25/10/2025
lanka
🌿 #மக்கள் #விடுதலை #முன்னணியின் பொதுச் செயலாளர் திரு. #டில்வின் #சில்வா அவர்களின் சிறப்பு வருகை 🌿
இன்று (25.10.2025 சனிக்கிழமை) மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு. டில்வின் சில்வா அவர்கள் தமது குழுவினருடன் இணைந்து கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு சிறப்பு வருகை தந்தார்.
இவ் நிகழ்வானது எமது நிலையத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான அல்ஹாஜ் A.B. அமீர் அவர்களின் வேண்டுகோளின்பேரில் நடைபெற்றது.
இவ் வருகையின் போது மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு. டில்வின் சில்வா அவர்கள் எமது பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள், சேவைகள் குறித்து கேட்டறிந்ததுடன், புற்று நோயாளர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார்.
இதனை தொடர்ந்து எமது எதிர்காலத் திட்டமான “Medical Village” – மருத்துவக் கிராமம் தொடர்பாகவும், குறிப்பாக சிறுநீரக நோயாளர்களுக்கான வைத்திய பிரிவுகள் அமைப்பது குறித்து ஒரு முக்கிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.
மேலும் எமது பராமரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள காணியை தனவந்தர்களின் உதவியுனூடாக பெற்று, அதில் பல்வேறு இலவச வைத்திய சேவைகள் மேற்கொள்வது பற்றிய திட்டங்களும் விளக்கப்பட்டன.
இத்திட்டம் எதிர்காலத்தில் இலங்கை வாழ் அனைத்து இன மக்களுக்கும் இலவசமாக முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படவிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு. டில்வின் சில்வா உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்:
Mr.Kandasamy Prabu
Member Of Parliament – Batticaloa
Mr.Prenna - Coordinator
Dr.R.Muraleeswaran
Reginal Director of Health Service -Batticaloa
Dr. SBAM.Mujahith.
Nephrologist, Teaching hospital Batticaloa
Dr. Thahira Safiudeen
Deputy Director ,
Base Hospital Kalmunai North
Mr.SH. Mussamil (SLAS)
Divisional Secretary Eravur Town.
Dr. Safira Mohamed Waseem
MOH, Eravur Town
Mr. Sasi Nursing Officer
அத்துடன் எமது பராமரிப்பு நிலையத்தின் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக ஆர்வளர்களும் பங்கேற்று இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
💚 இது எமது சமூகத்திற்காக ஒரு புதிய மருத்துவ அத்தியாயத்தின் தொடக்கம்! 💚