Appolo MEDI LAB, Eravur.

Appolo MEDI LAB, Eravur. We care about your health, with High Quality Reports done by Automatic Analyzers (German Technology)

Time- 6 am - 10 am
4 pm - 8 pm
All Tests are done by 100% qualified & many years experienced (more than a decade) Medical Technologist with highly advanced automated analyzers.....

30/06/2025
06/06/2025

Blood Groups---
Donors & Receiver

16/05/2025
 #எலிக்காய்ச்சல்   எலிக்காய்ச்சலுக்கு மனிதர்கள் ஏன் பயப்பட வேண்டும்??Dr Arshath Ahamed MBBS MD PAEDவட மாகாணத்தின் பல பகு...
12/12/2024

#எலிக்காய்ச்சல்

எலிக்காய்ச்சலுக்கு மனிதர்கள் ஏன் பயப்பட வேண்டும்??

Dr Arshath Ahamed MBBS MD PAED

வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் அதிகரித்த எண்ணிக்கையில் சடுதியான மர்மக் காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக செய்திகள் அண்மைய நாட்களில் வெளிவந்திருந்தன. இந்த காய்ச்சல் leptospira எனப்படும் ஒரு வகை பக்டீரியா மூலம் பரவுவதால்
லெப்டோஸ்பிரோசிஸ் என்று இந்த நோய் அழைக்கப்படுகிறது. கேள்வி அடையாளம் போன்ற வடிவம் கொண்டதன் காரணமாக இவை Spirochaeta க்ரூப் என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

Leptospirosis என்பது சிறு விலங்குகள் அதிலும் குறிப்பாக எலியின் சிறுநீர் நீரின் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோயாகும். ஒரு காலத்தில் இந்த நோய் cane-cutter's கரும்பு வெட்டிகளின் நோய் என்று ஐரோப்பாவிலும், "rice field jaundice , அரிசி வயல் காமாலை என்று சீனாவிலும் " "Akiyami இலையுதிர் காய்ச்சல்" என்று ஜப்பானிலும் அறிப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் பெரும் சம்பவங்கள் செய்த இந்த நோய் இப்போது Neglected tropical zoonotic infection of public health importance எனும் கட்டகரிக்குள் போய்ச் சேர்ந்திருக்கிறது. இருந்தாலும் இப்போது உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த மீண்டும் வளர்ந்து வரும் re-emerging நோயாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

விரைவான, திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் மோசமான சுகாதாரம் , அலட்சியம் ஆகியவற்றின் காரணமாக, வளரும் நாடுகளில் கடுமையான காய்ச்சல் ஏற்படுத்தும் நோய்க்கான முக்கிய காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் லெப்டோஸ்பைர்களை எடுத்துச் செல்வதால், அவ்வறான இடங்களில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சுகாதார ஊழியர்கள், கால்நடை பராமரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள், மீனவர்கள், கொறித்துண்ணிகளினால்( Rodents )கடிபடுபவர்கள், நீரில் விளையாடுபவர்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கழிவுநீர் தொழிலாளர்கள், இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்களாக இருக்கின்றனர்.

லெப்டோஸ்பைரோசிஸ் பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் அதாவது எலிகள், நாய்கள், கால்நடைகளான ஆடு, மாடு, பன்றிகள் மற்றும் வனவிலங்குகளின் சிறுநீர் வெள்ள நீர், ஆறு, குளம் போன்ற பெரும் நன்னீர் நிலைகளில் கலப்பதால் இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது. இப்படியான அசுத்த நீர் காயங்களில் படுவதால், அந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் அல்லது குடிப்பதால் மனிதர்களை இந்த நோய் தொற்றி கொள்கிறது.

எனவே வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் பின்னர்,குளம் குட்டைகளில் குளிப்பதை தவிர்த்தல், வெள்ளம் பார்க்க செல்வதை தவிர்த்தல், கொதித்து ஆறிய சுத்தமான நீரை பருகுதல், விவசாய வேலைகளுக்கு பூட்ஸ் சப்பாத்து அணிதல், காலில் உள்ள காயங்களை மூடி பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலமாக இந்த நோய் தொற்றுவதில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.

