Divisional Hospital Akkarayankulam

  • Home
  • Divisional Hospital Akkarayankulam

Divisional Hospital Akkarayankulam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Divisional Hospital Akkarayankulam, Health & Wellness Website, .

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி  ஜெயராணி அவர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் , மாகாண சுகாதார  பணிமனையின்  ...
10/03/2025

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜெயராணி அவர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் , மாகாண சுகாதார பணிமனையின் உயர்மட்ட உத்தியோகத்தர்கள் கடந்த 22.02.2025 அன்று அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர் .

வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளையும் செயற்பாடுளையும் விரிவாக பார்வையிட்ட செயலாளர் அவர்கள் வைத்தியசாலையின் செயற்பாடுகள் , ஒழுங்கமைப்பு , தரம் மற்றும் உற்பத்தித்திறன் முயற்சிகள் தொடர்பாக திருப்தியை தெரிவித்தார்.

தொடர்ந்து வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பவித்ரா அவர்கள் வைத்தியசாலையின் சமகால நிலைப்பாடு மற்றும் எதிர்கால தேவைப்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (பதில் ) வைத்திய கலாநிதி வெரவத்த பிரபாத் அவர்களும் , வைத்திய கலாநிதி தர்மராஜன் விநோதன் அவர்களும் ( மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்/ முன்னாள் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ) ,வைத்திய கலாநிதி சிவஞானசுந்தரம் சேரலாதன் அவர்களும் ( முன்னாள் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ) கலந்து கொண்டு வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் பற்றி கலந்துரையாடினர்

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையின் 2024  ஆம் ஆண்டின் வருடாந்த ஒன்று கூடல் 05 .01 .2025  அன்று பொறுப்பு வைத்திய அதிகார...
17/01/2025

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையின் 2024 ஆம் ஆண்டின் வருடாந்த ஒன்று கூடல் 05 .01 .2025 அன்று பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் பவித்ரா தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் யாதவன் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
கலை நிகழ்வுகள் , உத்தியோகத்தர் கௌரவிப்புகள் மற்றும் பல நிகழ்வுகள் அனைத்து உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடனும் நடைபெற்றது.

The Annual Get-together 2024 of Divisional Hospital Akkarayankulam was successfully held on 5th January 2025 within the hospital premises. The event was led by Dr. Pavithra, the Medical Officer In-Charge of the hospital. It was graced by the presence of Dr. Y. Yathavan, the Deputy Regional Director of Health Services, Kilinochchi district, as the Guest of Honor.

The celebration included vibrant cultural performances, a felicitation ceremony recognizing the contributions of the staff, and various engaging programs.

அரச சேவையாளர்களின் கடமையை ஆரம்பிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வானது அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் , வைத்தியசாலையின்...
02/01/2025

அரச சேவையாளர்களின் கடமையை ஆரம்பிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வானது அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் , வைத்தியசாலையின் நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. பவித்ரா தலைமையில் அனைத்து உத்தியோகத்தர் ஊழியர் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது .

வைத்தியசாலையின் நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. பவித்ரா தேசிய கொடியினையும் , சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர்
திருமதி .மேகலா எதிரிசிங்க வைத்தியசாலை கொடியினையும் ஏற்றி வைத்தனர் .

கடமை சபதம் ஏற்றல் , வைத்தியசாலையின் நோக்கம் ,பணிக்கூற்று அறிவித்தல் , தேசிய கீதம் இசைத்தல் என்பனவும் நடைபெற்றன. நிகழ்வினை மருந்து கலவை உத்தியோகத்தர் திரு .தம்பையா பரமானந்தம் பொறுப்பேற்று நடாத்தியிருந்தார் .

Official Commencement of work 01.01.2025

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் களப்பயணம் 28.08.2024எங்களது வைத்தியசாலையின்  நோயாளர் பராமரிப்பு சேவைகள் மற்றும் வைத...
29/08/2024

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் களப்பயணம் 28.08.2024

எங்களது வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்பு சேவைகள் மற்றும் வைத்தியசாலை முகாமைத்துவ நடைமுறைகளின் விசேட விடயங்களை கற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் வடுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் குழுவினரை வரவேற்றதில் பெருமைப்படுகிறோம்.

எங்களது வைத்தியசாலையின் பொறுப்பு மருத்துவ அதிகாரி வைத்தியர் .புனிதா ஜெயராமன் அவர்கள், எங்கள் நடைமுறைகளைப்பற்றி விளக்கம் வழங்கினார்.அதன் பின்னர், அவர்கள் ஒவ்வொரு பிரிவையும் பார்வையிட்டு, எங்கள் அர்ப்பணிப்புடனான ஊழியர்களுடன் கலந்துரையாடினர்.

2018 முதல், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை தரம் மற்றும் உற்பத்தி திறன் முறைகள், நோயாளர் பராமரிப்பு சேவைகளில் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.

எங்கள் பயணம் மற்றும் சாதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமைப்படுகிறோம். இந்த பயனுள்ள களப்பயணத்தை ஒழுங்கமைத்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி விநோதன் தர்மராஜன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

Learning from Excellence:
Exposure Visit of Divisional Hospital Vaddukottai

We were honored to host the team from Divisional Hospital Vaddukottai, Jaffna, who visited us to study the best practices implemented in patient care services and hospital management.

