Dr Anushyanthan Sivappiragasam

Dr Anushyanthan Sivappiragasam Love all ! Serve All !

 #இனிமையான_வாழ்க்கை:  #ரசித்து_வாழும்_ரகசியங்கள்!பட்டிமன்றத் தலைப்பிலும் சரி… சொற்பொழிவின் இடையேயுமாகட்டும், ஆசி வழங்கி ...
04/07/2025

#இனிமையான_வாழ்க்கை:
#ரசித்து_வாழும்_ரகசியங்கள்!

பட்டிமன்றத் தலைப்பிலும் சரி… சொற்பொழிவின் இடையேயுமாகட்டும், ஆசி வழங்கி வாழ்த்தும் போதும்கூட நிறைய இடங்களில் வாழ்க்கைப்பயணம் என்ற சொல்லிற்கு இடமுண்டு. உங்கள் வாழ்க்கைப் பயணம் இனிதாகட்டும். மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும் என்ற வார்த்தைகள் அடிக்கடி நம் செவியில் விழும்.

ஆனந்தமாக பயணம் செய்யத்தானே எல்லோரும் விரும்புவோம். வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு விடுங்கள். இப்படித்தான் இருக்கணும்ன்னு ஏன் எதிர்பார்க்கணும்? எதிர்பார்ப்புகளுடன் பயணிக்கும் போது, ஏமாற்றங்கள், வருத்தங்கள் என்ற நிறுத்தங்கள் நம் முயற்சியை குறைத்து, ஆயாசத்தை அன்லிமிடெட்டாக கொடுக்கும். மகிழ்ச்சிக்கான பயணமே இது.

கல்லோ, முள்ளோ குத்தினால் என்ன? அது தரும் அனுபவம் நம்மை அடுத்த கட்டத்திற்கு கைபிடித்து கூட்டிச் செல்லும் என்ற பக்குவத்துடன் தொடருங்கள் பாதையில் தெளிவு கிடைக்கும்.

பணியிடத்திலும், குடும்பத்திலும், அக்கம் பக்கம் மற்றும் அபார்ட்மெண்ட்டிலும் எல்லா பொறுப்புகளையும் நாமே ஏற்றுக்கொள்ளத் தேவையே இல்லை. மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் சொதப்பினால், டென்ஷனாகாமல், எப்படி செய்யவேண்டும் என எடுத்துச் சொல்லி வழிகாட்டுங்கள். எல்லோருமே முதல் முயற்சியில் வெற்றி அடைவதில்லை. பல்பை கண்டுபிடித்த எடிசனே முயற்சிகளில் பல்பு வாங்கிய அனுபவத்தைக் கூறி ஊக்கப்படுத்துங்கள். மனதுக்குப் பிடித்த மாதிரி சிறப்பாக செய்தால், மறக்காமல் பாராட்ட வேண்டும். அப்புறமென்ன… சுற்றியுள்ளவர்கள் உங்களைக் கொண்டாடுவார்கள்.

அப்டேட்டாக இருங்கள். நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல் உங்கள் லட்சியத்தை செயலை மாற்றிக்கொள்ளுங்கள். அந்தக் காலத்தில் நான் இப்படி இருந்தேன். அப்படி செய்தேன் என்ற வீர வசனங்கள் வேண்டாமே. உதாரணத்திற்கு ஒன்று சொல்லவா? ஐம்பது வருடங்களுக்கு முன், பணி செய்யுமிடங்கள் அருகில் இருக்கும்.
நடந்தே அலுவலகந்திற்குச் சென்றார்கள். சற்று தூரமென்றால் சைக்கிள் கை கொடுத்தது. இன்று நிறைய பேருக்கு தொலை தூரங்களில் இருக்கிறது. வாகனமோ, பேருந்தோ அல்லது மெட்ரோவோதான் பயணமார்க்கமாக இருக்கிறது. அது புரியாமல், நான் நடந்துதான் வேலைக்குப் போனேன் என முதியவர்கள், இளைய வர்களை கடுப்பேத்தாதீர்கள். அவர்கள் வசதிக்கு ஏற்றாற்போல் வாகனங்களில் அமைதியாக பயணிக்கட்டுமே… இன்றைய வாகன நெரிசல் பற்றியும் நாம் அறிவோம்தானே.

வாழ்க்கை என்பதே அடர்ந்த கானகம் போல்தான். வெளியிலிருந்து பார்க்கும்போது இருட்டாகத்தான் தெரியும். உள்ளே நுழைந்ததும் திணறும். அதை ஓரங்கட்டி, தைரியமாக உள்ளே போகப்போக செடிகள், மரங்கள், அருவிகள் என கண்ணுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கிய சூழலையும் கொடுக்கின்ற இயற்கையை உணர்வுபூர்வமாக ரசிக்க முடியும். வாழ்க்கையும் அப்படித்தான். முதலில் மருள வைத்தாலும், சரியான முடிவுகளை எடுத்து செயல்பட பயணம் ஆனந்தமாகும்.

துறவி ஒருவர் தனக்கு தேவையான பொருட்களை தூக்கி கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறி கொண்டிருந்தார். அது செங்குத்தான மலை. எனவே, மே...
11/01/2025

துறவி ஒருவர் தனக்கு தேவையான பொருட்களை தூக்கி கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறி கொண்டிருந்தார். அது செங்குத்தான மலை. எனவே, மேலே ஏறஏற சுமை அதிகமாகி மூச்சு வாங்கத் துவங்கியது அவருக்கு. சற்று தூரம் முன்னால் போனதும், அங்கே ஒரு மலைவாழ் சிறுமி தனது மூன்று வயது தம்பியை தூக்கி கொண்டு உற்சாகமாய் பாடல் ஒன்றை பாடி கொண்டு மிக சாதாரணமாய் மலை உச்சியை நோக்கி போவதை பார்த்தார்.

துறவிக்கோ ஒரே ஆச்சரியம். "இவ்வளவு சிறிய பையை தூக்கி கொண்டே என்னால் மலை ஏற முடியவில்லையே, உன்னால் எப்படியம்மா இவ்வளவு பெரியவனை தூக்கி கொண்டு ஏற முடிகிறது?" என்று அச்சிறுமியை பார்த்து கேட்டார். அதற்கு அந்த சிறுமி பதில் சொன்னாள். ''அய்யா... நீங்கள் தூக்கி கொண்டிருப்பது ஒரு சுமையை... ஆனால், நான் தூக்கிக் கொண்டிருப்பதோ என் அன்பு தம்பியை..."

துறவிக்கு புரிய வந்தது... அன்பு எதையும் சுமக்கும் என்று.. ஒருவன் அடையும் முன்னேற்றத்தைக் கெடுக்கும் முக்கியமான குணம் சோம்பல் தான். சோம்பலால் காலதாமதம் நேர்கிறது. கால தாமதத்தோடு மறதியும் சேர்ந்து கொள்கிறது.

''சோர்வு'' என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ''தீர்வு''.

சோம்பல் மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ.. சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ.. எனவே சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக அடைய வைப்போம்.
♥️♥️♥️♥️♥️♥️

🛕 *திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி**சொன்ன உண்மை வரலாறு* 🌺அகிலம்  காக்கும்  தந்தை அண்ணாம...
28/12/2024

🛕 *திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி*

*சொன்ன உண்மை வரலாறு*

🌺அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே 🌺

*கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்*

*அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு*

*ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்*

*அதற்குக் காரணம் இருந்தது*

*பல முறை கிரிவலம் வந்திருந்தாலும்* *இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு* *அவர்* *வந்திருந்தார்*
*ஏன்?*

*கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று*

*குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை*

*அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்*

*அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்*

*விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது*
*பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்*

*பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது*

*இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்*

*ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்*

*அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை*

*கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்*

*ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்*

*அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது*

*அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை*

*இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான்*

*இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது*

*அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள்*

*அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்*

*ஆமாம். நம் பகவான் அண்ணாமலையார் தான் அந்த இளைஞன்*

*எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது*

*கால்கள் கொடுத்தவர் இறைவன் தான்*

*கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?*

*அப்போது என்று இல்லை. இப்போதும் நீங்கள் அண்ணாமலையாரின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள். உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் இறைவன்*

*இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்*

*கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்?*

*ஈசனே திருவண்ணாமலையாய் இருக்க அவர் மடியில் நாம் தவழ்வது தான் கிரிவலம் அதனால்தான் இத்தனை நன்மையும்*

*ஓம் அருணாசலேஷ்வராய நமஹ*

🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. சிவனே சரணாகதி . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷

🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺

🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி ஷிவானி கௌரி🦜

21/12/2024
ஒருவர் நம்மை வெறுக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?ஒருவர் நம்மை விரும்புகிறாரா அல்லது வெறுக்கிறாரா என்பதை அவர்கள் ...
21/12/2024

ஒருவர் நம்மை வெறுக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

ஒருவர் நம்மை விரும்புகிறாரா அல்லது வெறுக்கிறாரா என்பதை அவர்கள் நம்மிடம் நடந்துகொள்ளும் விதத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். நம்மை எப்போது பார்த்தாலும் வலிய வந்து பேசுபவர்கள் நம்மை கண்டதும் காணாததுபோல் சென்று விடுவார்கள். நாமே அவர்களிடம் சென்று பேசினாலும் அதை விரும்பாமல் ஒதுங்கி சென்று விடுவார்கள். நான்கு பேர் இருக்கும் இடத்தில் மற்றவரிடம் விழுந்து விழுந்து பேசுபவர்கள் நம்மை வேண்டுமென்றே ஒதுக்கி விடுவார்கள். கண்டு கொள்ள மாட்டார்கள்.

நாம் செய்கின்ற ஒவ்வொரு சிறு தவறையும் கூட ஊதி பெரிதாக்கி பேசுவார்கள். நம்மை குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். ஒரு ஜென்ம விரோதிபோல் நம்மை நடத்துவார்கள். என் மேல் எதாவது தவறு உள்ளதா என்று நாமே வலிய சென்று கேட்டால் கூட முகம் கொடுத்து பேச மாட்டார்கள். நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு ஏளனம் தெரியும்.

இனிய நினைவுகளே நம்முடைய வாழ்வை இன்பமயமாக்கும்!
நாம் வருகிறோம் என்று தெரிந்தால் வீட்டில் இருக்காமல் எங்கேயாவது வெளியில் சென்று விடுவார்கள். நண்பர்கள் வட்டத்தில் இருந்தால் நம்மைக் கண்டதும் மெள்ள நழுவி விடுவார்கள். நேரில் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் பிறகு பேசுகிறேன் என்று கூறுவார்கள். இப்படி நம்மை புறக்கணிப்பவர்களிடம் இருந்து ஒதுங்கிவிடுவது நல்லது.

முகம் கொடுத்து பேசமாட்டார்கள். உங்களைப் பற்றி யாராவது பெருமையாக பேசினால் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பதுடன் உங்களைப் பற்றி தவறாகவும் பேசுவார்கள். நம்மை பார்க்கும் பார்வையே கடுகடுவென முறைப்பாக இருக்கும். உங்கள் போன் கால்களை எடுக்க மாட்டார்கள் சில சமயம் பிளாக் கூட செய்து விடுவார்கள். பாடி லாங்குவேஜ் மூலம் அவர்களுடைய வெறுப்பை காட்டுவார்கள்.

இரண்டு நாட்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்பவர் களிடம் பேசாமல் இருந்து பாருங்கள். உங்களை விரும்புவர்களாகவோ, மிகவும் மதிப்பவர்களாகவோ இருந்தால் ஃபோன் போட்டு விசாரிப்பார்கள். அதுவே உங்களை வெறுப்பவர்களாக இருந்தால் ஏன் பேசவில்லை என்று விசாரிக்க மாட்டார்கள். நம்மை பெரிதாக கண்டு கொள்ளவும் மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து நான் விலகி இருப்பதே நல்லது.

நிம்மதியான வாழ்விற்கு முக்கியமான சூத்திரம் எது தெரியுமா?
ஒருவருக்கான ஆசைகள் நிராசைகளாகும் போதும், அவர்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை உருவாக்கி கொள்ளும் போதும் மனக்கசப்புகள் உருவாகி நாளடைவில் அது வெறுப்பு என்ற தவிர்க்க முடியாத உணர்வாக மாறி சுயநலமாக தனது ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புகளையும் மட்டுமே கருத்தில் கொள்வார்கள். இப்படி நம்மை வெறுப்பவர்களிடமிருந்து விலகிக் கொள்வதே நமக்கு நல்லது.

நம்மை வெறுப்பவர்களிடமிருந்து விலகி இருக்க பழகுவோமா நண்பர்களே!

ஒரு பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் "யோவ் கண்டக...
13/12/2024

ஒரு பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... இந்த ஜன்னலக் கொஞ்சம் திறந்து வைத்து விட்டுப் போ" என்றாள்.

கண்டக்டர் வந்து ஜன்னலை திறந்து வைத்து விட்டுப் போனார். அந்தப் பெண்ணுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... வந்து இந்த ஜன்னலை சாத்தி விட்டுப் போய்யா" என்றாள்.

கண்டக்டர் வந்து "என்னம்மா அந்தம்மா ஜன்னலை திறந்து வைக்கச் சொல்லுது நீங்க ஜன்னலை சாத்தி வைக்கச் சொல்றீங்க கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி பிரயாணம் பண்ணக் கூடாதா?" என்று கேட்டார்.

அதற்கு முதல் பெண் சொன்னாள் "இங்கே பாரு நீ ஜன்னல அடைச்சன்னா நான் மூச்சு முட்டி செத்துப் போவேன்" என்றாள்.
இரண்டாவது பெண் "இங்கே பாரு நீ ஜன்னல திறந்து வச்சின்னா நான் குளிர்ல விறைச்சி செத்துப் போவேன்"னாள்.

கண்டக்டர் என்ன செய்றதுன்னு திகைச்சி நின்னுகிட்டிருந்தப்ப, கடைசி சீட்டில் பீடி குடிச்சிகிட்டிருந்த ஒரு மனுசன் கண்டக்டரை கூப்பிட்டு "அங்கே என்ன பிரச்னை" என்று கேட்டான். கண்டக்டர் சொன்னார் "அதை ஏன் கேட்கிற ஒரு அம்மா ஜன்னல அடைச்சா மூச்சு முட்டி செத்துப் போவேன்ங்குது. இன்னொரு அம்மா ஜன்னல திறந்து வச்சா குளிர்ல விறைச்சி செத்து போவேங்குது. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக் கூடாதா கொஞ்ச நேரத்தில் இறங்கப் போறாங்க அதுக்குள்ள இப்படி சண்டை போட்டுகிட்டா என்ன செய்றது".

அந்த மனுசன் "நான் ஒரு யோசனை சொல்லவா?" என்று கேட்டான்.

கண்டக்டர் "சரி சொல்லுய்யா நீ என்ன சொல்லப் போறேன்னு பார்ப்போம்" என்றார்.

அவன் சொன்னான் "கொஞ்ச நேரம் ஜன்னலை அடைச்சி வை, அந்த அம்மா செத்துப் போகும், அப்புறம் கொஞ்ச நேரம் ஜன்னலை திறந்து வை இந்தம்மா செத்துப் போகும் நாம நிம்மதியா போகலாம்" என்றான்.

கண்டக்டர் சொன்னார் "நல்ல ஆளுய்யா நீ அப்படி அவங்க ரெண்டு பேரும் செத்துப் போனா அந்தப் பொம்பளைகளோட புருசங்க வந்து கேட்டா நான் என்னய்யா பதில் சொல்றது"ன்னு கேட்டார்.

அதற்கு அவன் சொன்னான் "அதைப் பத்தி நீ கவலைப் படாதே அந்த ரெண்டு பொம்பளைகளோட புருசன் நான் தான்.. அதனால தான் அந்த யோசனையை சொன்னேன்" என்றான்.

கண்டக்டர்: 😳😳😳

(தென்கச்சி கோ.சுவாமிநாதன் பேச்சிலிருந்து...)

🌹 "நவகிரக மூல மந்திரங்கள்"🌹🌹 "ஓம் கம் கணபதயே நம"🌹🌹 ஜப குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணநோ...
11/12/2024

🌹 "நவகிரக மூல மந்திரங்கள்"🌹

🌹 "ஓம் கம் கணபதயே நம"🌹

🌹 ஜப குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணநோஸ்மி திவாகரம்

🌹 ததிசங்க துஷாராபம் ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசிணம் ஸோமம் சம்போர் மகுடம் பூஷணம்

🌹 தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்

🌹 ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்
ஸௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்

🌹 தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

🌹 ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்

🌹 நீலாஞ்ஜன ஸமானாபம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்

🌹 அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹீம் ப்ரணமாம்யஹம்

🌹பலாச புஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம்கேதும் ப்ரணமாம்யஹம்!

"ஜபம்  செய்யும் திசைகளும் மற்றும் அதன் பலன்கள்களும்" அகிலம்  காக்கும்  தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம...
26/11/2024

"ஜபம் செய்யும் திசைகளும் மற்றும் அதன் பலன்கள்களும்"

அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே!

வீடு- பத்து மடங்கு பலன் பலன்.

கோவில் அல்லது வனம் - நூறு மடங்கு பலன்.

குளம்- ஆயிரம் மடங்கு பலன்.

ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்.

மலை உச்சி - ஒரு கோடி மடங்கு பலன்.

சிவன் கோயில் - இரண்டு கோடி மடங்கு பலன்.

அம்பிகை சன்னிதி - பத்து மடங்கு பலன்.

சிவன் சன்னிதி - பல கோடி மடங்கு பலன்.

"ஜபம் செய்ய வேண்டிய திசையும் பலனும்"

கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்.

தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்.

தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை.

தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வறுமை.

மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு.

வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்.

வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்.

வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்.

"ஓம் சிவாய நம" சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. சிவனே சரணாகதி . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி!

உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்!

அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி....

நன்றிகள் -- ஷிவானி கௌரி....

"நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள்"இனிய ஈசன் அருளுடன் தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.சாதன...
24/11/2024

"நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள்"

இனிய ஈசன் அருளுடன் தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.
சாதனைகளுக்கான முதல் படி தீவிரமான ஆழ்ந்த ஆசை தான்.
மனதால் நினைக்க முடிந்ததை அடையவும் முடியும்!
இலக்கு என்பது இறுதிக்கெடுவுடன் கூடிய ஒரு கனவு!
ஒவ்வொரு தோல்வியும் அதற்குச் சமமான ஒரு வெற்றியின் விதையை உள்ளடக்கியே வருகிறது.
உங்களால் பெரிய விஷயங்களைச் செய்ய முடியவில்லை என்றால்...

சிறிய விஷயங்களைச் சிறந்த வழியில் செய்து பாருங்கள்.
எதற்காகவும் காத்திருக்க வேண்டாம்.
இந்த நிமிடமே சரியான நேரம்.
விட்டு விலகுகிறவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.
வெற்றியாளர்கள் ஒருபோதும் முயற்சியை விட்டு விலகுவதில்லை.
நம்மால் நமது மனதிற்குள் அமைத்துக் கொள்வதே, நம்முடைய ஒரே வரம்பு.
எதை நாம் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையோ....
அதையே நாம் நம்ப மறுக்கின்றோம்.
விருப்பமே அனைத்து வெற்றிகளுக்குமான முதல் படியாகும்.
உங்களுக்கான மிகப் பெரிய வாய்ப்பானது.....
இறைவன் கொடுத்து உள்ளார்.
நீங்கள் இப்பொழுது எங்கிருக்கிறீர்களோ அங்கேயே கூட இருக்கலாம்.

பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக் கூடும்.

🙏 இனிய சிவ சிந்தனைகள் 🙏🌿🌿அகிலம் காக்கும் தந்தை  அண்ணா மலையார் மலர் பாதம்‌ சரணம்..... 🌿🌿01. இனிய   சிவன் ஒருவனே நம்மை மரண...
20/11/2024

🙏 இனிய சிவ சிந்தனைகள் 🙏

🌿🌿அகிலம் காக்கும் தந்தை அண்ணா மலையார் மலர் பாதம்‌ சரணம்..... 🌿🌿

01. இனிய சிவன் ஒருவனே நம்மை மரணப் பிடியிலிருந்து விடுவிப்பான்.

02. விபூதி அணிந்து கொண்டால், வியாதிகள் குறையும்.

03. தினமும் ஒரு முறையாவது சிவ பூசை செய்ய வேண்டும்.

04. இந்திரியங்களையும் மனதையும் அடக்கி சன் மார்கத்தில் ஈடுபடுடவேண்டும்.

05. பணம், பதவி, பொருள் இருக்கும் வரைதான் நம்மை நம் சுற்றத்தார் நாடுவர்.

06. உயிரற்ற உடலை அவரின் மனைவி கூடத் தீண்டமாட்டாள்.

07. பணம், பதவி, புகழ் அனைத்தும் தாமரை இலையில் தண்ணீர் போன்றது.

08. தினமும் ஒருஜமுறையாவது சிவ பூசை செய்யவேண்டும்.

09. சிலகாலம் வாழ்ந்து சாகுவதற்குள், மனித உணர்வுகளில் இருந்து விடுபட்டால் சிவன் அருள் கிடைக்கும்.

10. "சிவாய நம என்போருக்கு அபாயம் ஒருநாழும் இல்லை" என்பர்.

11. ஓம் நமசிவாய என் று சொல்லத் துயரம் போகும்.

12. பரிபூரண சிவ பக்தன் எமனுக்கும் அஞ்சான்.

13. பரிபூரண சிவ பக்தனை எமனாலும் அணுக முடியாது.

14. சிவ பக்தர்களுக்கு சிவன் ஒரு துன்பத்தைக் கொடுத்தால் நிச்சயம் பேரின்பத்தைக் கொடுப்பான்.

15. எந்தத் துன்பம் வந்தபோதும் "ஓம் நமசிவய" என்று சொல்ல துயரம் போகும்.

16. சிவாயநம சிவாயநம எனும் நாமம், அது வினை வராது. அது தொடராத படி காக்கும்.

17. தவறுகள் செய்பவன் செய்யட்டும். இயன்றவரை சிவ பக்தனாக வாழ்ந்தால் முக்தி அடையலாம்.

18. உலகின் அனைத்து மனித செயற்பாடுகளும் குறுங் காலத்திற்கு மட்டுமே!

19. எப்போதும் சிவனை வணங்கும் போதும் அல்லல் படும் உயிரினங்களுக்கெல்லாம் உதவக் கூடிய சக்தியைத் தா சிவனே என வணங்குவது சிறந்தது.

20. இயன்றவரை அவன் புகழ்பாடி அவன்நாமம் சொல்வோம்.

21. உலகில் இறுதி உயிர் இருக்கும் வரை சைவத்தையும் தமிழையும் அழிக்க முடியாது.

"சிவாய நம,
சிவமே ஜெயம்.
சிவமே தவம். சிவனே சரணாகதி.
சிவமே என்‌ வரமே.

நன்றிகள் கோடிகள் - மீள்பதிவு - ஷிவானி கௌரி.

யாரையும் குறை கூறக் கூடாது ஏன் தெரியுமா?பொதுவாக யாரையும் குறை சொல்லாமல் இருப்பதுதான் நேர்மறை எண்ணம். அதேபோல் சிலர் பிறரை...
19/11/2024

யாரையும் குறை கூறக் கூடாது ஏன் தெரியுமா?

பொதுவாக யாரையும் குறை சொல்லாமல் இருப்பதுதான் நேர்மறை எண்ணம். அதேபோல் சிலர் பிறரைப் பற்றி குறை கூற ஆரம்பித்தால் அந்த இடத்தை விட்டு அகன்று விடுவதை காணலாம் இதைத்தான் நல்லெண்ணம் என்று கூறுவது.

ஹஸரத் ஈஷா அவர்கள் தம் சீடர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, சீடர்களைப் பார்த்து, அவர் உங்கள் சகோதரன் ஒருவன் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அவன் ஆடை காற்றில் விலகிக் கிடக்கிறது என்றால் அதைப் பார்த்து நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.

அவரின் விலகிய ஆடையை நாங்கள் ஒழுங்கு படுத்துவோம் என்று எல்லோரும் ஒரே குரலில் உரத்துச் சொன்னார்கள்.

