Govt. Homoeopathic Hospital Batticaloa

Govt. Homoeopathic Hospital Batticaloa A government medical centre which provide homoeopathic medicine without any side effect to all kind of ailments with free of cost.i

16/06/2021

Hate those doctors who mix all systems together like Homoeopuncture,
Reflexology or Accupressure with Homoeopathy.
Spineless Doctors. Who never believe their own system.
They are similar to those who give Western medicine with Homoeopathy or Ayurveda. Same on them!!

மருத்துவ முறைகளை கலந்து சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களை வெறுக்கிறேன். உதாரணமாக Homoeopuncture எனக் கூறி ஹோமியோபதியையும், அக்குபன்சரையும் கலப்பவர்கள். மேலும் Reflexlogy அல்லது Acupressure இனை ஹோமியோபதியுடன் கலப்பவர்கள். முதுகெலும்பில்லாத வைத்தியர்கள். தாங்கள் முறையாக படித்த வைத்தியத்துறையின் மீது நம்பிக்கையற்றவர்கள். இவர்களுக்கும் இந்த ஆயுர்வேத சிகிச்சை முறையுடன் மேற்கத்திய வைத்தியமுறையை கலந்து தொழில் செய்பவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இவர்களால் இந்த வைத்தியத் துறைகளுக்கே வெட்கக் கேடு!!

11/06/2021

தொடர்-04

நீரிழிவும் (diabetes) ஹோமியோபதியும்
**********************************************
By: Dr.M.A.M.Muneer
இதுவரை நீரிழிவு நோயின் வகைகள் பற்றியும் ஒவ்வொரு வகை நீரிழிவிலும் ஹோமியோபதி மருத்துவத்தின் பங்கு பற்றிப் பார்த்தோம். இனி வரும் பகுதியில் நீரிழிவு ஏற்படுவதற்கான காரணமும் இது யாருக்கு இலகுவாக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன என்பது பற்றியும் பார்க்கலாம்.

நீரிழிவு என்பது ஒரு நோய் கிடையாது. இது ஒரு வகையான குறைபாடு ஆகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே கூறியிருந்தது போன்று எமது உடலுக்குத் தேவையான சக்தியை நாம் உணவின் மூலமாகவே பெற்றுக் கொள்கிறோம். ஆனால் நாம் எமது உடலுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறது எனதனை அளந்து பார்த்து உண்பது கிடையாது. ஆகவே மேலதிகமாகக் கிடைக்கும் உடல் சேமிக்கத் தொடங்கும்.
உடலுக்குத் தேவையான சக்தியானது நாம் உண்ணும் மாப்பொருள் உணவிலிருந்தே பெற்றுக் கொள்கிறது. இம் மாப்பொருள் குளுக்கோஸ் வடிவாகவே எமது இரத்தத்துடன் கலக்கத் தொடங்கும். ஆகவே மேலதிகமாகக் கிடைக்கின்ற குளுக்கோஸினை எமது உடலில் சுரக்கின்ற இன்சுலின் கிளைக்கோஜன் என்கின்ற இரசாயனப் பொருளாக மாற்றி உடலின் சேமிக்கத் தொடங்கும். இந்தப் பொறிமுறையின் மூலமே உடலில் மேலதிகமாக உட் கொள்ளப் படுகின்ற குளுக்கோஸ் குருதியில் கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்தப் பொறிமுறையின் போது உடலுக்குத் தேவையான இன்சுலின் சரியான அளவில் சுரக்கப்படாத போது குருதியில் சேருகின்ற குளுக்கோஸின் அளவு அதிகரிக்கத் தொடங்கும். இதனாலேயே இந்த நீரிழிவு என்கின்ற குறைபாடு உருவாகிறது.

இனி. இந்தக் குறைபாடு யார் யாருக்கு அதிகமாக ஏற்படக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இந்தக் குறைபாடு யாருக்கு நிச்சயம் வரும் என 100% கணிக்க முடியாத போதும் எமது உடல் நிலை, வாழ்க்கை முறை என்பவற்றை வைத்து இவ்வாறானவர்கள் இலகுவாக இந்தக் குறைபாட்டினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ உலகம் வரையறுத்திருக்கிறது. அந்த அட்டவணை கீழே தரப்படுகிறது.

1. அதிக உடற்பருமன் கூடியவர்கள்: இந்தத் தன்மை வாழ்க்கை வட்டத்தின் இடையிலே வந்தாகவும் இருக்கலாம் அல்லது பரம்பரையாகவும் காணப்படலாம். இவர்களின் உடற்றொழிலியல் செயற்பாடுகள் (physical activity) மிக மந்தமாகக் காணப்படும். எடுக்கப்படுகின்ற சக்தி விரயமாகுவதற்குரிய வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படும். ஆகவே இங்கு சிலவேளகளில் உருவாக்கப்படுகிற இன்சுலினின் அளவு எடுக்கப்படுகின்ற குளுக்கோஸின் அளவை விட குறைவாகக் காணப்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகம். ஆகவே, குளுக்கோஸின் அளவு குருதியில் அதிகரிக்கத் தொடங்கும்.

2. ஒழுங்கற்ற உணவுப் பழக்க வழக்கம்:
உணவுப் பழக்கம் எமது உடலின் ஆரோகியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்துடன் நேரம் தவறி உண்ணுதலும் ஒரு நல்ல வழக்கம் கிடையாது. அதிகமான ஜன்க் (junk food) உணவுப் பாவனையும் கூட நீரிழிவை ஏற்படுத்தும்.

3. உயர் குருதி அழுத்தம் (high blood pressure) உடையவர்களுக்கும் நீரிழிவு இலகுவாக வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

4. உடலில் ட்ரைகிலிசரைட் (triglycerides) என்கின்ற பதார்த்தம் அதிகரிக்கும் போது. இந்த ட்ரைகிலிசரைட்டை நீங்கள் கொளொஸ்ட்ரோலுக்கான டெஸ்டினை எடுக்கும் போது அவதானிக்கலாம். ட்ரைகிளிசரைட் அட்லில் அதிகரிக்கும் போது குருதியில் இன்சுலின் தடை (insulin resistance) அதிகரிக்கும் இதனால் தேவையான அளவு இண்சுலின் உடலால் சுரக்கப்பட்டாலும் அந்த இன்சுலின் குருதியடன் சேராது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படலாம்.

5.உடலில் நல்ல கொழுப்பு எனச் சொல்லப்டுகின்ற high density level cholesterol (HDL) குறைகின்ற போதும் நீரிழிவு நோய் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

6. இதயம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கும் நீரிழிவு ஏற்றபடுவதற்குரிய வாய்ப்புகள் அதிகம்.

7. கருப்பைக் கட்டிகள் (PCOS) இருக்கின்ற பெண்களும் நீரிழுவு நோயால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

8. மதுப் பாவனை உள்ளவர்களுக்கும் இலகுவாக நீரிழிவு ஏற்படும்.

9. உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை ச்ஞ்து கொண்டவர்களுக்கும் அதிகமான மருந்துப் அவனை மூலமாக நீரிழிவு நோய் ஏறப்டக் கூடிய வாய்புகள் அதிகம்.

....தொடரும்

30/05/2021

தொடர் - 03
*************

நீரிழிவும் (diabetes) ஹோமியோபதியும்
**********************************************
By: Dr.M.A.M.Muneer

3. Gestational diabetes
பெண்கள் கருத்தரிக்கின்ற காலத்தில் முதன் முதலாக குளுக்கோசின் அளவு குருதியில் அதிகரிக்கின்ற போது ஏற்படுவதே இந்த வகை நீரிழிவாகும். அதிகமாக இந்த நிலையானது, பிள்ளைப் பேற்றின் பின்னர் சாதாரண நிலைக்குத் திரும்பி விடுகிறது. ஆனால் சிலருக்கு இந்த நிலை தொடர்சியாக நீடிக்கும் போது Type II diabetes என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஆனால் கர்ப்ப காலத்தின் போது சரியான உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும், தொடர்சியான மருந்துப் பாவனையும் இந்தக் குறைபாட்டை முற்றாக நிவர்த்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது. சிலருக்கு கர்ப்ப காலத்துடன் குளுக்கோசுன் அளவு சாதாரணனிலைக்குத் திரும்பிய போதும், பிற்காலத்தில் இவர்களுக்கு மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற பிரச்சினைகள் உருவாகத் தொடங்கும்.