Our Medical Officer Incharge, Dr. Punitha Jeyaraman, led the session with an insightful presentation on our innovative practices. Following the presentation, the visiting team explored each unit, engaging in discussions with our dedicated staff.

Since 2018, Divisional Hospital Akkarayankulam has been a benchmark in quality and productivity concepts and patient care services. We are proud to share our journey and achievements, and grateful to Dr. D Venoden, RDHS Kilinochchi, for organizing this valuable exposure visit.

Together, we continue to strive for excellence in healthcare!

அரச சேவையாளர்களின் கடமையை ஆரம்பிக்கும் நிகழ்வானது அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் , வைத்தியசாலையின் நிலைய பொறுப்பு...
01/01/2024

அரச சேவையாளர்களின் கடமையை ஆரம்பிக்கும் நிகழ்வானது அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் , வைத்தியசாலையின் நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. புனிதா ஜெயராமன் தலைமையில் அனைத்து உத்தியோகத்தர் ஊழியர் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது .

வைத்தியசாலையின் நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. புனிதா ஜெயராமன் தேசிய கொடியினையும் , பிரதி பொறுப்பதிகாரி Dr வித்யாகரன் வைத்தியசாலை கொடியினையும் ஏற்றி வைத்தனர் .

கடமை சபதம் ஏற்றல் , வைத்தியசாலையின் நோக்கம் ,பணிக்கூற்று அறிவித்தல் , தேசிய கீதம் இசைத்தல் என்பனவும் நடைபெற்றன. நிகழ்வினை மருந்து கலவை உத்தியோகத்தர் பரமானந்தம் பொறுப்பேற்று நடாத்த்தியிருந்தார் .

Official Commencement of Work 01.01.2024

2023 உலக நோயாளி பாதுகாப்பு தினத்தின் கருப்பொருளை உணர்த்துவதற்கும் விழிப்புணர்வூட்டுவதற்கும், சுகாதார அமைச்சகத்தின் சுகாத...
03/10/2023

2023 உலக நோயாளி பாதுகாப்பு தினத்தின் கருப்பொருளை உணர்த்துவதற்கும் விழிப்புணர்வூட்டுவதற்கும், சுகாதார அமைச்சகத்தின் சுகாதாரத் தரம் மற்றும் பாதுகாப்பு பணியகம் , நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயல்படுத்தப்பட்ட சிறந்த நடைமுறைகள் 2023 குறித்து தேசிய அளவிலான போட்டியை நடத்தினர்

நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களில், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையானது “நோயாளிகளை அவர்களின் பராமரிப்பில் பங்குதாரர்களாக இணைத்துக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பிலான செயற்திட்டத்திற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதற்காக அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டது

In order to sensitize and make aware about the theme of the World Patient Safety Day 2023, Best practices on healthcare quality and safety were invited by the Directorate of Healthcare Quality and Safety (DHQS) from the healthcare institutions of both Line ministry and provincial health institutions.
Among the hundreds of applicants, through a stringent process of shortlisting and judging by an independent panel of judges, the best projects were selected to be awarded at the national event.
As such, Divisional Hospital Akkarayankulam has been recognized for sharing best practices for the Project Titled “ENGAGE PATIENTS AS PARTNERS IN THEIR CARE”.

எமது வைத்தியசாலையில் நீண்டகாலமாக பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக புதிதாக ந...
03/07/2023

எமது வைத்தியசாலையில் நீண்டகாலமாக பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் சீரலாதனை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அக்கராயன் பிரதேச சமூகத்தின் சார்பாக நாம் அவரை வாழ்த்துகிறோம் மற்றும் அவரது வழிகாட்டுதலுடன் திறம்பட பணியாற்ற எதிர்பார்க்கிறோம்
we are very much delighted to welcome Dr Seralathan who is newly appointed Regional Director of Health Services Kilinochchi, who has served as Incharge Medical Officer in our hospital for a long time.

onbehalf of Health staff of Akkarayankulam Divisional Hospital and the Community of Akkarayan area , we congratulate him and expecting to work more efficiently with his guidance

06/04/2020

Clinic drugs issue to the Door steps of patients who couldnt come to hospital due to "Corona Risk " and Curfew..
🙏

🏥

























-Mission Completed - 💪 Seran Siva Tishany Tharma Ishara Sumanasinghe Sandu Ayesh AnuSha LaKmali KuLathunga Thilini Mekala Renuka Ragu Tharsana Balasubramaniam Imasha Herath Thurai Paskaran Kamalraj Kamal

Annual Carols &  Christmas Celebrations  of Divisional Hospital Akkarayankulam  held on 23.12.2019.
25/12/2019

Annual Carols & Christmas Celebrations of Divisional Hospital Akkarayankulam held on 23.12.2019.

Building Team work among staff at DH Akkarayan 2019
07/06/2019

Building Team work among staff at DH Akkarayan 2019

16/09/2018

8th staff meeting of Divisional Hospital Akkarayankulam was held on 03.08.2018.
which was chaired by Dr.S.Seralathan(Medical Officer In-Charge)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Hospital Akkarayankulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram