தமிழ்ச் சொல்லே என்பது தெளிவாகிறது.
சில மருத்துவ முறைகளை நான் பதிவிட்டு வருகின்றேன் அதில் அனேகமானவை என்னுடைய பாரம்பரிய அனுபவம் முறையாகும் உங்களுக்கு தேவையானவைகளை நீங்கள் குறித்து வைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் இதில் சில முறைகள் கடினமாக இருக்கும் ஆனால் அவைகளின் பயன்கள் எண்ணிலடங்காதவையாக இருக்கும் நீங்களும் அதில் பயன் பெற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே
சிந்தில் லேகியம்
🌿☘️சீந்தில் சக்கரை படி ஒன்று
☘️🌿 வெட்டிவேர்
🌿☘️ சீரகம்
🌿☘️ லவங்கபத்திரி
🌿☘️ கோஷ்டம்
🌿☘️ நெல்லிவற்றில்
🌿☘️ முள்ளி வேர்
🌿☘️ நிலப்பனை கிழங்கு
🌿☘️ ஏலம்
🌿☘️ அரேணுகம்
🌿☘️ முந்திரி பழம்
🌿☘️ தற்கோளம்
🌿☘️ குங்குமம் பூ
🌿☘️ பரங்கிப்பட்டை
🌿☘️ நாகம்பூ
🌿☘️ தாமரை வளையம்
🌿☘️தாமரை கிழங்கு
🌿🌿பச்சைக் கற்பூரம்
🌿☘️சந்தனம்
🌿☘️சாதிக்காய்
🌿☘️ ரத்தச்சந்தனம்
🌿☘️ சுக்கு
🌿☘️ திப்பிலி
🌿 🌿மிளகு
☘️ ☘️அதிமதுரம்
🌿☘️நெட் பொரி
🌿☘️ அமுக்குரா கிழங்கு
🌿☘️ தண்ணீர் விட்டான் கிழங்கு
🌿☘️ நெருஞ்சி வேர்
☘️🌿 கற்கடக சிங்கி
இலைகள் எல்லாம் வகைக்கு வராக எடை ஒன்று
இவைகளை எல்லாம் சுத்தம் செய்து எடுத்து வெயில் காய வைத்து இடித்து இதற்கு இரட்டிப்பு சீனி சக்கரையை கலந்து பசுவின் நெய்யை கூட்டி பிசைந்து
தினமும் வெருகடி பிரமாணம் அளவு சாப்பிட்டு வர வேண்டும்
💥💥தீரும் வியாதிகள்💥💥
💢 மோக நாய்கள் அனைத்தும்
💢 பித்தவெட்டை
💢 சோகை
💢 உடல் வெக்கை நோய்
முதலிய அனைத்து நோய்களும் தீரும்
கை கண்ட முறையுண்டோ இதனை தாராளமாக நீங்கள் செய்து பறிச்சிட்டு பார்த்துக் கொள்ளலாம் என்னுடைய அனுபவ ரீதியில் ஒரு சிறந்த முறை இதுவாகும் இலகுவான முறையும் கூட ஆனால் செய்வது கொஞ்சம் கடினம் அவசரமும் ஆகாது நிதானமாக கொஞ்சம் செய்ய வேண்டும்

SIDDHA HEALTH CARE:9047225560🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏பல் வலி , சொத்தை மற்றும் பல் கூச்சம் சரியாக ஒரு எளிய இயற்கை வைத்த...
29/05/2024

SIDDHA HEALTH CARE:9047225560
🙏🙏அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏
பல் வலி , சொத்தை மற்றும் பல் கூச்சம் சரியாக ஒரு எளிய இயற்கை வைத்தியம்

👉 தேவையான மூலிகைகள்

1.கருவேலம் பட்டை - 100g
2.ஆலமரபட்டை - 100g
3.கடுக்காய் தோல் - 50g
4.கிராம்பு - 50g
5.புதினா உப்பு - 100g

👉 செய்முறை விளக்கம்

✍🏿 மேற்கூறிய மூலப்பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளுங்கள்

✍🏿 வாங்கிய மூலப்பொருட்களை சுத்தம் செய்து சூரிய வெப்பதில் நன்கு காய வையுங்கள்

✍🏿 காய்ந்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளுங்கள், போதுமானது

✍🏿 அரைத்ததை ஈரப்பதம் படாமல் வைத்து கொள்ளுங்கள்

👉 பயன்படுத்தும் முறை

தினமும் காலை பல் துலக்க இந்த பொடியை கொண்டு பல் துலக்கவும்... பிறகு வெது வெதுப்பான நீரில் பல் துலக்கவும்

மருந்துவ நன்மைகள்

இந்த பொடியானது பல் கூச்சம்,பல் வலி,பல் வீக்கம்,வாய் துர்நாற்றம்,ஈறு வலி,ரத்த கசிவு ஆகியவை குணமாகும்

👉 எத்தனை நாளில் பலன் கொடுக்கும்?

3-ம் நாள் முதல் பலன் கொடுக்கும்.அதிகபட்சம் ஓரிரு வாரம் எடுத்தால் போதும் இதன் பலனை பொறுத்த வரை 10 முதல் 70 வயது வரை பலன் கொடுக்கும்

அதிக பாதிப்பு இருந்தால் நிரந்தர பலனை பெற ரிஷிநேத்ராவின் பல் நலனி செய்து பயன்படுத்துங்கள்

Address

Vellore

Alerts

Be the first to know and let us send you an email when மூலிகை நன்மை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category