அதிக காய்ச்சல் தலைவலி உடல் வலி கண் மஞ்சளாதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் உசிதமானாது. அது போல உங்கள் பிரதேசங்களில் எலிக காய்ச்சல் பரவினால் இந்த நோய் உங்களுக்கு ஏற்பாடாமல் இருக்க தடுப்பு மருந்துகளை Prophylaxis பெற்றுக் கொள்ள முடியும்.

எலிக காய்ச்சல் குறித்து தெரிந்து கொள்ள , இலவசமாக தடுப்பு மருந்துகளை பெற்று கொள்ள உங்கள் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை MOH OFFICE, வைத்தியசாலைகளை நாட முடியும்.

அனைத்து இரத்தப் பரிசோதனைகளுக்கும் 20% விலைக்கழிவு.......ஜூன் 1 முதல்---- ஜூன் 5 வரை.........ஏறாவூர் பம்மியடி பிள்ளையார் ...
31/05/2024

அனைத்து இரத்தப் பரிசோதனைகளுக்கும் 20% விலைக்கழிவு.......

ஜூன் 1 முதல்---- ஜூன் 5 வரை.........

ஏறாவூர் பம்மியடி பிள்ளையார் கோவில் பஸ் தரிப்பிடத்துக்கு எதிரில்.......

(அனைவரும் பயன்பெற இத்தகவலை செயார் செய்யுங்கள்)

Vacancy available!!!!
16/04/2024

Vacancy available!!!!

15/04/2024

ீரிழிவு..... ஓர் பார்வை...

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

எப்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அப்போது உடனே அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
அதே சமயம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தாலும், பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

இப்படி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால், அதை 'ஹைப்பர் கிளைசீமியா' ( ) என்றும், அதுவே குறைவாக இருந்தால், அதை 'ஹைப்போ கிளைசீமியா' ( ) என்றும் சொல்வார்கள்.

பொதுவாக உடலில் ஓடும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்க ஆரம்பித்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க முயலுங்கள்.
சரி, இப்போது ஹைப்பர் கிளைசீமியாவின் (Hyperglycemia) அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!!

1. #தாகம்_அதிகம்_எடுக்கும்...
ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளில் ஒன்று தான் தாகம். உங்களுக்கு வாயானது எப்போதும் வறட்சியுடன் இருப்பது போல், தாகம் அதிகம் எடுத்தால், உடனே கவனியுங்கள்.

2. #அடிக்கடி_சிறுநீர்_கழிப்பது...
தண்ணீர் அதிகம் குடிக்காமல், அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று உணர்ந்தால், அதுவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

3. #சோர்வு_தலைவலி_போன்றவை... இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, சோர்வு, தலைவலி, மங்கலான பார்வை மற்றும் தலை பாரத்துடன் இருப்பது போன்று இருக்கும்.

4. #பசி_அதிகரிக்கும்.....
உடலில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும் நேரம், எப்போதுமே பசியுடன் இருப்பது போன்று உணரக்கூடும்.

5. #உடல்_வறட்சி.....
போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளின் உடலில் வறட்சி ஏற்பட ஆரம்பித்தால், அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

6. #எடை_குறைவு.....
திடீரென்று உடல் எடை குறைவது பல்வேறு பிரச்சனைகளுக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதும் ஒன்று.

7. #சிறுநீரில்_குளுக்கோஸ்....
இரத்தத்தில் சரியான அளவில் சர்க்கரை இருந்தால், சிறுநீரில் வெளியேறும் குளுக்கோஸை சிறுநீரகமானது உறிஞ்சிக் கொள்ளும். ஆனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகம் இருந்தால், குளுக்கோஸானது சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும்.

மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு தென்பட்டால், தாமதியாது இரத்தப்பரிசோதனை ஒன்றை செய்வதன் மூலம், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

( , Eravur.)

13/04/2022

Address

Zaviya Lane, Eravur/6
Eravur
30300

Telephone

+94764827277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Appolo MEDI LAB, Eravur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category