
03/07/2025
> > > Sarakku Powder 🌶️
Among our people, there is a widespread tradition of giving "Sarakku" powder to women who have recently given birth.
The purpose of this is to:
Strengthen the uterus,
Expel postpartum residues (known as Dhuvalai), and
Stimulate increased breast milk production.
Method of Use:
Take the required amount of Sarakku powder, along with a small piece of ginger, onion, and shallots. Pound them together coarsely and keep aside. Heat adequate sesame oil (nallennai) in a small pan, add finely chopped brinjal (baby eggplant), and sauté well. Once it is nicely cooked, add the prepared Sarakku mixture along with a little salt. This can be consumed as a drink or with rice.
This preparation is typically given twice daily for up to 31 days, starting from the third day after childbirth. During this period, spicy items such as chilies are usually avoided. As the old saying goes:
"Even the eye will not catch a glimpse of spice" — indicating complete avoidance.
Coriander seeds and cumin are rich in iron, calcium, and phosphorus. (For example, 100 grams of coriander contains 630 mg calcium, 370 mg phosphorus, 18 mg iron, and 1500 mcg of vitamin A. Similarly, 100 grams of cumin contains 100 mg calcium, 490 mg iron, and 800 mcg of vitamin A.)
Thus, when given as Sarakku or in dry form to postpartum mothers, these ingredients help restore the strength and blood lost during pregnancy and delivery. The inclusion of shallots and other such ingredients further helps promote breast milk secretion.
There is even an old Siddha medical proverb:
"With leafy greens and shallots, the breast fills richly."
Reference Book:
“Siddha Maruthuva Magapperiyalum Magalir Maruthuvamum”
Author: Dr. C. Sivasanmuha Raja B.S.M.S (Hons)(S.L), M.D (India)
Available from us☝️
Contact: +94765700568
#அகரவி #சித்த #ஆயுர்வேத #மருந்தகம்
>>>சரக்கு தூள் 🌶️
பிரசவித்த பெண்களுக்குச் 'சரக்கு' அரைத்துக் கொடுக்கும் வழக்கமும் எமது மக்களிடையே பெருமளவில் காணப்படுகிறது.
கர்ப்பாசயத்துக்கு வலுவைக் கொடுப்பதும், துவாலையை (கர்பாசயக் கழிவுகள்) வெளியேறச் செய்வதும் தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்வதும் இதன் நோக்கமாகும்.
பயன்படுத்தும் முறை:-
தேவையான அளவு சரக்குத் தூளை எடுத்து சிறு இஞ்சித்துண்டு, வெங்காயம், உள்ளி என்பவற்றையும் 'தட்டிப் போட்டு' அதை போல அரைத்து வைத்துக் கொண்டு தாச்சியில் போதியளவு நல்லெண்ணெய் விட்டுச் சூடாக்கி, சிறுக நறுக்கிய கத்தரிப்பிஞ்சுகளை இட்டு நன்கு வதக்கி, வெந்துவரும் வேளையில் அரைத்து வைத்த சரக்கையும், சிறிது உப்பையும் அதனுடன் சேர்த்துக் குடிக்கக் கொடுப்பர். மிகுதியைச் சோற் றுடன் உண்ணக் கொடுப்பர். இங்ஙனம் சரக்குஅரைத்துக் கொடுப்பது பெரும்பாலும் குழந்தை பிறந்த மூன்றாம் நாளிலிருந்து தினம் இருவேளை யாக 31 நாட்கள்வரை கொடுப்பர். இக்காலத்தில் மிளகாய் மற்றும் காரவகைகளைத் தவிர்ப்பர். 'கண்ணிலும் காட்ட மாட்டார்கள்"
கொத்தமல்லி, நற்சீரகம், என்பவற்றில் இரும்புச் சத்து, கல்சியம், பொசுபரசு என்பன மிகுதியாக உண்டு. (100 கிராம் கொத்தமல்லியில் 630 மி.கி கல்சியமம், 370 மி.கி பொஸ்பரசு, 18 மி.கி. இரும்பு, 1500 மை.கி உயிர்ச்சத்து A என்பனவுண்டு.100 கிராம் நற்சீரகத்தில் 100 மி.கி கல்சியம், 490மி. கி. இரும்பு, 800 மை.கி உயிர்ச்சத்து A என்பன உண்டு.) எனவே, சரக்காக அல்லது காயமாக இவற்றைப் பிரசவித்த பெண்களுக்குக் கொடுக்கும் போது கர்ப்ப காலத் திலும் பிரசவத்தின்போதும் இழந்த உடல் வலிமை, குருதி என்பவற்றை மீள உற்பத்தி செய்வதற்கும் இவை உதவுகின்றன. உள்ளி முதலியன இவற்று டன் சேர்க்கப்படுவதால் தாய்ப்பால் சுரப்பதும் ஊக்கு விக்கப்படுகிறது. ‘ஏந்திளைக் கீருள்ளி ஏற்ற முலைப் லே' என்பது வைத்தியப்பழமொழி.
உசாத்துணை நூல்: சித்த மருத்துவ மகப்பேற்றியலும் மகளிர் மருத்துவமும்- நூலாசிரியர் - Dr. சே. சிவசண்முகராஜா B.S.M.S (Hons)(S.L), M.D (India)
எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்☝️
தொடர்புக்கு :- +94765700568