
29/08/2025
செக்ஸ் என்பது அனைவருக்கும் உரித்தான விடயம். இது குறைபாடு உள்ளவர்களுக்கும் உரித்துடையது. சில சமயங்களில் ஒருவருக்கு ஏதேனும் குறைபாடு இருப்பதால் செக்ஸ் தொடர்பான அடையாளம் அவருக்கு இல்லை என்று சிலர் நினைக்கும் நேரங்களும் உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து. அதாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் பாலுணர்வை வெளிப்படுத்தவும், உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், பாலியல் சுகாதரம் தொடர்பான அறிவைப் பெறவும் உரிமை உண்டு.
பல சந்தர்ப்பங்களில், குறைபாடுகள் உள்ளவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதையும், கல்வியில் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளைக் கொண்டிருப்பதையும், பாலியல் சுகாதார வளங்களுக்கான குறைந்த அணுகலையும் நாம் காண்கிறோம். ஆனால் அது நிகழக்கூடாது. குறைபாடு உள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமான பாலியல் நோக்குநிலை நிலைக்கேற்ப செயற்படவும், அது தொடர்பான பாதுகாப்பையும் பெறலாம். அதைப் பற்றி தவறான கோணத்தில் பார்க்கப்பட்டால் அதை நிறுத்த வேண்டும். அதற்கான மரியாதையான சூழலை உருவாக்குவது எமது பொறுப்பாகும்.