Indigenous Medicine சுதேச மருத்துவம்

Indigenous Medicine சுதேச மருத்துவம் ஆரோக்கிய வாழ்விற்கு ஆயுர்வேத மருத்?

யாழ் மாவட்ட சித்த மருத்துவமனை தற்போது அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள சிறுவர் நந்தவனம் பாடசாலை  (மக்கோனா)  அருகி...
03/09/2022

யாழ் மாவட்ட சித்த மருத்துவமனை தற்போது அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள சிறுவர் நந்தவனம் பாடசாலை (மக்கோனா) அருகில் இடம்பெற்று வருகின்றது.

"இங்கு இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ளலாம்"

பொதுவான நோய்களுக்கான வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு (OPD)
***********************************************

சிறந்த மருத்துவர்களினால் மருத்துவ சேவை இடம்பெற்று வருகின்றது

வெளிநோயாளர்களை மருத்துவர்கள் பார்வையிடும் நேரம் -
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணிமுதல் பிற்பகல் 4மணி வரையும் ,சனிக்கிழமை காலை 8மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் ஞாயிறு காலை 8மணி முதல் நண்பகல் 12 மணிவரை மற்றும் அரச விடுமுறை தினங்களில் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இலவச மருத்துவ சேவை இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் கடந்த 01.09.2022 திகதியிலிருந்து தங்கி நின்று கிசிச்சை பெறும் உள்ளக நோயாளர் விடுதி(WARD) நோயாளர்களுகளின் நலன் கருதி சகல வசதிகளுடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவமனையில் இடம்பெறும் சிகிச்சைகள்
**********************************************

1.வதரோகம்.
2.சிறுவர் நோய்கள்.
3.தோல் நோய்கள்.
4.சுவாச நோய்கள்.
5.பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் அதற்கான தீர்வுகளும்.
6.சலரோகம்.
7.குருதி அமுக்கம்.
8.உடற்பருமன்.
9.குறிப்பாக தொற்று நோய்கள், தொற்ற நோய்கள் என பலதரப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள்
(காய்ச்சல், தடிமன். சளி,தும்பல் (பீனிசம்),தலைமுடி உதிர்தல், முகப்பருக்கள்)
10.அக்குபஞ்சர் சிகிச்சை முறை.
11.வர்ம சிகிச்சை.
12.பஞ்சகர்ம சிகிச்சை.
13.அட்டை விடுதல் .(வரிக்கோசு)
14.சுட்டி முறை சிகிச்சை (ஆணிக்கூடு அகற்றுதல்)

பாரம்பரிய வைத்திய முறையிலும் சிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றது.
**********************************************
1.நெறிவு முறிவு சிகிச்சை முறை.
2.பழைய நோக்களுக்கு பத்துக்கட்டுதல்.
3.உளுக்கு, சுழுக்கு பார்த்தல்.

போன்ற பலதரப்பட்ட சிகிச்சை முறை திறம்பட பாரம்பரிய வைத்தியர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.

உள்நாட்டு, வெளிநாட்டு நோயாளர்கள் கட்டணம் செலுத்தி விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறப்பு மருத்துவ சேவையும் இடம்பெறவுள்ளது.
*************************************************

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏற்ற வகையில் நோயாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தனி அறை,மலசல கூடம், உணவு, சிறந்த சூழலுடன் இசைந்த சிறப்பு மருத்துவ சேவையும் வழங்கப்படவுள்ளது.

இச்சேவையினை பெற விரும்புகின்ற நோயாளர்கள் முற்பதிவினை சித்த வைத்தியசாலையில் பதிவு செய்து கொள்ள முடியும் .

தொடர்புகொள்ள வேண்டிய
தொலைபேசி இலக்கம் -0773782739,0212212809

மாவட்ட சித்த வைத்தியசாலையில் முழுச்சேவையும் சீராக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது .

மக்கள் அனைவரும் பங்கு பற்றி பயன் பெறவும்.


மருத்துவ அத்தியட்சகர் ,
மாவட்ட சித்த வைத்திய சாலை
அச்சுவேலி.

கூந்தலில் ஏற்படும் வறட்சி பொடுகு தொல்லை இது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த மூன்று குறிப்புகள் நிரந்தர தீர்வை கொடுக்கும் கூந்...
02/08/2022

கூந்தலில் ஏற்படும் வறட்சி பொடுகு தொல்லை இது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த மூன்று குறிப்புகள் நிரந்தர தீர்வை கொடுக்கும்

கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகம் சிறந்த தீர்வாக உள்ளது. இந்த எண்ணெயை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம். தலைமுடி வறண்டு போய் உடைந்து விழும் பிரச்சினை அனைவருக்கும் உள்ளது. இதை சரிசெய்யும் ஹேர்பேக்கினை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இயற்கை முறையிலான இந்த ஹேர்பேக் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும்.

வாருங்கள் இவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம், தேங்காய் எண்ணெய் – 150 மில்லி லிட்டர். -

செய்முறை: கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை சிறிய பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அடுப்பில், ஒரு பெரிய
அதனுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அடுப்பில், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரில் தேங்காய் எண்ணெய்க் கலவை அடங்கிய சிறிய பாத்திரத்தை வைத்து, சூடுபடுத்த வேண்டும். இந்த முறையில், எண்ணெய் தயாரிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். பின்பு காய்ச்சிய எண்ணெய்யை ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி 3 முதல் 4 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். இதைத் தினமும் பயன்படுத்தலாம். இயலாதவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு மிருதுவான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம். -

ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்: பாசிப் பயறு- 4 ஸ்பூன், தேங்காய்- 1/2 மூடி. செய்முறை: பாசிப்பயறினை நீரில் போட்டு நன்கு ஊறவைக்கவும். அடுத்து தேங்காயினை அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும். தேங்காய்ப் பாலுடன் பாசிப் பயறு சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்தால் ஹேர்பேக் தயார். இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் தலைமுடி வறண்டு உடைந்து விழும் பிரச்சினை சரியாகும். வோட்கா முடியின் வேர் கால்களுக்கு ஈரப்பதத்தை அளித்து சிக்கலை போக்குகிறது. வோட்காவின் அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் பிளவுபட்ட நுனிகளை சரி செய்கிறது. ஒரு ஸ்பூன் அளவு வோட்காவை எடுத்து உச்சந்தலையில் வைத்து மசாஜ் செய்யுங்கள்.1 மணி நேரம் வரை விட்டு விட்டு, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் லேசான ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.வாரத்திற்கு 2 முறை இதை செய்து வாருங்கள்.பொடுகு நாளடைவில் குறைவடையும்.

எளிய சித்த ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள்:நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் பல்வேறு உடல்நலக்கோளாறுகளை சந்திக்க நேரிடு...
29/07/2022

எளிய சித்த ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள்:

நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் பல்வேறு உடல்நலக்கோளாறுகளை சந்திக்க நேரிடுகிறது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சில எளிமையான சித்து மருத்துவக் குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம்.

அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.

அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.

மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

மூச்சுப்பிடிப்பு:
கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சருமநோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

மற்றவர்களும் அறிய அதிகமாக இந்த தகவல்களை பகிருங்கள்.

கிழக்கு,வடக்கு மாகாணத்தை சேர்ந்த**************************************** மருந்து கலவையாளர் -2022 ***********************...
07/07/2022

கிழக்கு,வடக்கு மாகாணத்தை சேர்ந்த
****************************************
மருந்து கலவையாளர் -2022 ************************************
பயிலுனர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு
************************************************
கடந்த 28.06.2022 மாலை இடம்பெற்ற.இந்நிகழ்வில் மருந்துக்கலவையாளர் பயிற்சிநெறியின் ஒருங்கிணைப்பாளர் Dr.V.கெகதீஸ்வரன் ஐயா அவர்கள் தலைமையில் கொழும்பு பொரளையில் அமைந்துள்ள தேசிய ஆயுர்வேத போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள சித்த மருந்தக கட்டிட தொகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.இந்நிகழ்வில் மருத்துவர்கள்,உள்ளக பயிற்சி நெறியினை மேற்கொள்ளும் மருத்துவர்கள், மற்றும் எமது மருந்துகலவையாளர் பயிற்சி நெறி உத்தியோகத்தர்கள் என பலரும் சிறப்பித்திருந்தனர்.

நாட்டில் ஏற்பாட்ட அசாதாரணமான சூழலில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இப்பாடநெறியை பூர்த்தி செய்த மருந்து கலவையாளர்கள் அனைவரும் மேலும் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என்று வைத்தியர்கள் அனைவரும் வரவேற்றி வாழ்த்தி விடைபெற்ற ஓர் உன்னத தருணம்.

Dispenser Training Program 2022 -National Institute of Traditional Medicine, Maharagama
08/06/2022

Dispenser Training Program 2022 -National Institute of Traditional Medicine, Maharagama

வட,கிழக்கு மாகாணத்தை சேர்ந்த**************************************** மருந்து கலவையாளர் -2022 ***************************...
02/06/2022

வட,கிழக்கு மாகாணத்தை சேர்ந்த
****************************************
மருந்து கலவையாளர் -2022 ************************************
பயிலுனர்களுக்கான பிரிவு உபசார விழா
************************************************
இன்று 02.06.2022 காலை கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மருந்துக்கலவையாளர் பயிற்சிநெறியின் ஒருங்கிணைப்பாளர் Dr.V.கெகதீஸ்வரன் ஐயா அவர்கள் தலைமையில் கைதடி சித்த போதனா சித்த வைத்தியசாலையில் அமைந்துள்ள மருந்தக கட்டிட தொகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.இந்நிகழ்வில் கைதடி சித்த போதனா வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி திரு.Dr.ஜெபநாமகணேசன் ஐயா அவர்களும்,மற்றும் கைதடி போதனா சித்த வைத்தியசாலையில் மருத்துவ பணியாற்றும் மருத்துவர்கள்,உள்ளக பயிற்சி நெறியினை மேற்கொள்ளும் மருத்துவர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள்,மேற்பார்வையாளர்,
தாதியர்கள்,பணியாளர்கள்,மற்றும் எமது மருந்துகலவையாளர் பயிற்சி நெறி உத்தியோகத்தர்கள் என பலரும் சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் பயிலுனர் சார்பாக கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வாகரை மத்திய மருத்தகத்தின் பணியாளர் திரு V.பிரபாகரன் அவர்கள் இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய தருணம்பல வழிகளில் உதவி ,ஆலோசனை,விரிவுரைகள் நிகழ்த்திய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் விசேடமாக எமது பயிலுனர்களுக்காக பல வழிகளில் உதவி, ஆலோசனைகளை வழங்கியமைக்காக வடக்குமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் .திருமதி. Dr. கனகேஸ்வரி ஜெபநாம கணேசன் அம்மணி அவர்களை நினைவுபடுத்தி நன்றி தெரிவித்திருந்தார்.

02/06/2022
வட,கிழக்கு மாகாண மருந்து கலவையாளர் பயிலுனர்கள் மூலிகை தோட்டத்திற்கான களவிஜயம்2010 ஆண்டு வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்ப...
02/06/2022

வட,கிழக்கு மாகாண மருந்து கலவையாளர் பயிலுனர்கள் மூலிகை தோட்டத்திற்கான களவிஜயம்

2010 ஆண்டு வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நவக்கிரி மூலிகைத்தோட்டத்தை பார்வையிட்டு அங்குள்ள ஒவ்வொரு மூலிகைகளின் மருத்துவ பயன்பாடுகள்,மூலிகைகளை அடையாளம் காணுகின்ற செயற்பாடுகள் இடம் பெற்றது இதற்கு உறுதுணையாக Dr.சிவகுலேந்திரா அவர்கள் மூலம் விரிவுரை இடம் பெற்றது அத்தோடு இந்நிகழ்வை ஏற்பாடு செய்த மருந்து கலவையாளர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் Dr.V.ஜெகதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

10/05/2022

" ஒரு வேளை உண்பவன் யோகி " " இரு வேளை உண்பவன் போகி ( சம்சாரி ) " " " மூன்று வேளை ( நோயாளி ) " உண்பவன் ரோகி என்பது சித்தர்களின் வாக்கு .

" யோகியாக இருக்க முடியாவிட்டாலும் போகியாக இருக்க விரும்புவோம் ' நீரிழிவு நோயாளி ஏற்கனவே ரோகியாகி விட்டார்கள் .
இந்த நோயைத் தணிக்க இரு மடங்கு வேளை உணவு உண்ண வேண்டும் . ( அதாவது உணவின் அளவை குறைத்து 6 வேளை சாப்பிடுதல் ) "

ஆயுர்வேத மருந்து கலவையாளர் (Dispenser)  பதவி உயர்வுக்கான பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்ட வடக்கு,கிழக்கினை சேர்ந்த ஊ...
23/04/2022

ஆயுர்வேத மருந்து கலவையாளர் (Dispenser) பதவி உயர்வுக்கான பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்ட வடக்கு,கிழக்கினை சேர்ந்த ஊழியர்களுக்கான பயிற்சிநெறியானது தேர்ச்சி பெற்ற மருத்துவர்களினால் யாழ்ப்பாணம் கைதடி சித்த போதான வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் முன்னால் ஆணையாளரும் கைதடி போதனா வைத்தியசாலையின் வைத்தியராகவும் கடமையாற்றும். Dr.திருமதி.S.துரைரட்ணம் அம்மா அவர்களின் பயிற்சி விரிவுரையானது 23.04.2022 இன்று காலை நடைபெற்றது.

11/04/2022

#மகிழ்ச்சியான #வாழ்க்கைக்கு 1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.

30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

ஆயுர்வேத மருந்து கலவையாளர் (Dispenser)  பதவி உயர்வுக்கான பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்ட வடக்கு,கிழக்கினை சேர்ந்த ஊ...
09/04/2022

ஆயுர்வேத மருந்து கலவையாளர் (Dispenser) பதவி உயர்வுக்கான பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்ட வடக்கு,கிழக்கினை சேர்ந்த ஊழியர்களுக்கான பயிற்சிநெறியானது தேர்ச்சி பெற்ற மருத்துவர்களினால் யாழ்ப்பாணம் கைதடி சித்த போதான வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழ் செயற்படும் அச்சுவேலியில் அமைந்துள்ள மருந்து உற்பத்தி பிரிவில் மருத்துவ பொறுப்பதிகாரியாக கடமையாற்றும். Dr.திருமதி.சுதாமதி அம்மா அவர்களின் பயிற்சி விரிவுரையானது 09.04.2022 இன்று பிற்பகல் நடைபெற்றது.

Address

Colombo, Western
Colombo
01

Alerts

Be the first to know and let us send you an email when Indigenous Medicine சுதேச மருத்துவம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Indigenous Medicine சுதேச மருத்துவம்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram