Sri Lanka Jama'athe Islami

Sri Lanka Jama'athe Islami Sri Lanka Jama'athe Islami is a religious and community welfare organization established in 1954.

It works on promoting values, peace and Harmony, alleviating poverty and protecting environment among Citizens of Sri Lanka.

12/08/2025



On Friday 15th of August 2025 there will be a jointly organized protest from Kanatte Roundabout to Campbell Car Park starting at 3pm. This is organized with civic society groups from across all divides.

⭕ நீங்கள் இம் முறை A/L பரீட்சை எழுதுபவரா? அப்படியானால் உங்களுக்காக ஓர் அருமையான Zoom Webinar நாம் ஏற்பாடு செய்துள்ளோம்!🎯...
09/08/2025

⭕ நீங்கள் இம் முறை A/L பரீட்சை எழுதுபவரா? அப்படியானால் உங்களுக்காக ஓர் அருமையான Zoom Webinar நாம் ஏற்பாடு செய்துள்ளோம்!

🎯 A/L பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?
நாளைய வெற்றியை இன்றே திட்டமிடுங்கள்!

🧠 உள்ளடக்கம்:

✅ பரீட்சைக்காக திட்டமிடுவது எப்படி?
✅ நேரத்தைச் சிறப்பாக நிர்வகிப்பது எப்படி?
✅ மன அழுத்தத்தைக் கையாளும் உளவியல் வழிமுறைகள்
✅ எளிமையான & பயனுள்ள Revision Techniques

📆 நாள்: 30.08.2025 (சனிகிழமை)
🕗 நேரம்: இரவு 08:30 முதல் 09:30 வரை
🌐 via: Zoom

🎙️ வளவாளர்:
ASH. M.N. AALIF ALI (ISLAHI)
B.A, IHRDP – Pakistan,
Alquran & Science Researcher, Psychological Counsellor,
Director & Founder of Alif

💡 இந்த Webinar, உங்கள் தன்நம்பிக்கையை வளர்த்து பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ள வழிகாட்டும். இன்ஷா அல்லாஹ்

👉🏼 Book Now 👇🏼
QR குறியீட்டை ஸ்கேன் செய்து அல்லது பின்வரும் link ஊடாக பதிவு செய்யலாம்.

📲 பதிவு செய்ய:
M.S.M SAFRIN – 📞 +94 76 617 3215
📌 Zoom Link பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுப்பிவைக்கப்படும்.

07/08/2025

Highlights of Felicitation Ceremony for newly elected members of Kinniya UC, Kinniya PS & Mutur PS

5th of August 2025
Mutur - Pearl Grand

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான  கெளரவிப்பு நிகழ்வு 2025 கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை மற்றும் மூதூர் பிரதேச...
06/08/2025

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு 2025

கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை மற்றும் மூதூர் பிரதேச சபைகளுக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு கடந்த 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி மூதூரில் அமைந்துள்ள Pearl Grand மண்டபத்தில் நடைப்பெற்றது

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை கெளரவ தவிசாளர் திரு.எம்.எம்.மஹ்தி, மூதூர் பிரதேச சபை கெளரவ தவிசாளர் திரு. செல்வரத்னம் பிரகலாதன் மற்றும் கிண்ணியா பிரதேச சபை கெளரவ தவிசாளர் ஏ.ஆர்.எம். அஸ்மி மற்றும் மூன்று உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும், மூதூர், கிண்ணியா பிரதேச சிவில் சமூக தலைமைகளும் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குமான நினைவுச்சின்னமும் கௌரவ தவிசாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஊடகப் பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

நாட்டின் பன்முக அபிவிருத்திக்கு அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் இணைப்பு அவசியம்--------------------------------------...
05/08/2025

நாட்டின் பன்முக அபிவிருத்திக்கு அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் இணைப்பு அவசியம்
------------------------------------------------------------------

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அக்குறணை கிளையின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் சமூக அரசியல் பிரமுகர்களை வரவேற்கும் நிகழ்வும் கடந்த 2025 ஆகஸ்ட் 03ம் திகதி அக்குறணை கிளை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி, வரவேற்பு நிகழ்வில் உரையாற்றுகையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு அரசியல் மற்றும் சிவில் சமூகங்கள் இணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

புதிய அரசியல் கலாச்சாரத்தின் தேவை
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தனது உரையில் நாட்டின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய உஸ்தாத் உஸைர் இஸ்லாஹி அவர்கள்
"இனவாதத்தாலும், விழுமியங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையாலும், சிவில் சமூகத்தினதும் பொதுமக்களினதும் அரசியல் அக்கறையற்ற போக்காலும் எமது நாடு பல்வேறு பின்னடைவுகளை எதிர்நோக்கி இருக்கிறது.

இந்த சூழலில், நாட்டில் ஒரு நல்லதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

இந்த வகையிலேயே மனித நலன், இயற்கை வள பாதுகாப்பு மற்றும் நல்லாட்சியை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறது," என்று குறிப்பிட்டார்.

இந்த உயரிய நோக்கத்திற்காக உழைக்கும் பாராளுமன்ற, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை அழைத்து கௌரவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கும் சிவில் சமூகத்திற்குமான பொறுப்புகள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மக்கள் பிரதிநிதிகளை நோக்கிப் பேசிய அவர், "நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் உண்மையான தேவைகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் மிகச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். சுயநலப் போக்குகளைப் புறக்கணித்து, சகல தரப்பினருடனும் தொடர்புகளைப் பலப்படுத்தி, உங்கள் அறிவையும் திறமைகளையும் கொண்டு பொதுநலனுக்காகச் செயல்படும்போது எமது நாடும் ஊர்களும் நிச்சயம் வளர்ச்சி அடையும்" என்றார்.

"இந்தப் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு மாத்திரமல்ல. சிவில் சமூக அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் முக்கிய கடமையாக இருக்கிறது. அவர்கள் பிரச்சினைகளையும் தீர்வுக்கான தமது ஆலோசனைகளையும் புள்ளிவிபரங்களுடன், விஞ்ஞானபூர்வமாக மக்கள் பிரதிநிதிகளிடம் முன்வைக்க வேண்டும்.

அவர்கள் முன்னெடுக்கும் நல்ல விடயங்களுக்கு கைகோர்த்து துணை நிற்க வேண்டும். இந்த இணைந்த செயற்பாட்டை ஊக்குவிப்பதற்காகவே நாடு பூராகவும் ஜமாஅத்தே இஸ்லாமி இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது," எனத் தெரிவித்தார்.

சிறப்பு அதிதிகள் கௌரவிப்பு மற்றும் புதிய சூரா தெரிவு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரியாஸ் பாரூக், அக்குறணை பிரதேச சபை தலைவர் கௌரவ இஸ்திஹார் இமாமுத்தீன் மற்றும் அக்குறணை நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு. இஸ்மாயில் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டி, அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி - அக்குறணை கிளையின் புதிய ஷூரா உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமையும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாகும்.

ஊடக பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

19/07/2025

Highlights of Annual General Meeting of the Representative Council of Sri Lanka Jama’athe Islami

Held on 19th July 2025 at Darul Iman Auditorium – Colombo.

Hon. (Dr.) Nihal Abeysinghe Member of Parliament, General Secretary of National Peoples’ Power  grace the occasion of An...
19/07/2025

Hon. (Dr.) Nihal Abeysinghe Member of Parliament, General Secretary of National Peoples’ Power grace the occasion of Annual General Meeting of the Representative Council of Sri Lanka Jama’athe Islami (Islamic Association of Sri Lanka) was held on 19th July 2025 at Darul Iman Auditorium – Colombo

18/07/2025

Highlights of Felicitation Ceremony for newly elected members of Panadura Pradhesiya Sabha

A felicitation ceremony was organized by the Sri Lanka Jama’athe Islami, Panadura Branch, in honour of the newly elected...
16/07/2025

A felicitation ceremony was organized by the Sri Lanka Jama’athe Islami, Panadura Branch, in honour of the newly elected members of the Panadura Pradeshiya Sabha, under the leadership of the President of Sri Lanka Jama’athe Islami, Ustaz M.H.M. Ussair Islahi.

The event was held on Tuesday, 15th July 2025, at the Data Banquet Hall, Panadura, and was well attended by most members of the Sabha representing various political parties. In addition to the members, several civil society representatives, educationists, religious leaders, and well-wishers also participated.

As a token of appreciation, the President of Sri Lanka Jama’athe Islami presented a memento to the Chairman of the Panadura Pradeshiya Sabha, Mr. I. A Darmasiri Perera

பாணந்துறை பிரதேச சபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பாணந்துறை கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி தலைமையில் 2025 ஜூலை 15 ஆம் தேதி வியாழக்கிழமை பாணந்துறையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு சிவில் சமூக பிரதிநிதிகள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அவர்களினால் பாணந்துறை பிரதேச சபையின் தலைவர் திரு.ஐ.ஏ. தர்மசிறி பெரேராவுக்கு பாராட்டுச் சின்னமாக, ஒரு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி உலகில் வாழும் சுமார் இரு நூறு கோடி மக்களால் கொண்டாடப்படும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இ...
06/06/2025