இவ்வாறான ஒருவருக்கு பிரச்சினை கண்டறியப்படும் போது சரியான ஹோமியோபதி மருந்துகளை தொடர்சியாகப் பாவிக்கும் போது இந்தக் குறைபாடு நிவர்த்தி செய்யப்படுவதுடன், ஆரோக்கியான கரு வளர்ச்சியும் காணப்படும். மேலும் எதிர் காலத்தொல் ஏற்படுகின்ற மன உளைச்சல் போன்ற வியாதிகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

4. Juvenile diabetes
சிறு வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படுகின்ற நீரிழிவு நோய் ஆகும். இது பெரும்பாலும் type I diabetes இற்குள் அடங்கக் கூடியதாக இருந்தாலும் பரம்பரை தாக்கத்தின் மூலமாக வரும் நோய் ஆகும். தாய்க்கோ அல்லது தகப்பனுக்கோ அல்லது சிறுவனின் நேரடிக் கிடும்பத்தில் ஒருவருக்கோ நீரிழிவு நோய் காணபடும் போது இந்த juvenile diabetes உருவாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இவ்வாறான ஒருவருக்கு இன்சுலின் ஊசி மூலம் போடவேண்டியது கட்டாயம் ஆகும்.

இவர்களுக்கு ஹோமியோபதி மருந்துகளை இன்சுலின் ஊசியுடன் கொடுக்கும் போது இந்த நோய் மூலம் வருகின்ற பக்கவிளைவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

5. Pre diabetes
இந்த நிலையானது type II diabetes உருவாவதற்கு முந்திய நிலையாகும். இவர்களது குருதியில் குளுக்கோசின் அளவு சற்று அதிகமாகக் காணப்பட்டாலும், இவர்களை நீரிழிவு நோயாளி எனக் கணடறியக் கூடிய வேறு அறிகுறிகள் எதுவும் காணப்படாது. 95%இற்கும் அதிகமாக் இந்த நிலையை உடையவர்கள் type II diabetes நோயாளிகளாக மாறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகம். இவ்வாறானவர்கள் உடனடியாக மாத்திரைகளுக்குச் செல்லாமல் உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி மூலமாக இவர்களது நிலையை நோய் அற்ற நிலைக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

-தொடரும்........

29/05/2021
29/05/2021

தொடர் -01
************

நீரிழிவு (Diabetes) ஓர் அறிமுகம்
*************************************
- By: Dr. M.A.M.Muneer

நீரிழிவு நோய் ஒரு நாட்பட்ட வியாதி ( Chronic Disease) அல்லது தொற்றா நோய் (Non communicable disease) தொகுதியில் அடங்கும்.
குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதனால் இந்த நோய் உருவாகிறது. நாம் உட்கொள்கின்ற உணவின் மூலமே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. மேலதிகமாகக் கிடைக்கின்ற குளுக்கோசை (glucose) கிளைக்கோஜனாக (glycogen) மாற்றி தோலின் அடியில் நமது உடம்பு சேமித்துக் கொள்ளும். இவ்வாறு மாற்ற இன்சுலின் (insulin) அவசியமாகின்றது. இந்த இன்சுலின் எமது உடலிலுள்ள சதையி (pancreas) இல் உள்ள இலன்கர்கான் தீவுகள் (islet's of langkarhaan) என்னும் இடத்திலிருந்து சுரக்கின்றது. இந்த சுரப்பு சுரக்காத போதோ அல்லது குறைவாக சுரக்கின்ற போதோ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் குருதியில் சரியாக கலக்காத போதோ குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரிக்கும்.இந்த நிலையே நீரிழிவு அல்லது சீனி வியாதி ( Diabetes) என அழைக்கப் படுகிறது.

மருத்துவ உலகில் நீரிழிவு நோயானது 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன:

1 Type I diabetes or Insulin dependant Diabetes) ( டைப் I டயபெடீஸ் அல்லது இன்சுலினில் தங்கியிருக்கும் நீரிழிவு)

2. Type II diabetes or Non Insulin dependant Diabetes (டைப் II நீரிழிவு அல்லது இன்சுலினில் தங்கியிராத நீரிழிவு)

3. Gestational Diabetes (கர்ப்ப காலத்தில் வரும் நீரிழிவு)

4. Juvenile Diabetes ( சிறுவர்களுக்கு வருகின்ற நீரிழிவு)

5. Pre diabetes ( நீரிழிவிற்கு முன்னால் உள்ள நிலை)

இவை பற்றிய சிறு விளக்கத்தை பின்னால் வரும் பகுதியில் பார்க்கலாம்.

26/05/2021

PHILOSOPHY - SAMUEL HAHNEMANN
Organon Paragraphs 30, 31, 32, 33, 34, 35, 36,37
30. The human body is more disposed to let its state of health be altered by drugs than by nature.
31. Disease agents do not affect everyone. We fall ill only when susceptible. [SUSCEPTIBILITY]
32. Medicinal agents can affect all people.
33. The body is, therefore, more susceptible to medicinal forces.
34. The artificial disease does not only have to be stronger, but it has to be most similar. [the vital principle is instinctive, unreasoning, and without memory]. Nature cannot cure an old disease by adding a new dissimilar one.
35. Consider when two dissimilar diseases meet in the same person [examples are given in paragraphs 36-40].
36. Old diseases keep away new dissimilar diseases.
37. Chronic diseases are not affected by non-homeopathic treatment.
Beatriz H HillMedicina Homeopática Behhill

30/04/2021

Some useful information about Homoeopathic medical system. Please feel to free for furrther doubts.

HOMEOPATHY-COMMON MYTHS

Myth : Homeopathy is slow to act.

Fact : This is not true. Infact, homeopathy is fast acting in acute diseases like viral fever, cold, cough, tonsillitis, diarrhea etc. In chronic or old cases it may take some time to act. This usually happens if the person has been taking some other treatment (Allopathy, Ayurveda) for a long time, in such cases the effect of that medicine has to be neutralized first, so that the homeopathic medicine is able to act on the disease. Moreover, as the disease has been there for quite long, the vital energy in the body has depleted so much that it takes some time to revive it with homeopathic medicines. It has been observed that homeopathy has shown wonderful results in treatment of arthritis, skin conditions, asthma, kidney stones etc.

Myth : Homeopathy is effective only in chronic diseases.

Fact : Homeopathy is equally effective in acute diseases. Infact, today people prefer homeopathic treatment for acute conditions like tonsillitis, cough, cold, sinusitis, ear infection, viral fever etc.

Myth : Homeopathic medicines are sweet and therefore, cannot be taken by diabetes patients.

Fact : This is not true as homeopathic pills do not contain much sugar, moreover only small quantity of pills are given. Even then if the patient does not want to take pills, he can take the medicine in water or take a drop of homeopathic dilution (the liquid medicine) directly on the tongue.

Myth : Homeopathy is a miracle therapy and can cure any disease.

Fact : This is not true. Every system of medicine has its own limitation and so does homeopathy. In certain emergency conditions (such as drowning, asphyxia, poisoning, renal failure, cardiac failure) and surgical conditions (such as rupture appendix, third degree uterine prolapse, third degree piles) the patient should be immediately hospitalized and given the required treatment.

Myth : Homeopathy is a form of herbal medicine.

Fact : Although some homeopathic medicine are prepared from plant source, but they are not given in the crude form but prepared into medicines by a special process of potentization. During the process of potentization drugs are taken in their crude form (most concentrated form) and then prepared into medicines through a series of dilution and succussions or triturations. Moreover homeopathy treatment is based on law of similars (let likes be cured by likes), whereas herbal medicine is based on principle of treating by opposites (same as Allopathy).

Myth : Homeopathic medicines get spoiled by storing them in strong smelling places.

Fact : Homeopathic medicines are very sensitive so it is essential to store them away from strong smelling things. It is best to store the medicines away from sunlight and in a cool and clean place.

Myth : Homeopathy is against surgery.

Fact : This is wrong. It’s true that homeopathy doesn’t encourage surgery but in cases where a disease has advanced to such a stage where surgery cannot be avoided (such as ruptured appendix, myocardial infarction, third degree piles, pr*****ed re**um) homeopathic doctors do advise surgery.

Myth : Homeopathic medicine always aggravate your disease first before treating it.

Fact : This is not always true. Disease aggravation only occurs in those cases where the disease has been suppressed earlier by some treatment. For example suppression of skin condition like eczema may lead to development of asthma. Now when the same patient is treated for asthma by homeopathic medicines, his earlier disease (i.e. eczema) reappears. Infact, this is a good sign and shows that the patient is progressing towards cure. Aggravation can also occur if the medicine is not selected carefully (i.e. it is not well indicated or in the right potency). Hence it is advisable to consult your homeopathic consultant before taking any medicine.

Myth : Homeopathic medicines are not safe during pregnancy.

Fact : Homeopathic medicines can be taken safely during pregnancy. The medicines are prescribed in very minute doses and hence do not produce any side effects. Infact, homeopathic medicine helps in building up the resistance of the mother as well as the fetus. They have been found to be very effective in various conditions during pregnancy like vomiting, nausea, pre-eclampsia (high blood pressure during pregnancy), eclampsia (fits during pregnancy), varicose veins etc.

Myth : Homeopathic medicines should not be taken with strong smelling things like garlic, onion, coffee etc..

Fact : The homeopathic medicine is absorbed directly from the buccal mucosa (inner lining of the mouth). Hence it is advised not to eat or drink anything 15 minutes before or after taking the medicine, as it may hamper the absorption of medicine. Also it is advisable to rinse the mouth properly if you have eaten anything strong smelling.

Myth : Homeopathic medicines cannot be taken along with allopathic medicines.

Fact : It is usually advised not to take homeopathy medicines with allopathic medicines but if a person is already on allopathic medicine then he need not stop it abruptly. Infact, homeopathic treatment can be started along with it and once the condition stabilizes the allopathic medicine can be gradually tapered off.

Myth : Homeopathic medicines contain steroid.

Fact : Usually people believe that homeopathic medicines are very slow to act. Hence, whenever homeopathic medicine acts fast in acute diseases, people think that they contain steroids. But this is not true. Homeopathic medicines are bioenergetic, which means they influence and balance the person’s neurological, hormonal and immune systems. If the medicine is properly selected according to the homeopathic principles (viz. Law of similars, law of minimum and law of simplex), it can bring about a rapid cure without producing any side effects. On the other hand steroids are known to cause many side effects, which is not seen in case of homeopathic medicines.

ஹோமியோபதியைக் கண்டறிந்தவர் *Dr சாமுவேல் ஹானிமன்* ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டறிந்த ஜெர்மனி மருத்துவர் கிறிஸ்டிய...
10/04/2021

ஹோமியோபதியைக் கண்டறிந்தவர்

*Dr சாமுவேல் ஹானிமன்*

ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டறிந்த ஜெர்மனி மருத்துவர் கிறிஸ்டியன் சாமுவேல் ஹானிமன் (Christian Samuel Hahnemann) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் மிசென் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் (1755) பிறந்தவர். தந்தை பீங்கான் பொருள் வடிவமைப்பாளர், வண்ணம் பூசும் தொழிலாளி. அவர் தன் மகனிடம் நேர்மை, மனிதநேயம், கடின உழைப்பு போன்ற பண்புகளை விதைத்தார்.

* சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தார் ஹானிமன். ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, கிரேக்கம், லத்தீன், அரபிக், சிரியாக் உள்ளிட்ட மொழிகளை நன்கு கற்றார். மொழி ஆசிரியர், மொழிபெயர்ப்பாளராக வேலைசெய்துகொண்டே, லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார்.

* வியன்னாவின் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, மருத்துவராகப் பணியாற்றினார். சிறந்த மருத்துவர் என பெயர் பெற்றபோதிலும், இது தவறான மருத்துவ முறையோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.

* குணம் பெற்றுச் சென்ற நோயாளிகள் மீண்டும் மீண்டும் மருத்துவரை நாடிச் செல்வது இவரை வருத்தப்படச் செய்தது. மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதும் இவரை சங்கடப்படுத்தியது. அந்தத் தவறை இனி செய்யக் கூடாது என்ற எண்ணத்துடன் மருத்துவம் பார்ப்பதையே நிறுத்திவிட்டு, மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

வில்லியன் கலின் என்ற புகழ்பெற்ற மருத்துவரின் நூலை மொழிபெயர்க்கும்போது, சின்கோனா மரப்பட்டையின் மருத்துவ குணம் பற்றி அறிந்தார். இதையடுத்து, அலோபதி மருத்துவ முறையின் பிரச்சினை என்ன? எது சரியான மருத்துவம்? என்ற கேள்வியுடன் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

* அப்போது, மலேரியா காய்ச்சலுக்கு அலோபதியில் சின்கோனா மருந்து வழங்கப்பட்டது. அதன் பட்டையைச் சாறு பிழிந்து அருந்தி காய்ச்சலை ஏற்படுத்திக்கொண்டு, தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனமாகக் குறிப்பெடுத்தார். அதிக வீரியம் கொண்ட அதே மரப்பட்டையின் சாற்றை உட்கொண்டு, நோயை குணப்படுத்திக்கொண்டார். இதை மற்றவர்களுக்கும் கொடுத்து குணமாக்கினார்.

* தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு, புதிய மருத்துவ முறையைக் கண்டறிந்தார். நோய் எதனால் தோன்றுகிறதோ, அதன்மூலமே நோயைக் குணப்படுத்த முடியும் என்றார். இவரது இந்தக் கண்டுபிடிப்பு உலகையே புரட்டிப் போட்டது. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர், மருந்து குறித்த புதிய கோட்பாட்டை விளக்கும் கட்டுரையை 1796-ல் வெளியிட்டார்.

* தான் கண்டறிந்த மருந்துகளால் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தினார். 1807-ல் எழுதிய நூலில் தன் மருத்துவ முறையைக் குறிப்பிட ‘ஹோமியோபதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மொத்தம் 99 மருந்துகளைக் கண்டறிந்தார். இவற்றை தான் சாப்பிட்டும், நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்தும் சோதித்துப் பார்த்தார்.

* இந்த மருந்துகள், அவற்றின் பண்புகள் குறித்த தொகுப்பு ‘மெட்டீரியா மெடிக்கா’ என்ற நூலாக வெளிவந்தது. விரைவிலேயே உலகம் முழுவதும் இது ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பரவியது. ஹோமியோபதி பள்ளி, கல்லூரி, கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. ஹோமியோபதிக்கான தத்துவத்தையும் உருவாக்கினர்.

* இவரது நூல்கள்தான் ஹோமியோபதி மருத்துவத்துக்கான அடிப்படையாக அமைந்துள்ளது. தனி மனிதனாக சுமார் 53 ஆண்டுகாலம் பாடுபட்டு, ‘ஹோமியோபதி’ என்ற புதிய மருத்துவ முறையை உலகுக்கு வழங்கிய சாமுவேல் ஹானிமன் 88-வது வயதில் (1843) மறைந்தார்.

04/04/2021
24/03/2021

ஹோமியோபதி மருந்துப் பாவனையாளர்களுக்கு!!
*********************************

இலங்கையில் ஹோமியோபதி வைத்தியர்களை ஒழுங்கு படுத்த Sri Lanka Homoeopathy Medical Council (SLHMC) உண்டு. இன்றுவரை அதில் பதிவு செய்யப்பட்ட மொத்த ஹோமியோபதி வைத்தியர்கள் சுமார் 400க்கும் குறைவு. ஆக இவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் யாவரும் போலிகளே!! கிட்டத்தட்ட 12 அரச மருத்துவ நிலையங்கள் 12 மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ளது. உங்களது பகுதியில் தனியார் ஹோமியோபதி நிலையம் வைத்திருப்பவர்கள் உண்மையானவர்கள்தானா என்பதனை அந்தந்த வைத்திய நிலையங்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும். போலிகள் ஜாக்கிரதை!!!

Address

Munai Street
Batticaloa

Opening Hours

Monday 08:30 - 16:16
Tuesday 08:30 - 16:16
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94753267545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Homoeopathic Hospital Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Govt. Homoeopathic Hospital Batticaloa:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category