
24/09/2025
ஆஸ்துமா 🤧: கவலையின்றிய நல்ல வாழ்க்கைக்கான எளிய குறிப்புகள்👌✨
ஆஸ்துமா பற்றி அறிவோம் 🤔💭
ஆஸ்துமா என்பது சுவாசத்தொகுதியின் நீண்டகால நாட்பட்ட நோயாகும், இது காற்றுப் பாதைகளை வீக்கமடையச் செய்து சுருங்கச்செய்கிறது.
பொதுவாக இந்த நோய் நிலைமை சிறு வயதிலேயே ஆரம்பமாகிறது.
இவர்களில் பொதுவாக தொடர்ச்சியான இருமல், மூச்செடுப்பதில் சிரமம், நெஞ்சை இறுக்கிப் பிடிப்பது போன்றிருத்தல், மூச்சு விடும்போது சத்தம் ஏற்படல் (இழுப்பு) போன்ற அறிகுறிகள் காணப்படும்.
இவர்களில் நோயினைத் தூண்டக்கூடிய காரணிகளாக பின்வருவன காணப்படுகின்றன.
✅ வானிலை - குளிர்காற்று, ஈரப்பதன் மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் 🌡️
✅ தொற்றுநோய்கள் 😷
✅ சூழல் ஒவ்வாமை - மகரந்தம் 🌺, புகை 💨, செல்லப்பிராணிகள் 🐈
✅ சிகரட் 🚬
✅ உடற்பயிற்சி 🏃
✅ மனநிலை மாற்றங்கள் 🤯
ஆஸ்துமாவிற்கான சிகிச்சை முறை 💊🏥
இங்கே நோயைக் குணப்படுத்துவதைக் காட்டிலும், அதைக் கட்டுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. ஆஸ்துமா சிகிச்சையில் மருந்துகளின் பல்வேறு வகுப்புகள் மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இவை நீண்ட கால மருந்துகள் மற்றும் விரைவான நிவாரண மருந்துகளாகப் பிரிக்கப்படலாம்.
குறுகிய-செயல்படும் மூச்சுக்குழாய்கள் (சல்பியூட்டமோல்) விரைவான நிவாரணம் கொடுக்க உதவுகின்றன மற்றும் உடற்பயிற்சியால் தூண்டப்பட்ட அறிகுறிகளுடன் இணைந்து பயன்படுத்தலாம்.
மிகவும் பயனுள்ள அழற்சி எதிர்ப்பு முகவர்கள் உள்ளிழுக்கும் கார்டிகோஸ்டீராய்டுகள் (ICS) மற்றும் அவை முதல் வரிசையில் கருதப்படுகின்றன. ஆஸ்துமா அதிகரிக்கும் அபாயத்தைக் குறைப்பதில் ICS மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு ICS மற்றும் LABA ஆகியவற்றின் கலவையானது ஆஸ்துமா கட்டுப்பாட்டை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நன்மை பயக்கும்.
ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய வழிமுறைகள் 😷👌
✅ உங்கள் நோயைத் தூண்டக்கூடிய காரணிகளை (trigger factors) கண்டறிந்து அவற்றைத் தவிர்க்கவும்❌
✅ சுவாசத் தொற்று ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரின் சிகிச்சை பெறவும் 🧑⚕️
✅ புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்க்கவும்🚭
✅ சுற்றுப்புறத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவும்🪴
✅ போதுமான காற்றோட்டம் உள்ள இடத்தில் வாழவும் 🍃
✅ செல்லப்பிராணிகளுடன் அதிகம் நெருக்கமாக பழகுவதைத் தவிர்க்கவும் 🐕🐈
✅ தினமும் தகுந்த உடற்பயிற்சிகளை செய்யவும்🚶♀️
✅ உடல் எடையை சீராக வைத்திருக்கவும் 🧘♀️
✅ வைத்தியரின் ஆலோசனைப்படி மருந்துகளை முறையாகப் பயன்படுத்தவும்
✅ உங்களுக்காகக் குறிப்பிடப்பட்ட மருந்துகளை கிரமமாகவும் சரியான முறையிலும் உள்ளெடுக்கவும் 💊
ஆஸ்துமா நோயாளிகளுக்கான சில பயன்தரு அறிவுரைகள் 😇
✅ உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இன்ஹேலர் (inhaler) பயன்படுத்தும் முறையை சரியாக கற்றுக்கொண்டு, வைத்தியரின் அறிவுரைக்கு இணங்க பயன்படுத்துங்கள் 💊🧑⚕️
✅ மருந்துகளை தினசரி முறையாக உட்கொள்ள மறவாதீர்கள் 📆
✅ ஆஸ்துமா நாட்குறிப்பு வைத்திருங்கள் 📔 அதில்:
⚠️ பகல் மற்றும் இரவில் எத்தனை முறை அறிகுறிகள் தோன்றியது 🤔
⚠️ எத்தனை முறை நீல நிற பம்ப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது 🔄
என்பன குறிக்கப்பட வேண்டும். இது வைத்தியருக்கு உங்கள் நோயின் நிலையை மதிப்பிட உதவும் 👍
✅ வழங்கப்படும் மருந்துகள் மற்றும் அவற்றின் சாத்தியமான பக்கவிளைவுகள் குறித்து வைத்தியரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் 💬
✅ இயன்றால், வீட்டிலேயே Peak Expiratory Flow Meter வாங்கி, அதை முறையாகப் பயன்படுத்தி நோயின் தீவிரத்தை கண்காணியுங்கள் 💪
✅ வருடாந்தம் இன்ப்ளூவென்சா தடுப்பூசி எடுத்து கொள்ள முயற்சியுங்கள் 💉
✅ உடற்பயிற்சியின் போது சுவாசக்குறைவு அதிகரிப்பின் முன்பாக, வைத்தியரின் ஆலோசனைப்படி, தேவைப்படும் போது மட்டுமே நீல நிற பம்ப் பயன்படுத்துங்கள்👌
✅ வைத்தியரின் ஆலோசனையின்றி மருந்தகங்களில் நேரடியாக மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதைத் தவிருங்கள் 🫵‼️
✅ அவசர நிலைகளில், நீல நிற பம்பை சரியான முறையில் பத்து தடவைகள் பயன்படுத்தியும் நலம் குணமாகவில்லை என்றால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்‼️🚨
✅ சிலர் சமூகத்தில் பம்ப் பயன்படுத்துவதை தவிர்த்து மாத்திரைகள் உட்கொள்ள விரும்புவர். ஆனால், பம்ப் வழியே மருந்து உட்கொள்வது: 💊✅
👍🏼 நேரடியாக நுரையீரலுக்குச் செல்லச் செய்து சிறந்த விளைவைத் தரும்
✅ தேவையான மருந்தளவு குறைவாக இருக்கும்
✅ பக்கவிளைவுகள் மிகக் குறைவாக இருக்கும்.
✅ பெக்லேர் (Beclate – மண்ணிற பம்ப்) என்பது பெக்லோமேதசோன் (Beclomethasone) எனப்படும் ஸ்டெராய்டு மருந்தைக் கொண்டது. இது காலையும் இரவும் தினசரி தொடர்ந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
பெக்லேர் போன்ற ஸ்டெராய்டு பம்ப்களைப் பயன்படுத்திய பின், வாயை சுத்தமான நீரால் நன்றாகக் கழுவ வேண்டும் 🚰
மேற்குறிப்பிட்ட வகையில் சரியான ஆஸ்துமா செயல் திட்டங்கள் மற்றும் சரியான நேரத்தில் சரியான மருந்துகள் மூலம், ஆஸ்துமாவை திறம்பட கட்டுப்படுத்த முடியும்.
Article By :- Miruthy Sureshkumar
Graphic By :- Dhanuka Aponsu