13/05/2025
கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, பாலியில் உள்ள JSA சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முதலாவது பட்டமளிப்பு விழா JSA கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் K. ஜெயராமன், அவர்கள் தலைமையில், செயலாளர் டாக்டர். JSA அருண், நிர்வாக இயக்குனர் மரு. கண்மணி அருண், இயக்குனர் திரு. A. மகேஸ்வரன், கல்லூரி முதல்வர் மரு. K. வெற்றிவேல், அவர்களின் முன்னிலையில்
BSMS படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலாவது பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. மரு.J.அன்புச்செல்வி
வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மரு. K. நாராயணசாமி, M.D., D.M., (Gastro) அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு BSMS பட்டப்படிப்பு முடித்த 60 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி விழாவை சிறப்பித்தார்கள். முதன்மை விருந்தினர் அவர்கள் பேசுகையில் மாணவர்கள் பெற்றோர்களை நடமாடும் கடவுள்களை போல் வணங்க வேண்டும் என்றும், சித்த மருத்துவ மருந்து தனி சிறப்பு வாய்ந்தது ஏன் என்றால் பக்க விளைவுகள் இல்லாமல் ஒரு மருந்து உடல் முழுவதும் நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டது என்பதால் சித்த மருத்துவத்தை உலகம் முழுவதும் கொண்டு சொல்ல வேண்டும் என்றும், மருத்துவப் படிப்பு என்பதால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று விரிவாகவும் மிக தெளிவாகவும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் இக்கல்லூரி அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மரு. J. கீர்த்தனா, மரு. R. A. ஐடா யாழினி மற்றும் மரு. R. லக்ஷ்மி ஸ்ரீ அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பாக தங்க நாணயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் உதவி சித்த மருத்துவ அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இக்கல்லூரியின் மாணவி மருத்துவர் V.அபிராமி அவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் டாக்டர். K. ஜெயராமன் அவர்களால் தங்க நாணயம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மரு. S. P. கோப்பெரும் தேவி இவ்விழாவினை மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. மரு. R. ஹேமலதா நன்றியுரை நிகழ்த்தினார்