25/10/2024
🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼
🔥 தீபாவளி 🔥
முதலில் மெய்யன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
மங்களங்களையும் சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் அற்புத திருநாள்..தீபாவளி
நாம் பிரபஞ்சத்தை கொண்டாட மறந்தாலும் பிரபஞ்சம் நம்மை எப்போதும் காக்க மறந்ததில்லை..ஆம் நம் உடலாகிய சிற்றண்டத்தில் என்ன குறை எப்போது வரும் தெரிந்து அதை சரிசெய்ய ஒரு காலக்கெடு வைத்தும் உள்ளது பிரபஞ்சம் .. அதைத்தான் நாம் திருவிழாக்களாக கொண்டாடி வருகிறோம்..
உதாரணமாக சித்ரா பௌர்ணமி,வைகாசி விசாகம்,ஆடி வெள்ளி,ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,புரட்டாசி சனி,ஐப்பசி தீபாவளி,பெரிய கார்த்திகை.மார்கழி சொர்க்கவாசல்,திருவாதிரை,தை மாதம்,தை அமாவாசை,மகாசிவராத்திரி,மாசிமகம், என வரிசை கட்டி நிற்கிறது திருவிழாக்கள்.அத்தனையும் இயற்கை நம்மோடு பேசும் திருநாட்கள்..நமக்காக இயற்கை நம்மோடு இணையும் அற்புத திருநாட்கள்..
அதில் ஒரு அற்புத திருநாள் தான் தீபாவளி..
தீபாவளி..தீப ஆ வளி.. தீபம் ஈசானன் எனும் காற்றை குறிக்கிறது..ஆ தனஞ்செயனை குறிக்கிறது..ஆ என்றால் பசு என்பதாகும்..பசு என்றால் தனஞ்செயன் ஆகும்..வளி என்றால் காற்று.. ஆக தனஞ்செயனும் ஈசானனும் இணைவதற்கான ஒரு காற்று அங்கே உருவாகிறது என்பதுதான்.தனஞ்செயனுந் ஈசானனுன் இணைந்தால் அதை அர்த்தநாரீஸ்வரம் என்று நாம் சொல்வதுண்டு..
அர்த்தநாரீஸ்வரம் என்றால் ஆண் தன்மையும் பெண் தன்மையும் இணைந்தது என்று அர்த்தமாகிறது..இயக்கம் என்பதாகும்..ஐஸ்வர்யம் என்பதாகும்.மகாலட்சுமி என்பதாகும்..நீங்கள் பலகாலம் செய்த முயற்சிகள் பலனளிக்காமல் போயிருக்கலாம்..அந்த இரண்டு காற்றையும் எப்படி இணைப்பது என உங்களுக்கு தெரியாமல் கூட போயிருக்கலாம்..ஆனால் இயற்கை உங்களுக்காக அந்த வேலையை செய்கிறது..ஆம் அந்த இரண்டு காற்றுகளையும் தீபாவளி நாளில் இணைக்கிறது..சகலவிதமான சக்திகளையும் அள்ளி கொடுக்கிறது..
நரன் எனப்படும் மனிதனுக்குள் அவனை முன்னேற விடாமல் நல்வழியில் செல்ல விடாமல் தடுத்து அவனை கெடுக்கும் அசுர குணத்தை ஈசானனும் தனஞ்செயனும் இணைந்து அந்த குணம் மேலெழும்ப விடாமல் செயல்படவிடாமல் தடுத்து நம்மை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் அற்புத நாள்..ஆம் நரகாசுரன் அழியும் நாள்..மகாலட்சுமி வெளிப்படும் நாள்..உங்கள் வாழ்வில் சகலவிதமான சக்திகளும் ஐஸ்வர்யமும் திரும்ப பெறும் நாள்..சகலவிதமான செல்வங்களையும் அளவில்லாமல் பெறும் நாள்..வெற்றிகளும் நன்மைகளையும் ஆரோக்கியமும் பெறும் நாள்..
தீபாவளி அன்று என்ன செய்ய வேண்டும்..?
நமது சபையில் பிரம்ம முத்தி யோகா உபதேசம் பெற்றவர்கள் அதில் உபதேசமாக கிடைத்த ராஜ மந்திரத்தை ஒரு முகூர்த்த வேளை அதாவது 1.30 மணி நேரம் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்..ஐப்பசி மாத அமாவாசை திதி தொடங்கிய நேரம் முதல் முடியும் நேரத்திற்குள்ளாக எந்த நேரத்திலும் செய்யலாம்..அதிலும் மாலை நேரம் அல்லது காலை சூரிய உதய நேரத்திற்குள்ளாக என்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்...
இன்னும் சிறந்த பலன் கிடைக்க தற்போது நமது சபை உபதேசமாக கொடுத்துவரும் அர்த்தநாரீஸ்வர பீஜம் அல்லது கனகசிந்தாமணி மந்திரத்தை ஜெபித்தால் இன்னும் வெகுசிறப்பான பலனை பெற முடியும்..
தீபாவளி என்றால் எண்ணை தேய்த்து குளித்து தின்பண்டங்களை தின்றுவிட்டு அசைவ உணவுகளை நன்றாக ஒருபிடி பிடித்துவிட்டு மல்லாக்க படுத்து தூங்கி ஓய்வெடுக்க மட்டுமல்ல.நம் வாழ்வை வெகுசிறப்பாக வாழ்வதற்கு பிரபஞ்சம் கொடுக்கும் செய்திகளை உணர்ந்து அதை கெட்டியாக பிடித்துக்கொள்வதற்கும்தான்..
தீபாவளி அன்று இந்த பயிற்சியை செய்வதற்கு நேரம்..
அக்டோபர் 31 மாலை 4.30 மணி முதல் நவம்பர் 1 மாலை 6.20 வரை ( 31/10/2024 4.30 pm to 01/11/2024 6.30 pm ) இடைப்பட்ட நேரத்தில் எந்த நேரத்திலும் செய்யலாம்..
பயிற்சி முடிந்த உடன் தனஞ்செயன் விபூதியை தண்ணீரில் கலந்து வீடு மற்றும் கடைகள் முழுவதும் தனஞ்செயன் மந்திரம் சொல்லி தெளித்து விடலாம்..
நம்மிடம் எந்த உபதேசமும் இதுவரை பெறாதவர்கள் ஓம் ரீங் தனஞ்செயனே போற்றி என்று மட்டும் ஒருமுகூர்த்த வேளை சொல்லலாம்..
முறையாக சொல்லி பலனை பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு அற்புத வாய்ப்பு வரும் 27/10/2024 - Sunday அன்று பழனியில் விபஞ்சகா உபதேசம் நடைபெற உள்ளது..அன்று கனகசிந்தாமணி மந்திரம்,அர்த்தநாரீஸ்வர மந்திரம்,பஞ்சபூத சிந்தாமணி மந்திரம் உபதேசமாக கிடைக்கும்..கூடவே தனஞ்செயன் விபூதியும் கிடைக்கும்.. பயன்படுத்திக்கொள்ளலாம்..
அல்லாதவர்கள் மேலே சொன்ன மாதிரி தனஞ்செயன் மந்திரம் மட்டும் சொல்லலாம்..
செய்முறை..
பயிற்சி செய்யும் இடத்தில் இரண்டு விளக்கு ஏற்றிக்கொள்ளுங்கள்.. விளக்கில் விளக்கெண்ணெய் மற்றும் நெய் கலந்து திரி இட்டு தீபம் ஏற்றுங்கள்..
வசம்பு மற்றும் வாசனையான பூக்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
வாசனையான பத்தி சாம்பிராணி கொளுத்தி வைத்துக்கொள்ளுங்கள்..
தனஞ்செயன் விபூதி அருகில் வைத்துக்கொள்ளுங்கள்..
மந்திரத்தை மணி நேரம் ஜெபம் செய்யுங்கள்..
அவ்வளவுதான்..
இனி வெற்றியும் சந்தோஷமும் ஐஸ்வர்யமும் உங்களுடன் தான்..
நற்பவி
தனஞ்செயனே போற்றி
நற்பவி