08/03/2026
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இப்தார் நிகழ்வும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும்
------------------------------------------------------------
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வும், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலும் 2026.03.07 ஆம் திகதி சனிக்கிழமை, வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு எமது வைத்தியசாலையின் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு. Z.A.M. அஸ்மிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சரான கௌரவ வசந்த பியதிஸ்ஸ அவர்கள் கலந்து கொண்டதுடன், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. அபூபக்கர் ஆதம்பாவா அவர்களும் கலந்து கொண்டார்.
அத்துடன், வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் I.L.M. ரிபாஸ், பொது வைத்திய நிபுணர்கள் டாக்டர் M.N.M. சுஐப் மற்றும் டாக்டர் M.M. வாஸித், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் K.L.M. றைஸ், மேட்ரன், நிர்வாக உத்தியோகத்தர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது எமது வைத்தியசாலையில் காணப்படும் தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. அவை தொடர்பான விடயங்கள் பிரதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.