Kavin Diabetes Centre

Kavin Diabetes Centre It's a centre located in walajabad offering diabetes health education and care to the rural and semi urban people at an affordable cost. UNITE FOR DIABETES

02/11/2024
14-11-2024, இந்த ஆண்டின் உலக நீரிழிவு நோய் தினக் கருப்பொருள், "தடைகளை உடைத்தல், இடைவெளிகளைக் குறைத்தல்", நீரிழிவு நோயைக்...
02/11/2024

14-11-2024, இந்த ஆண்டின் உலக நீரிழிவு நோய் தினக் கருப்பொருள்,

"தடைகளை உடைத்தல், இடைவெளிகளைக் குறைத்தல்",

நீரிழிவு நோயைக் குறைப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது,

உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என வாழ்வியல் மாற்றத்தை கடைப்பிடித்தால்
நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும், நீரிழிவு நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அதனை மருந்தில்லாமல் கட்டுப்படுத்தி வாழ முடியும், மேலும் நீண்ட நாள் பட்ட நீரிழிவு நோயாளிகள் வாழ்வியல் மாற்றத்தின் மூலமாக மருந்தின் அளவை வெகுவாக குறைக்க முடியும்

வாழ்வியல் மாற்றத்தை கடைப்பிடிப்போம் நீரிழிவு நோயை வெல்வோம்

தீபங்கள் ஒளிர்வது போல்உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்பட்டாசு வெடித்து சிதறுவது போல்உங்கள் துன்பங்களும் சிதறட்டும்.இனிய தீப...
31/10/2024

தீபங்கள் ஒளிர்வது போல்
உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்
பட்டாசு வெடித்து சிதறுவது போல்
உங்கள் துன்பங்களும் சிதறட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

01/05/2023

1 மே 2023

வாலாஜாபாத் நகரில் மருத்துவ சேவையில் 15 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது கவின் நீரிழிவு நோய் சிகிச்சை மையம்.

நீரிழிவு நோய்க்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் வாலாஜாபாத் நகரை சுற்றியுள்ள கிராமப்புற மற்றும் நகர மக்களுக்கு நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோம்.

வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமாக அதாவது உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலமாக நீரிழிவு நோய்க்கான மருந்துகளை குறைப்பது மற்றும் நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது குறித்த விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்.

தொடரும் மருத்துவ சேவையில் கவின் நீரிழிவு நோய் சிகிச்சை மையம் வாலாஜாபாத்

அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்May Day 2023
01/05/2023

அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்
May Day 2023

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
14/04/2023

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இன்று ‌ கிளினிக்கில் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக வந்திருந்த இரண்டு பெண்களின் கதையைக் கேட்டதும் மனது கனத்து போனது.முதல் ப...
07/03/2023

இன்று ‌ கிளினிக்கில் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக வந்திருந்த இரண்டு பெண்களின் கதையைக் கேட்டதும் மனது கனத்து போனது.

முதல் பெண் வயது 62, பணி ஓய்வு பெற்றவர் அவரை குடும்பத்தினர் சரிவர பராமரிக்காத காரணத்தால் சர்க்கரைக்கான மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதில் சிரமம் உள்ளதாக கூறினார். மேலும் அரசு மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட மாத்திரைகளையும் வெளியில் இருந்து வாங்கப்படும் மாத்திரைகளையும் மாற்றி மாற்றி எடுப்பதாக கூறினார். இதனால் அவருடைய சர்க்கரை அளவு 350க்கு மேல் இருந்தது.
அவருக்கு இரண்டு கண்களிலும் கண் புரை. இதற்காக இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு கன்புரைக்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள இரண்டு முறை அவர் முயன்று உள்ளார். ஆனால் அவருடைய சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால் அதை 200க்கு கீழே குறைத்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று இலவச கண் சிகிச்சை முகாமில் மறுத்து விட்டனர். அவருக்கான உணவு கட்டுப்பாட்டு அறிவுரைகளையும் மருந்தையும் எழுதிக் கொடுத்து 20 நாட்களில் அவருடைய சர்க்கரையை குறைத்து அவரை அறுவை சிகிச்சைக்கு தயார் படுத்துகிறேன் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.
இவரைப் போன்று பெரும்பாலான வயது முதிர்ந்த பெண்கள் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுகின்றனர் மேலும் அவர்களுடைய உடல் நலனில் போதுமான அக்கறையை எடுத்துக் கொள்வதில்லை.
பெரும்பாலும் பெண்கள் தங்கள் உடல் நலனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளின் உடல் நலனையே பெரிதாக நினைப்பர்.

இரண்டாவதாக பார்த்த பெண்ணுக்கு 43 வயது அவருடைய சர்க்கரை அளவு 400க்கு மேல் இருந்தது அவர் கடந்த சில தினங்களாக ஒழுங்காக உணவு அருந்தவில்லை மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார். அவரை இதற்கு முன் இரண்டு வருடங்களுக்கு முன் சர்க்கரை நோய்க்காக பார்த்திருக்கிறேன். அதற்கு பிறகு இப்பொழுது தான் வந்திருந்தார். மேலும் அவருடைய ஒரே மகள் ஒருவரை காதலித்து வீட்டை விட்டு சென்று விட்டதால் மிகுந்த மனவேதனையில் இருப்பதாக கூறினார். அதனால் உணவு உட்கொள்ள பிடிக்கவில்லை மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவில்லை என்று மன வேதனையில் கூறினார். அவருக்கு ஆறுதலை ஏற்படுத்தும் விதமாக அவருடைய கஷ்டங்கள் விரைவில் நீங்கும் என்று கூறி இனிமேல் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளவும் மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் அறிவுறுத்தினேன் இதுபோன்ற கடினமான நேரங்களில் பெண்கள் அதிக மன உறுதியுடன் இருக்க வேண்டும். இந்த கடினமான காலங்கள் யாருடைய வாழ்க்கையிலும் நிரந்தரமாக இருப்பதில்லை. இவை சிறிது காலங்களில் கரைந்து போகும் ஆகவே பெண்கள் கடினமான காலங்களாக இருந்தாலும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டாலும் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். ஏற்கனவே கூறியது போல பொதுவாகவே பெண்கள் தங்கள் உடல்நிலை அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதிலும் ஏதேனும் இடர்கள் ஏற்படும் காலங்களில் இன்னும் தங்களை வருத்திக் கொள்கின்றனர். இதனால் பல்வேறு விதமான உடல் பிரச்சினைகளும் ஏற்படுகின்றது ஆகவே பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் அதே சமயம் குடும்பத்தினர் பெண்களை, அவர்களின் உடல் நலனுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்

பெண்களின் ஆரோக்கியம் பெண்களுக்கு மட்டும் நன்மையல்லாமல் அது அந்த குடும்பத்திற்கே நன்மைபயக்கும்.

மார்ச் 8
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளீருக்கான இலவச சிறப்பு பரிசோதனை முகாம்.

மார்ச் 8மகளிர் தின நல்வாழ்த்துக்கள் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளீருக்கான சிறப்பு பரிசோதனை முகாம்.
04/03/2023

மார்ச் 8
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளீருக்கான சிறப்பு பரிசோதனை முகாம்.

Address

73, Raja Street
Walajabad
631605

Opening Hours

Monday 5pm - 9pm
Tuesday 5pm - 9pm
Wednesday 5pm - 9pm
Thursday 5pm - 9pm
Friday 5pm - 9pm
Saturday 5pm - 9pm
Sunday 10:30am - 1pm

Telephone

+918526162262

Alerts

Be the first to know and let us send you an email when Kavin Diabetes Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kavin Diabetes Centre:

Share