06/01/2026
https://www.facebook.com/share/p/17fWvQGcXK/?mibextid=wwXIfr
2026.01.05
සෞඛ්ය නියෝජ්ය ඇමති කළුබෝවිල ශික්ෂණ රෝහලේ හදිසි නිරීක්ෂණයක
සෞඛ්ය නියෝජ්ය අමාත්ය වෛද්ය හංසක විජේමුණි මහතා පසුගිය දා කළුබෝවිල දකුණු කොළඹ ශික්ෂණ රෝහලේ විශේෂ නිරීක්ෂණයක නිරත විය.
මෙහි දී නියෝජ්ය අමාත්යවරයා රෝහලේ වාට්ටු, සායන පරිශ්රය, බාහිර රෝගී අංශය,රසායනාගාරය,හදිසි ප්රතිකාර අංශය ඇතුළු අංශ නිරීක්ෂණය කරනු ලැබු අතර රෝහල් කාර්යමණ්ඩලය මෙන්ම ප්රතිකාර ලබා ගැනීමට පැමිණි ජනතාව සමග ද කතා බහක නිරත වෙමින් පවතින ප්රායෝගික ගැටලු පිළිබදව ද විමසීය.
නිරීක්ෂණයෙන් අනතුරුව රෝහල් පරිපාලනය සමග විශේෂ සාකච්ජාවක නිරතවූ නියෝජ්ය අමාත්යවරයා රෝගී ප්රතිකාර සේවාවන් තවතවත් විධිමත්ව පවත්වාගෙන යාම සදහා ඔවුන්ගෙන් දීර්ඝව කරුණු විමසමින්, පවතින ගැටලුවලට විසදුම් ලබා දීමට ද පියවර ගත්තේය. එම මොහොතේ විසදුම් ලබා දීමට නොහැකි ගැටලුවලට ඊට අඳාළ නිලධාරීන් දුරකතනයෙන් සම්බන්ධකරගනිමින් එම ගැටලු නිරකරණය කිරීමට ද එම මොහොතේම පියවර ගත්තේය.
අදියරෙන් අදියර රෝහලම ආරවණයවන පරිදි ඩිජිටල්කරණය කිරීම, ඒ තුළින් බාහිර රෝගී අංශයට පැමිණෙන රෝගී ජනතාවට කෙටි කාලයක් තුළදී ප්රතිකාර සේවාවන් ලබා ගැනීම, නේවාසික රෝගීන්ට අවශ්යවන වෛද්ය පරීක්ෂණ විධිමත්ව, කඩිනමින් ලබා දීම, සෞඛ්ය කාර්ය මණ්ඩලයට අනවශ්ය පීඩනයකින් තොරව යහපත් මනසික සෞඛ්ය තත්ත්වයකින් රෝගී සත්කාර සේවාවන් සිදුකිරීමට අවශ්ය පරිසරය සකස් කිරීම, වැනි කරුණු පිළිබඳව මෙහි දී විශේෂ අවධානයක් යොමුකෙරිණි.
කළුබෝවිල දකුණු කොළඹ ශික්ෂණ රෝහල 1960 වර්ෂයේ ආරම්භකර ඇති අතර එය 1995 වර්ෂයේ ශික්ෂණ රෝහලක් ලෙස උසස්කර ඇත. මේ වන විට රෝහලේ ඇදන් ධාරිතාවය 1281වන අතර 2956ක කාර්ය මණ්ඩලයක් එහි සේවය කරනු ලබයි. කොළඹ ජාතික රෝහල හැරුණුවිට කොළඹ දිස්ත්රික්කයේ වැඩිම රෝගී ප්රතිකාර,සත්කාර සේවාවක් සපයන ප්රධාන රෝහල මෙම රෝහල වේ.
මෙම අවස්ථාවට කළුබෝවිල ශික්ෂණ රෝහලේ අධ්යක්ෂිකා වෛද්ය සාගරිකා කිරිවන්දෙණිය, නියෝජ්ය අධ්යක්ෂවරුන්වන වෛද්ය ලලිත් පෝද්දලගොඩ,වෛද්ය මනෝජ් ජයකොඩි,වෛද්ය සායි නිරන්ජන් යන මහත්ම මහත්මින් ඇතුළුව පරිපාලන නිලධාරීන්, විශේෂඥ වෛද්ය, වෛද්ය, හෙද ඇතුළු සියලු සෞඛ්ය වෘත්තීන් නියෝජනය වන පරිදි කාර්ය මණ්ඩලයේ පිරිසක් ද එක්ව සිටියහ.
நோயாளிகள் சிகிச்சைகளை பெறும் நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார துணை அமைச்சர் ஆய்வு விஐயம் ஒன்றை மேற்கொண்டார்.
சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி சமீபத்தில் களுபோவிலவில் உள்ள கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனைக்கு விசேட ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
சுகாதார அமைச்சினால் ஆரமபிக்கப்பட்ட விசேட திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதன் மூலம், அரசாங்க மருத்துவமனை களை உரிய முறையில் பராமரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, இந்த விசேட ஆய்வு விஜயத்தை சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி மேற்கொண்டார்.
இங்கு, மருத்துவமனையின் வார்டுகள், மருத்துவமனை வளாகங்கள், வெளிநோயாளர் பிரிவு, ஆய்வகம், அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றை துணை அமைச்சர் ஆய்வு செய்தார், மேலும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்த மக்களுடன் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் குறித்து கலந்துரையாடினார்.
ஆய்வுக்குப் பிறகு, மருத்துவமனை நிர்வாகத்துடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்ட துணை அமைச்சர் சுகாதார சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடினார். அங்கு காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்தார்.
மருத்துவமனையை படிப்படியாக டிஜிட்டல் மயமாக்குவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது, இதன் மூலம் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தரும் நோயாளிகள் சுகாதார சேவைகளைப் பெறவும், தேவையான மருத்துவ பரிசோதனைகளை உடனடியாகவும் வழங்கவும் இந்த விஐயம் பயனுள்ளதாக அமைந்நது.
களுபோவில தெற்கு கொழும்பு போதனா மருத்துவமனை 1960 இல் நிறுவப்பட்டது மற்றும் 1995 இல் ஒரு போதனா மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டது. தற்போது, மருத்துவமனையில் 1281 படுக்கை வசதிகள் உள்ளன, மேலும் 2956 ஊழியர்கள் அங்கு பணிபுரிகின்றனர். கொழும்பு தேசிய மருத்துவமனையைத் தவிர, கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சை வழங்கும் முக்கிய மருத்துவமனையாக இந்த மருத்துவமனை உள்ளது.
களுபோவில போதனா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சாகரிகா கிரிவந்தேனியா, துணை இயக்குநர்கள் டாக்டர் லலித் பொத்தலகொட, டாக்டர் மனோஜ் ஜெயக்கொடி, டாக்டர் சாய் நிரஞ்சன், நிர்வாக அதிகாரிகள், விசேட மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து சுகாதாரத் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்கள் ம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
==========