19/05/2024
நான் ஏன் இராஜயோகத்திற்கு மிக
அதிகமான முக்கியத்துவம்
கொடுக்கின்றேன்?
---------------------------------------------------------------
ௐ சாந்தி, அனைவருக்கும் தூய நல்லாசிகள் உரித்தாகட்டும்.
நான் ஏன் இராஜயோகத்திற்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கின்றேன்?
இராஜயோகம் என்றால், யோகங்களில் மிகச்சிறந்த யோக முறை என்று அர்த்தமாகும். இராஜயோகம் என்றால் மனிதர்களை தேவர்களாக்குகின்ற வித்தையாகும். கல்வியாகும். இராஜயோகம் என்றால் மனிதர்களின் மூன்றாவது கண்ணைத் திறக்கின்ற சாவியாகும். இராஜயோகம் என்றால் உலகை இயக்குகின்ற கடவுளின் கல்வியாகும்.
இராஜயோகத்திற்கு ஏராளமான பெருமைகள் உள்ளன. இராஜயோகத்தை கற்பவர்கள் பாக்கியசாலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இராஜயோகம்! இராஜயோகம்!! இராஜயோகம்!!! இராஜயோகத்தைத் தவிர உங்களுக்கு வேறெதுவும் தெரியாதா?
தெரியாது மக்களே! தெரியாது.
இராஜயோகம் என்பது உயிர் வாழ்வதற்கான கல்வியாகும். 'உயிர் வாழ்வதற்கான கல்வியை விட்டுவிட்டு வேறு எதை தெரிந்துகொள்ள வேண்டும்' கூறுங்கள் பார்ப்போம்.
உயிர் வாழ்வதற்கான கல்வியா? உயிர் வாழ்வதற்கும் கல்வி ஒன்று இருக்கிறதா?
ஆமாம், உயிர் வாழ்வதற்கு கல்வி ஒன்று இருக்கிறது. உயிரில்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. உயிரை தக்கவைக்க வேண்டுமென்றால், உயிரை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டுமென்றால், உயிரிலுள்ள தீய குணங்களை அல்லது தீய பதிவுகளை சுத்தமாக்க வேண்டுமென்றால், கல்வி ஒன்று அவசியமாகும்.
உயிர் கல்வி கற்பிக்கப்படாததே மனிதர்கள் தீயவர்களாகுவதற்கு காரணமாகும். உயிர் கல்வியை கற்பிப்பதற்கு உயிரை அறிந்த கடவுள் இந்த உலகிற்குள் வர வேண்டும். மனிதர்களால் உயிரை அறிய முடியாது.
மனிதர்கள் பௌதீகத்தை அறிபவர்கள் ஆவார்கள். பௌதீகத்தை தாண்டி ஆழமான விடயங்களுக்கு செல்லவேண்டுமென்றால், கடவுள் ஒருவர் வரவே வேண்டும். கடவுளுக்கு மட்டுமே உயிர் பற்றிய ஞானம் பிரபஞ்சத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.
உயிர் பற்றிய ஞானமா.. அது என்ன உயிர் பற்றிய ஞானம்?
உயிர் பற்றிய ஞானம் என்றால், உயிருக்குள் என்னென்ன விடயங்கள் காணப்படுகின்றன? அவற்றை எவ்வாறு உயிர்ப்பிப்பது? அவற்றை உயிர்ப்பிப்பதால் என்ன நன்மைகள் ஏற்படும்? போன்றவைகளே உயிர் பற்றிய ஞானமாகும்.
உயிரை உயிர்ப்பிப்பதா! அது என்ன உயிர்ப்பிப்பது?
உயிர்ப்பிப்பது என்றால்,
"உயிருக்குள் காணப்படுகின்ற ஏழு நற்குணங்கள், எட்டு சக்திகள், 36 தெய்வீக குணங்கள் ஆகியவற்றை சக்திப்படுத்துவதாகும்.
உயிருக்குள் மொத்தமாக 16 ஆற்றல் புள்ளிகள் காணப்படுகின்றன. 16 ஆற்றல் புள்ளிகளை சக்திப்படுத்தினால் 16 பேறுகளை அடைய முடியும். 16 பேறுகளே மனிதனுக்கு மிக முக்கியமான பேறுகள் ஆகும். "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என வாழ்த்துவது 16 பேறுகளையே குறிக்கின்றது.
16 பேறுகள் சக்தியாக மாற மாற மேலுள்ள அல்லது மேலே குறிப்பிட்ட ஏழு நற்குணங்கள், எட்டு சக்திகள், முப்பத்தாறு தெய்வீக குணங்கள் சக்தி பெற ஆரம்பிக்கும்.
மனிதர்களுக்கு 16 பேறுகளைப்பற்றி தெரியாததால், மனிதர்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் 16 பேறுகள் என்பது கடவுளால் கொடுக்கப்பட்ட கொடை, இயற்கையாகவே கிடைக்கின்ற பாக்கியம், முயற்சிகளால் கிடைக்கின்ற பேறுகள் என்று.
16 பேறுகள் என்பது உயிருக்குள் காணப்படுகின்ற 16 ஆற்றல் புள்ளிகள் என்பது எவருக்கும் விளங்குவதில்லை."
என்ன!!! உயிருக்குள் 16 ஆற்றல் புள்ளிகள் இருக்கின்றதா? உலகில் இதைப்பற்றி யாரும் கூறவே இல்லையே?
ஆமாம். உலகில் யாரும் 16 ஆற்றல் புள்ளிகளைப்பற்றி கூறவில்லை. 16 ஆற்றல் புள்ளிகள் என்பது 16 ஆற்றல்களை உயிர்ப்பிக்கின்ற மிக மிக நுட்பமான புள்ளிகளாகும். மிக மிக நுட்பமானது என்றால், தற்போது காணப்படுகின்ற மிகவும் சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டிகளுக்குக் கூட கண்டுபிடிக்க முடியாத அளவு என்று அர்த்தமாகும்.
குறித்த அந்த நுட்பமான புள்ளிகளே மனிதர்களின் ஆற்றல்களை தீர்மானிக்கின்றன.
என்ன! உயிருக்குள் இப்படியொரு தொழில்நுட்பம் காணப்படுகின்றதா?
ஆமாம், காணப்படுகின்றது.
உயிர் என்றால் அழியாத பொருள் என்று அர்த்தமாகும். அழியாத ஆத்மா என்றும் எடுத்துக்கொள்ளலாம். உயிருக்குள் காணப்படுகின்ற தொழில்நுட்பமே மறு வடிவம் பெற்று புரொசசர் என்று அழைக்கப்படுகின்ற சின்னஞ்சிறு செயலிகளுக்குள் காணப்படுகின்றன. சின்னஞ்சிறு செயலிகளே தற்போதைய தொழில்நுட்ப உலகை ஆண்டு வருகின்றன.
தற்போதைய தொழில்நுட்ப உலகை எடுத்துக்கொண்டால், செயலிகளே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. கைத்தொலைபேசிகளாகட்டும், கணினித் தொழில்நுட்பங்களாகட்டும், கண்ணுக்குத் தெரியாத சின்னஞ்சிறு தொழில்நுட்பங்களாகட்டும் அனைத்திற்கும் செயலிகளே முக்கியமாகும்.
செயலிகளுக்குள் காணப்படுகின்ற மனித கட்டளைகளே செயலிகளை செயற்பட வைக்கின்றன. செயலிகள் செயற்படும்போது குறித்த தொழில்நுட்பம் அல்லது இயந்திரம் மனிதர்கள் கூறுகின்ற கட்டளைகளுக்கு ஏற்ப இயங்க ஆரம்பிக்கின்றது.
செயலிகளை கண்டுபிடித்த மனிதனுக்கு உயிரைப்பற்றி தெரியாமல் போனது மாபெரும் அவமானமாகும்.
கடவுள் வந்து கூறியிருக்காவிட்டால் எவருக்கும் எதுவும் தெரிந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் ஏன் இராஜயோகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றால், இராஜயோகத்தில் மட்டுமே உயிர் பற்றிய விளக்கங்கள் மிகச்சரியாக மிக விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. இராஜயோகத்தை அறிந்திடாத மனிதன் மனிதனல்ல.
மனிதர்களுக்கு ஆரோக்கியமாக உயிர் வாழ வேண்டும் என்று ஆசை இருந்தால், இராஜயோகம் கற்பது அவசியமாகும். இராஜயோகத்தில் கூறப்பட்டுள்ள உயிர் பற்றிய விடயங்கள் வேறு எதிலும் கூறப்படவில்லை என்பது மிகவும் முக்கியமாக குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆரோக்கியமாக உயிர் வாழ வேண்டுமா! புரியவில்லையே? உலகம் அழியும்போது ஏன் ஆரோக்கியமாக உயிர் வாழ வேண்டும்?
உலகம் அழியும்போது உலகிலுள்ள அனைவரும் அழிய மாட்டார்கள் என்பது ஏற்கனவே பல தடவைகள் கூறப்பட்டுவிட்டன. உலகம் அழியும்போது குறிப்பிட்டளவானவர்கள் எஞ்சியிருப்பார்கள். குறிப்பிட்ட அந்த எஞ்சியிருப்பவர்களே புதிய உலகை உருவாக்குகின்ற தேவர்கள் ஆவார்கள்.
புராணங்களில் கூறப்பட்டுள்ளன "தேவர்கள் வாழ்வது, அல்லது, தேவர்களுக்கான உலகம் 'சுவர்க்கம்' என்று."
தேவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்? தேவர்களிடம் காணப்பட்ட சிறப்பம்சங்கள் என்ன? தேவர்கள் எவ்வாறு அமரத்துவ வாழ்க்கையை அடைந்தார்கள்? என்பது போன்ற விடயங்கள் எவருக்கும் தெரியாது.
இராஜயோகமே தேவர்களுக்கான கல்வியாகும். இராஜயோகத்தை கற்பவர்கள் தேவர்கள் ஆகுவார்கள். கற்காதவர்கள் மனிதர்களாக இருந்தவாறு மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள்.
உலகமானது மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் சுழல்வதால், மனிதர்களால் உலகைவிட்டு எங்கும் செல்ல முடியாது.
நிலவுக்கு செல்வது, செவ்வாய்க்கு குடி பெயருவது வெறும் கற்பனைகளாகும்.
இன்னும் சிறிது காலத்தில் மாபெரும் அழிவு ஏற்பட்டு மனிதர்களின் எண்ணங்களையெல்லாம் மழுங்கடித்துவிடும். உலகைவிட்டு இன்னொரு உலகிற்கு சென்று வாழ்வதென்பது மாயை ஆகும்.
"மனிதர்கள் வாழ்வதற்கு இந்த ஒரு உலகமே காணப்படுகின்றது. அதைத்தாண்டி வேறெங்கும் செல்ல முடியாது என்கின்றார் கடவுள்."
கடவுள் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை.
இராஜயோகத்தை கற்பவர்கள் தேவர்களாக மாறி புதிய உலகத்தை வழி நடத்துவார்கள். கற்காதவர்கள் துவாபர யுகம் என்று அழைக்கப்படுகின்ற சுவர்க்கம் அல்லாத யுகத்திற்குள் வந்து பிறப்பெடுப்பார்கள். சுவர்க்கம் அல்லாத யுகம், புதிய உலகம் ஆரம்பித்து 2500 வருடங்களின் பின்பே ஆரம்பமாகும்.
சுவர்க்கமல்லாத யுகத்திற்குள் வருவது பெரிய விடயமல்ல. சுவர்க்கத்திற்குள் வருவதே பெரிய விடயமாகும்.
சுவர்க்கத்திற்குள் வர வேண்டுமென்றால் பிரம்மா குமாரிகள் கற்பிக்கின்ற இராஜயோகத்தை கற்றிடுங்கள் என்பதே வேண்டுகோளாகும்.
நன்றி, ௐ சாந்தி.