Jeddah TNTJ

Jeddah TNTJ ஜித்தா, மறுமை வெற்றியை நோக்கமாக

24/05/2025

அன்பான சகோதரருக்கு...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பாக *31 வது இரத்ததான முகாம்* வெள்ளிக்கிழமையன்று (23.05.2025) மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு வருகை தந்து இரத்ததானம் செய்தமைக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பாக தங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

We extend our sincere thanks to you for donating blood at our 31st camp on 23.05.2025

TNTJ - Jeddah Zone is a leading in the field of welfare and social services. We also express our deepest gratitude to you for your support and continued cooperation to help those in need.

இவண்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம்
நிர்வாகிகள்
24.05.2025

இவ்வருடம் (2025) ஹஜ்ஜி செய்ய வரும் ஹாஜிகளின் நலனைக் கருதி சவுதி அரேபியாவில் TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 31-வது இரத்ததா...
23/05/2025

இவ்வருடம் (2025) ஹஜ்ஜி செய்ய வரும் ஹாஜிகளின் நலனைக் கருதி சவுதி அரேபியாவில் TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 31-வது இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் (TNTJ) மற்றும் கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனை (KAH) இணைந்து நடத்திய 31-வது இரத்ததான முகாம் 23.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது.

இந்த முகாமில் *சுமார் 98 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு, அதில் 84 கொடையாளர்கள் தங்கள் குருதிகளை தானமாக வழங்கினார்கள்.*
அல்ஹம்துலில்லாஹ்!

இந்த முகாமில் தன்னார்வ கொடையாளர்கள், ஜித்தா செந்தமிழர் பாசறை மற்றும் ஜித்தா தமிழ்ச் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இம்முகாமினை சிறப்பாக நடைபெற உதவிய மருத்துவக் குழுவினரான டாக்டர் அய்மன், டாக்டர் அஹ்மத் இலியாஸ் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் TNTJ - ஜித்தா மண்டலம் சார்பாக நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.

*“யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” – அல்குர்ஆன் 5:32*

என்றும் மனிதநேயப் பணியில் ஆர்வமுடன்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ஜித்தா மண்டலம்
23.05.2025

In sha Allah blood camp on 23.05.2025
04/05/2025

In sha Allah blood camp on 23.05.2025

06/03/2025
06/02/2025
சவுதி அரேபியாவில் TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 30-வது இரத்ததான முகாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மற்றும் க...
13/12/2024

சவுதி அரேபியாவில் TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 30-வது இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மற்றும் கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனை (KAH) இணைந்து நடத்திய 30-வது இரத்ததான முகாம் 13.12.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது.

இந்த முகாமில் *சுமார் 68 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு, அதில் 57 கொடையாளர்கள் தங்கள் குருதிகளை தானமாக வழங்கினார்கள்.*
அல்ஹம்துலில்லாஹ்!

இந்த முகாமில் தன்னார்வ கொடையாளர்கள் மற்றும் ஜித்தா செந்தமிழர் பாசறையைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

இம்முகாமினை சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் மற்றும் மருத்துவ குழுவினர்களுக்கும் TNTJ - ஜித்தா மண்டலம் சார்பாக நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.

“யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” – அல்குர்ஆன் 5:32

என்றும் மனிதநேயப் பணியில் ஆர்வமுடன்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ஜித்தா மண்டலம்
13.12.2024

அல்லாஹ்வின் திருப்பெயரால்,கடல் கடந்த மனிதநேயப் பணி!ஜித்தாவில் இறந்த சகோதரர் உடல் தாயகம் அனுப்பிவைப்பு - 01.10.2024தமிழகத...
03/10/2024

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

கடல் கடந்த மனிதநேயப் பணி!

ஜித்தாவில் இறந்த சகோதரர் உடல் தாயகம் அனுப்பிவைப்பு - 01.10.2024

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவிலுள்ள நாங்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆர்.மணிவண்ணன் என்ற சகோதரர் கடந்த 01.08.2024 (வியாழன்) அன்று உடல் நலக் குறைவால் ஜித்தாவிலுள்ள கிங் ஃபாஹத் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இறந்தவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது உடல் தாயகம் அனுப்பிவைப்பதற்காக அவர் பணிபுரிந்த நிறுவனம் ஒரு தனியார் டிராவல்ஸ் மூலமாக முயற்சி செய்தனர். ஆனால் இறந்தவரின் உடலை தாயகம் அனுப்பிவைக்க கால தாமதமும், பொருளாதார வீண் விரையமும் ஏற்பட்டதே தவிர அன்னாரின் உடல் தாயகம் அனுப்பிவைக்கப்பட முடியவில்லை.

இந்நிலையில் 40 நாள்களுக்கு பிறகு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தா மண்டல நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை தாயகம் அனுப்பிவைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல நிர்வாகிகள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இந்தியத் தூதரகம் மற்றும் முறையான அனைத்து அரசு ஆவணங்களையும் பெற்று 01.10.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று ஏர் இந்தியா விமானத்தின் மூலம் அன்னாரின் உடல் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டது.

அன்னாரின் உடல் தாயகம் அனுப்பிவைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, இறந்தவரின் பாஸ்போர்ட் காலாவதி ஆனதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே உடல் தாயகம் அனுப்பிவைப்பதற்காக காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால், முன்பே அவருக்கு எக்ஸிட் அடிக்கப்பட்டிருந்த நிலையில், அதுவும் காலாவதியாகிவிட்டது. இந்நிலையில், அவரது பாஸ்போர்டை புதுப்பித்து, மீண்டும் அவருக்கு எக்ஸிட் அடித்து அன்னாரின் உடல் பல சிரமங்களுக்கிடையே அல்லாஹ்வின் நாட்டத்தால் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டது.

இறந்தவரின் உடல் 02.10.2024 (புதன் கிழமை) அன்று சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் இருந்து ஜித்தா மண்டலத்தின் மூலம் ஏற்கனவே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறந்தவரின் உடல் சென்னை விமான நிலையத்திலிருந்து, ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் ஊரான நாங்கூர் சென்றடைந்ததும், அன்னாரின் உறவினர்கள் அவ்வுடலைப் பெற்றுக்கொண்டனர். அன்னாரின் உடல் 02.10.2024 (புதன் கிழமை) அன்று இந்திய நேரப்படி இரவு 11:00 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

இதற்கு உறுதுணையாக இருந்து, முழு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியன் கவுன்சிலேட் அவர்களுக்கு நாங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இறந்தவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருக்கும் ஏமன் நாட்டைச் சேர்ந்த சாலிம் என்ற சகோதரரும் மற்றும் ஜித்தாவில் வசிக்கும் தமிழகத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த TNTJ கொள்கைச் சகோதரர் ஷர்புதீன் அவர்களும் இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.

இறந்தவரின் உறவினர்கள், தங்களின் அலுவல்களுக்கு மத்தியில் இதற்காக உழைத்த TNTJ ஜித்தா மண்டல நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மேலும் இதற்காக உழைத்த அனைத்து மற்ற சகோதர்களுக்கும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்தனர்.

இதற்காக உழைத்த அனைத்துச் சகோதர்களுக்கும் ஏக இறைவன் அருள் புரிவானாக!

ஜஸாகல்லாஹு கைரா...

இவண்,
TNTJ – ஜித்தா மண்டலம்
03.10.2024

2025 ஹஜ்ஜிக்கான ஹஜ் விண்ணப்பப் படிவத்தை இந்திய ஹஜ் கமிட்டி மூலம் பூர்த்தி செய்த  விண்ணப்பம்   ஆன்லைனில் 13.8.2024 முதல் ...
13/08/2024

2025 ஹஜ்ஜிக்கான ஹஜ் விண்ணப்பப் படிவத்தை இந்திய ஹஜ் கமிட்டி மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பம் ஆன்லைனில் 13.8.2024 முதல் துவங்கி 9.9.2024 அன்றுடன் முடிவடைகிறது.

ஹஜ் விண்ணப்பப் படிவங்களை இந்திய ஹஜ் கமிட்டியின் இணையதளத்தில் https:/hajcommittee.gov.in அல்லது iPhone அல்லது Android Mobile App "HAJ SUVIDHA" மூலமாக ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன், வழிகாட்டுதல்களை கவனமாக படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பத்தின் இறுதித் தேதிக்கு முன் வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட்டின் எக்ஸ்பைரி 15.1.2026 வரை இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயகத்தில் உள்ளவர்களில், இன்ஷா அல்லாஹ், அடுத்த அவருடம் இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய எண்ணம் கொண்டவர்கள், இன்றிலிருந்து மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்திலோ அல்லது மொபைலில் HAJ SUVIDHA என்ற செயலி மூலமாகவோ பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொதுநலன் கருதி வெளியிடுவோர்:
டி‌என்‌டி‌ஜெ - ஜித்தா மண்டலம்
13.8.2024

07/03/2024

இறைவனின் திருப்பெயரால்.....

தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

கடந்த 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 11.03.2024 திங்கள்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு

99520 35 444
99520 56 444
7550277338

இப்படிக்கு
மாநிலத் தலைமையகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Address

Jeddah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jeddah TNTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jeddah TNTJ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram