22/10/2025
உங்கள் கொள்கை படியே எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கும் முதலாம் திகதியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்...
நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதே போல எல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். உங்களைப் பற்றி வெளிப்படையாக யாரும் விமர்சிக்க பயப்படுவார்கள் அதுவே உங்களுடைய ப்ளஸ் பாயிண்டாக அமைகின்றது காரணம் நீங்கள் கம்பீரமானவராக இருப்பீர்கள்.
உங்களுக்கு பிடித்தவர்களை அன்புடனும் அரவணைப்புடனும் உங்கள் கூடவே வைத்து இருப்பீர்கள் அவர்கள் உங்கள் கூடவே இருப்பதால் உங்களைப் பற்றி எல்லாம் தெரியும் என்று நினைத்து இருப்பார்கள், ஆனால் உங்களைப் பற்றிய ரகசியம் எப்போதும் ரகசியமாகவே இருக்கும். ஒருபோதும் அவர்களுக்கு தெரியப்படுத்த மாட்டீர்கள்.
கலை, கவிதை, காவியத்தில் ஈடுபாடு இருக்கும் அழகுக்கு மனதையே பறி கொடுப்பீர்கள் அழகை எப்போதும் ஆராதிப்பீர்கள். பாசத்தை வெளியில் காட்டாத பாசப் பிரியர்கள் மனதுக்குள் அவ்வளவு அன்புடன் இருப்பீர்கள்.
அரசியல் யோகம் உண்டு பேரும் புகழும் பெறலாம் தலைமை பொறுப்பு தேடி வரும். அடுத்தவர்களை வழிநடத்தும் சிறந்த தலைமைத்துவம் உங்களிடம் இருக்கும்.
உங்களது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் தைரியமும் தன்னம்பிக்கையும் தான் இதனால் உங்களுக்கு எதிலும் வெற்றி என்பது நிச்சயமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதியாக 01.10 .19 இதைக் ஒரு லக்கி நம்பராகவும் நீங்கள் பயன்படுத்தலாம்.
28ஆம் தேதியை தவிர்க்க வேண்டும்.
காரணம் அதில் 2,8 வருவதால் 2- சந்திரன் 8-சனி ஆக சந்திரன் சனி இரண்டும் உங்களுக்கு ஆகாது என்பதால் இதை தவிப்பது நல்லது. நீங்கள் தங்க நிற ஆடை அணிவது மிகவும் நல்லது அதாவது golden colour அல்லது சந்தன நிறம்.
எப்போதுமே கருப்பு நிறத்தை அணியக்கூடாது dark colours உங்களுக்கு துரதிஷ்டத்தை தரும்.
நீங்கள் மாணிக்க கல்லை அணியலாம் தங்கம் அணியலாம் வெள்ளியை ஒருபோதும் அணிய வேண்டாம்.
தினமும் சூரிய வழிபாடு செய்வது மிகவும் அவசியம். சூரிய காயத்ரியை நீங்கள் 18 முறை காலை மாலை கூறி வருவது வாழ்க்கையில் பெரும் வெற்றியை உங்களுக்கு உண்டு பண்ணும். தன்னம்பிக்கையும் கம்பீரமும் நினைத்ததை நடத்த கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு வாழ்க்கையானது எப்போதுமே வெற்றியை தருவதாகவே அமையும்.
வாழ்க வளமுடன்
-Thejus Viji-🪶🪶🪶🪶🪶🪶🪶🪶
#பிறந்ததிகதிபலன் #முதலாம்திகதியில்பிறந்தவர் #குணாதிசயங்கள் #எண்பலன்