03/05/2026
ஆமீன். 💔
நிச்சயமாக இது ஒரு பாக்கியமிக்க மரணம்.
பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் றவூப் றஹீம் மேனேஜர் என்பவர் ஹஜ்ஜிற்கு சென்றிருந்தவேளை மக்காவில் காலமானார்.
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்" (நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்கள், அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்).
கடந்த வெள்ளிக் கிழமையன்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக பொத்துவிலில் இருந்து சென்ற இவர் முன்னாள் கூட்டுறவு சங்க முகாமையாளரும் பொத்துவில் மீரா பள்ளிவாயல் பொருளாளரும் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தரும் ஆவார்.
புனிதமான மக்கா மாநகரம், தஹஜ்ஜத் நேரம், இஹ்ராம் அணிந்த நிலை என ஒரு முஃமின் எதிர்பார்க்கும் மிகச்சிறந்த முறையில் ஒருவரது இறுதி முடிவு அமைந்திருக்கிறது.
சுபஹ் தொழுகைக்காகக் காத்திருந்த அந்தப் புனிதமான தருணத்தில் இறைவனிடம் சென்றடைவது அனைவருக்குமே கிடைக்காத ஒரு பெரும் பேறு.
வல்ல அல்லாஹ் அன்னாரது நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, அவரது பாவங்களை மன்னித்து, உயரிய சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்கியருள துஆ செய்வோம்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை இறைவன் வழங்கட்டும்.
ஆமீன்