Siddha Maha Sangam

Siddha Maha Sangam சித்தமருத்துவ தகவல்கள்

16/12/2023

சுக்கு

உலர்ந்த இஞ்சியே சுக்கு...
சுக்கின் மேல் தோல் விடமாகும், எனவே மேல் தோலை நீக்கியே சுக்கை பயன் படுத்த வேண்டும்.

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, அரைத்து வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி குணமாகும்.

சுக்கு, பனங்கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.

சிறிதளவு சுக்கு தூளை எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் குறையும்.

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவைகளை கசாயமிட்டு பருகிவர, கடுஞ்சளி குணமாகும்.

சுக்குடன் நீர் சேர்த்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலைவலி போகும். ஒற்றைத் தலைவலிக்கும் சிறந்த மருந்தாகும்.

சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குத்திருமல் குணமாகும்.

சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று பின் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விடம் முறியும்.

சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட மலக்குடலின் கெடுதி கிருமிகள் அழியும்.

கரும்புச் சாறுடன், சுக்குத் தூள் கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வர வயிறு எரிச்சல் குணமாகும்.

"குடல்தனில் சீதமலாது சுரமும் வாராது" என்ற கூற்றின்படி குடல் மற்றும் இரைப்பையின் இயக்கத்தை சீராக்கி நோய் எதிர்ப்பு சக்தி நல்கும்.

02/12/2023

வயிற்றில் உள்ள புழுக்கள், பூச்சிகள் நீங்க.....

1. பாகற்காய் கொடி இலையை சாறு பிழிந்து உட்கொள்ள வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் அழியும்.

2. வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை,மாலை 2 வேளை சாப்பிட வயிற்று பூச்சி தொந்தரவு தீரும்.

3. அன்னாசிபழத்தை தினமும் சாப்பிடலாம்.

4. எருக்கம் இலைச் சாறு 3 துளியை எடுத்து 10 துளி தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.(குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது)

5. பப்பளிப்பாலை விளக்கெண்ணையில் கலந்து குடிக்க நீங்கும்.

6. குடல் புழுக்கள் நீங்க, மாதுளம் பழத்தை சாப்பிடலாம்.

7. வெங்காய பூவை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தி வரலாம்.

8. நுண்புழுக்கள் அழிய ;-- மணலிக்கீரையை உண்டு வரலாம்.

9. குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர ;-- வேலிப்பருத்தி வேர் 4 சிட்டிகையை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

10 . குப்பைமேனி வேர் பொடியை கஷாயம் செய்து குடிக்க நாக்கு பூச்சி நீங்கும் .

11. குடல் புண் குணமாக, அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.

01/09/2023

கள்ளு (கள்)

1. கள் என்றால் என்ன ?

#பனை, #தென்னை மரங்களில் பாளையை பக்குவப்படுத்தி சீவினால் தேன் போன்ற இனிப்பான திரவம் கிடைக்கும். அது சற்று நொதித்து புளிப்பு சுவையாக மாறினால், அதுதான் கள்

2. பதநீர் என்றால் என்ன ?

மண் கலையத்தில் சுண்ணாம்பு தடவி பனை, தென்னை மரங்களின் பாளைகளில் இருந்து கிடைக்கும் திரவத்தை சேகரித்தால், அதுதான் பதநீர்.

3. கள் மது வகையா ?

கள் மது வகை கிடையாது. உணவு வகைகளில் ஒன்று. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 47, கள்ளை உணவாகவும், மருந்தாகவும் வகைப்படுத்தி உள்ளது.

4. கள் போதை தருமா ?

புளித்த மாவில், தயிரில் கிட்டத்தட்ட 2% ஆல்காஹல் உள்ளது. கள்ளில் 2%-4% ஆல்காஹல் உள்ளது, இதனால் போதை வராது, கள் குடித்த பிறகு, சூடாக காரமான உணவுகளை உண்டால் சிறிது போதை வரும்

5. கள்ளால் என்ன பயன் ?

பல ஊட்டச்சத்துகள் உள்ளன, சில நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது, தடை நீக்கப்பட்டால் #பனை மரங்கள் அழிவதை தடுக்கலாம், பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும்

6. கள் மதுவுக்கு மாற்று பொருளா ?

கள்ளுக்கும், மதுவுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. கள் மதுவுக்கு மாற்று பொருள் கிடையாது. உணவில் உள்ள சத்துகள் கள்ளில் உள்ளன, விஸ்கி பிராந்தியில் சத்துகள் இல்லை, இரண்டும் வெவ்வேறு வியாபாரங்கள்.

7. கள்ளுக்கு தடை ஏன் ?

அரசாங்கத்தால் கள்ளில் நடக்கும் கலப்படத்தை தடுக்க முடியவில்லை என்று காரணம் கூறி கொள்கை முடிவாக கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

8. உலகில் வேறு எங்கெல்லாம் கள் தடை செய்யப்பட்டுள்ளது ?

வேறு எங்கும் இல்லை.

9. கள்ளை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குடிக்கலாமா ?

பிறந்த குழந்தைகள் கூட குடிக்கலாம்.

10. கள்ளை மருத்துவத்துறை எதிர்க்கிறதா ?

எதிர்ப்பதில்லை.

11. கள் பற்றி அரசுகளின் கள் ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன ?

கள் தடை கூடாது, மக்களுக்கு தரமான கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், கள் விற்பனையை கூட்டுறவு (அ) தன்னார்வலர் அமைப்புகள் (அ) அல்லது மரமேறுவோர் சங்கம் மூலம் நடத்த வேண்டும் என்பதே பிற மாநிலங்களில் நீதிபதிகள் தலைமையிலான ஆய்வு குழுக்களின் பரிந்துரை ஆகும்
நன்றி:
தமிழ்நாடு கள் கூட்டமைப்பு

இனிப்பு உணவு  வகைகள் குறித்து எச்சரிக்கை. E951 அஸ்பார்டேம்இலங்கையில் இதுவரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்பார்டேம்(A...
03/08/2023

இனிப்பு உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை. E951 அஸ்பார்டேம்

இலங்கையில் இதுவரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்பார்டேம்(Aspartame) என்ற இனிப்பானது புற்றுநோயை உண்டாக்கக் கூடிய இரசாயனம் என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ரொஷான் குமார இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அந்த இனிப்புப் பொருளை உணவில் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“சில சட்ட நடைமுறைகள் மூலம் இலங்கையின் நுகர்வில் இருந்து நீக்கப்படும் வரை இதுபோன்ற புற்றுநோயை உண்டாக்கும் உணவுகளை பொதுமக்கள் உட்கொள்வதைத் தடுப்பது அவசியம்.

அதைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். E951 எனும் பதார்த்தம் கொண்ட இனிப்பு வகை உணவுகள் இப்போது சந்தையில் பரவலாகக்கிடைக்கின்றன.

அவற்றில், *பச்சை நிறத்தில் இருக்கும் பெரும்பாலான இனிப்பு பானங்கள் (டிராஃபிக் லைட் அமைப்பின் படி) அல்லது குறைந்த சர்க்கரை இனிப்புப் பொருட்களில் பெரும்பாலும் இந்த பதார்த்தம்* காணப்படுகிறது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான இனிப்பு சாக்லேட் லாலிபாப்கள் மற்றும் வெளிநாட்டு இனிப்பு உணவுகள் மற்றும் பானங்களில் இந்த இனிப்பு அதிகமாக காணப்படுகிறது.

எனவே, பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்துவது மற்றும் புற்றுநோய் உணவாக உறுதிசெய்யப்பட்ட E951 அஸ்பார்டேம் கொண்ட உணவைத் தவிர்ப்பது அவசியம்.

உணவு பொருட்களில் உள்ள ஸ்டிக்கர்களின் உள்ளடக்கங்களைச் சரிபார்ப்பதன் மூலம் அஸ்பார்டேம் பயன்படுத்தப்படுகிறதா என்பதை எந்தவொரு நபரும் அடையாளம் காண முடியும்.

சர்க்கரையைப் பயன்படுத்தக் கூடாதவர்கள், இந்த E951 அஸ்பார்டேம் இனிப்பானைத் தங்கள் இனிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இனிப்பானாகப் பயன்படுத்தை தவிர்க்க வேண்டும்.

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்துநாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டுவருகிறது. ஆங்கில...
30/07/2023

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து

நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டுவருகிறது. ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் சிறப்பானது.

நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன்நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது.

கடிகளைக் கண்டறிதல்:

> இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.
இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்,

*இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்..

*புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்…

*வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு,
நீர் பிரட்டை போன்றவை என்றும்…

*கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்…

> தேள் கடி மருந்துகள்:

*எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.

*கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.

*கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.

*சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.

*கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.

*பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.

*குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத்தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.

> நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.

> பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

> வெறி நாய் கடித்து விட்டால்.
நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

> பாம்பு கடித்து விட்டால்.
உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழியவேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில்படுக்க வைத்தவன் பல் கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.

> எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க.
நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும்.இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.

உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம்வெளியேறிவிடும்.வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும்.

ஆடி மாதமும் முளைப்பாரியும்பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர...
28/07/2023

ஆடி மாதமும் முளைப்பாரியும்

பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.

அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிக சிறப்பானது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்.

பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலி பெண்களும் இதில் பங்கேற்றனர். "முளைப்பாலிகை" என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியதாக சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சை பயிறு போன்ற விதைகளை தூவி கோவிலுக்கு அருகிலேயே தனியாக குடில் அமைத்து அங்கு வைத்து வளர்ப்பார்கள்

ஒவ்வொரு நாள் இரவும் அதனை தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம் வந்து பாடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பார்கள். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பார்கள்.

முளைப்பாரி எடுப்பதால் கிராமத்திலுள்ள நீர்நிலைகள் நிறையும் என்பதும், நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் நம்பிக்கை.

மேலும் முளைப்பாரியில் வளர்ந்த பயிர்களின் வளர்ச்சியைக் கண்டு அந்த ஆண்டின் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் சடங்காகவும் முளைப்பாரி எடுக்கும் வைபவம் கருதப்படுகிறது.

முளைப்பாரியில் பயிர்கள் செழித்து வளர்வதைப் போலவே, தங்கள் வம்சமும் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவும் முளைப்பாரி வைபவம் கொண்டாடப்படுகிறது.

கருட புராணம் கூறும் சில தண்டனைகள்
17/07/2023

கருட புராணம் கூறும் சில தண்டனைகள்

யோகாசனப் பயிற்சி-பொது விதிகள்''''''''''''''"""""""”'''""""""""""""""""""""""""""'"""""""""""""""''''''''"''"''""""'யோகா ...
19/06/2023

யோகாசனப் பயிற்சி-பொது விதிகள்
''''''''''''''"""""""”'''""""""""""""""""""""""""""'"""""""""""""""''''''''"''"''""""'
யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் செய்ய ஆர்வமாய் இருப்பவர்களுக்கு
யோகாசனப் பயிற்சி செய்யும் போது இவ்விதிகளை கட்டாயம் பின்பற்றவும். அல்லாது விடில் உபாதைகள் உண்டாகும். அத்துடன் ஒரே நாளில் பல ஆசனங்கள் பயில்வதும் உடலுக்கு உகந்ததல்ல என்பதை நினைவில் கொள்க. ஆசனங்களை கிரமமாக ஆறுதலாக பயில்வதே சிறந்தது.

1. வயது :

ஆசனப் பயிற்சி எந்த வயதிலும் செய்யலாம்.

2. நேரம் :

ஆசனப் பயிற்சி, வெறும் வயிற்றில் எந்நேரமும் செய்யலாம். ஆனால் காலை 4 மணி தொடக்கம் 6 மணிவரை உத்தமா உத்தமம். மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை உத்தமம். மற்ற நேரங்கள் மத்திமம்.

3. உணவு :

உணவு உண்டு 3 மணித்தியாலங்கள் கழிந்தபின் தான் ஆசனப்பயிற்சி செய்தல் வேண்டும். சாத்வீக உணவு உத்தமம். இராட்சத உணவு மத்திமம். தாமச உணவு அதமம்.

4. குளிப்பு:

ஆசனப் பயிற்சி தொடங்கமுன்னும் அல்லது பயிற்சியின் பின் 15 நிமிடங்கள் கழிந்த பின் னும் குளிர் நீரில் குளிப்பது உத்தமம்.

5. கிரமம்:

ஆசனம் தினமும் பயிற்சித்தால் உத்தமம். ஆசனம் சிலதினங்கள் விட்டு வீட்டுச் செய்தால் மத்திமம். ஆசனம் அடியோடு விட்டுவிட்டால் அதமம்.

6. நோய்:

நோயாளிகளும் பிரசவத் தாய்மார்களும் ஆசனப் பயிற்சிகளை ஒரு நிபுணரின் ஆலோசனைப்படி செய்யவேண்டும்.

7. நித்திரை:

இரவு 9 மணி தொடக்கம் 4 மணி வரை உத்தமம். இரவு 10 மணி தொடக்கம் 5 மணி வரை மத்திமம். இரவு 11 மணி தொடக்கம் 6 மணிவரை அதமம்.

8. படுக்கை - திசை :

கிழக்கு உத்தமா உத்தமம்.
தெற்கு உத்தமம்.
மேற்கு மத்திமம்.
வடக்கு அதமம்.

9. உடை:

ஆசனப்பயிற்சி செய்யும்போது இலங்கோடு, கௌபீனம் அல்லது குட்டைக் காற்சட்டை அணிதல் உத்தமம்.

10. இடம் :

ஒரு நல்ல காற்றோட்டமுள்ள அறையில் தரை யில் ஒரு தடித்த விரிப்பில் ஆசனப் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.

11. தண்ணீர்:

உணவுக்கு முன் அரைமணி தொடங்கி உணவு உட்கொள்ளும் பொழுதும், உணவு உட்கொண்டு 2 மணித்தி யாலங்கள் கழியும் வரையும் தண்ணீர் குடித் தலைத் தவிர்த்தல் மிக முக்கியம்.

12. பிராணாயாமம்:

ஒரு குருவின் கீழ்ப் பயில்வதே உத்தமம்.

SIDDHA MAHA SANGAM

Siddha Maha Sangam

12/06/2023

#கடன்_தீர_எளிய_பரிகாரம் :

சனிக்கிழமை அன்று ஒரு அரச மர இலையை பறித்து வந்து அதை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு பூஜை அறையில் சுவாமியை பார்த்தவாறு இலையின் காம்பு இருக்குமாறு வைத்து, அதன் மேல் ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும்.

அகல் விளக்கின் தீபமானது சுவாமியை பார்த்தவாறு ஏற்ற வேண்டும்.

அந்த அகல் விளக்கில் பச்சை நிற திரியை போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இவ்வாறு நாம் தொடர்ந்து 48 வாரங்கள் சனிக்கிழமை தோறும் செய்ய வேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் செய்யலாம்.

இந்த பரிகாரத்தை தொடங்கும் நாள் கண்டிப்பாக சனிக்கிழமையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நாம் பரிகாரம் செய்வதால் நம்முடைய தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

எவ்வளவு பெரிய தொகை கடனாக இருந்தாலும், அந்தக் கடன் படிப்படியாக தீரும். நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும்.

சங்கல்பங்கள் நிறைவேறும்.

Om namashivaya

#கடன்

*வாதம்_பித்தம்_கபம்*வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் ...
12/06/2023

*வாதம்_பித்தம்_கபம்*

வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.

பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.

கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.

தவிர்க்கவேண்டிய, சாப்பிடவேண்டிய உணவுகள்!

* வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு மிகவும் முக்கியம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி எனும் ஸ்பாண்டிலைசிஸ் உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தம். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்.

* புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும். மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும்.

* பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது.

* அதிகமாக கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது... ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி... இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.

* சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு... என கபத்தால் வரும் நோய்கள் பல. பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம். மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும். அலுவலகத்திலிருந்து தும்மல் போட்டுக்கொண்டே வரும் வாழ்க்கைத்துணைக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது.

வாதம், பித்தம், கபம் - இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியைக் காப்பதில், சமையல்கூடத்துக்கு பங்கு உண்டு. நம் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம். அது, நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்.

தினமும் 3 நிமிடம்தோப்புக்கரணம் உடலைவலுவாக்கும்.தோப்புக்கரணம் போட்டாலே போதும்யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிட...
07/06/2023

தினமும் 3 நிமிடம்
தோப்புக்கரணம் உடலைவலுவாக்கும்.

தோப்புக்கரணம் போட்டாலே போதும்
யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.
தோப்புக்கரணம் போட்டாலே போதும்
யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்
கிடைத்துவிடும். நமது முன்னோர்கள்
வழிபாட்டின் ஒரு பகுதியாக
தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.

தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்
பிடித்துக் கொள்கிறோம். காது
மடல்களில் உடலின் எல்லா
உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள்
இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம்
போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்
செயல்படுவதற்கான தூண்டுதல்
கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.

தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர்,
ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை
அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்
கொண்டு தோப்புக்கரணம் போட
வேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச்
சேர்த்து வைத்துக் கொண்டு
தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கை விரல்களால் இடது காது மடல்களையும்,
இடது கை விரல்களால் வலது காது
மடல்களையும் பிடித்துக் கொண்டு
உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.
இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -
சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,
காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு
வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க
இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்
தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த
சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும்
ரத்த ஓட்டம் சீராகும்.

மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத்
தொடர்ந்து செய்தால் வேறு
எந்த உடற்பயிற்சியும் செய்ய
வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று
நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில்
செய்ய முடியாது என்பதே உண்மை..

Address

Trincomalee-Nilaveli Road
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddha Maha Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Siddha Maha Sangam:

Share