Tamil Medicin and News 24x7

Tamil Medicin and News 24x7 Tamil

20/05/2026

காதலனின் மாஸ்டர் பிளான்!! பிரான்ஸ் வாழ் முல்லைத்தீவு அங்கிளை காதலித்து பிரான்ஸ் சென்று தலைமறைவான வவுனியா சர்மிளா கைது!! முழு விபரம் கருத்துப் பகுதியில்

19/05/2026
17/05/2026
17/05/2026

யாழ்ப்பாணத்திற்கு சுவிஸில் இருந்து வந்த நபர் கொடூரமாக படுகொலை! பணம் மற்றும் நகைகள் மாயம்

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் ஒருவர் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வல்லிபுரம் சந்திரசேகரம் என்ற 67 வயதுடைய முதியவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், குறித்த நபரிடம் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றையும் கொலைக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தார் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நேற்றைய தினம்(16) மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற நிலையில், தூர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்ற போது, உடலில் வெட்டு காயங்களுடன் முதியவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில், அடிப்படையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், கமரா சேதப்படுத்தப்படுவதற்கு முன்னரான பதிவுகளின் அடிப்படையில், கடந்த 14ஆம் திகதி இரவு முகமூடி அணிந்த இருவர் சமையலறை வழியாக அந்த வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர்.

இதனையடுத்து பாதுகாப்பு கமராவை சேதப்படுத்தியப் பின்னர், வீட்டினுள் இருந்த முதியவரை படுகொலை செய்து விட்டு, அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை குறித்த சந்தேகநபர்கள் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை முதியவரின் உடற்கூற்று பரிசோதனையின் போது, உடலில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

14/05/2026

கிளிநொச்சியில் 24 வயது கணவனும் 20 வயது மனைவியும் கைது!! வீடு வீடாக கொள்ளையடித்தது எப்படி? புகைப்படங்கள் முழு விபரம் கருத்துப் பகுதியில்

14/05/2026

கனடா வாழ் தமிழர்களுக்கு எச்சரிக்கை! பெண் பிள்ளைகளை மயக்கும் ஆபத்தான நபர்! புகைப்படங்கள் முழு விபரம் கருத்துப் பகுதியில்

Address

Nelliady

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Medicin and News 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share