மகிழ்ச்சி அடைந்த ஹசரத் ஈசா அவர்கள் "உங்களைப் போல உலக மக்கள் இல்லையே. பிறரிடம் குறை கண்டால் அதை மறைக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணுவது இல்லையே. அதை ஊர் முழுவதும் தம்பட்டம் அடிக்கிறார்களே. பிறகு குறைகளைப் பற்றி சிரித்துபேசி அவர்களை இழிவு படுத்துகிறார்களே" என்றார்.

குறை கண்டால் ஒன்றும் பேசாதே. நிறை கண்டால் போற்று என்கிறது இலக்கியம்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி எப்பொழுதும் சமைத்து யாருக்காவது பிறர் ஒருவருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட்ட பிறகு மீந்ததைதான் சாப்பிடுவார். ஒருமுறை அவர் அப்படி சமைத்து வைத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் உணவே வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த எங்களுக்கு சற்று ஆச்சரியம்.

அவர் சாப்பிட்டு முடித்து மற்றவர்களுக்கு பரிமாற ஆரம்பிக்கும் பொழுது அவரின் பண்பை தினசரி கவனித்து வந்த ஒரு பெண்மணி ஆச்சரியப்பட்டு ஏன் முன்பாக சாப்பிட்டுவிட்டு பரிமாறுகிறாய். உன் பண்பு அது இல்லையே !என்று வினவினார். அதற்கு அந்தப் பெண்மணி தந்த பதில், பக்கத்து வீட்டாரிடமிருந்து அவர்கள் செய்த சாப்பாடு வந்தது. காலையில் அதை யாரும் விரும்பி சாப்பிடவில்லை. அது கொஞ்சம் தீய்ந்து போய்விட்டதால் யாரும் அதை தொடவில்லை. அந்தப் பெண்மணி தீய்ந்ததை கொடுக்க வேண்டும் என்று கொண்டு வந்து கொடுக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
மனதை லேசாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
Do you know why you shouldn't blame anyone?
சமைக்கும்போது தவறுவது இயல்புதானே! அதில் நமக்கு கொடுத்ததை ஏன் வீணாக்க வேண்டும். இன்னும் சற்று நேரம் வைத்திருந்தால் அது கெட்டுவிடும். அதனால்தான் நானே முன்பாக சாப்பிட்டு விட்டேன். அவர் கைப்பட சமைத்ததும் வீணாகவில்லை.

மற்றவர்களுக்கு பரிமாறும் நேரமும் சரியான நேரம்தான். ஆதலால்தான் அப்படி நடந்து கொண்டேன் என்றார்.

முன்பை விட அவர் மீது அனைவருக்கும் பரிவும், பாசமும், பெருமையும் அதிகமாகத்தான் ஏற்பட்டதே தவிர, அவரை குறை கூற வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் ஏற்படவில்லை. அவர் சாப்பிட்ட பொருளையும் குறையாக யாரும் மதிப்பிடவில்லை. இதுதான் வாழ்வியல் உண்மை. இப்படி குறைகளை நிறைவாக்கும் தன்மையைதான் நாம் புரிந்து நடக்க வேண்டும்.

அப்பொழுது குறையொன்றுமில்லை என்று ஆகிவிடும் அல்லவா?

படித்ததில் பிடித்தது..
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

உங்கள் வெற்றி, தோல்வி களுக்கு காரணம் நீங்களே..!நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் வாழ்கையில் முன்னேற துடித்துக்கொண்டுதான் இரு...
17/11/2024

உங்கள் வெற்றி, தோல்வி களுக்கு காரணம் நீங்களே..!

நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் வாழ்கையில் முன்னேற துடித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும் நம்மில் பலருக்கு அது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இதற்க்கான காரணம் என்ன என்பதை பற்றி நாம் அறிந்துகொண்டால் நாமும் தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க முடியும் என்பது உறுதி. வாழ்க்கையில் முன்னேறவில்லையே என்று நினைப் பவர்கள் முதலில் முன்னேறும் ஆசை தங்களுக்கு இருக்கிறதா என்று தங்களையே கேட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். பலர் தற்போது செய்யும் வேலையே போதும் என்று நினைப்பவர்கள்தான்.

உலகை முன்னேற்ற நினைப்பவர் ஒவ்வொருவரும் முதலில் தன்னை எண்ணிப்பார்க்க வேண்டும். தங்களையே சரியாக எடை போட முடியாதவர்கள்தான் வாழ்க்கையில் தோல்வியடைகிறார்கள். உங்களுடைய நல்ல குணம், கெட்ட குணம் இரண்டையும் உண்மையாக உணர்ந்து சீர்தூக்கிப் பார்க்கும்போது உங்கள் செயல் திறன் பன்மடங்கு அதிகமாகிறது.

உங்கள் வாழ்க்கையே உங்களுக்கு வெறுத்துவிட்டது போலத் தோன்றுகிறதா? தவறு வேறு யாரிடமும் இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள்தான். ஆமாம் நீங்கள் நீங்கள்தான் காரணம்.
ஒரு பெரிய பணக்காரனுக்கு பணத்தோடு, அதிகாரமும் இருந்தது. ஆனால் அவனுக்கு அனைத்தின் மீதும் இருந்த பற்று குறைந்து கொண்டே வந்தது.
அவனது மனம் தத்துவ சிந்தனைகளை நாடியது. அதனால் தனது சிந்தனையை வளர்க்க எங்கு படிப்பது, யாரிடம் படிப்பது என்று நிறைய பேரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.
அப்போது பலரும் ஒரு ஜென் துறவியைப் பற்றிச் சொன்னார்கள். அதனால் அவனும் அவரிடம் தனது அறிவை வளர்க்கச் சென்றான்.
அந்தத் துறவியின் காலில் விழுந்து,
"ஐயா! எனக்கு ஜென் தத்துவத்தைப் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள் என்று கேட்டான். அதற்கு அந்தத் துறவியும்.,
"ஜென் தத்துவம் என்றால்..." என்று சொல்லி, உடனே அவனிடம் "நீ போய் சிறுநீர் கழித்துவிட்டு வா!" என்று கூறினார்.
அவனோ மனதில் "என்ன இவர் இப்படிச் சொல்கிறார், எனக்கு வந்தால் நான் போக மாட்டேனா? கொஞ்சம் கூட அறிவில்லாதவர் போல் சொல்கிறார்" என்று மனதில் புலம்பிக் கொண்டே, போய்விட்டு வந்தார்
அப்போது அந்தத் துறவி அவனிடம்.,
"புரிந்ததா...?" என்று கேட்டார். அதற்கு அவன், "இதில் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது?" என்று கேட்டான்.
அவர் அதற்கு "எவ்வளவு பெரிய பணக்காரனாக அல்லது அரசனாக இருந்தாலும் தன்னிடம் வேலை செய்பவனிடமோ, இல்லை.. ஏழையிடமோ அல்லது எத்தகைய மனிதனாக இருந்தாலும், இப்போது நீ செய்த வேலையை அவருக்கு பதிலாக வேறு ஒருவர் செய்ய முடியாது. அவரவர்தான் செய்ய வேண்டும்
அவரவர் வேலையை அவரவர்தான் செய்ய வேண்டும். அதிலும் அடுத்தவர் வேலையைத் தடுக்காமலும் இருக்க வேண்டும் என்று சொன்னார்.
அதைக் கேட்ட அவன் வாயடைத்துப் போய்விட்டான்.
இந்த கதை நமக்கு சொல்ல வருவது, உங்கள் வேலையை அடுத்தவர்களுக்கு பாதிப்பில்லாமல் நீங்களே செய்ய வேண்டும் என்பதே, அதற்கு நீஙகளே பொறுப்பானவர் என்பதே. மேலும், நமது பணியை எத்தனை பேர் ரசிக்கிறார்கள் என்ற கவலை நமக்கு வேண்டாம். நமக்கு விருப்பமான ஒரு செயலில், அல்லது துறையில் நம்மை அர்ப்பணித்துக் கொள்வது வெற்றிகரமான வாழ்க்கைகக்கு மிக முக்கியமானது. இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது அர்ப்பணிப்பு. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நோக்கி பணியாற்றுவது என்பதும், அப்படிப் பணியாற்றும் நேரத்தில் முழு அர்ப்பணிப்புடன் இருப்பதென்பதும் உங்களை மெருகேற்றும்!!!!?

Address

Colombo
00600

Telephone

+94712959856

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Anushyanthan Sivappiragasam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Anushyanthan Sivappiragasam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram