27/04/2022
எங்களது சாச்சி காலமானார்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுலில்லாஹி வபரகாதுஹூ
ஜனாஷா அறிவித்தல்.
கல்முனை 03 மத்திய கடற்கரை வீதியைச் சேர்ந்த மர்ஹூம்களான முஹம்மது சரீப்,செல்லக்கன்டு ஆகியோரின் அன்பு மகள் மஸாஹினா இன்று காலமானார். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.. )
அன்னார் (பெற்றோலியம் கூட்டுத்தாபனம்) தாஹிர் அவர்களின் மனைவியும், சஜா,சக்ரான்,சமா,சப்கி,சஹீ ஆகியோரின் அன்புத்தாயும்,
இஸ்மாயில்,றுக்கியா,கலீல் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் காலை 6 மணியளவில் கல்முனை கடற்கரைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார்,உறவினர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அறிவிப்பவர் :
மகன் சக்ரான்.