
14/11/2024
*சரியான சிந்தனை*
எம் சிந்தனை எம்மை நகர்த்துகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
நாம் நகரும் பாதை அழகானதாக இருக்க வேண்டும் என்றால் எமக்குள் இருந்து உறுதியான, நம்பகமான, ஆக்கபூர்வமான சிந்தனை உருவாக வேண்டும்.
நாம் ஒரு விடயத்தில் அச்சமோ, சலனமோ இல்லாமல் தைரியமாக முடிவெடுக்க இந்தச் சிந்தனை எமக்கு கட்டாயம் இருக்க வேண்டியுள்ளது. எமது முடிவுகளுக்கு நாம் தான் பொறுப்பாளர்கள்.
மற்றவர்கள் எந்த கருத்தோட்டத்தை எங்களுக்குள் செலுத்த முயன்றாலும்...
எந்த விடயங்களை செய்ய வைக்க எந்த வழிகளில் எங்களை தூண்டினாலும்..
எந்த நேரத்தில் எந்த முடிவை எடுப்பது என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்.
இது எம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு திறமை.
எமக்கு கிடைக்கும் தகவல்களை அப்படியே நம்பிவிடாமல்,
அவற்றை
ஆராய்ந்து, மதிப்பீடு செய்து,
அனுமானங்களை அடையாளம் காண்டு,
முன்னோக்குகளைக் கருத்தில் கொண்டு
சான்றுகள் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில் தகவலறிந்து
தீர்ப்புகளை வழங்கும் ஆற்றல் எம்மிடம் இருக்க வேண்டும்.
அடிக்கடி மாறிவரும் இந்த உலகில், ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனும், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் திறனும் பெற்றவர்களாக நாம் எம்மை மாற்றிக் கொண்டால் எமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப அவ்வாறே சமூக வாழ்விலும் மிகப் பெரிய வெற்றியை அடையலாம்.
நாம் ஒவ்வொருவரும் உயர்வான மனிதர்கள் என்பதால் எம்மிடம் நல்ல சிந்தனைத் திறன்கள் இருக்கின்றன.
ஆதலால் எமது ஆக்கபூர்வமான சிந்தனையை முன்வைத்து தைரியமான மனநிலையுடன் பயணிக்கும் நல்ல மனிதர்களாக எங்களை மாற்றிக் கொள்வோம்.
எங்கள் பிள்ளைகளையும் பயனுள்ள சிந்தனைகள் நிறைந்த மனிதர்களாக மாற்றியமைக்க வழிகாட்டுவோம்.
➖😊😊😊😊➖
✍🏼 அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்