Dr. Safan Sareef

Dr. Safan Sareef Dr. Safan Sareef is an Eminent Unani Physician in Sri Lanka, Director of BluLeaf Unani Medicare,Kinniya!

தினமும் நடப்பதனால் எமது ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் பலன்கள்....!1. உடல் நிறையை குறைக்க உதவுகிறது 2. இருதயத்தை ஆரோக்கியமா...
21/07/2022

தினமும் நடப்பதனால் எமது ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் பலன்கள்....!

1. உடல் நிறையை குறைக்க உதவுகிறது
2. இருதயத்தை ஆரோக்கியமாக்குகிறது
3. நாட்பட்ட நோய்களில் விடுதலை
4. புற்றுநோயை தடுக்கிறது
5. வயோதிபத்தை தூரமாக்குகிறது
6. குருதி அமுக்கத்தை குறைக்கின்றது
7. நீரிழிவுக்கான வாய்ப்பினை குறைக்கிறது
8. நிர்ப்பீடனம் அதிகரிக்கின்றது
9. உள்ளத்துக்கு புத்துணர்வளிக்கிறது
10. சமிபாட்டினை சீராக்குகிறது
11. நுரையீரல் கொள்ளளவை கூட்டும்
12. சீரான தூக்கம்
13. தசைகளை வலிமையாக்கும்

சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவது பாரியளவுக்கு நடைமுறை உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றாமல் சரியான விந்தணு அளவைப் பராமரிக்க மி...
02/07/2022

சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவது பாரியளவுக்கு நடைமுறை உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றாமல் சரியான விந்தணு அளவைப் பராமரிக்க மிகவும் எளிதான வழியாகும்..!

வறுக்கப்பட்ட, உப்பு சேர்க்காத சூரியகாந்தி விதைகளில் விட்டமின் E நிறைந்துள்ளது. இது விந்தணு எண்ணிக்கை(Sperm Count)மற்றும் இயக்கத்தை(Sperm Motility) அதிகரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும்.

சூரியகாந்தி விதைகள் கணிசமான அளவு துத்தநாகம்(Zn), போலிக் அமிலம் மற்றும் செலினியம்(Se) ஆகியவற்றை வழங்குகின்றன. இவை அனைத்தும் சக்திவாய்ந்த கருவுறுதல் ஊட்டச்சத்துகள் ஆகும்..!

திருமணமாகி பலவருடங்களாக  குழந்தைபேறிண்மை காரணமாக,  மூதூர் நகரிலிருந்து எனது  மருத்துவ நிலயத்திற்கு வருகை தந்த தம்பதியினர...
27/04/2022

திருமணமாகி பலவருடங்களாக குழந்தைபேறிண்மை காரணமாக, மூதூர் நகரிலிருந்து எனது மருத்துவ நிலயத்திற்கு வருகை தந்த தம்பதியினர் தேவையான அனைத்து பரிசோதனைகளையும் செய்து #யுனானி_மருத்துவ_சிகிச்சையை முறையாக தொடர்ந்து பெற்றனர்!

அல்ஹம்துலில்லாஹ்!
இன்று எனக்கு அழைப்பினை மேற்கொண்டு மனதார நன்றியை தெரிவித்தார்கள்! அந்த பெண்மணி ! வாழ்த்துக்கள்!


🇱🇰

ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்..!✅️ ஒரு வேலையில் தொடர்ந்து தொல்லை ஏற்பட்டால், அதனை பெரிய தலைவலியாக போய் விட்டது என...
05/02/2022

ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்..!

✅️ ஒரு வேலையில் தொடர்ந்து தொல்லை ஏற்பட்டால், அதனை பெரிய தலைவலியாக போய் விட்டது என்பார்கள். அந்த அளவிற்கு தலைவலி தொல்லை கொடுப்பதால் தான் அதனை உதாரணமாக கூறும் பழக்கம் வந்தது.

