Sexual Health and STD Unit - Kalmunai

Sexual Health and STD Unit - Kalmunai Regional STD/AIDS Control Program and
Sexual Health and STD Clinic of RDHS - Kalmunai area. Established on 2005 February 24

Vision: "Region free of sexually transmitted disease and people with healthy sexual behaviors"

"A Certificate of Appreciation for Innovations and Best Practices was awarded for contributions to targeted HIV preventi...
19/02/2025

"A Certificate of Appreciation for Innovations and Best Practices was awarded for contributions to targeted HIV prevention programs for Key Populations (KP) and Persons Living with HIV (PLHIV) in the Kalmunai Regional STD & AIDS Control Programme. Special recognition goes to former MOIC Dr. Thilshan for contributions in 2022 and 2023, and former MOIC Dr. I.L. Jalaldeen for contributions in 2024. This recognition was organized by the National STD/AIDS Control Programme (NSACP), Colombo."

பிரியாவிடை  நிகழ்வுபிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவில் சிறப்பான சேவையை வழங்கி தனது மேற...
07/01/2025

பிரியாவிடை நிகழ்வு
பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவில் சிறப்பான சேவையை வழங்கி தனது மேற்படிப்பினை (MD in Community Medicine) தொடர்வதற்காக செல்லும் எமது பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி Dr.I.L.Jalaldeen சேர் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைக்குமுகமாக 04.01.2025 அன்று எமது பிரிவின் உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக, எமது புதிய பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.Kabeer சேர், முன்னாள் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. M.N.M.Thilshan சேர் மற்றும் முன்னாள் தாதிய உத்தியோகத்தர் Mrs. Vasuky அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

உலக எயிட்ஸ் தினத்தை நினைவு கூரும் வகையில் (07.12.2024), ஆலையடிவேம்பு, பிரதேச செயலகத்தில் பெண்கள் அபிவிருத்திச் சங்க உறுப...
17/12/2024

உலக எயிட்ஸ் தினத்தை நினைவு கூரும் வகையில் (07.12.2024), ஆலையடிவேம்பு, பிரதேச செயலகத்தில் பெண்கள் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கான "பாலியல் ஆரோக்கியமும், அதனோடு தொடர்பான உள நலமும்" எனும் தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு, பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்தியர், வைத்தியக் கலாநிதி டாக்டர்.ஐ.எல்.ஜலால்டீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

உலக எயிட்ஸ் தினத்தை நினைவு கூரும் வகையில்  (06.12.2024),  கல்முனை கடற்படை முகாமின் ஏற்பாட்டில், கடற்படை வீரர்களுக்கான எச...
17/12/2024

உலக எயிட்ஸ் தினத்தை நினைவு கூரும் வகையில் (06.12.2024), கல்முனை கடற்படை முகாமின் ஏற்பாட்டில், கடற்படை வீரர்களுக்கான எச்.ஐ.வி/எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்தியர், வைத்தியக் கலாநிதி டாக்டர்.ஐ.எல்.ஜலால்டீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

உலக எயிட்ஸ் தினத்தை நினைவு கூரும் வகையில் இன்று (04.12.2024), பொத்துவில்   ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்களுக்...
12/12/2024

உலக எயிட்ஸ் தினத்தை நினைவு கூரும் வகையில் இன்று (04.12.2024), பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தாதிய
உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்தியர், வைத்தியக் கலாநிதி டாக்டர்.ஐ.எல்.ஜலால்டீன் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுகாதார  ஊழியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி(Refresher Training for Minor Staff to Reduce Stigma and Discrimination)எமது ...
12/12/2024

சுகாதார ஊழியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி
(Refresher Training for Minor Staff to Reduce Stigma and Discrimination)

எமது பிராந்தியத்திலுள்ள சுகாதார ஊழியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியொன்று 03/12/2024 அன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்தியர், வைத்தியக் கலாநிதி டாக்டர்.ஐ.எல்.ஜலால்டீன் அவர்களின் தலைமையிலும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்றது.

மாவட்ட மட்ட ஆலோசனை கூட்டம் (District Level Advocacy Meeting for young KP and Vulnerable youth Intervention)இந்நிகழ்வில் ...
12/12/2024

மாவட்ட மட்ட ஆலோசனை கூட்டம்
(District Level Advocacy Meeting for young KP and Vulnerable youth Intervention)

இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர்கள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், பிராந்திய பிரிவு தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், மதத் தலைவர்கள், மாவட்ட எய்ட்ஸ் குழு உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்தியர், வைத்தியக் கலாநிதி டாக்டர் ஐ.எல்.ஜலால்டீன் அவர்களின் தலைமையிலும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் (02/12/2024) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

சர்வதேச எயிட்ஸ் தினம்  ................................................" உரிமைப் பாதையில் செல் " எனும் தொனிப்பொருள் கொண்...
12/12/2024

சர்வதேச எயிட்ஸ் தினம்
................................................
" உரிமைப் பாதையில் செல் " எனும் தொனிப்பொருள் கொண்ட சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபவனி நிகழ்வொன்று 02/12/2024அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வானது,கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்தியர், வைத்தியக் கலாநிதி டாக்டர் ஐ.எல்.ஜலால்டீன் அவர்களின் தலைமையிலும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டுதலிலும் இடம்பெற்றது.

பாலியல் சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''...
07/11/2024

பாலியல் சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கல்முனை, அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய தரம் 10 மாணவர்களுக்கு "இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கான பாலியல் ஆரோக்கியம் மற்றும் சவால்கள்" எனும் தலைப்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் 2024.11.05 அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வானது கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்தியர், வைத்தியக் கலாநிதி Dr.I.L.Jalaldeen அவர்களின் தலைமையிலும், பிரதி அதிபர் Mr.M.R.M.Noushad மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு==========================================="இளம் பருவத்தின...
07/11/2024

பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு
===========================================
"இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கான பாலியல் ஆரோக்கியம் மற்றும் சவால்கள்" எனும் தலைப்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு சாய்ந்தமருது, அல்-ஜலால் வித்யாலய க.பொ.த (சா/த), க.பொ.த (உ /த) மாணவர்களுக்கு கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்தியர், வைத்தியக் கலாநிதி Dr.I.L.Jalaldeen அவர்களின் தலைமையிலும், பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் 2024.10.29 அன்று இடம்பெற்றது.

தேசிய STD/AIDS தடுப்புத் திட்டத்தினால்  நாடளாவிய ரீதியில் உள்ள STD கிளினிக்குகளில்இணைக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு  ''...
26/10/2024

தேசிய STD/AIDS தடுப்புத் திட்டத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள STD கிளினிக்குகளில்இணைக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு ''சமூகம் தலைமையிலான கண்காணிப்பு'' (CLM) நிகழ்வு ஹோட்டல் ரமடா கொழும்பில் 24.10.2024 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை, பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்தியர், வைத்தியக் கலாநிதி Dr.I.L.Jalaldeen அவர்களும் எமது PHI அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்களுக்கு "இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கான பாலியல் ஆரோக்கியம் மற...
21/10/2024

அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்களுக்கு "இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கான பாலியல் ஆரோக்கியம் மற்றும் சவால்கள்" எனும் தலைப்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கல்முனை, பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்தியர், வைத்தியக் கலாநிதி Dr.I.L.Jalaldeen அவர்களின் தலைமையிலும் எமது PHI அவர்களின் பூரண பங்களிப்புடனும் (2024.10.21) இன்று இடம்பெற்றது.

Address

Sexual Health And STD Unit, RDHS Region Kalmunai, Divisional Hospital Sainthamaruthu Premises
Saintamaruthu
32280

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Friday 08:00 - 16:00
Saturday 08:00 - 12:00

Telephone

+94672223660

Alerts

Be the first to know and let us send you an email when Sexual Health and STD Unit - Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sexual Health and STD Unit - Kalmunai:

Share