Aadwika Siddha Clinic

Aadwika Siddha Clinic Discover Wellness

14/01/2024
01/08/2023

06/07/2023

R u looking for natural dye 👇👇your solution 👇👇

14/06/2023

30/04/2023

25/04/2023

*உணவு பொருட்கள் அறிந்ததும் அறியாததும்*  *3.சியா விதைகள்* பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகளில் நம் உடலுக்கும்...
20/04/2023

*உணவு பொருட்கள் அறிந்ததும் அறியாததும்*
*3.சியா விதைகள்*
பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகளில் நம் உடலுக்கும், மனதிற்கும் பலன் தரக் கூடிய அம்சங்கள் நிரம்பியுள்ளன.
நார்ச்சத்து நிரம்பியது
சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது.

🍀நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது. இதனால், *குடல் நலன்* மேம்படும்.
🫀*இதய நோய் ஆபத்துகள் குறைகின்றன*
தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம்.
குறிப்பாக, ரத்தத்தில்உள்ள *டிரிகிளைசைரைடு* *கொழுப்பை இது கரைக்கிறது* .
உடல் உள்ளுறுப்புகளின் வீக்கம் குறைவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது.

உடலுக்கு நன்மை பயக்கும் 🫱🏼‍🫲🏼 *ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும்.*

💪🏼 **எலும்புகள் பலப்படும்**
நமது எலும்புகளுக்கு வலுவூட்டக் கூடிய கால்சியம், புரதம், மேக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் சியா விதைகளில் இருக்கிறது.

பால் பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு கால்சியம் சத்து கிடைக்க உதவியாக இருக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம்

உடலின் செல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடிய 👽 **கிருமிகளை அழிப்பதில்* ,* சியா விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துகளின் பங்கு அதிகமாகும்.

😎 *வயது முதிர்வை தடுக்கிறது*
உயர் தர புரதச்சத்து
சியா விதைகளில் உயர் தரத்திலான புரதம் நிரம்பியிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவே, இதை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது நமக்கு

🤐 **பசி உணர்வு கட்டுப்படுகிறது** . இதனால், இரவு நேர பசி அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடும் ஆசை கட்டுப்படுத்தப்படுகிறது.
🏋🏻‍♂️ *உடல் எடையை குறைக்கலாம்*
நிரம்பிய புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவிகரமாக இருக்கும். இதை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்
சப்ஜா விதைகளைப் போன்றே சியா விதைகளிலும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. விலங்குகளில் இருந்து கிடைக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அளவுக்கு வராது என்றாலும், இதுவும் *உடலுக்கு நன்மை தரக் கூடியதுதான்.*

🥶 **குளிர்ச்சி தருகிறது**
கோடை காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும். சியா விதைகளை எடுத்துக் கொண்டால் *வாதம், பித்தம் குறையும் என்றும், கபம் (நீர்ச்சத்து) அதிகரிக்கும்* .

*உணவுப் பொருட்கள் அறிந்ததும் அறியாததும்* 2. *இலவங்கபட்டை* மசாலா பொருட்களில் முக்கியமானது. மருத்துவ பயன்பாட்டின் டாக்டர் ...
19/04/2023

*உணவுப் பொருட்கள் அறிந்ததும் அறியாததும்*
2. *இலவங்கபட்டை*
மசாலா பொருட்களில் முக்கியமானது. மருத்துவ பயன்பாட்டின் டாக்டர் என்று கூட சொல்லலாம். பல நோய்களை போக்கும் முக்கிய மூலிகை இதில் கால்சியம் இரும்புசத்து பொட்டாசியம் மெக்னிசியம் ஜின்க் போற்ற ஊட்ட சத்துக்கள் உள்ளன.
இதன் பயன் ஏராளம் அதை அறிந்தே வெளிநாட்டவர் இதனை அதிகமாக உணவில் சேர்க்கின்றனர்.
*பயன்கள்*
🦵🏼 *மூட்டுவலி* யை குறைக்க உதவும்.
🫀 *இதயநோய்* வராமல் தடுக்க பயன் படுத்தலாம்
☘️ *சிறுநீரக கோளாறை* சரி செய்யும்
☘️ *இன்சுலின்* தடுப்பை சரி செய்யும்
☘️ *குடல்புண்* களை ஆற்றும்
☘️ *புற்றுநோய்* வராமல் தடுக்க உதவும்
🤧நாள் பட்ட *சளி இருமல் சுவாச பிரச்னை* களை சரி பெரிய உபயோக படுத்தலாம்.
☘️ *சீரான சக்தி* யை கொடுக்கிறது
☘️தேவையற்ற உடல் *கொழுப்பை* குறைகிறது.
💪🏼 *நோய் எதிர்ப்பு சக்தி* யை தூண்டுகிறது.

*பயன் படுத்தும் முறை*
🍵பட்டையை பொடி செய்து நீர்விட்டு கொதிக்க வைத்து 🍯தேன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பருகி வரலாம்
☕டீ உடன் சிறிது பொடியை களைந்து அருந்தலாம்
🍫அனைத்து இனிப்பு பலகாரங்களில் சிறிது பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.

*உணவு பொருட்கள்அறிந்ததும் அறியாததும்1. *ஏலக்காய்*  ( மசாலா பொருட்களின் ராணி )* ☘️‌ஏலக்காயில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்களு...
18/04/2023

*உணவு பொருட்கள்
அறிந்ததும் அறியாததும்
1. *ஏலக்காய்* ( மசாலா பொருட்களின் ராணி )*

☘️‌ஏலக்காயில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்களும், பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும் பண்புகளும் உள்ளன.
☘️‌ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், உங்களை நிதானப்படுத்துகிறது.
☘️‌இது கார்டிசால் ஹார்மோனை சுரக்கச செய்து, மன அழுத்தத்தை குறைத்து, சுவாசித்தலை எளிதாக்குகிறது.
🤧‌ *சைனஸ்* நோயால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்தாக ஏலக்காய் திகழ்கிறது.🫡

😤‌ *ஆஸ்துமா* மற்றும் வீசிங் பிரச்சினை கொண்டவர்கள், ஏலக்காய் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
🫁‌ *நுரையீரலுக்கு* செல்லும் ஆக்சிஜன் அளவை அதிகரித்து எளிதாக சுவாசிக்க உதவுகிறது.🧘🏻‍♀️
😍 *‌சிறந்த சருமம்* : ஏலக்காய் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் உள்ள துளைகள் அடைக்கப்பட்டு, சருமம் பொலிவு கொண்டதாக மாறும்
🥵‌ *அல்சர்க்கு* மிக சிறந்த மருந்து ஏலக்காய்
‌ 👄*மிருதுவான உதடுகள்* : ஏலக்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு இடம் இருக்காது.
😡‌ *அதிக ரத்த அழுத்தம்* குறைக்க உதவும்
‌ரத்தத்தை சுத்தி செய்ய உதவும்
🤢‌ *செரிமான கோளாறு* களை சரி செய்யும்
🫢‌வாய் துர்நாற்றம் , வாய் புண் குறைக்கும்
🫢‌குறட்டையை குறைக்கும்
‌வாந்திக்கு ஏலக்காய் வாயிலிட்டு மெல்ல குறையும் .
👿‌உடல் பருமன் குறைக்க உதவும்.
*எடுக்கும் முறை*
☘️‌இரவில் ஒரு ஏலக்காய் மென்று வெதுப்பான நீர் பருகலாம்
‌ ☕காலையில் ஏலக்காய் டீ
‌ ☘️ஏலக்காய் பொடியாக உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்
‌☘️ஏலக்காய் எண்ணெய் சருமத்தில் பயன் படுத்தலாம்
☘️ஏலாதி மருந்துகள் மருத்துவ ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ளலாம்.

Address

Aruppukottai Main Road, , Villapuram
Madurai

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm

Telephone

+918610424569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aadwika Siddha Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aadwika Siddha Clinic:

Videos

Share

Nearby clinics