✅️ தலைவலி என்பது பொதுவான ஒரு நோய். அதனை பெரிதுபடுத்துபவர்களும், அலட்சியப்படுத்திவிட்டு அடுத்த வேலையை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

✅️ தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி வருவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு என்பது ஆச்சரியமான தகவல். ஒவ்வொருவரின் நடைமுறை வாழ்க்கை, பழக்க வழக்கங்களை பொறுத்து ஒற்றை தலைவலி தாக்குகிறது என மருத்துவம் கூறுகிறது. இதனை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், பரம்பரையாகவும் இந்நோய் மனிதனை தாக்குகிறது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

🔸 ஒற்றை தலைவலி நரம்பியல் தொடர்பான ஒரு நோய். மூளையில் ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே ஒற்றை தலைவலி ஆகும். ஒரு சிலருக்கு தலைவலி ஏற்பட்டால் 72 மணி நேரம் கூட நீடிக்கும். இந்நோய் தாக்குவதற்கு, மூளையில் Seratonin மற்றும் 5 hydroxytryptamine என்ற ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஹார்மோனில் சுரக்கும் Chemical திரவத்தின் அளவு குறையும்போது சமிக்கை கடத்தி நரம்புகள் பாதிக்கப்பட்டு தலைவலி ஏற்படுகிறது.

🔸 இதுதவிர தலையில் புண், சீழ்பிடித்தல், கழுத்து, தலையில் ஏற்படும் தலை பிடிப்பு, மூளை ரத்தக்குழாய் பாதிப்புகளாலும் தலைவலி ஏற்படும். இதுதவிர மெல்லுதல், அதிகமாக பேசுதல், பல் துலக்குதல், குளிர்ந்த நீரில் முகம் கழுவுதல் போன்ற எது வேண்டுமானாலும் தலைவலியை தூண்டலாம்.

👁️‍🗨️ கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவந்து போதல் போன்ற பார்வை குறைபாடு, கண்ணில் காயம் ஏற்படுவதாலும் வரலாம். காதின் மையப்பகுதி நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால் கழுத்து வலி மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு. கண்களுக்கு கீழே உள்ள எலும்புகளில் நீர் கோர்த்தாலும் தலைவலி ஏற்படும்.

🔸பல்லில் அடிபட்டாலும், நோய் தொற்றுகளாலும் தலைவலி வர வாய்ப்புண்டு. தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவதாலும் தலைவலி வரும். அதற்குரிய ஹோமோன் சிகிச்சையை மேற்கொண்டால் தலைவலி போய்விடும். இதுதவிர அதிக சத்தம் மற்றும் வெயிலில் சுற்றுவதாலும் வரும்.

🔸 கடுமையாக உழைத்தால் அதற்குரிய வகையில் உணவு உட்கொள்ளுதல், ஓய்வு எடுக்க வேண்டும். போதிய அளவு உணவு உட்கொள்ளாமை, தேவையான அளவு ஓய்வு எடுக்காமல் போனாலும் தலைவலி ஏற்படும். உடல்சூடு, வயிறு சம்பந்தப்பட்ட நோய்களாலும், மன அழுத்தம் ஆகியவற்றாலும் வரலாம்.

🔸 உயர் ரத்த அழுத்தம், மூளை அழற்சி, மூளைக்கட்டிகளின் அறிகுறியாகவும் ஒற்றை தலைவலி வரும். மூளைக்கு குளூக்கோசும், பிராணவாயுவும் தான் உணவு. அவை செல்லும் பாதை நரம்பில் அடைப்பு ஏற்பட்டாலும் தலைவலி வரும். அதுமட்டுமின்றி தலைக்கு செல்லும் நரம்புகள் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபட்டாலும் ஒற்றை தலைவலி வரும்.

🔸 மது அருந்துதல், புகையிலை உள்பட போதை பழக்கத்தினாலும் தீராத ஒற்றை தலைவலி ஏற்படும். காற்று குறைவான அறைகளில் உறங்கினாலும், படுக்கும் முறைகளை அடிக்கடி மாற்றுவதாலும், சில வகை கீரைகள், பாலாடைக்கட்டி, சொக்லெட், ஐஸ்கிரீம், தயிர், வினிகர், கேக் வகைகள் போன்றவற்றை அதிகளவு உண்பதாலும் ஒற்றை தலைவலி வரலாம்.

🔸 இதுதவிர தலைக்கு சாயம் பூசுதல், வித, விதமாக அணியும் கண் கண்ணாடிகள், வாசனை திரவியங்களை பூசிக்கொள்ளுதல், சில வகை மாத்திரைகளை உண்பது போன்றவை உட்பட, ஒற்றை தலைவலி வருவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கிறது. இதுதவிர இன்னும் அறியப்படாத காரணங்களும் உண்டு.

🔸 பெண்களை பொறுத்தவரை, மாத விலக்கு சமயங்களில் ஒற்றை தலைவலி வரக்கூடும். சில பெண்களுக்கு தலையில் வாசனை அதிகமிக்க பூக்களை வைத்தாலே தலைவலி வந்துவிடும். வாசனை திரவியங்களும் சிலருக்கு ஆகாது. ஆண்களை விட பெண்களைத்தான் ஒற்றை தலைவலி அதிகம் தாக்குகிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. இரத்தசோகை ஏற்பட்டாலும் தலைவலி தாக்கும்.

🔸 பொதுவாக 40 வயதுக்கு மேல் இருபாலருக்கும் ஒற்றை தலைவலி தாக்கும் வாய்ப்பு அதிகம். இன்றளவில் வயது வித்தியாசமின்றி அனைவரையும் இந்நோய் தாக்குகிறது. குழந்தைகளை ஒற்றை தலைவலி தாக்குமானால், சத்து குறைபாடு, பார்வை குறைபாடு மற்றும் அது பரம்பரை சார்ந்த குறைபாடுகளாலும் ஏற்படும்.

🔸 இரவு தூக்கத்தை தவிர்க்கக் கூடாது. அவ்வாறு தூங்கப்போகும் நேரத்தையும், விழித்து எழும் நேரத்தையும் கண்டிப்பாக திட்டமிட வேண்டும். முறையான சமச்சீர் உணவுகளை உட்கொள்ள வேண்டும். நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது. தலைவலியை தூண்டும் காரணிகளை அவரவர் கண்டறிந்து அதனை தவிர்க்க வேண்டும்.

⚠️⚠️வெறும் வலி நிவாரண மாத்திரைகளை உற்கொள்வது இதற்கு நிரந்தர தீர்வாகாது.!

🌿 தொடர்ச்சியாக ஒற்றை தலைவலி தாக்குமானால் யுனானி மருத்துவ சிகிச்சைகளை முறையாக பெற்று இதனை நிரந்தரமாக குணமாக்கலாம்..!
-நன்றி

டாக்டர். சபான் சரீப்
யுனானி மருத்துவர்,
BUMS(Colombo), DPTM
SLAMC Reg: 15091
BluLeaf Unani Medicare, Kinniya.

❎️ நம்மில் அனேகமானவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம்  புகைப்பிடித்தலானது இதயத்தையும் நுரையீரலையும் மட்டுமே பாதிக்கும் என்...
20/09/2021

❎️ நம்மில் அனேகமானவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம் புகைப்பிடித்தலானது இதயத்தையும் நுரையீரலையும் மட்டுமே பாதிக்கும் என்று. ஆனால் அது ஆண்களிலும் பெண்களிலும் மலட்டுத்தன்மைக்கு(Infertility) முக்கிய காரணியாகவும் அமைந்துவிடுகிறது..!

🚭 சிகரெட்டில் நிக்கோடின், Carbon Monoxide, சயனைட் மற்றும் 100க்கும் மேற்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப் பதார்த்தங்கள்(Carcinogenic) காணப்படுகின்றன..!

⚠️ சிகரெட்டில் காணப்படுகின்ற இரசாயன பதார்த்தங்கள் பெண்களின் கருமுட்டையின் எண்ணிக்கையை அழிக்கின்றது. முட்டைகள் அழிந்து விட்டால் அவற்றை மீளப் பெற முடியாது!

⚠️ புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு, சிகரெட்டில் காணப்படும் இரசாயன பதார்த்தங்கள் உயிரணுக்களில் உள்ள DNAஇல் பாதிப்பை ஏற்படுத்தி அவற்றின் கட்டமைப்பை சீர்குலைக்கிறது..!

மேலும் அவற்றில் காணப்படும் Protamine எனப்படும் புரதங்களுக்கிடையில் சமநிலையற்ற தன்மையை உருவாக்கி DNA இணை சிதைவுற செய்கின்றது. இதனால் விந்துவின் சீரான கட்டமைப்பு (Morphology) இழக்கப்படுகின்றது..!

⚠️ மேலும் சுக்கில பாய்மத்திலுள்ள கேடு விளைவிக்கும் பதார்த்தங்களான Free Radicals க்கு எதிராக போராடும் தன்மையையும் குறைக்கின்றது, அத்தோடு பாய்மத்தில் Free Radicals இன் அளவினையும் அதிகரிக்கின்றது. இதன் விளைவாக விந்துக்களின் அசையும் திறன்(Motility) பாதிக்கப்படுகின்றது. அவற்றால் போதிய அளவு வேகமாக நீந்திச் செல்ல முடியாமல் இருக்கும். இது ஒரு ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாகும்.

⚠️ அதுமட்டுமல்ல, சிகரெட்டில் உள்ள Ni****ne மற்றும் பிற நச்சுப் பதார்த்தங்கள் விந்துக்களின் எண்ணிக்கையையும்(Sperm Count) பாரியளவில் குறைக்கின்றது..!😰

⚠️ ஆண்களின் விறைப்புத்தன்மையில்(Erection) சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. இதனால் போதிய அளவு உயிரணுக்கள் கருமுட்டையை சென்றடைய முடியாது!

⚠️ மேலும் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான Risk ஆனது நாளொன்றுக்கு உட்கொள்ளும் சிகரெட்டுகளின் எண்ணிக்கைக்கேற்ப வேறுபடுகிறது...!🚬🚬🚬

⚠️ மேலும் ஈயம்(Lead), கெட்மியம் (Cadmium) போன்ற பார உலோகங்களின் பாய்மத்தில் செறிவையும் அதிகரிக்கின்றது. அதேபோன்று விந்துக்களின் ஆரோக்கியத்துக்கு மிக அவசியமான தாதுப் பொருளான நாகத்தின்(Zink) செறிவை வலுவாக குறைகின்றது!

⚠️ அதைப்போன்று புகைப் பிடிக்காதவர்களை விடவும் புகைப்பிடிப்பவர்களின் மலட்டுத்தன்மை வீதம் இருமடங்காகும்.🔝🔝

⚠️ அதுமட்டுமில்லாமல் கருச்சிதைவு(Miscarriage) மற்றும் பிறப்புக் குறைபாடு(Birthdefects) ஏற்படக்கூடிய வீதமானது புகைப்பிடிப்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் உயர்வாகும்.!🤰🧝‍♂️🧝‍♂️

⚠️ மேலும் கருத்தரிக்கும் வேளையில் ஒரு நாளைக்கு இருபதுக்கு மேல் சிகரெட் உட்கொள்ளும் தந்தைகளுக்கு அவர்களின் குழந்தைகள் Luekemia எனும் கொடிய குருதிப் புற்றுநோய் வரக் கூடிய சாத்தியம் மிக அதிகமாகும்!

✅️ எனவே புகைப்பிடிப்பதை நிறுத்துவோம்..! வளமான ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குவோம்..!

By: Dr. M.S.SAFAN
BUMS(Colombo), DPTM
BluLeaf Unani Medicare, Kinniya

அல்ஹம்துலில்லாஹ்..!மூதூர், ஆலங்கேணி கிராமத்திலிருந்து  என் மருத்துவ நிலையத்திற்கு வருகை தந்த தம்பதியினர் திருமணமாகி 3 வர...
08/09/2021

அல்ஹம்துலில்லாஹ்..!

மூதூர், ஆலங்கேணி கிராமத்திலிருந்து என் மருத்துவ நிலையத்திற்கு வருகை தந்த தம்பதியினர் திருமணமாகி 3 வருட காலமாக குழந்தைபேறிண்மை காரணமாக பல்வேறு ட்ரீட்மென்ட்கள் செய்தும் எவ்வித பலனுமின்றி முறையிட்டனர். தேவையான அனைத்து பரிசோதனைகளையும் செய்த பின் #யுனானி_மருத்துவ_சிகிச்சையை முறையாக தொடர்ந்து பெற்றனர்!

இன்று எனக்கு அழைப்பினை மேற்கொண்டு மனதார நன்றியை தெரிவித்தார்கள்! அந்த பெண்மணி ! வாழ்த்துக்கள் Mr & Mrs Suji!

#சிகிச்சை_வெற்றி
#குழந்தைபேறின்மை
#யுனானி_சிகிச்சை
#ஆதாரங்கள்
#யுனானி_மருத்துவம்



10/07/2021




සුද යැමේ රෝගය සුවකිරීමට යුනානි & ආයුර්වේද  සතුව ප්‍රතිකාර..!❎️ කාන්තාවන්ට මෙතෙක්‌ වැළඳෙන ශ්වේත ප්‍රදරය හෙවත් සුද යැමේ රෝ...
07/07/2021

සුද යැමේ රෝගය සුවකිරීමට යුනානි & ආයුර්වේද සතුව ප්‍රතිකාර..!

❎️ කාන්තාවන්ට මෙතෙක්‌ වැළඳෙන ශ්වේත ප්‍රදරය හෙවත් සුද යැමේ රෝගය ඇතිවීමට ප්‍රධාන හේතු ලෙස දැක්‌විය හැක්‌කේ මොනවාද?

👉 මෙම රෝගය වැළඳීමේ ප්‍රධානතම හේතුවක්‌ ලෙස දැක්‌විය හැක්‌කේ සිරුරේ ඇතිවන අධික උෂ්ණාධික බවයි. විශේෂයෙන්ම උෂ්ණාධික ආහාර ගැනීම තුළින් සිරුරේ උෂ්ණාධික බව ඉහළ යැමෙන් මෙම සුද යැමේ රෝගී තත්ත්වය ඇතිවීමට හේතුවක්‌ විය හැකියි.

විශේෂයෙන්ම කාන්තාවන් විසින් සිදුකරන නොයෙක්‌ වැරදි ක්‍රියාකාරකම් හා වැරදි සෞඛ්‍ය පුරුදු මෙම රෝගය ඇතිවීමට ප්‍රධාන ලෙසම බලපෑම් කරනු ලබනවා. මෙන්න මේ නිසා මෙම රෝගය වැළඳෙන රෝගයකට වඩා වැළඳ ගන්නා රෝගයක්‌ යෑයි කීවොත් නිවැරැදියි.

- තමාගේ සනීපාරක්‍ෂාව නිවැරැදි ලෙස පවත්වා නොගැනීම
- හොඳ සෞඛ්‍ය පුරුදු නොමැතිවීම
- කෘමි ආසාදන (පණු රෝග)
- වැඩිපුර සිටගෙන සිටීම හෝ වැඩිපුර හිඳගෙන සිටීමද
- බර ඉසිලීම
- පොදු වැසිකිළි හෝ අපිරිසිදු වැසිකිළි භාවිතය
- බහු පුරුෂ සේවනය කියාද මෙම සුද යැමේ රෝගය ඇති වීමේ හේතු ලෙස දැක්‌විය හැකියි.

❎️මෙම රෝගය සමගම වෙනත් රෝගයන්ද ඇතිවිය හැකිද?

👉 ඇත්තටම මේ සුද යැමේ රෝගය සමඟ ඒ පසුපසට එන තවත් රෝග රැසක්‌ද තිබෙනවා. ඒ අතරින් ආහාර අරුචිය, මළ බද්ධය, විටින් විට අක්‍රමවත් ලෙස මළ පිටවීම සිදුවිය හැකියි. මීට අමතර ශරීරය ක්‌ෂය වීම, කැසීම් ඇතිවීම, පලු දැමීම හා විවිධ සමේ රෝග ඇතිවීම, පීනස තත්ත්වය වර්ධනය වීම, අර්ශස්‌ රෝගය ඇතිවීම, හිස කැක්‌කුම, ශරීරයේ අප්‍රාණිකත්වය, අධික කේන්ති යැමද ඇතිවිය හැකියි.

❎️මෙම රෝගය වැළඳුණු කාන්තාවන්ට ඇතිවන අපහසුතා ගැන සඳහන් කළොත්.

👉 ️මෙම රෝගය වැළඳුණු කාන්තාවන්ට විවිධාකාර ගැටලු තත්ත්වයන්ට මුහුණදීමට සිදුවෙනවා.

විශේෂයෙන්ම යෝනි මාර්ගය අවට නිතර කැසීමේ තත්ත්වයක්‌ ඇතිවීම, ඉකිලි ආශ්‍රිත ප්‍රදේශය දක්‌වාම එය පැතිරීම, නිතර නිතර මුත්‍රා ආසාදනවලට ගොදුරු වීම බහුලවම දැකිය හැකි අපහසුතාවනුයි.

ඊට අමතරව පිරිස්‌ අතර ගැවසීමේදී පොදු මගී ප්‍රවාහන සේවාවලදී, කාර්යාලයේදී, මෙවැනි රෝගී කාන්තාවන් දැඩි අපහසුතාවලට ලක්‌විය හැකියි.

❎️මෙම රෝගී තත්ත්වය වැළඳුනු කාන්තාවන්ගේ රෝග ලක්‍ෂණ මොනවාද?

👉සෑම කාන්තාවකටම සරු කාලයේදී ඩිම්බ පිටකිරීම සිදුකරන අතර එවැනි අවස්‌ථාවල පිටකරන ස්‍රාවයේ ගන්ධයක්‌ හෝ වර්ණයක්‌ නොමැත. නමුත් මෙම රෝගී තත්ත්වය වැළඳුණු විට ඇතැම් විට කිරි පැහැයටද තරමක උකු ස්‍රාවයක්‌ ලෙසද පිටකිරීම සිදුකරනවා. තවද සුදු පැහැති ලෙස යෝනි මාර්ගය අවට පැතිරී පැවතීමද සිදුවිය හැකියි. මීට අමතරව රතු පැහැයට හා ලා රතු පැහැයටද, කහ මෙන්ම තද කහ පැහැයෙන්ද මෙම ස්‍රාවයන් පිටවිය හැකියි. එවිට එම කාන්තාවන්ට මෙම රෝගී තත්ත්වය වැළඳී ඇති බව තීරණය කළ හැකියි.

❎️ශ්වේත ප්‍රදර රෝගය සුවකිරීම සඳහා යුනානි & ආයුර්වේදය සතුව ප්‍රතිකාර තිබෙනවාද?

👉 ශ්වේත ප්‍රදරය රෝගය සඳහා පමණක්‌ නොව ඕනෑම රෝගයක්‌ සඳහා යුනානි සහ ආයුර්වේදය සතුව ඖෂධ තිබෙනවා. විශේෂයෙන්ම කිව යුතුයි යුනානි, ආයුර්වේද ප්‍රතිකාර තිබෙන්නේ රෝග සුවපත් කිරීම සඳහා නොව එම රෝග නිට්‌ටාවටම සුව කිරීම සඳහායි. ඒ අනුව ශ්වේත ප්‍රදරය රෝගයටද යුනානි, ආයුර්වේදය සතුව ප්‍රතිකාර ක්‍රම තිබෙනවා. ඒ සඳහා රෝගීන් නිසි දැනුමක්‌ සහිත වෛද්‍යවරයා තෝරා ගැනීම කළ යුතු වෙනවා. මෙම රෝගයට ප්‍රතිකාර කිරීමේදී ඒ හා සම්බන්ධ අනිකුත් රෝගාබාධයන්ද වැළඳී ඇත්දැයි නිවැරැදි පරීක්‍ෂාවකින් පසු රෝගීන්ට නිවැරැදි ප්‍රතිකාර ලබාදීමෙන් මෙය සුවකිරීමේ හැකියාව යුනානි, ආයුර්වේදයට තිබෙනවා.

❎️විශේෂයෙන්ම කාර්යබහුල කාන්තාවන්ට යුනානි & ආයුර්වේද ප්‍රතිකාර ලබාගැනීමේදී ඒවා සොයා ගැනීමේ අපහසුව තිබෙනවා නේද?

වර්තමානයේ යුනානි,ආයුර්වේද ඖෂධ වෙනදා මෙන් සොයා යැම අවශ්‍ය නොවේ. මන්ද දැන් සියලුම ඖෂධ සකස්‌ කළ ඒවා ලෙස තිබෙන නිසා ඕනෑම කාර්යබහුල අයෙකුට මෙම ප්‍රතිකාර ලබා ගැනීමේ පහසුව දැන් තිබෙනවා. එම නිසා ඕනෑම රෝගියකුට දැන් කිසිදු අපහසුවකින් තොරව යුනානි, ආයුර්වේද ප්‍රතිකාර කරා යොමු වීමෙන් රෝග සුවකර ගැනීමේ හැකියාව පවතිනවා.

- ස්තුතියි ආයුර්වේද වෛද්‍ය රන්පත රුවන් රත්නායක මහතා

Vericocele (விந்துக்குழாய் சிரைச்சுருள்) என்றால் என்ன?விரை நாணுடன் காணப்படும் Pampnoform Plexus நரம்புகளில் ஏற்படும் வீக...
06/07/2021

Vericocele (விந்துக்குழாய் சிரைச்சுருள்) என்றால் என்ன?

விரை நாணுடன் காணப்படும் Pampnoform Plexus நரம்புகளில் ஏற்படும் வீக்கமே விந்துக் குழாய் சிரைச்சுருள்(Vericocele) என்றழைக்கப்படுகிறது. விந்துக் குழாய் சிரைச்சுருள் எனும் நிலை 100 ஆண்களில், ஒவ்வொரு 10 முதல் 15 ஆண்களுக்கு வளரக்கூடியது, இது கால்களிருக்கும் சுருள் சிரையை(Varicose) ஒத்திருக்கக்கூடியது

❎️இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

விந்துக் குழாய் சிரைச்சுருளில் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:

- அசௌகரியம்.
- மந்தமான வலி
- விதைப்பையிலிருக்கும் நரம்புகள் விரிவடைந்தோ, அல்லது முறுக்கப்பட்ட நிலையில் இருப்பது
- வலியில்லாத விதை முடிச்சு
- இடுப்புதொடை நரம்பில் ஏற்படும் வீக்கம் அல்லது புடைப்பு.
- குழந்தையின்மை.
- குறைவான விந்துகளின் எண்ணிக்கை.

❎️இதன் முக்கிய காரணங்கள் யாவை?

விந்துக் குழாய் சிரைச்சுருள் என்பது முக்கியமாக நரம்புகளின் உள்ளிருக்கும் வால்வுகளில் ஏற்படுத்தும் சேதத்தால் நரம்புகள் வீக்கம் மற்றும் விரிவடைவதோடு விரை நாணில் முறையான இரத்த ஓட்டமின்மையையும் ஏற்படுத்துகின்றது.

சிறுநீரகக் கட்டி போன்ற நிலைகள் கூட நரம்புக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும்.

❎️இது எவ்வாறு கண்டறியப்படுகிறது?

- விதைப்பை மற்றும் விந்தகங்கள் இடம்பெற்றிருக்கும் வயிறு-தொடை இணைவிடத்துடன் விரை நாணில் ஏதேனும் நரம்புகள் முறுக்கப்பட்ட நிலையில் இருக்கிறதா என்பதை சரிப்பார்த்தல், படுத்திருக்கும் நிலையில் இது காணக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம்.

-விதைப்பை, விந்தகம் மற்றும் சிறுநீரகங்களுக்கு Ultra Sound Scan

- வலி

-கருவுறுதலில்(Fertility) ஏற்படும் பிரச்சனை மற்றும் விந்தகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் வேறுபாடு (வலதுபுறத்தை விட இடது புறம் மெதுவாக வளருதல்) போன்ற குறைபாடுகள்!

❎️சிகிச்சை -
ஆங்கில மருத்துவம் - சத்திர சிகிச்சை
யுனானி மருத்துவம் - Leech therapy & Hijama & Herbal Medicines

❎️குறிப்பு - Vericocele குழந்தைபேறின்மைக்கு முக்கிய ஒரு காரணமாகும்..!

Dr. SAFAN SAREEF
BUMS(Colombo), DPTM
Bluleaf Unani Fertility Clinic,
Kinniya

30/06/2021

16/06/2021






மன அழுத்தத்தை குறைப்பதிலும் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் மாதுளை  முக்கியபங்கு வகிக்கிறது. ஆய்வுகளின்படி மாதுளைச்சாறு...
15/06/2021

மன அழுத்தத்தை குறைப்பதிலும் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் மாதுளை முக்கியபங்கு வகிக்கிறது. ஆய்வுகளின்படி மாதுளைச்சாறு டெஸ்டோஸ்டிரோன் அளவையும் அதிகரிக்கிறது.

🔹மாதுளை பழம் இயற்கை வயாகரா போல் செயல்பட்டு விறைப்புத்தன்மை இல்லாமையை குணப்படுத்தும்.

🔹மாதுளை எண்டோடெலியல் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்க செய்கிறது. ஆண் உறுப்பில் ரத்த நாளங்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து விறைப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

🔹ஆய்வு ஒன்றில் 60 ஆண்களுக்கு இரண்டு வாரங்கள் மாதுளை சாறு அளிக்கப்பட்டது. பிறகு தினமும் 3 வேளை அவர்களுக்கு பரிசோதனையும் செய்யப்பட்டது. முடிவில் அவர்களது டெஸ்டோஸ்டிரோன் அளவு 24% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களது ரத்த அழுத்தத்திலும் முன்னேற்றங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

🔹வளரும் ஆண்பிள்ளைகளுக்கு அடிக்கடி மாதுளைப்பழச்சாறு கொடுத்து வருவதன் மூலம் இந்த ஹார்மோன் உற்பத்தியை பெரிதும் கட்டுப்படுத்த முடியும்.

Address

Periya Kinniya

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+94778188899

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Safan Sareef posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Safan Sareef:

Share