Qure herbal Products

Qure herbal Products Manufacturing Qure herbal balm for cold Headaches &all types of pain
Hairmax hair oil-healthy hair

03/07/2025

#தமிழ்த்தாத்தா__உ_வே_சாமிநாதஐயர்🙏
ே_சா_நினைவுதினம்_இன்று. 🙏
உ. வே. சாமிநாதய்யர் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். எனவே உ. வே. சாமிநாத ஐயர்; சுருக்கமாக உ.வே.சா. எனப்பட்டார். தமிழறிஞரான உ.வே.சா. அவர்கள் அழிந்து போகும் நிலையில் ஓலைச் சுவடிகளிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றையும் தேடித்தேடி, அச்சிட்டுப் பதிப்பித்தவர். தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டினால், இவரைத் #தமிழ்த்தாத்தா என மக்கள் அன்போடு அழைத்தனர்.
அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர்!
உ. வே.சா.அவர்கள். இவர் 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப் பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார்.
பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள “உத்தமதானபுரம்” எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார் உ. வே.சா. அவர்கள். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார்.
பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடு துறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி
#மீனாட்சி_சுந்தரம்_பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்! உ. வே.சா. அவர்கள். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த. உ.வே.சா. அவர்கள், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
உ.வே.சா என்று அழைக்கப்படும்
உ.வே சாமிநாத ஐயர், மட்டும் தோன்றியிருக்காவிட்டால், தமிழுலகிற்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநாநூற்றிற்கும், புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்து நமக்குத் தந்தவர் உ.வே.சா. அவர்கள்.
மேலும், தன்னுடைய சொத்துக்களை கூட விற்று, பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார்! தமிழ்த் தாயின் தலைமகனான
உ. வே.சாமிநாத ஐயர். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகளும், தாராளம், பட்ட சிரமங்களும் ஏராளம்; இருப்பினும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்! உ.வே.சா. அவர்கள்.
சங்க இலக்கியங்களை இன்று நாம் படிப்பதற்கு உ.வே.சா அவர்களே காரணம். சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிகிறது, என்றால் உ.வே.சாமிநாத ஐயரின் அருந்தொண்டே காரணம்; இல்லையென்றால் ஓலைச்சுவடிகளில் இருந்த இலக்கியங்கள் கரையானுக்கு இரையாகி, மண்ணோடு மண்ணாகியிருக்கும். இவ்விலக்கியங்கள் இல்லாத தமிழையும், தமிழிலக்கியத்தையும் யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளை பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து, மறைந்து விட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருளும் விளங்கும் படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களை குறித்த முழு புரிதலுக்கும் வழி வகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும், அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடுண்டு.
இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழின்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு புதையல். சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி ஆன்மீக வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னைத் தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது! எனக் கூறுவாராம்.
ஆனந்த வருடம் மாசி மாதம் 9 ஆம் தேதி திங்கட்ழமை (19-02-1855) அன்று உ.வே.சா பிறந்தார். இவர் பதிப்பித்த நூல்கள் எண்ணற்றவை; இவரது தமிழ்த்தொண்டும் நிகரற்றது. இவரது ே_சா__நினைவு_நாளான_இன்று இவரது தமிழ்த்தொண்டை நாம் நினைவில் கொள்வோம். உ.வே.சாமிநாத ஐயரின் தமிழ்த் தொண்டைப் போற்றுவோம். 🙏 ே_சாமிநாத_ஐயரின்_தமிழ்த்தொண்டைப்_போற்றுவோம்.
__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

03/07/2025

கொச்சின்- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை.

📍மூணார்.

30/03/2025
ALSO AVAILABLE AT AMAZON Qure natural theraphy herbal hair oil For Men & Women | Promotes Hair Growth | 100 ml https://a...
29/03/2025

ALSO AVAILABLE AT AMAZON
Qure natural theraphy herbal hair oil For Men & Women | Promotes Hair Growth | 100 ml https://amzn.in/d/faNCCqn

Also available at Amazon Qure natural theraphy pain balm | Muscle Pain Relieve | relief from headache (43.8g, Pack of 6)...
16/01/2025

Also available at Amazon
Qure natural theraphy pain balm | Muscle Pain Relieve | relief from headache (43.8g, Pack of 6) https://amzn.in/d/c3EC8eg

Qure herbal balm for effective relif from Cold,Headache,Bodypain,sprain,Joint pain,Backpain and all types of pain

18/10/2024

ALSO AVAILABLE AT AMAZON
Qure natural theraphy pain balm | Muscle Pain Relieve | relief from headache (43.8g, Pack of 6) https://amzn.in/d/c3EC8eg

ALSO AVAILABLE AT AMAZON LINK Qure natural theraphy herbal Pain Relief Oil For Joint, Back, Knee, Shoulder & Muscle pain...
14/05/2024

ALSO AVAILABLE AT AMAZON LINK
Qure natural theraphy herbal Pain Relief Oil For Joint, Back, Knee, Shoulder & Muscle pain,150 ml (Pack of 6) https://amzn.in/d/j4IPtMm

ALSO AVAILABLE AT AMAZON Qure natural theraphy pain balm | Muscle Pain Relieve | relief from headache (43.8g, Pack of 6)...
09/02/2024

ALSO AVAILABLE AT AMAZON
Qure natural theraphy pain balm | Muscle Pain Relieve | relief from headache (43.8g, Pack of 6) https://amzn.in/d/c3EC8eg

BUYER SELLERS MEET
07/01/2024

BUYER SELLERS MEET

Address

Virudunagar
626001

Alerts

Be the first to know and let us send you an email when Qure herbal Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Qure herbal Products:

Share