30/04/2021
மருந்தகம் சேவையாக மட்டும் இல்லாமல் இருந்தால்..!
இந்த நேரம் நாங்களும் பாதுகாப்பாக வீட்டில் இருந்திருப்போம்..
உயிரை பணயம் வைத்து தான் நாங்களும் மருந்தகம் நடத்துகிறோம்.
அனேக வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதிலை..
குறைந்த பட்சமாக மாஸ்க்கு கூட அணியாமல் தான் வருகிறார்கள்,
எவ்வளவு எடுத்து சொன்னாலும் புரிவதில்லை.
சிலரின் அறியாமையும்,
சிலரின் முதுமையின் இயலாமையும் சகித்து கொள்ள வேண்டிய நிதர்சனம் எங்களுக்கும்..
மரண பயத்துடன் தான் மருந்தை விநியோகம் செய்கிறோம்,
குழந்தைகள் ஜூன் மாதம் பள்ளிக்கு வழக்கம் போல் அவசர கதியில் செல்வார்கள், எனது குழந்தையுடன் கெஞ்சி பேச அப்போதும் நேரம் இருக்க போவதில்லை, சொந்த வீட்டிற்க்கே சென்றாலும், அன்னிய வீட்டுக்கு செல்வது போலவே சென்று வருகிறோம்,
பயம் அதிகம்,
எங்கே,
என்னால்,
எனது குழந்தைக்கும் தொற்று வந்து விடுமோ என்று...
போதிய ஸ்டாக் இல்லாத போதும்,டெலிவரி வசதி சரிவர இல்லாத போதும்...நோயாளிகளுக்கு சொன்ன நேரத்தில் மாத்திரைகளை கொடுக்க நாங்கள் படும் மன உளைச்சல் கொஞ்சம் அல்ல ,
ஒரு நாள் தாமதம் ஆனாலும்,
வாடிக்கையாளர்கள தயவுதாட்சன்யமின்றி
வசை பாடுவார்கள்,
(எங்களுக்கு இதுவும் வாடிக்கை தான்)
எங்களுக்கு இப்போது செலவுகளும் அதிகம், வருமானம் குறைவு,
இந்த விபரம் புரியாமல்,
மற்ற தொழில் செய்பவர்கள்
எங்கள் மீது பொறாமை பார்வையும் வீசி செல்கிறார்கள், எங்களுக்கும்
வணிக நேரத்தை குறைத்தால் நிம்மதியே ..
இறுதியாக:
மருத்துவர்கள்,செவிலியர்கள் ,காவல் துறையினர் மற்றும் துப்புரவுத்துறையினர் அயராது உழைக்கிறார்கள்,
அவர்களின் சேவையை உணர்ந்து மக்களும், அரசும் மற்றும் ஊடகமும் பாராட்டி மகிழ்கின்றனர்.
ஆனால்.,
எந்த மூலையிலும் ஒரு மருந்தாளுநரை பாராட்டி அங்கீகாரம் செய்து ஒரு சின்ன பெட்டி செய்தி கூட இதுவரை வந்தது இல்லையே..
உயிரை பணயம் வைத்து தான் நாங்களும் நேரம் காலம் அறியாது பணி செய்கிறோம்,..
வருமானத்திற்க்கு மட்டும்
தொழில் செய்வதாக நீங்கள் நினைத்தாலும் அதிக தள்ளுபடி போட்டியால் சொற்ப அளவில் தான் எங்களுக்கான வாழ்வாதார மீதம்...
வருவாய் மட்டுமே என்றும்
எங்களுக்கு முழு நோக்கம் இல்லை..
நாங்கள் வேண்டுவது:
மக்களிடம் இருந்து குறைந்த பட்சம் ஒரு புன்னகை,
அரசிடம் இருந்து சிறிய அங்கீகாரம்,
ஊடகத்தில் இருந்து எங்களின் அர்ப்பணிப்பை உணர்ந்த பாராட்டு மட்டுமே..
அரசும்,
மக்களும் மற்றும்
ஊடகத்தினரும்
இதை செய்வார்களா..?