23/04/2026
உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியம் தரும் எட்டு வடிவ வர்ம நடைபாதை!
"8" வடிவ நடைப்பயிற்சி செயல்முறை!
"8" வடிவ நடைப்பயிற்சியை காலையில் வெறும் வயிற்றில் அல்லது மாலையில் செய்வது நல்லது. அதிலும் திறந்த வெளியில் அல்லது ஒரு பெரிய அறையினுள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த நடைப்பயிற்சியை வடக்கு-தெற்கு திசைகளில் தான் மேற்கொள்ள வேண்டும். வடக்கு திசையில் கிழக்கில் இருந்து மேற்கு அல்லது மேற்கில் இருந்து கிழக்காக ஓர் இணைக் கோடு வரையவும் மற்றும் 10 அடி இடைவெளி விட்டு 8 வடிவத்தை வரைய வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருந்தால், முதலில் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின், எந்த ஒரு உடற்பயிற்சியிலும் ஈடுபடுங்கள். முக்கியமாக இந்த நடைப்பயிற்சி 8 வடிவத்தில் இருப்பதால், யாருடனும் பேச வேண்டிய அவசியம் இருக்காது. சொல்லப்போனால் மொபைலைக் கூட பார்க்க முடியாது. இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது சரியாக சுவாசிக்கலாம்.
இந்த 8 வடிவ நடைப்பயிற்சியின் போது, கால்களில் காலணிகள் எதுவும் அணியக்கூடாது. வெறும் காலில் நடப்பதால் பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் சரியாக கொடுக்கப்படுவதால், உள்ளுறுப்புக்கள் நன்கு செயல்படும்.
தோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கருப்பை பிரச்சனை, மன இறுக்கம், டிஸ்க் பிரச்சனைகள், ஒற்றைத் தலைவலி, எப்லிப்ஸி, சர்க்கரை நோய், இரத்த அழுத்த பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், பைல்ஸ், தூக்கமின்மை, இதய நோய், நரம்பு கோளாறுகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து 8 வடிவ நடைப்பயிற்சி விடுவிக்கும்.
8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின் இருமல் வரக்கூடும். ஏனெனில் நுரையீரலில் இருந்த சளி இளகி வெளியேற ஆரம்பிப்பதால், இருமல் வர ஆரம்பிக்கும். மேலும் இந்த பயிற்சியின் போது 5 கிலோ கிராம் ஆக்ஸிஜன் சுவாசிக்கப்படுவதால், நுரையீரலில் இருந்து சளி வெளியேற ஆரம்பித்து, ஒட்டுமொத்த உடலும் ஆற்றலுடன் இருப்பது போல் உணரக்கூடும்.