Reiki Healing

Reiki Healing Reiki is a form of alternative therapy commonly referred to as energy healing.

It emerged in Japan in the late 1800’s and is said to involve the transfer of universal energy from the practitioner’s palms to their patient.

கிருஷ்ணன் முற்றிலும் யாரோடும் ஒப்பிட முடியாதவன்; மிகவும் வித்தியாசமானவன்.கிருஷ்ணன் மிகப்புராதன காலத்தவனாக இருந்தாலும், அ...
30/08/2021

கிருஷ்ணன் முற்றிலும் யாரோடும் ஒப்பிட முடியாதவன்;

மிகவும் வித்தியாசமானவன்.

கிருஷ்ணன் மிகப்புராதன காலத்தவனாக இருந்தாலும்,
அவன் எதிர்காலத்திற்கும் சொந்தமானவனாக, உண்மையான எதிர்காலத்தவனாக இருப்பதில்தான், அவனுடைய தனித்தன்மையே அடங்கி இருக்கின்றது.

மனிதன், இனிமேல்தான் அந்த உயரத்திற்கு வளர வேண்டும்.

அங்கேதான், அவன் கிருஷ்ணனின் சம காலத்தவன் ஆக முடியும்.

கண்ணன் இன்னும் நம் புரிந்து கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவனாகத்தான் இருக்கிறான்

நம்முடைய முழு வரலாற்றிலும், பரிபூரண உயரத்தையும், ஆழத்தையும் எட்டிய ஒரே ஒரு மாமனிதன் கிருஷ்ணன்தான்.

இருந்தும்கூட, அவன் அப்படியொன்றும் இறுக்கமானவனாகவோ, சோகமானவனாகவோ, கண்ணீர் சிந்துகின்றவனாகவோ இல்லை.

பெரும்பாலும், ஆன்மீகவாதிகளின் பிரதான குணம் என்னவென்றால், வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்றோடிப் போனவர் போலவும், வாழ்க்கையை விட்டு விலகிப் போனவர் போலவும், அவர், மந்தமானவராகவும், இறுக்கமானவராகவும், துக்கமுடையவராகவும் காணப்படுவார்.

அப்படிப்பட்ட நீண்ட ஞானிகளின் வரிசையில் கிருஷ்ணன் மட்டுமே ஆடியபடியும், பாடியபடியும், சிரித்தபடியும் வருகிறான்.

ஆனந்தமாகச் சிரிக்கும் மதம், வாழ்க்கையை ஒப்புக் கொள்ளுகிற மதம், அதன் முழுப் பரிமாணத்தோடு இனிமேல்தான் பிறக்க வேண்டும்... அப்படி பிறந்த முதல் மனிதன்
கிருஷ்ணன்..

இன்று வரை, ஒவ்வொரு மதமும் வாழ்க்கையை இரண்டு பாகமாகப் பிரித்து வைத்திருக்கிறது.

ஒன்றை ஏற்றுக் கொள்கிறது; மற்றதை மறுக்கிறது.

ஆனால், கிருஷ்ணன் மட்டுமே வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறான்.

இவ்வாறு வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வதன் மூலம்தான் கிருஷ்ணனின் முழுப்பலனையும் பெற முடியும்.

அதனால்தான், இந்திய நாடு கிருஷ்ணனைப் பூரணமான கடவுள் அவதாரமாகப் போற்றுகிறது

நாம் அனுபவிக்கும் துயரங்கள், எதிர்மறைத்தன்மை, அழுத்தப்பட்ட உணர்வுகள், நிபந்தனைகள் என்னும் பெரிய பாலைவனத்தில், ஆடிப்பாடி ஆனந்தப்படும் ஒரு சிறிய பாலைவனச் சோலையாக அவன் திகழ்கிறான்

இன்று வரை, மனித மனம், வாழ்க்கையைத் துண்டு துணுக்காகவே பார்த்துப் பழகி விட்டது;

அதை தர்க்கத்திற்குரியதாகவும் (முரண்பட்டதாகவும்) பார்க்கிறது.

ஆன்மீகவாதி உடலை மறுக்கிறான்; ஆனால் உயிரை மதிக்கிறான்.

இதில் பரிதாபம் என்னவென்றால், அவன் தன் உடலையும், உயிரையும் இரு கூறாக்கி, இவற்றிடையே மோதலை உருவாக்கி விடுகிறான்.

இந்த உலகை மறுக்கிறான் ஆனால் இன்னொரு உலகை ஏற்கிறான்.

இப்படி இரண்டிற்கும் இடையில் ஒரு பகைமையை ஏற்படுத்தி விடுகிறான்.