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகில் வாழும் சுமார் இரு நூறு கோடி மக்களால் கொண்டாடப்படும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊழியர்கள், அங்கத்தவர்கள் மத்திய ஆலோசனை சபை உறுப்பினர்கள் சார்பாக இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை இந்நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

முஸ்லிம்கள் கொண்டாடும் இரு பெருநாள் தினங்களும் நோன்பு, ஹஜ் என்ற இரு வணக்கங்களைத் தொடர்ந்து கொண்டாடப்படுவது, அப்பெருநாட்களின் விசேட அம்சமாகக் கருதப்படுகின்றது. மேலும், இப்பெருநாட்கள், மனிதர்கள் தம்மைப் படைத்த இறைவனோடுள்ள உறவை பலப்படுத்த உதவுவதோடு சக மனிதர்களோடுள்ள உறவினையும் புதுப்பித்து பலப்படுத்துகின்றன.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகில் வாழ்ந்த இப்ராஹீம் நபியவர்களின் தியாகமும், வழிகாட்டல்களும் ஞாபகப்படுத்தப்படுகின்றன. ஈராக், சிரியா, பலஸ்தீன், எகிப்து, மக்கா என்று நீண்ட அவரது பணியானது மக்களுக்கு படைப்பாளனாகிய அல்லாஹுத்தஆலாவை வணங்குவதன் அடிப்படைகளை புரியவைப்பதாக அமைந்திருந்தது.

சமூக வாழ்வு மற்றும் அதற்கு அவசியமான சமூக நீதி என்பவற்றுக்கான அடிப்படைகளை போதித்தமை இப்ராஹிம் நபியவர்களின் மற்றொரு பணியாக கருதப்படுகின்றது. “என் இறைவனே இந்த நாட்டை பாதுகாப்பானதாக ஆக்கி அதன் குடிகளுக்கு பலவகை கனி வர்க்கங்களிலிருந்து உணவளிப்பாயாக”. (சூறா பகரா : 126), குறித்த அவரது இந்தப் பிரராத்தனை சமூக வாழ்வின் அடிப்படையான பாதுகாப்பு, தன்னிறைவு என்பன குறித்த அவரது பார்வையை எமக்கத் தெளிவுபடுத்துகின்றது.

இன்றைய உலகம் சுயநலம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அரசியல், பொருளாதார மற்றும் சமூக அநீதிகள், பிளவுகள் இந்த சுயநலத்தின் விளைவால் ஏற்படுகின்றவை. இப்ராஹிம் நபியினதும் அவர்களது குடும்பத்தினரதும் சுயநலமற்ற தியாக வாழ்வு உலகத்தின் போக்கை மாற்றியது. நலவுகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் சுயநலமற்ற தியாகங்களும் ஒழுக்க விழுமியங்களும் அவசியமானவை என்பதை இப்பெருநாள் தினத்தில் புரிந்து அருள்நிறைந்த இத்தினத்தின் சந்தோசத்தை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்போம்.

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

அஷ்ஷேய்க்.M.H.M.உஸைர் இஸ்லாஹி
தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
---------------

හජ් උත්සව සුභ පැතුම්

ලොව පුරා වෙසෙන කෝටි දෙසීයක් පමණ ජනයා සමරන හජ් අවුරුදු උත්සවය නිමිති කොට ගෙන ශ්‍රි ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානයේ ක්‍රියාදරයින් ,සාමාජිකයන් හා විධායක කමිටුවෙ සභිකයන් වෙනුවෙන් හජ් උත්සව සුභපැතුම් රටේ ජීවත්වන සියළු රටවැසියන් සදහා සතුටින් පිළිගන්වන බව බව දන්වා සිටිමි.

ලෝක මුස්ලිම්වරුන් විසින් සමරනු ලබන දෙ අවුරුදු උත්සව උපවාසය හා හජ් වන්දනාව පාදක කර ගනිමින් සැමරීම එහි විශේෂත්වයයි. තවද මෙම උත්සව මිනිසා මවන ලද දෙවිදුන් කෙරෙහි තම බැදීම ශක්තිමත් කිරීමට ඉවහල් වන අතර මිනිස් වර්ගයා සමග ඇති බැඳීම නැවුම් කර ශක්තිමත් කරෙනු ඇත.

හජ් අවුරුදු දිනයේදී මීට වසර පන්දාහකට ඉහත මෙලොව ජීවත් වූ ඉබ්‍රාහීම් නබිතුමන් විසින් දෙවිදුන් වෙනුවෙන් සිදුකළ කැපකිරීම් හා මාර්ගෝපදේශන සිහිගන්වනු ලැබේ. ඉරාකය, සිරියාව, පලස්තීනය, ඊජිප්තුව හා මක්කම පුරවරය යන ස්ථානයන්හි සිදු කළාවූ ඔහුගේ මෙහෙවර මිනිසාට තම මැවුම්කරුවා වන අල්ලාහ්ව නැමදීමට අවශ්‍ය කරන මූලික අඩිතාලම අවබෝධ කරගැනීමට ඉඩ සැලසේ.

සාමාජීය ජීවිතය හා ඊට ඇවසි නීති සමුදායන් සඳහා වූ පදනම දේශනා කිරීම ඊබ්‍රාහීම් නබිතුමන්ගේ උදාර කාර්යයක් ලෙස සැලකේ.
,"මාගේ දෙවියනි . මෙම දේශය ආරක්ෂා කරමින් එහි රටවැසියන් හට නානා පලතුරුවලින් ආහාර සපයනු මැනවි"(පරිච්ඡේදය 02:126) යන ඔහුගේ මෙම දේව කන්නලව්ව සමාජ ජීවිතයේ මූලික පදනම වන රැකවරණය හා ස්වයංපෝෂීභාවය ආයාචනය කිරීමෙන් ඔහුගේ දැක්ම අපට සක්සුදක් සේ පැහැදිලි කරයි.

වත්මන් ලෝකය ආත්මාර්ථකාමිත්වය යන වියාධියේ බලපෑමට ලක්වී ඇත. දේශපාලන, ආර්ථික හා සාමාජ නීතිය, වාර්ගීකරණය හුදෙක් පුද්ගලික වාසියේ ප්‍රතිඵලයන් ලෙස ඇතිවේ. ඉබ්‍රාහීම් නබි හා ඔහුගේ පවුලේ සාමාජිකයන්ගේ ආත්මාර්ථකාමීත්වයෙන් තොර කැපකිරීම් ලෝකයේ ප්‍රවණතාවය වෙනස් කරන ලදී. මිනිස් යහපත තහවුරු කිරීම උදෙසා ආත්මාර්ථකාමීත්වයෙන් තොර කැපකිරීම් සහ සදාචාරාත්මක වටිනාකම් අවශ්‍ය බව මෙම අවුරුදු දිනයේ වටහාගෙන කටයුතු කර දායාදයන්ගෙන් පිරුණු මෙම දිනයේ සතුට මුළුමනින්ම ළඟා කර ගැනීමට උත්සාහ දරමු.

හජ් අවුරුදු සුබ පැතුම්.

අශ්ෂෙයික් . M.H.M.උසෛර් ඉස්ලාහි
සභාපති, ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමික සංවිධානය.

⭕வீட்டுக்கொரு பராமரிப்பாளர் வதிவிடப் பயிற்சி நெறி செயத்திட்டம் - 2025இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 70 ஆம் ஆண்டு பூர்த்தியை...
24/05/2025

⭕வீட்டுக்கொரு பராமரிப்பாளர் வதிவிடப் பயிற்சி நெறி செயத்திட்டம் - 2025

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 70 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட நான்கு செயத்திட்டங்களில் ஒன்றான முதியோர் நலன்பேணல் திட்டத்தின் ஒரு அங்கமாக 'வீட்டுக்கு ஒரு பராமரிப்பாளர்' பயிற்சி நெறி ஏராவூரில் அமைந்துள்ள Eastern Cancer Care Hospice நிலையத்தில் மே மாதம் 17, 18 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

மேற்படி பயிற்சி நெறிக்கு புத்தளம் பிராந்தியத்தின் புத்தளம், கனமூலை, கொத்தான்தீவு, புழுதிவயல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 பேர் பங்கேற்றனர்.

இப்பயிற்சி நெறியின் ஊடாக முதலுதவி, தொற்றா நோய் பராமரிப்பு, முதியோர் மற்றும் நோயாளிகளை வீட்டிலிருந்து பராமரிப்பதற்கான முழுமையான வழிகாட்டல்கள் துறைசார்ந்தோரினால் விரிவுரை மற்றும் நடைமுறை ரீதியான பயிற்சிகள் மூலம் வழங்கப்பட்டமை இங்கு முக்கிய அம்சமாகும்..

இதன் ஏற்பாடுகளை ரம்யலங்கா நிறுவனம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது.

18/05/2025

Address

Darul Iman, #77, Dematagoda Road, Colombo 09
Maradana
00900

Opening Hours

Monday 08:30 - 20:30
Tuesday 08:30 - 20:30
Wednesday 08:30 - 20:30
Thursday 08:30 - 20:30
Friday 08:30 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94 112 687 091

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka Jama'athe Islami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Lanka Jama'athe Islami:

Share