10/11/2025
கடந்த வாரம் (17.10.2025) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின்
கண்ணியல் பிரிவிற்காக 138,000 யூரோ பெறுமதியான Yag & Argon Laser
இயந்திரங்களை சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (International Medical
Health Organization)வழங்கி வைத்துள்ளது.
இத் திறப்புவிழாவிற்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின்
பிரதிநிதிகளாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய
கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களும் சர்வதேச மருத்துவ சுகாதார
நிறுவனத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைப்பாளர்
திரு.பிரதீபன் அவர்களும் வருகை தந்திருந்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட
பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. J.M.நிலக்ஸன்,
பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி K.செந்தூர்பதிராஜா, கண் வைத்திய
நிபுணர்- வைத்திய கலாநிதி P.கிரிதரன், திட்டமிடல் அதிகாரி - வைத்திய கலாநிதி
R.பாலமுரளி மற்றும் கண் பிரிவு மருத்துவர்கள் ஏனைய சுகாதார பணியாளர்கள்
கலந்து கொண்டார்கள்
ழ வடமாகாணத்தின் மாவட்ட பொது வைத்தியசாலை வவுனியாவில்
மட்டுமே இவ் இயந்திரங்கள் காணப்படுகின்றமை வவுனியா மாவட்டத்திற்குக்
கிடைத்த வரப்பிரசாதமாகும். இந்த புதிய தொழில்நுட்ப இயந்திரங்களின் மூலம்
கண்ணியல் பிரிவில் மேம்பட்ட கண் சிகிச்சை வசதிகள் உருவாகியுள்ளது. இதன்
மூலம் வவுனியா மற்றும் வடமாகாணத்தில் உள்ள பிற
வைத்தியசாலைகளிலிருந்து கண்சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு இவ்
லேசர் இயந்திரங்கள் மூலம் கண் விழித்திரையின் இரத்தக்குழாயில் ஏற்படும்
அடைப்புக்களுக்கான சிகிச்சை, குளுக்கோமா (Glacucoma) கட்டுப்பாட்டுக்கான
சிகிச்சை, இரண்டாம்தடவை ஏற்படும் கண்புரை சிகிச்சை, நிரந்தர கண் பார்வை
இழப்பு போன்ற நோய்களுக்கு மேம்பட்ட கண் சிகிச்சைகள் கிடைக்கும் வாய்ப்பு
உருவாகியுள்ளது.
சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை
தெரிவிக்கின்றோம்