நாம், நம் உடலை மறுத்தால் நம் வாழ்க்கை, இயல்பாகவே துக்கமும், துன்பமும் நிறைந்ததாக மாறி விடும்.

நம்முடைய வாழ்க்கையின் சகல சத்தும் சாரமுமாக இருப்பவை, உடல் சார்ந்த ஆரோக்கியமும், உத்வேகமும், நுண் உணர்வுகளும், அழகும், சங்கீதமும்தான்.

ஆகவே, உடலை வெறுத்து ஒதுக்கும் ஒரு மதம், ரத்தசோகை பிடித்ததாகவும், நோய்ப்பட்டதாகவும்தான் இருக்க முடியும்...

இதனால்கிருஷ்ணனுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது.

இறந்த கால மதங்களுக்கும், எதிர்கால மதங்களுக்கும் நடுவே
ஒருபெரிய புரட்சி ஆரம்பமாகிறது.

வாழ்க்கையை, அதன் சகல அம்சங்களோடும், பருவங்களோடும், வண்ணங்களோடும் அவன் ஏற்றுக் கொள்கிறான்.

அவன் மட்டும், எதையும் தேர்ந்தெடுப்பதில்லை;

ஒரு நிபந்தனையின்றி வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறான்.

காதலை அவன் தவிர்ப்பதில்லை; ஒரு மனிதன் என்ற முறையில் அவன் பெண்களை விட்டு ஓடிப்போவதில்லை.

கடவுளை அறிந்தவன், அனுபவித்தவன் என்ற முறையில், அவன் மட்டுமே, போரைக் கண்டு முகம் திரும்பி ஓடிப் போகாதவனாக இருக்கிறான்.

அன்பும், அருளும் நிறைந்தவனாக அவன் இருந்தும் கூட, போரை ஏற்றுப் போரிடும் தைரியம் அவனிடம் இருக்கின்றது. அவன் இதயம் சுத்தமான அகிம்சை குணம் உடையது.

அப்படியிருந்தும், தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, வன்முறையின் கொடுமைக்குள்ளும், நெருப்புக்குள்ளும் அவன் பாய்ந்து செல்கிறான்.

அவன் தேனை ஏற்றுக் கொள்கிறவன்தான் என்றாலும் அவனுக்கு விஷத்தைக் கண்டால் பயமில்லை.

கிருஷ்ணன், வாழ்க்கையின் இருமைப் பண்பையும், தர்க்க முரணையும் முழுசாக ஏற்றுக் கொள்வதால், அவன் இருமையைக் கடந்து அப்பால் செல்கிறான்.

ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டு மறுபகுதியை மறுக்கிற முரண்பாடு உங்களுக்குள் உள்ளவரைக்கும், நாம் சொல்லுகிறோமே அந்த ஆழ்நிலையை நாம் அடைய முடியாது.

ஆழ்நிலை என்பது தேர்வு செய்யாமல், இரு பகுதிகளையும் ஒன்றாக ஏற்றுக் கொள்கிற போதுதான், முழுமையை ஒப்புக் கொள்கிற போதுதான், சாத்தியமாகும்.

அதனால்தான், கிருஷ்ணன், எதிர்வரும் காலத்திற்கு ஏற்ற, மிக முக்கியத்துவமுடையவன் ஆகிறான்.

அவனுடைய இந்த முக்கியத்துவம், காலப் பெருவழியில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்லும்.

மகான்கள், தீர்க்கதரிசிகளின் ஒளியும், பகட்டும் மங்கிக் கொண்டே செல்லும்போது, அடக்கி வைத்தலை வலியுறுத்தும் உலக மதங்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் போது, கிருஷ்ணனின் சுடர், தன் சிகரத்தை நோக்கி உயர்ந்து, அதன் சிகரத்தின் உச்சியில் நின்று ஒளிவீசும்...

* #ஓஷோ*

* #கேள்வி*உண்மையை வார்த்தைகளால் சொல்ல முடியாத போது ஏன் புத்தர்கள்  வார்த்தைகளை உபயோகித்தார்கள்?* #ஓஷோபதில்*ஒரு சிறிய கதை...
11/08/2021

* #கேள்வி*

உண்மையை வார்த்தைகளால் சொல்ல முடியாத போது ஏன் புத்தர்கள் வார்த்தைகளை உபயோகித்தார்கள்?

* #ஓஷோபதில்*

ஒரு சிறிய கதை.

பாஸ்ரா தேசத்து ரபியா (RABIA OF BASRA) என்பவள் மிகமிக அழகானவள் .

அது மாத்திரமல்ல .

அவள் ஒரு மிகச்சிறந்த ஞானியும் கூட.

ஒரு சமயம் ஈரான் தேசத்திலிருந்து ஒருவன் பாஸ் ராவுக்கு வந்தான் .

