RDHS Office, Kalmunai

RDHS Office, Kalmunai Department of Health Services
(1)

25/10/2024
25/10/2024

கிரமமான உடற்பயிற்சி மார்புப் புற்று நோயிலிருந்து பெரிதும் பாதுகாக்கிறது

இன்று அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை கள விஜயமும் நிதி ஒதுக்கீடும்-----------------------------------------------------...
21/10/2024

இன்று அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை கள விஜயமும் நிதி ஒதுக்கீடும்
---------------------------------------------------------------------
கடந்த வாரம் புதிய கட்டிட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றதை தொடர்ந்து அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளையும் அதன் லிப்ட் வசதிகளை ஏற்படுத்தி அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பபணிப்பாளர் தலைமையில் இன்று விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டனர்

பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், உயிரியல் மருத்து பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம் உள்ளிட்ட உத்தியோக்ததர்கள் குறித்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்

21/10/2024

வளாத்தாப்பிட்டி மக்களின் கோரிக்கைக்கு உடனடித்தீர்வு

மழையுடனான காலநிலை டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு அ...
16/10/2024

மழையுடனான காலநிலை டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்
சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவிப்பு
--------------------------------------------------------------------------
மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய நிலமைகள் காணப்படுவதாகவும், பொதுமக்கள் தங்களது வீடுகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் பொறுப்பு வைவத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மழையுடனான காலநிலையின் போது டெங்குவின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமாகும். இதனால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நுளம்புகள் பெருகுவதனை தடுக்கும் வகையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்;.

மழையின் பின்னரான காலப்பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய நிலமைகள் காணப்படுவதால் பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். குறிப்பாக வீட்டுச் சூழலில் காணப்படும் பொலிதீன் உறைகள், சிரட்டைகள், யோக்கட் கப்கள், மட்பாண்டங்கள் போன்றவற்றை அழிப்பதுடன், நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்களில் நுளம்பு பெருகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதால் அவற்றினையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு சம்மந்தப்பட்டவர்கள் நடிவக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் யாரும் அலட்சியமாக இருந்துவிடாமல் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Today, 2024.10.03, a special discussion on the Advocacy Programme on Safe Community Concept Implementation was held for ...
03/10/2024

Today, 2024.10.03, a special discussion on the Advocacy Programme on Safe Community Concept Implementation was held for PHNS, SPHI, PHI, SPHM, PHM, and EDO. The event was chaired by the Regional Director of Health Services, Kalmunai, and coordinated by MO-NCD, Dr. MIMS Irshad. The programme emphasized enhancing community safety and public health practices across these key sectors.

உணவு பாதுகாப்பு மற்றும் உணவகங்களின் தரத்தை மேம்படுத்தல் தொடர்பான விசேட மீளாய்வு ----------------------------------------...
03/10/2024

உணவு பாதுகாப்பு மற்றும் உணவகங்களின் தரத்தை மேம்படுத்தல் தொடர்பான விசேட மீளாய்வு
--------------------------------------------------------------------------கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில் சுகாதார பிரிவினால் உணவு பாதுகாப்பு மற்றும் உணவகங்களின் தரத்தை மேம்படுத்தல் தொடர்பான விசேட மீளாய்வு 2024.10.02 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார பரிசோதர்கள் கலந்து கொண்டனர்

சுற்றுச்சூழல் மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌஸாத் அவர்களினால் இணைப்புச்செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.லபீர் அவர்களும் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

On World Patient Safety Day 2024, our regional laboratory received a Certificate of Excellence from the Ministry of Heal...
07/09/2024

On World Patient Safety Day 2024, our regional laboratory received a Certificate of Excellence from the Ministry of Health, Colombo, in collaboration with QMU. The award recognizes our commitment to improving diagnosis for enhanced patient safety. This achievement highlights our ongoing dedication to healthcare quality and safety standards across the region.

The Regional Director and the In-Charge Medical Officer of the Monitoring Unit visited Komari Hospital, overseeing clini...
05/09/2024

The Regional Director and the In-Charge Medical Officer of the Monitoring Unit visited Komari Hospital, overseeing clinic activities. Following their visit, the dental treatment schedule was expanded from one day to three days per week, ensuring greater access to care for patients in the community.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் திடீர் விஜயம்-------------------------------...
23/08/2024

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் திடீர் விஜயம்
---------------------------------------------------------------------
திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (22) வியாழக்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் அவ்வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத் மற்றும் ஏனைய வைத்தியர்களுடனும் கலந்துரையாடிய பணிப்பாளர் திருக்கோவில் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்கள், பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள், அவர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் வைத்தியர்களின் கவனத்திற்கு எத்திவைத்ததுடன், நோயாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வைத்தியசாலைக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லதொரு உறவினை ஏற்படுத்துமாறும் வைத்தியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றுகின்ற வைத்திய நிபுணர்களின் ஒத்துழைப்புடனும் விசேட வைத்திய நிபுணர்களின் ஊடாகவும் திருக்கோவில் வைத்தியசாலையின் சேவையினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டார்.

இதன்போது பிராந்திய கண்கானிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் அவர்களும் கலந்துகொண்டார்.

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when RDHS Office, Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RDHS Office, Kalmunai:

Share