24/03/2025
🔴 பிரதமர் உடனான நேர்காணலில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மரீஹா இஸ்ஸதீன் பங்கேற்பு
பாடசாலை மாணவர்களின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கெளரவ. கலாநிதி ஹரிணி அமரசூரிய உடனான நேர்காணல் சனிக்கிழமை, 22. மார்ச்,2025 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்
பெற்றது.
இந் நிகழ்வில் கல்லூரியின் ஆங்கில மொழிக் கற்கை உயர்தரப் விஞ்ஞானப் பிரிவு மாணவி செல்வி. முகம்மது இஸ்ஸத்தீன் மரீஹா ஆலியா
கலந்து கொண்டிருந்தார்.
இதன் முழுமையான
நேர்காணல் காணொளி தொகுப்பு இன்று திங்கட்கிழமை, 24. மார்ச்,2025ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு சுவர்ணவாஹினி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நேர்காணலில் பங்கேற்ற ஆறு பாடசாலைகளுள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஒன்றாகும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
நேர்காணலில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவி மரீஹா ஆலியா வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு இந்நிகழ்வில் பங்கேற்பதற்கான அனைத்து வழிகளிலும் ஊக்கப்படுத்தி ஏற்பாடுகளை செய்து கொடுத்த கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
🔴 Kalmunai Mahmood Ladies’ College Student Mariha Issadeen Participates in Interview with the Prime Minister
An interview with the Honorable Dr. Harini Amarasuriya, Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka and Minister of Education, Higher Education, and Vocational Training, took place on Saturday, March 22, 2025, at the Temple Trees.
In this event, Miss Mohamed Issadeen Mariha Aaliya, an Advanced Level Science stream student from the English Medium section of Kalmunai Mahmood Ladies’ College, participated.
The full interview will be broadcast on Swarnavahini on Monday, March 24, 2025, at 10:00 PM.
We take immense pride in the fact that Kalmunai Mahmood Ladies’ College (National School) was one of the six schools selected to participate in this prestigious interview.
We extend our heartfelt congratulations and best wishes to Mariha Aaliya for her outstanding participation. Additionally, we express our sincere gratitude to the Principal of the College, Mrs. A.P. Nasmiya Sanoos (SLEAS), for her dedication and efforts in facilitating this opportunity for the student.