அவன் " இங்கு விசேஷமானதும் வேறு எங்கும் காண முடியாததும் ஏதாவது உண்டா ? என்று விசாரித்தான்

அதற்கு மக்கள் " ஆமாம் உண்டு. உலகத்திலேயே மிக அழகான பெண் ஒருத்தி இங்கு இருக்கிறாள் "என்றார்கள்

அந்த வாலிபன் மிகவும் உற்சாகமாக "அவளை நான் எங்கே காண முடியும் ?"என்று ஆர்வமாக கேட்டான்.

மக்கள் மெல்ல சிரித்தவாறு

" அவளை ஒரு விபச்சார விடுதியில் தவிர வேறு எங்கே காண்பது ?" என்றார்கள்.

அது அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது .

ஆனால் கடைசியில் அவளை அங்கே சென்று சந்திக்க முடிவு செய்தான் .
அந்த விடுதியின் தலைவி அவளை சந்திக்க மிக அதிகமான தொகையை கேட்டாள் .

அவனும் அதைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.

அங்கே ஒரு சிறிய எளிமையான மற்றும் ,அமைதி நிறைந்த ஓர் அறையில் ,
ஓர் உருவம் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.
என்ன அழகு என்று அதிசயப்பட்டான்.
அவள் முகத்தில் காணப்பட்ட அழகும் கவர்ச்சியும் இதுவரை அவன் வேறு எங்கேயும் காணவில்லை,

ஏன் கனவுகளில் கூட காணவில்லை.

அவன் அங்கே இருப்பதையே ஒரு ஆசீர்வாதமாக கருதினான்.

அங்கே நிலவும் மிகவும் வித்தியாசமான சக்திவாய்ந்த சூழ்நிலை அவனை மிகவும் பாதித்தது.

அவன் தன் இச்சையை முற்றிலும் மறந்து விட்டான் .

அவன் ஏதோ வேறு ஓர் உலகத்துக்குள் நுழைவதை உணர்ந்தான் .

அவன் போதை மருந்து சாப்பிட்டது போன்ற ஒரு மயக்க நிலையில் கடவுளை நோக்கி தான் செல்வதை உணர்ந்தான்.

சில மணி நேரம் கழித்து தான் ஒரு கோயிலில் இருப்பதை உணர்ந்தான்.

ஆஹா என்ன அமைதி என்ன மகிழ்ச்சி அவளுடைய அழகை அள்ளிப் பருகினான் .

ஏனென்றால் அந்த அழகு மனிதர்களுக்கு உரியதல்ல அது கடவுளுடைய பேரழகு.

அந்த முக அழகுக்கும் அவளுடைய உடம்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .

அது முழுக்க முழுக்க வேறு ஓர் உலகத்தை சார்ந்தது.
பிறகு ரபியா மெல்ல தன் கண்களைத் திறந்தாள் .

அவை தாமரை மலர்போல் அவ்வளவு அழகாக இருந்தன .

அவன் அந்த கண்களை ஆழ்ந்து நோக்கினான் ,

அப்பொழுது தன் முன்னால் ஒரு பெண் அமர்ந்திருக்கவில்லை என்றும்,
தான் கடவுளுக்கு முன்னால் அமர்ந்து இருக்கிறோம். என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது .

அதைப்போல அவன் அன்று இரவு முழுவதும் அப்படியே அமர்ந்திருந்தான்.

அது ஒரு நொடி போல காணப்பட்டது.

அதாவது அந்த அழகில் அவன் இரண்டறக் கலந்துவிட்டான்.

சூரியன் மெல்ல எழும்பி காலை கதிர்கள் அந்த அறையில் ஜன்னல்கள் வழியாக உள்ளே வந்தன.

அப்பொழுதுதான் அவன் தான் அங்கிருந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தான்.

பிறகு அவன் " நான் உன்னுடைய அடிமை
நீ ஏதாவது என்னிடம் கேள் .
இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் கேள் .
நான் உனக்கு செய்ய தயாராக இருக்கிறேன் " என்று அவளிடம் பணிவாக சொன்னான்

அவள் " நீ எனக்கு செய்ய வேண்டியது ஒரு சிறிய வேண்டுகோள் மட்டுமே ".

அவன் மிகுந்த ஆர்வமாக " சொல்லுங்கள் செய்ய காத்திருக்கிறேன்"

அவள் " இங்கே நீ பார்த்ததையும் அனுபவித்ததையும் வேறு யாரிடமும் ஒருபோதும் சொல்லக்கூடாது.

மக்கள் தானாகவே என்னிடம் வரட்டும் .

இந்த என்னுடைய முக அழகு ஒரு மென்மையான பொறியாக இருக்கட்டும் .
நான் இந்த அழகை மக்கள் கடவுளிடம் செல்ல ஒரு கதவாக உபயோகிக்கிறேன்.

ஆகவே,
இன்று இரவு நீ அடைந்த அனுபவத்தை வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு.
அவர்கள் இந்த விபச்சார விடுதிக்கு இச்சையுடன் தானே வரட்டும் .

ஏனென்றால் ,அவர்கள் வேறு எதையும் என்னிடம் எதிர்பார்த்து வரமாட்டார்கள் .
இது அவர்களுக்கு ஒரு புதிய எதிர்பாராத அனுபவமாக இருக்கட்டும் " என்றாள்.

அவன் ஆச்சரியமாக " ஹோ ! இதுதான் இந்த நகரத்தின் ரகசியமா ?

இந்த நகரமே உங்களுடைய அழகை புகழ்கிறது .
ஆனால் யாருமே இங்கு அடைந்த அனுபவத்தை சொல்லவே இல்லை " என்றான்.

ரபியா சிரித்துக்கொண்டே " ஆமாம் நான் இங்கு வருபவர்களிடம் சத்தியம் வாங்கி விடுகிறேன் " என்றாள்.

இங்கு ரபியா தன்னுடைய தெய்வீக அழகை ஒரு பொறி போல உபயோகப்படுத்துகிறாள்.

அதைப்போல புத்தர் தன் வார்த்தைகளையும் ,கிருஷ்ணர் தன் புல்லாங்குழலையும், மீரா தன் நாட்டியத்தையும் ,ஒரு பொறியாகவே உபயோகித்தார்கள்.

உங்களை இப்படித்தான் ஆன்மீக பொறியில் மாட்ட வைக்க வேண்டும் .

நீங்கள் அறிந்தவற்றின் மூலமாகவே உங்களை பொறி வைத்து பிடிக்க வேண்டும் .

உங்களை நீங்கள் அறிந்தவற்றிலிருந்து ,
நீங்கள் இது வரை அறியாத ஒன்றுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

ஆனால் , ஆரம்பம் நீங்கள் அறிந்தவற்றிலிருந்து தான் எழும்ப வேண்டும்.
நீங்கள் ஒரு பெண்ணின் கவர்ச்சியை புரிந்து கொள்கிறவர் .

ஒருவனுக்கு தன் வாலிப வயதில் பொதுவாக கடவுளைத் தேட வேண்டும் என்ற ஆர்வம் இருக்காது.

அவனுக்கு அப்பொழுது ஒரு பெண்ணின் கவர்ச்சி ,
மற்றும் அவளுடைய உடலின் கதகதப்பில் மிகவும் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறான் .

அதையே ஒரு பொறியாக வைக்கிறோம் .

இந்த கதையில் அந்த வாலிபன் கவர்ச்சியை தேடிப் போகிறான்.

ஆனால் ,
அவன் ரபியா முன்னிலையில் அவனுடைய கவர்ச்சி ,ஆர்வம், இச்சைகள் மெல்ல மாறி ஒரு பிரார்த்தனை ஆகிவிட்டது.

உங்களால் வார்த்தைகளை மட்டுமே புரிந்து கொள்ள முடியும் .

ஆகவேதான் புத்தர்கள் வார்த்தைகளை உபயோகித்தார்கள்.

09/08/2021
ரெய்கி தீட்சை பெற்ற பின்னர்ரெய்கி தீட்சை பெற்ற பின்னர், சக்தியில் உண்டாகும் மாற்றங்கள்முதல் இரண்டு கட்ட தீட்சைகளை பெற்ற ...
10/04/2021

ரெய்கி தீட்சை பெற்ற பின்னர்

ரெய்கி தீட்சை பெற்ற பின்னர், சக்தியில் உண்டாகும் மாற்றங்கள்

முதல் இரண்டு கட்ட தீட்சைகளை பெற்ற மாணவர்கள் அடையும் நன்மைகள்:

1. தன் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களை சுயமாக சுத்தம் செய்து கொள்ளலாம்.

2. தனது ஆராவையும் மற்றவர்களின் ஆராவையும் சுத்தம் செய்யலாம்.

3. கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் பொருட்களில் இருக்கும் தீய ஆற்றல்களை வெளியேற்றலாம்.

4. மனிதர்களுடனும் மற்ற உயிர்களுடனும் நல்ல தொடர்புகள் உண்டாகும்.

5. பொருளாதாரம் மேம்படும்.

6. ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழலாம்.

7. தனது நோயையும் தன் குடும்ப உறுப்பினர்களின் நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாம்.

8. ஆற்றல்களை சக மனிதர்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம்.

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reiki Healing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram