SIDDHAPharmacists

SIDDHAPharmacists Namma nattu maruthuvam

பெருங்காயத்தின் தாவரவியல் பெயர் `பெருலா அசபொட்டிடா’. ஆங்கிலத்தில் அசபொட்டிடா (Asafoetida) என்று அழைப்பார்கள். இது குட்டை...
05/07/2023

பெருங்காயத்தின் தாவரவியல் பெயர் `பெருலா அசபொட்டிடா’. ஆங்கிலத்தில் அசபொட்டிடா (Asafoetida) என்று அழைப்பார்கள். இது குட்டையாக மரம் போல வளரும் தாவரம். ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளில் மட்டும்தான் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. இந்த நாடுகளில் இருந்தே உலகெங்கும் ஏற்றுமதியாகிறது. இத்தாவரம் பூக்கள் பூக்கும் பருவத்தில் தண்டை வெட்டினால் அதிலிருந்து பிசின் வடியும். அந்த பிசினிலிருந்துதான் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது.

முதலில் கட்டி பெருங்காயமாக தயாரித்தார்கள். அதுவே பொடித்து கருவேல பிசின், கோதுமை இரண்டும் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்தக் கலவையே கூட்டுப் பெருங்காயம் என்று சொல்கிறார்கள். கலவையில் சேர்க்கப்படும் கருவேல பிசினை கம் அராபிக் (Gum Arabic) என டப்பாவில் குறிப்பிட்டிருப்பார்கள். இதைத்தான் பசை என சிலர் நினைத்து கொள்கிறார்கள்.

அது தவறு. பெருங்காயத்தை அதன் ஒரிஜினல் வடிவத்தில் சமையலில் சேர்க்க முடியாது. காரம் மிக அதிகமாக இருக்கும். ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ தனிப்பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய். அவ்வளவு விலை கொடுத்து வாங்கி உபயோகிக்க முடியாது. இதனால் பெருங்காய தயாரிப்பு நிறுவனங்கள் அதோடு கொஞ்சம் கருவேல பிசின் மற்றும் கோதுமையை கலந்து பவுடராக்கி விற்பனை செய்கின்றன.

சில நிறுவனங்கள் கோதுமைக்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் மைதாவை பெருங்காயத்தில் கலக்கின்றன. மைதா சேர்த்தால் பெருங்காயத்தின் மருத்துவத் தன்மை குறைந்துவிடும். இன்னும் சில நிறுவனங்கள் லாபநோக்கோடு பெருங்காய எசன்ஸை கலக்கிறார்கள். இதில் வெறும் வாசனைதான் இருக்கும். இப்படி கலப்பட முறையில் தயாரிக்கும் பெருங்காயம் எந்த விதத்திலும் பயனைத் தராது.

பெருங்காயத்தின் கழிவுகள், குப்பைகள், டர்பன்டைன் ஆயிலின் கழிவுகள் போன்றவற்றைக் கலந்து பெருங்காயம் என்ற பெயரில் தயாரித்து விற்கிறார்கள். இந்தக் கழிவுகளுடன் வாசனைக்காக சிறிது எசன்ஸை மட்டும் கலந்து விடுவார்கள். தரமற்ற இந்த விற்பனை தொடராமல், உணவுக்கட்டுப்பாட்டு நிறுவனம் கட்டுப்படுத்த வேண்டும்.

* குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு அங்காயப் பொடி கொடுப்பது பண்டைய வழக்கம். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக்கக்கூடியது அங்காயப் பொடி. சுண்டைக்காய் வற்றலும், பால் பெருங்காயமும் முக்கிய மூலப்பொருட்களாக அங்காயப்பொடியில் பயன்படுத்தப்படுகிறது.
* குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறால் வயிற்றுவலி ஏற்பட்டாலும், வாயுப்பிடித்து வயிறு முறுக்கி அழும் குழந்தைக்கு, ஒரு சிட்டிகை பெருங்
காயத்தை மோரில் கலந்து கொடுத்தால் சரியாகிவிடும்.
* வயிற்றுவலியால் அவதிப்படும் பெண்களும் பெருங்காயத்தை சிறிதளவு தண்ணீரிலோ, மோரிலோ கலந்து குடித்தால் நல்ல பலன் தரும்.
* சளி தீராதவர்களுக்கு மிளகு, சீரகத்துடன் சரியான அளவு பெருங்காயம் சேர்த்து ரசம் வைத்து குடிக்கலாம்.
* பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வாயுப்பிடிப்புக்கு சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் வலி குறையும்.
* தினந்தோறும் உணவில் கடுகு, மஞ்சள் பொடி, பெருங்காயம் இந்த மூன்றையும் சிறிதளவு சேர்த்து வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* பெருங்காயத்துக்கு உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் திறனும் உண்டு. நிணநீர் நாளங்களில் வரும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இத்தனை மருத்துவ பயன்கள் உள்ள பெருங்காயத்தை கலப்படம் செய்கிறார்கள் என்ற காரணத்துக்காக மட்டும் தவிர்க்க வேண்டியதில்லை. நீங்கள் வாங்கும் பெருங்காயம் உண்மையானதுதானா என்று கண்டறிய, அதை ஒரு தம்ளர் தண்ணீரில் கரைக்க வேண்டும். ஒரிஜினல் எனில் நீரில் நன்கு கரைந்து பால் போல காட்சியளிக்கும். கலப்படம் இருந்தால் கரையாமல் குப்பை போல நீரின் மேலே மிதக்க ஆரம்பிக்கும். அதோடு சிறு கட்டிகளாக மிதக்கும். இந்த சோதனையை நீங்களே வீட்டில் செய்து பார்க்கலாம்.

சித்த மருத்துவத்தில் மருந்துகள் தயாரிக்க நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் பால் பெருங்காயத்தை மட்டுமே பயன்படுத்துவோம். பால் பெருங்காயத்தில் கோதுமை, கருவேல பிசினின் கலப்பு குறைவாகவே இருக்கும்.

சில லேகியங்கள், சூரணங்கள் தயாரிப்பில் பால் பெருங்காயத்தை பயன்படுத்துகிறோம். எனவே, தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் பெருங்காயத்தை வாங்கிப் பயன்படுத்தினால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.பெருங்காயத்துக்கு உடலில் உள்ள கொழுப்புகளைகரைக்கும் திறனும் உண்டு. நிணநீர் நாளங்களில் வரும் புற்றுநோயை தடுக்கும்ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு......

12/27/2022

கர்ப்பப்பை நீர்கட்டிக்கான மருந்து

மலை வேம்பு மருத்துவ பயன்கள்:

பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.( மலை வேம்பு இலைகளை எடுத்து நன்றாக அரைத்து சாறு எடுத்து ஒருடம்ளராக குறுக்கிக் குடிக்கவும் --- )

நீர்க்கட்டி இருந்தால் தான் குடிக்க வேண்டும் என்பது இல்லை.குழந்தை உண்டாவது தள்ளிப் போகிறவர்களும் குடிக்கலாம்.

மலை வேம்பு வேப்ப மரத்தில் வேறு வகை.வேப்பிலையை விட சின்னதா இருக்கும் அதோட பூ கலர் வெள்ளை பா அதுக்குள்ள இருக்கற மகரந்தம் பர்பிள்ஊதா கலர்ல இருக்கும் வித்தியாசமா கொத்து கொத்தா இருக்கும் கறிவேப்பிலை கலர்ல இருக்கும்.

மலை வேம்பு இலையுடன் தண்ணீர் விட்டு அரைத்துக் சாறு பிழியவும் அல்லது வேப்பிலை எடுத்து நைஸா அரச்சு சுண்டைக்காய் அளவு உருட்டி 3 உருண்டை சாப்பிடனும் மற்றும் நடைபயிற்சி 2KM.ஜூஸ் குடிக்கும் 3 நாட்கள் மட்டும் தான் எண்ணெய்,புளிப்பு இல்லாத சாப்பாடு சாப்பிடனும்.மற்ற நாட்கள் எப்போதும் போல சாப்பிட்டுக் கொள்ளலாம்.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்
இனிய காலை வணக்கம்🌷🌷🌷

12/26/2022

கர்ப்பமாக்கும்_இயற்கை

உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம்.

பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது.

அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது.

கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும் ❓

உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது.

எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு.

1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில்
1 டீஸ்பூன் சீரகம்,
கால் டீஸ்பூன் புழுங்கலரிசி,
2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும்.

அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும்.

பிறகு #ஷாம்பு_குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது.

பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா?

மண் உவர்ப்புத்தன்மையுடன் இருந்தால், விதை, துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு.
50 மி.லி. விளக்கெண்ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இது இயற்கையான பேதி மருந்து.

6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும்.

நீங்கள் அணிகிற உடைக்கும், கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா ❓

‘கூபகப் பகுதி’ எனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லாமலும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்றுதான், அந்தக் காலத்தில் பாவாடை, புடவை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்டவை.

கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பின் இயற்கைத்தன்மையை பாதிப்பதுடன், கருத்தரிக்காமல் செய்வதற்கும், ஜீன்ஸ் பேன்ட், டிரவுசர் போன்ற நவீன உடைகள் காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

அடுத்ததாக குதிகால் உயர்ந்த காலணிகள். குதிகாலை உயர்த்தி, விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அந்தக் காலணிகளைத் தொடர்ந்து அணிவதால், கர்ப்பப்பையானது, கருவாயின் வழியே கீழ்நோக்கி சரியத் தொடங்கும்.

விந்து தங்காதபடியான ஒரு வடிவமைப்பை தானே ஏற்படுத்தி விடும்.

ஆரம்பத்தில் குழந்தையின்மைக்
குக் காரணமாகிற இந்தச் சின்ன விஷயம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள்ளல் பிரச்னை வரை கொண்டு போய் விடும்.

இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு மஞ்சள் பூசிக் குளிப்பது தெரியும் ❓

ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பதில், மஞ்சளின் மகிமை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
தோலில் தடவும் மஞ்சள்தான்.

விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், சின்ன வெங்காயச் சாறு, மலை வேப்பிலைச் சாறு, ஆற்றுத்தும்மட்டிக்காய் சாறு - எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாதவிடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை பலம் பெறும்.

பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்கட்டிகளும், சாக்லெட் சிஸ்ட் பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்ப்பம் தங்கும். சினைப்பையில் இருந்து சினைமுட்டையானது, கர்ப்பப்பைக்கு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவும்.

மழழை சத்தம்..
மழையின் சத்தமென பெருகட்டும்..

வாழ்த்துகள்

பகிர்வு

மோர் இன்றி அமையாது உலகு    கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவ...
05/02/2022

மோர் இன்றி அமையாது உலகு

கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.

குறுந்தொகையில்...

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப் பார்ப்போம்

செரிமானப் பாதை சீராக

உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு - குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.

மருந்தாகும் மோர்

கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.

திரிதோஷ சமனி

“மோருண வளிமுதன் மூன்றையுமடக்கி” எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மோரானது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும் என்று குறிப்பிடுகிறது. உடலில் உண்டாகும் வீக்கம், ரத்தக் குறைவு, பேதி, பசியின்மை, தாகம், உடல் வெப்பம் போன்றவற்றுக்குப் பசுவின் மோர் சிறந்தது. கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து பருக, பசி அதிகரிப்பதோடு ரத்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

நீர் சுருக்கி, மோர் பெருக்கி

கிருமிகளை அழிக்க, நீரை நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்தும், மோரின் குணங்களை முழுமையாகப் பெற, மோருடன் அதிக நீர் சேர்த்து, நீர் மோராகவும் அருந்த வேண்டும் எனும் அறிவியலை `நீர்சுருக்கி மோர்பெருக்கி’ என்று அன்றே ஓலையில் செதுக்கினார் தேரையர். மோரின் புளிப்புத் தன்மை நீங்கும் அளவுக்கு நீர் சேர்த்துப் பருகுவதால், புளிப்பு சுவை அதிகரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாது என்பதே சித்தர்களின் சிந்தனை.

அனுபானம்

மோரின் சிறப்பை அறிந்தே, பல சித்த மருந்துகளைத் தயாரிக்க மோர் பயன்படுத்தப்படுகிறது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளின் அனுபானமாகவும் (Vehicle) மோர் பயன்படுகிறது. உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோரானது பத்தியத்தின்போதுகூடப் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது.

வெயில் காலங்களில்

வேனிற் காலம் எனும் ரதத்தை அழகாக இழுத்துச் செல்லும் சாரதி மோர். வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம். மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும்.

அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ, காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.

நஞ்சகற்றி

மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடலில் சேர்ந்த கழிவைச் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் குணம் மோருக்கு உண்டு. சில வகை உணவுப் பொருட் களுக்கு, மோரானது நஞ்சு முறிவுப் பொருளாகவும் பயன்படுகிறது.
மோருடன் வரவேற்போம்
ஆங்காங்கே `மோர்ப் பந்தல்கள்’ அமைத்து மக்களின் நலம் காத்த வரலாற்று குறிப்புகள் நம்மிடம் ஏராளம் உண்டு. பல ஆயிரம் வருடங்களாக வெயில் காலத்தை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட விருந்தோம்பல் முறை மோர்ப் பந்தல்கள். ஆனால் இன்றைக்கு மோர்ப் பந்தல்கள் குறைந்து, செயற்கை குளிர்பானங்களின் விற்பனை அதிகமாகிவிட்டது. இனிமேலும் விழித்துக்கொள்ளாவிட்டால், நம் ஆரோக்கியமும் பாரம்பரியமும் முற்றிலும் தொலைந்து போகலாம்.

மரு.வி..விக்ரம்குமார்.,MD(S)

நலக் கண்ணாடி - Nala Kannaadi
மரு.வி.விக்ரம்குமாரின் எழுத்தும் உணர்வும்

04/06/2022

வறுத்த 6 முதல் 10 பூண்டு வரை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.

பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால்...
உயர் இரத்த அழுத்தம்,
குறைந்த இரத்த அழுத்தம்,
உயர் கொலஸ்ட்ரால்,
இதய நோய்கள்,
மாரடைப்பு,
பெருந்தமனி தடிப்பு
போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.

மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும்..
மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.

இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

1 மணிநேரம்:

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.

2-4 மணிநேரம்:

2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.

4-6 மணிநேரம்:

4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.

6-7 மணிநேரம்:

பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.

7-10 மணிநேரம்:

இக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.

10-24 மணிநேரம்:

முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.

அவையாவன:

1. கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
2. தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
3. இரத்த அழுத்தத்தை சீராக்கும்.?
4. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
5. உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
6. எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
7. அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
8. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்

02/06/2022

பல நன்மைகளை அள்ளித்தரும் ஏலாதி சூரணம் செய்முறை விளக்கம்

தேவையான பொருட்கள்

1.ஏலக்காய் - 25 கிராம்
2.சுக்கு - 50 கிராம்
3.தாளிசபத்திரி - 80 கிராம்
4.சிருநாகப்பூ - 40 கிராம்
5.மிளகு - 20 கிராம்
6.இலவங்கம் - 10 கிராம்
7.கற்கண்டு - 100 கிராம்

செய்முறை

அனைத்தையும் முறைப்படி சுத்தம் செய்து அரைத்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். கற்கண்டை பொடித்து ஒன்று சேர்த்து சலித்து அனைத்தையும் நன்றாக கலந்து வைக்கவும்.

அளவு :

1 கிராம் முதல் 2 கிராம் வரை காலை இரவு உணவுக்கு பின் எடுக்கவும்

ஏலாதி சூரணத்தின் நன்மைகள் :

உடலில் வியாதி எதிர்ப்பு திறனை அதிகரித்து, பசியின்மை, உணவு செரிமான பாதிப்பினால் உண்டாகும் வாந்தியைப் போக்கி, செரிமானத்தைத் தூண்டும் தன்மை மிக்கது. காமாலை எனும் உடல் சூட்டினால் உண்டாகக் கூடிய வியாதிகளைத் தீர்க்கும் ஆற்றல்மிக்கது.

1.கர்ப்பிணிகளின் செரிமானத்திற்கு:

கருவுற்ற தாய்மார்களுக்கு உணவு செரிமானத்தை அளித்து, உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கும் ஏலாதி சூரணம், உடலில் ஏற்படும் கிருமித் தொற்றைப் போக்கக்கூடியது.

2.சத்துக்கள் கிடைக்க :

கருவுற்ற மூன்றாம் மாதத்தில் இருந்து ஏலாதியை தேனில் கலந்து, பெண்கள் உண்டுவர, பசியின்மை விலகி, உணவில் நாட்டம் அதிகரித்து, உடலுக்குத் தேவையான சத்துகள் கிட்டும். பசியைத்தூண்டி, உடல்நலம் காக்கும் ஏலாதி சூரணம், இதய வியாதிகளைப் போக்குவதில் அற்புத செயல்திறன் மிக்கது.

3.இதய பாதிப்புகள் போக்கும் :

சிறுங்கி பற்பம் எனும் சித்த மருந்துடன் ஏலாதி சூரணம் சேர்த்து சாப்பிட, தீவிர நிலை இதய வியாதிகள் பாதிப்புகள் நீங்கி, நலமுடன் வாழ முடியும்.

4.இதய அடைப்பு குணமாக :

இந்த மருந்தை முறையாக சாப்பிட, தற்காலத்தில் இதய இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய செய்யப்படும் ஆஞ்சியோ சிகிச்சையைக்கூட, தவிர்க்க முடியும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

5.மேனி பளபளப்புக்கு :

உடல் எடையைக் குறைக்கவும், உடல் நிறத்தை மேம்படுத்தவும், ஏலாதி சூரணத்தை குளிக்கும்போது, உடலில் நன்கு தடவிக்கொண்டு, குளித்துவருவர். ஏலாதி பொடியை, நீரில் கலந்து, குளிக்கும் முன் உடலில், முகத்தில் தடவி, சற்றுநேரம் கழித்து, குளித்துவர, உடல் புத்துணர்வாகும், சருமம் பொலிவாகும். உடல் எடையும் குறையும்.
🌷🌷🌷

02/01/2022

*☂எலும்புகள் உறுதியாக இருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்.*

எலும்புகள் தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம்.

நாம் நிற்க, அமர, நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம்.

எலும்பு உறுதியாக இருக்க, எலும்புமுறிவு ஏற்பட்டால், விரைவில் இணையவும் கால்சியம் அவசியம். கால்சியம் சத்தை கிரகிக்க வைட்டமின் டி தேவை. இந்த இரண்டும் போதுமான அளவில் கிடைத்துவிட்டால் பிரச்னை இல்லை.

கால்சியம் நிறைந்த உணவுகளில் முக்கியப்பங்கு வகிப்பவை பால் மற்றும் பால் பொருட்கள். தினசரி, நம் உடலுக்கு 1-1.3 கிராம் (1000- 1300 மில்லி கிராம்) கால்சியம் தேவை. கால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை வீட்டில் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். இந்தக் காலத்தில், உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் அதீத உடல்பருமனுக்கு ஆளாக நேரிடலாம். இவர்கள், கொழுப்பு நீக்கப்பட்ட ஸ்கிம்டு மில்க், டோன்டு மில்க் சாப்பிடலாம்.

ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்னை உடைய பெண்களுக்கு, மெனோபாஸ் நேரத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால், மருத்துவரின், ஆலோசனைப்படி பால் எடுத்துக்கொள்வது நல்லது.

உங்கள் எலும்புகளுக்குத் தீங்கு உண்டாக்கும் 7 தினசரி பழக்கங்கள்

அந்த 7 தினசரி பழக்க வழக்கங்கள் பின்வருமாறு..

1. சூரிய வெளிச்சம் குறைவது

2. சோம்பேறியாக இருப்பது

3. புகை பிடிப்பது

4. மது மற்றும் சோடா

5. சமச்சீரில்லாத உணவை உண்ணுவது

6. எடை இழப்பு

7. தூங்கும் நிலை

இவற்றைப் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

1. சூரிய வெளிச்சம் குறைவது :

சூரிய வெளிச்சம் உடலுக்கு மிகவும் தேவை என்பது அனைவரும் அறிந்தது. சூரிய வெளிச்சத்தில் வைட்டமின் டி சத்து இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை அளிக்க உதவுகிறது. வைட்டமின் டி சத்து எலும்புகளைப் பாதுகாத்து , உடல் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. அமெரிக்க தேசிய எலும்புப்புரை பவுண்டேஷன் , வயதிற்கு ஏற்றார் போல் வைட்டமின் டி சத்தின் தினசரி தேவையை வலியுறுத்துகிறது. 50 வயதிற்கு குறைவாக இருக்கும் பெரியவர்களுக்கு ஒரு நாளில் 400-800 IU வைட்டமின் டி சத்து தேவைப்படுகிறது. 50 வயதிற்கு மேலே இருக்கும் முதியவர்களுக்கு ஒரு நாளில் வைட்டமின் டி சத்து 800-1000 IU தேவைப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து போதிய வைட்டமின் டி சத்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவரிடம் ஆலோசித்து இதற்கான மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

2. சோம்பேறியாக இருப்பது:

எலும்புகளை எந்த அளவிற்கு அசைக்கிறீர்களோ அந்த அளவிற்கு அவை வலிமையாகின்றன. உடற்பயிற்சி செய்வதால் தசைகள் வலிமையாவதுடன் எலும்புகளும் உறுதியாகின்றன. வலிமையான எலும்புகள் உண்டாவதற்கு ஒரு நாள் முழுக்க படுக்கையில் படுத்துக் கிடக்காமல் அடிக்கடி ஓடியாடி வேலை செய்ய வேண்டும். ஓடுவது, நடப்பது, நடனம் ஆடுவது இப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம். சோம்பேறியாக இல்லாமல் எதாவது ஒரு வேலையைச் செய்வதால் எலும்புகள் பலமாகின்றன.

3. புகை பிடிப்பது:

சிகரெட் புகைப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் எலும்புகளும் மோசமாக பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் எலும்புப்புரை பாதிப்பு அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. புகை பிடிப்பதால் எலும்பு விழுங்கி அணுக்களின் செயல்பாடுகளான பழைய எலும்புகள் நொறுக்கப்படுவது , எலும்பு உயிரணுக்களின் செயல்பாடுகளான புதிய எலும்புகள் கட்டமைப்பை உருவாக்குவது போன்றவை பாதிக்கப்படுகின்றன . இதனால் எலும்புகள் பலவீனமாகின்றன.

4. மது மற்றும் சோடா:

சோடா மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? ஆம் என்றால், இதனால் உங்கள் எலும்புகள் பலவீனமாகிறது என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். அதிகமாக மது அருந்துவதால், எலும்புகளின் கால்சியம் உறிஞ்சும் செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அதிக அளவு கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை அருந்துவதால் எலும்பு அடர்த்தி குறையும் வாய்ப்பும் உள்ளது.



5. சமச்சீரில்லாத உணவை உண்ணுவது:

வலிமையான மற்றும் அடர்ந்த எலும்புகள் உருவாக்கத்திற்கு கால்சியம் மிகவும் அவசியம். அதனால் போதுமான அளவு கால்சியம் சத்து உடல் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியம். பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து கால்சியம் சத்து உடலுக்குக் கிடைக்கிறது . எனவே நாம் உட்கொள்ளும் உணவு சமச்சீர் உணவாக இல்லாதபோது, ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படுகிறது. உங்கள் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம்.

6. எடை இழப்பு :

உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பேணுவது மிகவும் முக்கியம். அதற்காக ஒரே நேரத்தில் அதிக எடையைக் குறைபப்தும் உடலுக்குத் தீங்கானது. உடல் எடையைக் கணக்கிட உதவும் BMI 18.5 என்ற அளவை விட குறைவாக இருந்தால் எலும

்புப்புரை பாதிப்பின் அபாயம் அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

7. தூங்கும் நிலை:

தூக்கம் தொடர்பான பிரச்சனைகளைப் புறக்கணிப்பது என்பது நம்மில் பலரும் செய்யும் ஒரு செயலாகும். ஆனால் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் உடலின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வேலைப்பளுவின் காரணமாக அல்லது தொலைக்காட்சியில் மூழ்கிப் போவதின் காரணமாக நாம் தூக்கத்தைத் தொலைத்து விடுகிறோம். இது ஒரு பொதுவான பழக்கமாக உள்ளது. ஆனால் தூக்கமின்மை மற்றும் எலும்பு பிரச்சனைகளுக்கு தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

முகத்தில் உள்ள கருமை நீங்க 10 அற்புத இயற்கை வழிகள்1.வாழைப்பழம் மற்றும் பால்வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந...
01/31/2022

முகத்தில் உள்ள கருமை நீங்க 10 அற்புத இயற்கை வழிகள்

1.வாழைப்பழம் மற்றும் பால்

வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

2.ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

3.கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.

4.சூரியகாந்தி விதை

இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

5.வெள்ளரிக்காய் மாஸ்க்

வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.

6.மாம்பழத் தோல்

மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.

7.தக்காளி பழ மாஸ்க்

ஒரு சில பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப்பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.

8.தேன்

தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

9.சர்க்கரை

சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.

10.தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.

ஆவாரம்_இலை இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறு...
01/31/2022

ஆவாரம்_இலை

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

01/20/2022

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.

1=ஆயில் புல்லிங்
~~~~~~~~~~~~~~~~~
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,

2=கிராம்பு
~~~~~~~~~~~~~
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,

3=உப்பு தண்ணீர்
~~~~~~~~~~~~~~~~~~~
அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்,

4=பூண்டு
~~~~~~~~~~~
3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,

5=மஞ்சள்
~~~~~~~~~~~~~
மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,

6=வேப்பிலை
~~~~~~~~~~~~~~
வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் ,

7=உணவுமுறைகளில் மாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.

8=சர்க்கரையைத் தவிர்க்கவும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.

11/17/2021

*உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம்:*

*பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்?*

*உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று.*

*எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.*

*கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா? மண் உவர்ப்புத்தன்மையுடன் இருந்தால், விதை, துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு. 50 மி.லி. விளக்கெண்ணயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இயற்கையான பேதி மருந்து. 6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும். நீங்கள் அணிகிற உடைக்கும், கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா?*

*‘கூபகப் பகுதி’ எனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லாமலும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்று தான், அந்தக்காலத்தில் பாவாடை, புடவை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்டவை. கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பின் இயற்கைத்தன்மையை பாதிப்பதுடன், கருத்தரிக்காமல் செய்வதற்கும், ஜீன்ஸ் பேன்ட், டிரவுசர் போன்ற நவீன உடைகள் காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. அடுத்ததாக குதிகால் உயர்ந்த காலணிகள். குதிகாலை உயர்த்தி, விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அந்தக்காலணிகளைத் தொடர்ந்து அணிவதால், கர்ப்பப்பையானது, கருவாயின் வழியே கீழ்நோக்கி சரியத்தொடங்கும். விந்து தங்காத படியான ஒரு வடிவமைப்பை தானே ஏற்படுத்தி விடும். ஆரம்பத்தில் குழந்தையின்மைக்குக் காரணமாகிற இந்தச் சின்ன விஷயம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள்ளல் பிரச்னை வரை கொண்டு போய் விடும். இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு மஞ்சள் பூசிக்குளிப்பது தெரியும்? ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பதில், மஞ்சளின் மகிமை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தோலில் தடவும் மஞ்சள்தான். குறிப்பாக, உள்உறுப்புகளில் தடவுவதன் மூலம், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய தொற்றுக்கிருமிகள் தவிர்க்கப்படும். ஹார்மோன் கோளாறுகள் சரியாகும். அதன் காரணமாக தடைப்பட்டுப் போன கர்ப்பம் கை கூடும். களிங்காதி எண்ணெய், ஆற்றுத்தும்மட்டி எண்ணெய் என சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். மாதவிடாயின் முதல் 3 நாள்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெயை சாப்பிட்டால், கருதங்கி நல்ல முறையில் வளரும். விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், சின்ன வெங்காயச் சாறு, மலை வேப்பிலைச் சாறு, ஆற்றுத்தும்மட்டிக்காய் சாறு - எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாதவிடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை பலம் பெறும். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்கட்டிகளும், சாக்லெட் சிஸ்ட் பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்ப்பம் தங்கும். சினைப்பையில் இருந்து சினை முட்டையானது, கர்ப்பப்பைக்கு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவும்.*

Address

Madras, OR
97741

Telephone

+4365000000000

Website

Alerts

Be the first to know and let us send you an email when SIDDHAPharmacists posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram